மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- 'லெகர்' புயல் நாளை ஆந்திராவை தாக்கும்: 9 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
- பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் வங்கி அதிகாரியை வெட்டி பணம் பறித்த வாலிபர் சைக்கோ
- திருவனந்தபுரம் நகைகடையில் போலீசார் சோதனை: ரூ.1 ½ லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்
- ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க சோனியா ஆந்திராவை பிரிக்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம்
- சபரிமலையில் குவியும் அய்யப்ப பக்தர்கள்: தரிசன நேரம் அதிகரிப்பு
- ஏற்காடு தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு: தேர்தல் ஆணையரிடம் டி.ஆர்.பாலு வற்புறுத்தல்
- ஆதார் அடையாள அட்டைக்கு சட்ட அந்தஸ்து: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
- காஷ்மீர்: ஆற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் 8 பேர் பலி
- டெல்லியில் சரக்கு ரெயில் சுவரில் மோதி கவிழ்ந்தது: 3 பேர் சாவு
- இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 20 சிங்கள மீனவர்கள் கைது - 4 படகுகள் பறிமுதல்
- 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவர் விமானநிலையத்தில் கைது
- பீகாரில் மர்மநோய்க்கு 10 பேர் பலி
- பொதுக்கூட்ட மேடையில் மோடி அமர்ந்த நாற்காலியை வாங்க ரூ.2 1/2 லட்சம் வரை பேரம்
- தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிருபரின் வாக்குமூலத்தை கோவா போலிசார் பதிவு செய்தனர்
- தேஜ்பால் நாட்டை விட்டு வெளியேற முடியாது: கோவா போலீஸ்
- குணால் கோஷ் கூறிய 14 பேருக்கும் சாரதா நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை: சுதிப்தா சென்
- மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாதது மிகப்பெரிய ஏமாற்றமே: மோடி
- டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.235 கோடி
- காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆதரவு இல்லாமல் மூன்றாவது அணி இல்லை: ராம்விலாஸ் பஸ்வான்
- பம்பை ஆற்றில் பக்தர்கள் வேட்டி, துண்டுகளை வீச தடை
| 'லெகர்' புயல் நாளை ஆந்திராவை தாக்கும்: 9 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம் Posted: 26 Nov 2013 11:11 PM PST வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே உருவான லெகர் புயல் அதி தீவிர புயலாக உருவெடுத்து ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை அது அந்தமானின் போர்ட்பிளேர் நகரில் இருந்து 590 கி.மீ. தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் மசூலிப் பட்டினத்தில் |
| பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் வங்கி அதிகாரியை வெட்டி பணம் பறித்த வாலிபர் சைக்கோ Posted: 26 Nov 2013 09:44 PM PST பெங்களூரில் உள்ள ஏ.டிஎம். மையம் ஒன்றில் கடந்த வாரம் பணம் எடுப்பதற்காக சென்ற வங்கி பெண் அதிகாரி ஜோதி, துப்பாக்கி முனையில் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏ.டி.எம். மையத்துக்குள் ஜோதி நுழைந்ததும் அவரை பின் தொடர்ந்து செல்லும் வாலிபர் |
| திருவனந்தபுரம் நகைகடையில் போலீசார் சோதனை: ரூ.1 ½ லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் Posted: 26 Nov 2013 09:08 PM PST திருவனந்தபுரம் சாலை பகுதியில் உள்ள ஒரு நகைகடையில் சட்ட விரோதமாக அமெரிக்க டாலர் நோட்டுகளுக்கு பதில் இந்திய ரூபாய் மாற்றி கொடுக்கப்படுவதாக திருவனந்தபுரம் கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது |
| ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க சோனியா ஆந்திராவை பிரிக்கிறார்: சந்திரபாபு நாயுடு ஆவேசம் Posted: 26 Nov 2013 08:36 PM PST ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏற்கனவே புயல் பாதித்த இடங்களை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். அங்குள்ள 6 மண்டலங்களில் சேதமான விவசாய நிலங்களை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார். விவசாயிகளை சந்தித்து சேத விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:– ஆந்திராவில் இயற்கை சீற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காங்கிரஸ் |
| சபரிமலையில் குவியும் அய்யப்ப பக்தர்கள்: தரிசன நேரம் அதிகரிப்பு Posted: 26 Nov 2013 08:30 PM PST சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் இருந்தே சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக இருமுடி கட்டுகளுடன் சுவாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் முழங்க சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். |
| ஏற்காடு தேர்தலில் வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு: தேர்தல் ஆணையரிடம் டி.ஆர்.பாலு வற்புறுத்தல் Posted: 26 Nov 2013 07:40 PM PST ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை வீடியோ படமாக எடுக்க உத்தரவிடும்படி, தலைமை தேர்தல் ஆணையரிடம் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வற்புறுத்தினார். தி.மு.க. எம்.பி.யும், கட்சியின் பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, நேற்று தலைமை தேர்தல் ஆணையரை டெல்லியில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது- தி.மு.க.வின் பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கில் அ.தி.மு.க அமைச்சர்கள் போலீஸ் நிலையங்களில் அமர்ந்து கொண்டு தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்யவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். |
