மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தெலுங்கானா உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பு: ஆந்திரா கவர்னர் டெல்லி விரைந்தார்
- எல்லையில் 50 இடங்களில் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் எல்லை பாதுகாப்பு வீரர் பலி
- தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை
- சித்தூர் அருகே 1½ வயது சிறுவனுக்கு நாக்கு வளரும் அதிசய நோயால் கடும் அவதி
- தங்க நாணய இறக்குமதி தடை ரத்து இல்லை: ப. சிதம்பரம் திட்டவட்டம்
- சுப்ரீம் கோர்ட்டில் தூக்கு கைதிகளின் வழக்குகளை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தொடங்கியது
- குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்களை குறித்த காலங்களில் சோதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- கேரள முன்னாள் மந்திரி கே.பி.கணேஷ்குமாருக்கு விவாகரத்து கிடைத்தது
- வெங்காயம் இறக்குமதி செய்ய பரிசீலனை: மத்திய மந்திரி தகவல்
- குஜராத்தில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமம் தீவைத்து எரிப்பு
- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நீரா ராடியா உரையாடல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு சி.பி.ஐ. நடவடிக்கை
- குஜராத் போலீசாரின் விசாரணை முடிந்ததால் ஆசாராம் பாபு ராஜஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டார்
- பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி
- பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது
- நிலக்கரி சுரங்க ஊழல்: பிரதமர் அலுவலகத்துக்கு சி.பி.ஐ. 'திடீர்' கடிதம்
- ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர்தப்பிய அதிசயம்
- பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதிக்கு வந்து தீவிரவாதிகள் ஊடுருவலை ஊக்குவிக்கும் ஹபீஸ் சயீத்: சுஷில்குமார் ஷிண்டே தகவல்
- கூடங்குளத்தில் இருந்து தமிழகத்துக்கு 700 மெகாவாட் மின்சாரம்: நாராயணசாமி உறுதி
- 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உண்ணாவிரதம்
- கேரளாவில் அமையவிருக்கும் மிதக்கும் கால்நடை மருத்துவமனை
| தெலுங்கானா உருவாக்குவதில் சிக்கல் நீடிப்பு: ஆந்திரா கவர்னர் டெல்லி விரைந்தார் Posted: 22 Oct 2013 10:45 PM PDT ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. பிரிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த மத்திய மந்திரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தடவை சந்தித்துப் பேசியுள்ள அந்த குழு, அடுத்து வரும் 7–ந்தேதி மீண்டும் கூடி விவாதிக்க |
| எல்லையில் 50 இடங்களில் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் எல்லை பாதுகாப்பு வீரர் பலி Posted: 22 Oct 2013 10:28 PM PDT பாகிஸ்தான் ராணுவம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எல்லையில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 200–க்கும் மேற்பட்ட அத்துமீறல்களை பாகிஸ்தான் ராணுவத்தினரும், தீவிரவாதிகளும் செய்துள்ளனர். |
| தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: ஆந்திராவில் பலத்த மழை Posted: 22 Oct 2013 10:21 PM PDT வங்கக் கடலில் உருவான தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. அது மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் ஆந்திரா அருகே மையம் கொண்டிருந்தது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி, காக்கிநாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை |
| சித்தூர் அருகே 1½ வயது சிறுவனுக்கு நாக்கு வளரும் அதிசய நோயால் கடும் அவதி Posted: 22 Oct 2013 10:11 PM PDT சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா பகுதியை சேர்ந்தவர் முகம்மதுகான். இவர், அந்த பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு 1½ வயதில் இப்ராகிம் என்ற மகன் உள்ளான். இப்ராகிமுக்கு நாக்கு வளர்ந்து கொண்டே போகிறது. அது, என்ன வியாதி என்றே தெரியவில்லை. |
| தங்க நாணய இறக்குமதி தடை ரத்து இல்லை: ப. சிதம்பரம் திட்டவட்டம் Posted: 22 Oct 2013 09:36 PM PDT உலகளவில் தங்க இறக்குமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு 162.4 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கத்தின் இறக்குமதி அதிகரித்ததால் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் பெருகியது. இதன் காரணமாக தங்க நாணயங்கள், பதக்கங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில், |
| சுப்ரீம் கோர்ட்டில் தூக்கு கைதிகளின் வழக்குகளை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தொடங்கியது Posted: 22 Oct 2013 08:55 PM PDT தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தொடங்கியது. கொலை, கொள்ளை, தீவிரவாத தாக்குதல் உள்ளிட்ட கொடிய வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், தங்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கோரி ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் |
| Posted: 22 Oct 2013 08:51 PM PDT சுப்ரீம்கோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டு 'சி.பி.ஐ.எல்.' என்று அழைக்கப்படுகிற பொது நல வழக்கு மையம், ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் கூறி இருந்ததாவது:- கார்பனேட்டட் மென்பானங்களில் (காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள்) மனித உடல் நலத்துக்கு மிகுந்த கேடு ஏற்படுத்துகிற பொருட்கள் அடங்கி உள்ளன. இத்தகைய குளிர்பானங்களால் ஏற்படுகிற அபாயங்களை கண்டறியவும், அளவிடவும் எந்த நடவடிக்கையும் இல்லை. குளிர்பானங்களில் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கிற பொருட்கள் அடங்கி இருப்பதால், |
| கேரள முன்னாள் மந்திரி கே.பி.கணேஷ்குமாருக்கு விவாகரத்து கிடைத்தது Posted: 22 Oct 2013 08:37 PM PDT கேரள காங்கிரஸ் (பி) தலைவர் பாலகிருஷ்ணபிள்ளையின் மகன் கே.பி.கணேஷ் குமார், சினிமா நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர். தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாக இருந்தார். அவர் தன்னை சித்ரவதை செய்வதாக, அவருடைய மனைவி யாமினி தாங்கச்சி, கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்தார். அவருக்கு எதிராக கணேஷ் குமாரும் போலீசில் புகார் செய்தார். இந்த சர்ச்சையை தொடர்ந்து, கணேஷ் குமார் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அவரும், யாமினியும் போலீஸ் புகார்களை |
| வெங்காயம் இறக்குமதி செய்ய பரிசீலனை: மத்திய மந்திரி தகவல் Posted: 22 Oct 2013 08:09 PM PDT விலை உயர்வை சமாளிப்பதற்காக வெங்காயம் இறக்குமதி செய்ய பரிசீலித்து வருவதாக மத்திய மந்திரி ஆனந்த் சர்மா கூறினார். டெல்லி உள்பட நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்து உள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்றது. இந்த விலை நேற்று 100 ரூபாயாக உயர்ந்தது. நாடு முழுவதிலும் இதே நிலை நீடிக்கிறது. |
| குஜராத்தில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமம் தீவைத்து எரிப்பு Posted: 22 Oct 2013 05:21 PM PDT வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் படித்து வரும் ஒரு பள்ளி மாணவி, சமீபத்தில் ஆசாராம் பாபு |
| 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நீரா ராடியா உரையாடல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு சி.பி.ஐ. நடவடிக்கை Posted: 22 Oct 2013 03:32 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், நீரா ராடியா டெலிபோன் உரையாடல் தொடர்பாக 4 புதிய வழக்குகளை சி.பி.ஐ. பதிவு செய்தது. கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் நீரா ராடியா, அரசியல்வாதிகள், கார்ப்பரேட் நிறுவன |
| குஜராத் போலீசாரின் விசாரணை முடிந்ததால் ஆசாராம் பாபு ராஜஸ்தானுக்கு அழைத்து செல்லப்பட்டார் Posted: 22 Oct 2013 03:29 PM PDT குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் |
| பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை திரட்டும் நரேந்திர மோடி Posted: 22 Oct 2013 02:22 PM PDT இணையதளம், சமூகவலைத்தளம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள மக்களிடம் இடைவெளியற்ற தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளவர் குஜராத் முதல் மந்திரி நரேந்திர |
| பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 5-ந் தேதி தொடங்குகிறது Posted: 22 Oct 2013 02:06 PM PDT பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 5-ந் தேதி தொடங்குகிறது. 3 வார காலத்துக்கு இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று பாராளுமன்ற வட்டார தகவல்கள் கூறுகின்றன. அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளுக்காக, தேவைப்பட்டால் மேலும் ஒரு சில நாட்களுக்கு இந்த கூட்டத்தொடர் |
| நிலக்கரி சுரங்க ஊழல்: பிரதமர் அலுவலகத்துக்கு சி.பி.ஐ. 'திடீர்' கடிதம் Posted: 22 Oct 2013 01:36 PM PDT நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கும் ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால், நிலக்கரித்துறை முன்னாள் ராஜாங்க மந்திரி தாசரி நாராயணராவ் மற்றும் ஜிண்டால் |
| ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் உயிர்தப்பிய அதிசயம் Posted: 22 Oct 2013 12:55 PM PDT மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத்தில் உள்ள ஜூம்கா கிராமத்தை சேர்ந்த அப்ரோசா பீவி என்பவர் தனது கர்ப்பிணி மகள் ரைஹானா பீவி என்பவருடன் லால்கோடா ரெயிலில் பயணமானார். நேற்று மாலை 6.30 மணியளவில் நாடியா மாவட்டம், பலாஷி நிலையத்தை ரெயில் நெருங்கும் போது கழிவறைக்கு |
| Posted: 22 Oct 2013 12:40 PM PDT இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகளின் மீது அதிரடி தாக்குதல் நடத்தி |
| கூடங்குளத்தில் இருந்து தமிழகத்துக்கு 700 மெகாவாட் மின்சாரம்: நாராயணசாமி உறுதி Posted: 22 Oct 2013 12:34 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று முதல் மின் உற்பத்தி தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து டெல்லியில் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நேற்று 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி |
| 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உண்ணாவிரதம் Posted: 22 Oct 2013 11:48 AM PDT சென்னை, கொல்கத்தா, கவுகாத்தி, ஜெய்பூர், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு கடந்த மாதம் முடிவு செய்தது. 30 ஆண்டுகால குத்தகை ஒப்பந்தப்படி, அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் நிறுவனத்திற்கு இவ்விமான நிலையங்களை |
| கேரளாவில் அமையவிருக்கும் மிதக்கும் கால்நடை மருத்துவமனை Posted: 22 Oct 2013 11:19 AM PDT குட்டநாடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கேரளா மாநில கால்நடைத்துறை மிதக்கும் மருத்துவமனை ஒன்றை அந்தப் பகுதியில் செயல்படுத்த உள்ளது. குட்டநாடு சுற்றிலும் நீர் சூழ்ந்த பகுதியாக உள்ளதால் இங்குள்ள விலங்குகளுக்கு சுகாதாரப் பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |