Tamil Star |
- சிறிலங்காவில் பேரணிகள் நடத்துவது, பதாகைகளை காட்சிப்படுத்துவது, கறுப்பக்கொடிகளை பறக்கவிடுவதற்கு தடை
- இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் முதல் கட்ட நடவடிக்கையாக இன்று நேரடி ஒளிபரப்பு
- மீன் உணவு வகைகளை சாப்பிட்டு பொது மக்கள் அச்சத்தை போக்கிய ஜப்பான் பிரதமர்
- கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதற்கான பரப்புரைக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு
- பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது – யாழ்ப்பாண கட்டளைத் தளபதிமஹிந்த ஹத்துருசிங்க
- உயரத்தில் இருந்து குதிக்கணும்! கூகுளின் இன்றைய டூடுள் (வீடியோ இணைப்பு)
- தொழில்நுட்பத்தின் வளர்ச்சி: அதிநவீன ஹெல்மெட் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
- வட மாகாண சபைக்காக ரூ. 17 பில்லியன் ஒதுக்கீடு
- இந்திய உதவிகள் தமிழர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை: சென்னையில் சம்பந்தன்
- முன்னாள் ஜனாதிபதியின் மூளையை திருடிய சகோதரர்
| சிறிலங்காவில் பேரணிகள் நடத்துவது, பதாகைகளை காட்சிப்படுத்துவது, கறுப்பக்கொடிகளை பறக்கவிடுவதற்கு தடை Posted: 22 Oct 2013 11:42 PM PDT
பேரணிகள் நடத்துவது, பதாகைகளை காட்சிப்படுத்துவது, கறுப்பக்கொடிகளை பறக்கவிடுவதற்கு அடுத்த மாதம் முதல் மூன்று வாரங்களுக்கும், தடைவிதிக்கப்படவுள்ளது. 50இற்கும் அதிகமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கொமன்வெல்த் மாநாட்டின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் ஹரிகுப்த றோகணதீர தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படுவதற்கும், இதில் உலகத் தலைவர்கள் பங்கேற்பதற்கும் மனிதஉரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், சிறிலங்காவின் மோசமான மனிதஉரிமைகள் நிலையை வெளிப்படுத்தும் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்பதாலேயே, பேரணிகள் மற்றும் பதாகைகள், கறுப்புக்கொடிகளுக்கு தடைவிதிக்கப்படவுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் முதல் கட்ட நடவடிக்கையாக இன்று நேரடி ஒளிபரப்பு Posted: 22 Oct 2013 10:49 PM PDT
நாடாளுமன்ற விவாதங்கள் இன்று கோட்டே நாடாளுமன்ற மைதானத்தில் பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற மைதானத்தில் பாரிய தொலைக்காட்சித் திரையொன்று பொருத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 4.00 மணி முதல் நாடாளுமன்ற மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள பெரிய திரையில் விவாதங்களை மக்கள் நேரடியாக பார்வையிட முடியும். இதன் இரண்டாம் கட்டமாக நாடாளுமன்ற விவாதங்களை தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மீன் உணவு வகைகளை சாப்பிட்டு பொது மக்கள் அச்சத்தை போக்கிய ஜப்பான் பிரதமர் Posted: 22 Oct 2013 10:37 PM PDT
மீன்கள் சாப்பிட அச்சம் இருந்தும், அங்கிருந்து அவ்வப்போது கதிர்வீச்சு கசிவு ஏற்படுகிறது. அந்த அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் கடலில் கலக்கிறது. இதனால் மீன்களிலும் கதிர்வீச்சு தாக்கி இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். அது குறித்த வதந்தியும் பெருமளவில் பரவியுள்ளது. எனவே, மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை சாப்பிட மக்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களின் அச்சத்தை போக்கி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இயல்பு நிலையை ஏற்படுத்த பிரதமர் ஜின்ஜோஅபே முடிவு செய்தார். அதற்காக அணு உலை வெடித்த புகுஷிமா பகுதியில் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். புகுஷிமா அருகேயுள்ள சோமா நகருக்கு சென்ற அவர் ஆக்டோபஸ் உள்ளிட்ட பல மீன் உணவு வகைகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டு காட்டினார். புகுஷிமா பகுதியில் உள்ள மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகள் நன்றாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது என பிரசாரம் செய்தார் அதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மீன்களை வாங்கி சென்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதற்கான பரப்புரைக்கு இந்தியாவில் பெரும் ஆதரவு Posted: 22 Oct 2013 10:25 PM PDT
இந்த தகவலை அனைத்துலக மன்னிப்புச்சபையின், இந்தியாவுக்கான தலைமை நிறைவேற்று அதிகாரி அனந்தபத்மநாபன் வெளியிட்டுள்ளார். இந்தப் பரப்புரை கடந்த 5ம் நாள் தொடங்கப்பட்டது என்றும், கொமன்வெல்த் மாநாடு துவங்கும் வரை இது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து இந்தியா ஒதுங்கிக் கொள்வதன் மூலம், சிறிலங்காவில் மனிதஉரிமைமீறல்களை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெளிவான சமிக்ஞை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பப்படும். இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்றால், சிறிலங்காவில் கடந்த காலத்தில் நடந்த, தற்போது நடக்கும் எண்ணற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டதாகி விடும் என்றும் அனந்தபத்மநாபன் தெரிவித்துள்ளார். போரின் முடிவுக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை, நீதியின் முன் நிறுத்த சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், எண்ணற்ற ஏனைய மனிதஉரமை மீறல்கள் நடக்கின்ற நாட்டில், கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது வெட்கக்கேடானது என்றும் அனந்தபத்மநாபன் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது – யாழ்ப்பாண கட்டளைத் தளபதிமஹிந்த ஹத்துருசிங்க Posted: 22 Oct 2013 10:06 PM PDT
தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு நினைவுத் தூபிகள் மற்றும் கல்லறைகளை அமைப்பதற்கு உலகின் எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாய் நீதவானும் கல்வியலாளருமான வட மாகாணசபையின் முதல்வர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தை நன்கு அறிவார் எனத் தெரிவித்துள்ளார். அல் கய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் கொலை செய்து பசுபிக் கடற்பகுதியில் புதைத்தனர் எனவும். எந்த இடத்தில் புதைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எவரும் கேள்விகளை எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் பொதுமக்கள் காணிகளை பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பி;ட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| உயரத்தில் இருந்து குதிக்கணும்! கூகுளின் இன்றைய டூடுள் (வீடியோ இணைப்பு) Posted: 22 Oct 2013 05:33 AM PDT உலகிலேயே முதன்முதலாக பாராசூட்டில் இருந்து மனிதன் குதித்ததன் 216வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கூகுள் ஒரு டூடுளை வெளியிட்டுள்ளது. பிரான்சை சேர்ந்த ஆன்ட்ரே-ஜாக்ஸ் கார்னெரின் என்பவர் 1797ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி சில்க் பாராசூட் மூலம் 3,000 அடி உயரத்தில் இருந்த பலூனில் இருந்து குதித்தார். அதன் பிறகு அவர் உலகப் பிரபலம் ஆனார். அவர் இந்த அதிசயத்தை நிகழ்த்தி இன்றுடன் 216 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு கூகுள் சிறப்பான டூடுள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொழில்நுட்பத்தின் வளர்ச்சி: அதிநவீன ஹெல்மெட் அறிமுகம் (வீடியோ இணைப்பு) Posted: 22 Oct 2013 05:31 AM PDT செல்லும் இடத்திற்கான வழிகளையும், வானிலை குறித்த தகவல்களையும் தரும் புதிய ரக ஹெல்மெட்(தலைக்கவசம்) அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலேயே இந்த உயர் தொழில்நுட்பம் கொண்ட ஹெல்மெட்டை ஸ்கல் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் செல்ல வேண்டிய இடத்துக்கான வழிகளையும், வானிலை அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஹெல்மெட்டின் வலது புறம் சிறிய அளவிலான காட்சிப்பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பின்புறம் வரும் வாகனங்களையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஹெல்மெட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| வட மாகாண சபைக்காக ரூ. 17 பில்லியன் ஒதுக்கீடு Posted: 22 Oct 2013 05:20 AM PDT 2014ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தில் வட மாகாண சபைக்காக 17 பில்லியன் 331 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமாக 11,500,000,000 பில்லியன் ரூபாவும் மூலதன செலவினமாக 5,831,000,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டுக்கு பின்னர் வடமாகாண சபைக்கான தேர்தல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்டது. இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கு 15 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டுவரும் செலவினமான 12 பில்லியன் ரூபாவும் மூலதன செலவாக 3 […] |
| இந்திய உதவிகள் தமிழர்களை முழுமையாகச் சென்றடைவதில்லை: சென்னையில் சம்பந்தன் Posted: 22 Oct 2013 05:16 AM PDT இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழுமையாக அவர்களைச் சென்றடைவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சென்னை பா.ஜ. அலுவலகத்தில் இன்று (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஊடக சந்திப்பில் சம்பந்தன் மேலும் கூறுகையில், இலங்கை தமிழர்களுக்கு இந்தியா செய்யும் உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை. இலங்கை தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவிட வேண்டும். இந்த விவகாரத்தில் இலங்கை அரசு […] |
| முன்னாள் ஜனாதிபதியின் மூளையை திருடிய சகோதரர் Posted: 22 Oct 2013 04:18 AM PDT
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜான் கென்னடியின் மூளையை அவரது தம்பி திருடிவிட்டதாக பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் 38வது ஜனாதிபதியாக கடந்த 1961ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஜான் எப் கென்னடி, ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 1963ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி தனது மனைவி ஜாக்குலினுடன் காரில் சென்று கொண்டிருந்த போது டெக்காஸ் மாநிலம் டல்லாய் நகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக லீ ஹார்லி ஓஸ்வால்டு என்பவன் கைது செய்யப்பட்டான், அவர் இறந்த 2 நாட்களுக்கு பிறகு ஜேக்ரூபி என்பவனை பொலிசார் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் ஜேம்ஸ் சுவான்சன் என்பவர் கென்னடி குறித்து 'என்ட் ஆப் டேஸ்(End Of Dates)' என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதில், சுட்டுக் கொல்லப்பட்ட கென்னடியின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அவரது மூளையும் உடன் சேர்ந்து புதைக்கப்படவில்லை. ஏனெனில் கென்னடியின் மூளையை அவரது தம்பி ராபர்ட் கென்னடி திருடி விட்டார், தற்போது அதை ஒரு கன்டெய்னரில் மறைத்து லாக்கரில் பத்திரப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கென்னடிக்கு ஏற்பட்டிருந்த நோய் குறித்தும், அதற்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்து மற்றும் சிகிச்சை குறித்து உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






