Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கனடா போன்று இந்தியாவும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் – ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.

Posted: 08 Oct 2013 10:47 PM PDT

sarath-kumar-defends-land-deal

sarath-kumar-defends-land-dealஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் இந்த உலகமே அறிந்தது. அப்பாவி மக்களை மேலும் தம் சொந்த நாட்டு மக்களை போர் என்ற பெயரில் லட்சக்கணக்கில் கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. இதை உணர்ந்த அனைத்து நாடுகளும் இலங்கையைக் கண்டித்து வரும் நிலையில் இந்தியா மட்டும் உறவை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்துள்ளார். தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இந்தியா காமன்வெல்த் மாநாட்டு புறக்கணிப்பு முடிவை எடுப்பது, அங்கே வாழும் தமிழர்கள் மீது மேலும் கவனத்தையும், பாதுகாப்பையும் அதிகரிக்கும் என்பது உறுதி. எனவே, மத்திய அரசு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முதலமைச்சருக்கு வாழ்த்து

Posted: 08 Oct 2013 10:25 PM PDT

images (9)

images (9)வட மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நேற்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதுடன், நடைமுறை அரசியல் யதார்த்தத்தையும் புரிந்து கொண்டு வடக்கு மாகாண சபையை செயற்திறன்மிக்க ஒரு அரச நிர்வாகமாக நடத்திச் செல்ல வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. இதற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அனுபவப் பகிர்வுகளையும், யோசனைகளையும், தேவையான பொழுதில் வழங்க தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்குள் அமைச்சுப் பொறுப்புக்களுக்காக முட்டிமோதிக் கொண்டிருப்பது, முதலமைச்சர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு தர்மசங்கடமான சூழலையே ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முரண்பாடுகளை மறந்து முதலமைச்சருக்கு உதவுகின்ற வகையில் சுமூகமான தீர்வுக்கு வரவேண்டும். வடக்கு மாகாண சபையொன்று இல்லாத சூழலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே மத்திய அரசுடன் இணக்கப்பாட்டுடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டு மக்களுக்கும், வடக்கு மாகாணத்துக்கும் சேவைகளை வழங்கியதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணக்க அரசியல் ஊடாகவே பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும், அழிந்துபோன வாழ்விடங்களையும் புதுப் பொழிவுடன் மீளக்கட்டி எழுப்ப முடியும். இந்த யதார்த்தையே நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் கூறி வந்துள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு தீர்வொன்றைக்காணும் முயற்சியிலும் இதே வழிமுறையே வெற்றியளிக்கும். இதை தற்போது உணர்ந்திருக்கும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சிகளுக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த வழிமுறையை சலுகை அரசியல் என்றும், எலும்புத்துண்டு அரசியல் என்றும் தூற்றியோருக்கு இன்று உண்மை புரிந்திருக்கவேண்டும். எமது அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கும், மத்திய அரசுடன் பகை தவிர்த்து எமது மக்களுக்கான தேவைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கும் அரசுடன் புரிந்துணர்வுடனான செயற்பாடு ஒன்று அவசியம். கூட்டமைப்பின் தலைமை அதை உணர்ந்திருப்பதுபோல் கூறியிருக்கின்றது. மன உறுதியோடு இவ்வழி முறையில் அவர்கள் பயணிப்பார்களாக இருந்தால் அதை நாம் வரவேற்போம். வடக்கு மாகாண சபை அரசை புதிய கட்டிடத் தொகுதியிலிருந்தும், புதிய ஆரம்பங்களிலிருந்தும் பெரும் சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்க வேண்டியிருப்பதை நாம் புரிந்து கொள்கின்றோம். இந்த வேளையில் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒவ்வொருவரும் புரிந்துணர்வுடன் ஒத்துழைப்பதனூடாகவே வெற்றிகரமான பயணத்தை செய்யமுடியும். நடைமுறைச்சாத்தியமான முயற்சிகளுக்கும், மக்களுக்கான சேவைக்கு முன்னுரிமையளிக்கும் பயன் உள்ள வேலைத்திட்டத்துக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கின்றோம். என்று அந்த அறிக்கை நிறைவுறுத்தப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை அரசாங்க தலைமைக்கு கடுமையான செய்தியை பிரித்தானிய பிரதமர் எடுத்து செல்வார்

Posted: 08 Oct 2013 09:47 PM PDT

download (5)

download (5)எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக இலங்கை வரும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன் கடுமையான செய்தி ஒன்றை இலங்கை அரசாங்க தலைமைக்கு செல்லவுள்ளார்.