| ஆதார் அடையாள அட்டைக்கு சட்ட அந்தஸ்து: மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு Posted: 26 Nov 2013 07:00 PM PST ஆதார் அடையாள அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது குறித்து பதில் அளிக்குமாறு கோரி அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. கர்நாடக ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கே.எஸ்.புட்டசாமி, சில மாநிலங்கள் திருமண பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் எனக் கூறுவதாகவும், இது அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது என்றும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் |
| காஷ்மீர்: ஆற்றுக்குள் கார் பாய்ந்த விபத்தில் 8 பேர் பலி Posted: 26 Nov 2013 03:33 PM PST காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் கிஷ்த்வார் மாவட்டம் ட்ரப்ஷல்லா கிராமத்தில் இருந்து டோடா மாவட்டத்தில் உள்ள தாத்ரி நோக்கி நேற்று வாடகை காரில் சென்றனர். |
| டெல்லியில் சரக்கு ரெயில் சுவரில் மோதி கவிழ்ந்தது: 3 பேர் சாவு Posted: 26 Nov 2013 01:03 PM PST பழைய டெல்லி ரெயில் நிலையத்தில், ஒரு காலி சரக்கு ரெயிலை, யார்டுக்கு கொண்டு செல்லும் பணி நடந்தது. அப்போது, அந்த ரெயில், தண்டவாளத்தின் முடிவில் உள்ள சுவர் மீது பயங்கரமாக மோதியது. |
| இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 20 சிங்கள மீனவர்கள் கைது - 4 படகுகள் பறிமுதல் Posted: 26 Nov 2013 12:46 PM PST இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி தமிழக மீனவர்கள் பலரை இலங்கை கடலோர காவல் படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். |
| 2 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவர் விமானநிலையத்தில் கைது Posted: 26 Nov 2013 12:12 PM PST சார்ஜாவில் இருந்து கேரள மாநிலம் விமான நிலையத்துக்கு நேற்று காலை ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். |
| பீகாரில் மர்மநோய்க்கு 10 பேர் பலி Posted: 26 Nov 2013 11:36 AM PST பீகாரில் புதிதாக பரவி வரும் மர்ம நோய்க்கு 10 பேர் பலியாகியுள்ள சம்பவம் அம்மாநில மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் கிழக்கு சம்ப்ரான் மாவட்டத்தில் கடந்த வாரம் மர்மநோயின் தாக்கத்துக்கு ஆளான 2 பெண்கள் உள்பட 9 பேர் அடுத்தடுத்து |
| பொதுக்கூட்ட மேடையில் மோடி அமர்ந்த நாற்காலியை வாங்க ரூ.2 1/2 லட்சம் வரை பேரம் Posted: 26 Nov 2013 11:05 AM PST உத்தரபிரதேச மாநிலம், ஆக்ரா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரியும் அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். |
| தருண் தேஜ்பால் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிருபரின் வாக்குமூலத்தை கோவா போலிசார் பதிவு செய்தனர் Posted: 26 Nov 2013 10:05 AM PST டெல்லியைச் சேர்ந்த தெகல்கா நிறுவனம் இணையவழி செய்திகள் மற்றும் வார இதழ்களை நடத்தி வருகிறது. இதன் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் மீது அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார். |
| தேஜ்பால் நாட்டை விட்டு வெளியேற முடியாது: கோவா போலீஸ் Posted: 26 Nov 2013 07:01 AM PST பெண் நிருபரை பாலியல் பலாத்காரம் செய்ததாக டெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக தனிப்படையினர் டெல்லி சென்றுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் தேஜ்பால் கைது செய்யப்படலாம் என்ற |
| குணால் கோஷ் கூறிய 14 பேருக்கும் சாரதா நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை: சுதிப்தா சென் Posted: 26 Nov 2013 05:42 AM PST மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தின் மோசடியால் ஆயிரக்கணக்கான மக்கள் பணத்தை இழந்து பாதிக்கப்பட்டனர். இந்த மோசடியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குணால் கோஷ் எம்.பி.க்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து |
| மும்பை தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாதது மிகப்பெரிய ஏமாற்றமே: மோடி Posted: 26 Nov 2013 04:35 AM PST மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 160-க்கும் மேற்படோரை கொன்றனர். இதன் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. |
| டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.235 கோடி Posted: 26 Nov 2013 03:57 AM PST டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதி வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என்றும், அவர்களிலும் மிகப் பணக்கார வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.235.5 கோடி என்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆய்வறிக்கை |
| காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆதரவு இல்லாமல் மூன்றாவது அணி இல்லை: ராம்விலாஸ் பஸ்வான் Posted: 26 Nov 2013 03:34 AM PST லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி., டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதாவின் ஆதரவு இல்லாமல் மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை. அவர்களின் ஆதரவு மிக அவசியமாக உள்ளது. கூட்டணி மதச்சார்பற்றதாக இருக்கவேண்டுமானால், |
| பம்பை ஆற்றில் பக்தர்கள் வேட்டி, துண்டுகளை வீச தடை Posted: 26 Nov 2013 03:28 AM PST கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. கோவில் நடை திறந்தது முதல் பக்தர்கள் வருகை அலைமோதுகிறது. கடந்த சில நாட்களாக சபரிமலை மற்றும் பம்பையில் மழை கொட்டியபோதும் பக்தர்களின் வருகை குறையவில்லை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |