Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்.

Posted: 14 Nov 2013 12:26 PM PST

தமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண். இந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங் . ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ? 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார். அஷ்வின்(Facebook)

E-Tweets

Posted: 14 Nov 2013 12:16 PM PST

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

மகாத்மா காந்தியை சுட்டக்கொன்ற கோட்சேவுக்கு மரணதண்டனை வழங்கிய நாள் (நவ.15- 1949)

Posted: 14 Nov 2013 12:16 PM PST

கோட்சே மகாத்மா காந்தியை ஜனவரி 30, 1948 அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் கைத்துப்பாக்கியால் காந்தி மீது மூன்று முறை சுட்டுக்கொலை செய்தார். காந்தி இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தனன். உடனே காவல் துறையினரிடம் சரணடைந்தார். மே 27, 1948 ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவர் எதிர்த்து வாதாடவில்லை. அவர் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவர் மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். ...

ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்

Posted: 14 Nov 2013 12:00 PM PST

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் இடம் பிடித்துள்ளனர். ஆப்பிரிக்காவின் 50 பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டது. இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் அலிகோ டாங்கோட் என்பவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.31 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். இவர் மிகப்பெரிய சிமென்ட் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விமல் ஷா, சுதிர் ருபாரேலியா, ...

மலேசியா: செர்டாங் மருத்துவமனையில் மீண்டும் மேற்கூரை சரிவு!

Posted: 14 Nov 2013 11:57 AM PST

செர்டாங் மருத்துவமனையின் ஒரு பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் இன்று நான்காவது முறையாக மேற்கூரை சரிந்துள்ளது என மலேசியாகினி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முறை, புதிதாகப் பிறந்துள்ள சிசுக்களைப் பாதுகாக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்டி ஆவாங் கூறுகையில், "இன்று அதிகாலை 1.30 மணியளவில், சுமார் 8 முதல் ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 14 Nov 2013 11:27 AM PST



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறைகள் - யோகா பற்றிய வரலாறு.

Posted: 14 Nov 2013 10:16 AM PST

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, இன்றும் சூட்சமமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச்சித்தர்கள் தம்மை சுற்றி நடக்கும் இயற்கை நிகழ்வுகளை கூர்ந்து கவனிக்கின்றனர். ஒவ்வொரு விலங்குகளும், பறவைகளும் மற்றும் பிற உயிரினங்களும் தங்களுக்கே உரிய இருக்கை நிலைகளை ( Resting Position / Posture ) கொண்டு இயங்குவதை காண்கின்றனர். இவ்வாறு பல இருக்கை நிலைகளை கவனித்து பட்டியலிடுகின்றனர்.பிறகு இந்த இருக்கை நிலைகள் ஒவ்வொன்றிலும் தங்கள் உடலை அமைத்து பார்க்கின்றனர்.நாளடைவில் உடல் நலம் நன்கு மேம்படுகின்றது.இதனையே ...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள ஓர் ஆண்டுக்கு தடை..!!

Posted: 14 Nov 2013 09:22 AM PST

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மணல் அள்ள ஓர் ஆண்டுக்கு தடை..!! காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து ஆற்றுப்படுகைகளிலும் மணல் அள்ள ஒரு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் க.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ''காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆற்றுப்படுகைகளிலும் 1 ஆண்டு காலம் மணல் அள்ளக்கூடாது என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி 13-11-2013 முதல் முழுமையாக மணல் அள்ளுவது தடை செய்யப்படுகிறது. அரசு ஆணையை மீறி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதை கண்டால் ...

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...!

Posted: 14 Nov 2013 09:17 AM PST

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையம் ஜப்தி...! கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணிகளுக்காக தனது நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்திருந்தார். அவருக்குத் தகுந்த இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகினார். அந்த உத்தரவுப் படி, ரயில்வே துறை விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து ஜப்தி உத்தரவுடன் நீதிமன்ற அமீனா ரயில் நிலையத்துக்கு வந்தார். இதனால் அங்கே பரபரப்பு ...

அனைவருக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் !

Posted: 14 Nov 2013 09:15 AM PST

அனைத்து பாப்பாக்களுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ! அனைத்து குழந்தைகளுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ! அனைத்து பிள்ளைகளுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ! அனைத்து இளைஞர்களுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ! அனைத்து ஆண்களுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ! அனைத்து பெண்களுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ! அனைத்து கணவன்மார்களுக்கும் இனிய " குழந்தைகள் தின(ம்) " நல்வாழ்த்துகள் ...

அந்த காலத்திலேயே இப்படியா?

Posted: 14 Nov 2013 09:07 AM PST

அந்த காலத்திலேயே இப்படியா? தம்பதிக்குள் சண்டைன்னா இப்படி பண்ணக் கூடாது ! புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ... சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க... சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ... கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ... இதை விளக்க வேடிக்கை கதை இதோ ... எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ... ''உன்னை பலி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ... ''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே ...

இந்து மத அடிப்படையில் திருமணம் செய்த ரஷ்ய காதல் ஜோடி !

Posted: 14 Nov 2013 09:02 AM PST

மைய ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய ஒல்கா யூரீவ்னா கொர்பேரா (Yuriewna Gorbhera) வும் அவரது 26 வயது காதலியான பிளட்மிர் அலெக்சான்றிச் இந்துஹாகோ- ர்ஸ்கி (INTUHAKO- RSKIY) யும் இந்து முறையில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இந்த ரஷ்ய இளம் காதல் சோடிகளின் திருமணம் இருதரப்பு உறவினர்கள் முன்னிலையில் "பாசிக்குடா மாலுமாலு" சுற்றுலா விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விதம் இங்கு திருமணப் பதிவு செய்து கொண்ட ரஷ்ய தம்பதிகள் எல்லா வளமும் பெற இறைவணை வேண்டுவோம். இந்து திருமண பந்தத்தில் இணைந்து ...

வால்மீகி இராமாயணம்

Posted: 14 Nov 2013 08:56 AM PST

நண்பர்களே!

வால்மீகி ராமாயணம் தமிழில் இந்த முகவரியில் தரவிறக்கம் ஆடியோ அண்ட் புத்தக வடிவில் கிடைகிறது.

தரவிறக்கி படியுங்கள்! கேளுங்கள்!


http://www.maransdog.net/Ramayanam/


மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்

Posted: 14 Nov 2013 07:39 AM PST

மெல்லிசை மன்னர் ... தமிழ்த் திரையிசையின் ஜீவன்... தமிழ்த் திரையிசையின் முன்னோடி.... தமிழ்த் திரையிசையின் இதயம் .... இதுபோன்ற பல மொழிகளுக்கு உரித்தானவர்... இதுபோன்ற பல தகுதிகளை உருவாக்கியவர்.... இதுபோன்ற பல பெருமைகளை உள்ளடக்கியவர்... இவரின் பாடல்கள் ஒலிக்காத நாடில்லை, வீடில்லை, அதை எழுதாத ஏடில்லை, பாடாத வாயில்லை, கேளாத செவியில்லை.. அந்தக் காலத்து கிராமபோன் இசைத் தட்டுத் தொடங்கி இன்றைய பென்டிரைவ் வரை இவர் இசை ஆக்கிரமித்துள்ளது...அதில் இடம் பிடித்துள்ளது... ஆனால்.. பின்னணி ...

மரக்கறியில் கைவண்ணங்கள்

Posted: 14 Nov 2013 07:33 AM PST

பிறந்த தின வாழ்த்துக்கள் -கரூர் கவி அவர்களே

Posted: 14 Nov 2013 07:28 AM PST


 இனிய பிறந்த நாள் கொண்டாடும் 


திரு கரூர் கவி அன்பனுக்கு , 
பிறந்த தின வாழ்த்துக்கள். 
ரமணியன் 

நாடோடி மன்னன் - 1958.

Posted: 14 Nov 2013 07:27 AM PST

நாடோடி மன்னன் - 1958. மக்கள் திலகத்தின் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட அருமையான படம் . கண்ணதாசனின் கருத்தாழமிக்க உரையாடல்கள் - பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் மக்கள் திலகத்தின் சிறப்பான இரட்டை வேடங்கள் - இயக்கம் . 55 ஆண்டுகள் கழித்து இன்று பார்த்தாலும் பிரமிப்பு ஏற்படுத்தும் அளவிற்கு படம் உள்ளது . நாடோடி மன்னனில் எம்ஜிஆர் சொன்னார் -1958ல் சொன்னதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார் -1977ல். உலகில் யாருக்கும் கிடைத்திடாத பாக்கியம் எம்ஜிஆரின் புகழுக்கு ...

பெண்கள் தாய்மைப் பேறு அடைய சித்த மருத்துவம்

Posted: 14 Nov 2013 07:26 AM PST

பெண்களுக்கு கருப்பைக் கோளாறு இருந்தால் அதை சரி செய்ய எளிய வழி உள்ளது. அசோகா மரத்து பட்டை, மாதுளம்வேர் பட்டை, மாதுளம் பழ ஓடு ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாகக் காய வைத்து இடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு வேளை வீதம் இரண்டு சிட்டிகை வாயில போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தொண்ணூறு நாட்கள் குடித்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நெல்லிக்காய் சாற்றில் ரோஜாப்பூவை அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் பிரச்சினை ...

வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

Posted: 14 Nov 2013 07:18 AM PST

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வியட்னாமில் ...

வரக்கொத்தமல்லி

Posted: 14 Nov 2013 07:03 AM PST

வரக்கொத்தமல்லி என்பது என்ன, அது எப்படி இருக்கும், பயன்கள் என்ன? விளக்கம் தேவை.
அன்போடு வேண்டுகிறேன்.

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 14 Nov 2013 06:57 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' -நவம்பர் 14

Posted: 14 Nov 2013 06:38 AM PST

உலக நீரிழிவு நோய் தினம்! சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங் என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக 'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்' என ஐக்கிய நாடுகள் சபையால் 2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் 'பணக்காரர்களின் வியாதி' என்று சொல்லப்பட்ட இந்த நோய், இன்றைக்கு இல்லாத வீடுகளே இல்லை... ...

சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.!

Posted: 14 Nov 2013 06:37 AM PST

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்,து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 14 Nov 2013 05:51 AM PST

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! வேண்டாம் கொலுசு கூடலில் வண்டுகள் ! எட்டுப்பொருத்தம் இருந்த இணையருக்குள் ஏழாம்பொருத்தம் ! தேவையற்ற சொற்கள் நீக்கிடப் பிறக்கும் ஹைக்கூ ! சமாதானமாகிவிடுங்கள் உணர்த்தியது நரை ! ஒளி தருவதாகச் சொல்லி இருளையே தருகின்றனர் அரசியல்வாதிகள் ! நிரந்தரமில்லை முகவரி வாடகைக்கு குடியிருப்போருக்கு ! வளர் பிறையாக தனியார் பள்ளிகள் தேய் பிறையாக அரசுப் பள்ளிகள் வேண்டாம் அமாவசை ! உணவு உடை உறைவிடம் இலவசம் நடிகர் ! ஓய்வே ...

முகநூலில் ரசித்தவை!

Posted: 14 Nov 2013 04:36 AM PST

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!

ரமணியின் கவிதைகள்

Posted: 14 Nov 2013 02:58 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

செம்பருத்தி

Posted: 14 Nov 2013 02:20 AM PST

செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும். கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™