பிரித்தானிய டைம்ஸ் செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு மாநாட்டில் தாம பங்கேற்க போவதில்லை என்று கனடா அறிவித்துள்ள நிலையில், பிரித்தானிய தாம் மாநாட்டில் பங்கேற்பதற்குரிய நியாயத்தை கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே இலங்கை அரசாங்க தலைமைக்கு கடுமையான செய்தியை அந்த நாட்டின் பிரதமர் எடுத்துச் செல்வார் என்று பிரித்தானிய அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்த வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்னர், முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில் பொதுநலவாய அமைப்புக்கு தமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டியுள்ளமையால் பிரித்தானியா, இலங்கை மாநாட்டில் பங்கேற்க வேண்டியுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு மாநாட்டில் பிரித்தானிய பிரதமர், இளவரசர் சார்ள்ஸ் உட்பட்ட 53 பேரைக்கொண்ட குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

60 நொடிகளில் பழகக்கூடிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்

Posted: 08 Oct 2013 08:49 AM PDT

நமது சிறுவயது முதல் நம் ஆசிரியர்களும், பெற்றோர்களும் நமக்கு நல்ல பழக்கவழக்கங்களை சொல்லி கொடுக்கிறார்கள்.இதையெல்லாம் கேட்கும் போது அந்த வயதில் நமக்கு வேப்பங்காயைப் போல் கசந்திருக்கும். ஆனால் ஒரு பக்குவம் வந்த பின் தான் அதன் நன்மைகள் நமக்கு புரியும். ஆனால் இன்னும் சிலருக்கோ, அது புரிவதே இல்லை. அப்படியே சில பழக்கவழக்கங்கள் இருந்தாலும் கூட, பல விடயங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. நல்ல ஆரோக்கியமான உடலை பெறுவதற்கு நாளாகும் என்று நீங்கள் நினைத்தால் 60 நொடிகளுக்குள் செய்யக்கூடிய […]

விண்டோஸ் 8.1யை எளிமையாக பயன்படுத்துவதற்கான சில வழிமுறைகள்

Posted: 08 Oct 2013 08:46 AM PDT

விண்டோஸ் 8 சிஸ்டத்தினை பயன்படுத்துவது அநேக வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சிரமாக இருக்கின்றது. இதனை தவிர்க்க புதிய வழிமுறைகள் தரப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீன் இல்லாமல் நேராக டெஸ்க்டாப்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், பலருக்கும் பிடிக்காத விடயமாகப் பேசப்படுவது, சிஸ்டம் start ஸ்கிரீனில் தொடங்கும் செயல்பாடாகும். பெரும்பாலான வாடிக்கையாளர்களிடம் இருந்து இந்த கருத்து வந்ததனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் மாற்றியுள்ளது. நேராக சிஸ்டம் முன்பு போல, desktop செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற ஒரு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான உணவுகள்

Posted: 08 Oct 2013 08:41 AM PDT

ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும். பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர். உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம். எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய […]

கேன்சரை குணப்படுத்தும் சமையலறை வைத்தியம்

Posted: 08 Oct 2013 08:37 AM PDT

உணவே மருந்து என்பது தான் நம் முன்னோரிகளின் தாரக மந்திரம், அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது. கேன்சரை குணப்படுத்தும் மிகச்சிறந்த மருந்துவப் பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையலறையில் தான் உள்ளது. 01. மஞ்சள்: புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 02. பெருஞ்சீரகம்: பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நியூசிலாந்து– வங்காள தேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை

Posted: 08 Oct 2013 07:01 AM PDT

7615554202016838690

7615554202016838690நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக வங்காள தேசம் சென்றுள்ளது.

நியூசிலாந்து– வங்காள தேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நாளை தொடங்குகிறது. வங்காளதேச அணி இதுவரை நியூசிலாந்தை வென்றது இல்லை. முஸ்பிக்குர் ரகீம் தலைமையிலான அந்த அணி முதல் முறையாக நியூசிலாந்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

இரு அணியும் 9 டெஸ்டில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 8 டெஸ்டில் வெற்றி பெற்றது. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெண்டுல்கரும், ராகுல் டிராவிட் இருவருமே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் :எனது சிறந்த மாணவர்கள் – கவாஸ்கர்

Posted: 08 Oct 2013 06:50 AM PDT

bdeecce0-afe0-48a8-9e42-28e9e6883d87_S_secvpf

bdeecce0-afe0-48a8-9e42-28e9e6883d87_S_secvpfகிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இந்த இருவரையும் இனி கலர் சீருடையில் பார்க்க இயலாது. தெண்டுல்கர் டெஸ்டில் விளையாடுவதால் வெள்ளை சீருடையில் காண முடியும். ஆனால் டிராவிட் அனைத்து தர போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் அவரது ஆட்டத்தை இனி பார்க்க இயலாது.

இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்வு செய்வது சாத்தியமில்லாத ஒன்று என்றும், இருவரும் எனது சிறந்த மாணவர்கள் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

தெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்கு மகத்தானவை. சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இந்தியாவை தலை நிமிர வைத்துள்ளனர். இந்த இருவரில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்வது இயலாத ஒன்றாகும்.

இருவருமே எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். வலது கை, இடது கை போன்றவர்கள். இருவரையும் பிரித்து பார்க்க இயலாது.

ராகுல் டிராவிட் 3–வது வீரராகவும், தெண்டுல்கர் 4–வது வீரராகவும் இந்திய அணிக்காக பலமுறை களம் இறங்கியிருக்கிறார்கள்.

ஒருவரோடு மற்றொரு வரை விட்டுக்கொடுக்க முடியாத அற்புதத்தை இருவரும் படைத்துள்ளனர்.

குறிப்பாக டிராவிட்டின் கேப்டன் திறமை அற்புதமானது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் கேப்டன் என்ற முறையில் அவர் சிறப்பான முறையில் பிரச்சினையை கையாண்டார். அதனால் ராஜஸ்தான் அணி ஐ.பி.எல். மற்றும் சாம்பியன்ஸ் 'லீக்' போட்டியில் மிகுந்த முன்னேற்றம் கண்டது.

டிராவிட்டுக்கு சிறந்த கிரிக்கெட் நிர்வாகிக்குரிய திறமை இருக்கிறது.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கு மாகாணத்தைப் புனரமைக்க ராஜபக்சே அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும் – விக்னேஸ்வரன்

Posted: 08 Oct 2013 06:39 AM PDT

Vikneswaran_TNA_Chief_Candidate

Vikneswaran_TNA_Chief_Candidateவடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற விக்னேஸ்வரன் இன்று முதல் முறையாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் உள்ள அனைத்து மகாணங்களுக்கும் சம அளவில் நிதி தரப்படும் என அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஆனால், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய வடக்கு மாகாணத்திற்கு இந்த நிதி போதாது. வடக்கு மாகாணத்தைப் புனரமைக்க ராஜபக்சே அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். கூடுதல் நிதி தொடர்பாக ராஜபக்சே அரசுடன் பேச உள்ளேன். வெளிநாட்டில் இருந்து அரசு நிதி பெற்றாவது வழங்கவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். மீன்பிடிப்பதில் உள்ள பிரச்சினையை, இந்திய-இலங்கை மீனவர்கள் பேசித் தீர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு மாகாண அரசு பிரதிநிதிகள் உதவத் தயார். இந்திய அரசின் முன் முயற்சியால் 25 ஆணடுகளுக்குப் பிறகு வடக்கு பகுதியில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்ததால்தான் நான்முதல்வர் ஆகியிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™