மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மீண்டும் மந்திரி பதவி வழங்காவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்: கணேஷ்குமார் மிரட்டல்
- இன்று கருட சேவை: போக்குவரத்து தடையை மீறி திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர்
- ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
- நவராத்திரி பூஜை கமிட்டியில் துணைத்தலைவராகச் செயல்படும் முஸ்லிம் இளைஞர்
- ஆதார் அடையாள அட்டைக்கு சட்டபூர்வ அந்தஸ்து: மத்திய அரசு ஒப்புதல்
- ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் இல்லை: ஷிண்டே திட்டவட்ட அறிவிப்பு
- சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.3.50 உயருகிறது
- சிறைக்குள் நவராத்ரி பூஜை செய்கிறார் லல்லு பிரசாத் யாதவ்
- டெல்லி கற்பழிப்பு வழக்கு: தண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் திடீர் விலகல்
- மாயாவதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை முடித்தது சி.பி.ஐ.
- திருடப்போன வீட்டில் தூங்கியதால் போலீசாரிடம் மாட்டிய திருடன்
- அரசின் சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டை அவசியமல்ல: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
- சீமாந்திரா பகுதி முழுவதும் 3–வது நாளாக முடங்கியது: குடிநீர், பால் கிடைக்காமல் பொது மக்கள் அவதி
- மத்திய, மாநில அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு: 3 மாதத்தில் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- ஏழைகளை ஆதரிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்: ராகுல்காந்தி சொல்கிறார்
- மனைவி எரித்துக் கொலை: இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு
- பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுகின்றனர்: ராணுவத் தளபதி பிக்ரம் சிங்
- பிரம்மோற்சவ 4–வது நாள் விழா: கல்பவிருட்ச வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா
- சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி: மந்திரி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை
- மும்பைக் கடற்பரப்பில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் கசிவு: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம்
| மீண்டும் மந்திரி பதவி வழங்காவிட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன்: கணேஷ்குமார் மிரட்டல் Posted: 08 Oct 2013 10:11 PM PDT கேரள முன்னாள் மந்திரி கணேஷ்குமார். கேரள காங்கிரஸ் (பி) கட்சியைச் சேர்ந்த இவர் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது மனைவி யாமினி தங்கச்சி. கணேஷ் குமார் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும், தனது குடும்பத்தை கவனிக்காமலும் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், யாமினி தங்கச்சி பரபரப்பு புகார் தெரிவித்தார். இந்த பிரச்சினை கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் உம்மன்சாண்டி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கணேஷ்குமாரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் கணேஷ் குமார், யாமினி தங்கச்சி பிரச்சினை பற்றி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே யாமினி தங்கச்சி மற்றும் அவரது குழந்தைகளுக்கு கணேஷ்குமார் ஜீவனாம்சம் வழங்க வேண்டும். அவர்கள் தற்போது வசிக்கும் வீட்டை அவர்களுக்கே கொடுக்க வேண்டும். அந்த வீட்டிற்கு கணேஷ் குமார் போகக்கூடாது என்று சமரசப் பேச்சு |
| இன்று கருட சேவை: போக்குவரத்து தடையை மீறி திருப்பதியில் பக்தர்கள் குவிந்தனர் Posted: 08 Oct 2013 09:12 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 5-வது நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள். தனி தெலுங்கானாவை கண்டித்து சீமாந்திராபகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. பஸ், வேன், கார், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீமாந்திரா மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆந்திர மாநிலத்தில் பெரும்பாலான |
| ஓட்டு போட்டதும் வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு Posted: 08 Oct 2013 08:13 PM PDT மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் சந்தேகம் இருந்து வந்தது. இது தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் அவர், "ஒரு வாக்காளர் தான் விரும்பிய வேட்பாளருக்குத்தான் தனது ஓட்டு மிகச்சரியாக பதிவு ஆகி உள்ளது என்பதை அறிந்து உறுதி செய்து கொள்ளும் வசதியாக வி.வி.பி.ஏ.டி. என்னும் ஒப்புகைச்சீட்டு வழங்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறி இருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் ககோய் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின்போது, ஏற்கனவே வாக்காளர்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறையை நாகலாந்து மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அமல்படுத்தியதாகவும், அது வெற்றிகரமாகவும், திருப்திகரமாகவும் அமைந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. நிர்வாக காரணங்களையும், நிதி ஒதுக்கீடு காரணங்களையும் சுட்டிக்காட்டிய தேர்தல் கமிஷன், இந்த ஒப்புகைச்சீட்டு வழங்கும் |
| நவராத்திரி பூஜை கமிட்டியில் துணைத்தலைவராகச் செயல்படும் முஸ்லிம் இளைஞர் Posted: 08 Oct 2013 05:40 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் கடந்த 38 வருடங்களாக அங்குள்ள துப்பாக்கித் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஒருங்கிணைந்து நவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றார்கள். ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர் என மத வித்தியாசம் |
| ஆதார் அடையாள அட்டைக்கு சட்டபூர்வ அந்தஸ்து: மத்திய அரசு ஒப்புதல் Posted: 08 Oct 2013 02:55 PM PDT நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் பெற, 12 இலக்க எண் கொண்ட இந்த அடையாள அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது |
| ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் இல்லை: ஷிண்டே திட்டவட்ட அறிவிப்பு Posted: 08 Oct 2013 01:50 PM PDT ஆந்திர மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் குறித்து நேற்று நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது |
| சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.3.50 உயருகிறது Posted: 08 Oct 2013 10:53 AM PDT சென்னையில் தற்போது 14.2 கிலோ எடையுள்ள வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.398 ஆகும். இதன் விலை மேலும் ரூ.3.50 உயருகிறது. கியாஸ் சிலிண்டர் விற்பனையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கான கமிஷன் தொகையை 9 சதவீதம் அதாவது 3 ரூபாய் 46 காசுகள் அதிகரிக்குமாறு கோரிக்கை விடப்பட்டது |
| சிறைக்குள் நவராத்ரி பூஜை செய்கிறார் லல்லு பிரசாத் யாதவ் Posted: 08 Oct 2013 09:58 AM PDT பீகாரின் முதல் மந்திரியாக ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இருந்த போது மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி பிர்சா முண்டா சிறைக்குள் |
| டெல்லி கற்பழிப்பு வழக்கு: தண்டனை பெற்ற 2 குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் திடீர் விலகல் Posted: 08 Oct 2013 09:26 AM PDT டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் ஒரு குற்றவாளி சிறையில் தற்கொலை செய்துகொண்டான். ஒருவன் சிறுவன் என்பதால் அவனுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறார் |
| மாயாவதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை முடித்தது சி.பி.ஐ. Posted: 08 Oct 2013 08:22 AM PDT உத்தரப்பிரதேச முன்னாள் முதல் மந்திரி மாயாவதி அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்று கூறி கடந்த ஆண்டு, வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. |
| திருடப்போன வீட்டில் தூங்கியதால் போலீசாரிடம் மாட்டிய திருடன் Posted: 08 Oct 2013 06:38 AM PDT அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் தாக்கூர் என்ற 29 வயது வாலிபன் திருட்டையே தொழிலாகக் கொண்டவன். உயர்ந்த கட்டிடங்களிலும் விரைவாக ஏறும் இவனது இயல்பினால், அகமதாபாத் காவல்துறை இவனை ஸ்பைடர்மேன் என்று குறிப்பிட்டுள்ளது. இவன் கடந்த வாரம் ஆனந்த் நகரில் உள்ள ரோஸ்வுட் அபார்ட்மெண்ட் என்ற குடியிருப்பில் |
| அரசின் சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டை அவசியமல்ல: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு Posted: 08 Oct 2013 05:26 AM PDT மத்திய அரசுகளில் சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டை அவசியம் என்று கூறப்பட்டது. மாநில அரசுகளும் ஆதார் அட்டை இல்லையென்றால் அரசின் நேரடி மானியம் மற்றும் சலுகைகளை பெறமுடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை அடுத்து ஆதார் அட்டைகள் அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| சீமாந்திரா பகுதி முழுவதும் 3–வது நாளாக முடங்கியது: குடிநீர், பால் கிடைக்காமல் பொது மக்கள் அவதி Posted: 08 Oct 2013 04:57 AM PDT தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் காரணமாக சீமாந்திரா பகுதி முழுவதும் இன்று 3–வது நாளாக முடங்கியது. மின்சார ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் வீடுகளில் உள்ள குழாய் கிணறு மோட்டார்களும் இயங்கவில்லை. இதனால் வீட்டு உபயோகத்துக்கும் தண்ணீர் இல்லை. பால் வினியோகமும் |
| Posted: 08 Oct 2013 04:40 AM PDT உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. இதனால் தகுதி இருந்தும் மாற்றுத் திறனாளிகள் உரிய வேலை பெற முடியாமல் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. |
| ஏழைகளை ஆதரிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்: ராகுல்காந்தி சொல்கிறார் Posted: 08 Oct 2013 04:07 AM PDT டெல்லி விஞ்ஞான்பவனில் இன்று நடந்த விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:– இந்தியாவில் சாதி அடிப்படையிலான அமைப்பு உள்ளது. இதில் தலித் சமுதாயம் நிறைய வெற்றி பெற வேண்டியதுள்ளது. தலித் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டியது உடனடி தேவையாகும். தலித் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வாய்ப்பை முதன் முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். அதன்பிறகே அதன் முதல் சட்டத்தை அம்பேத்கர் கொண்டு வந்தார். அவரை கன்சிராம் |
| மனைவி எரித்துக் கொலை: இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவரின் தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு Posted: 08 Oct 2013 03:48 AM PDT டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுசீல்சர்மா 1995–ம் ஆண்டு தன் மனைவி நைனா சகினியை கொலை செய்தார். அந்த கொலையை மறைக்க மனைவி உடலை தந்தூரி அடுப்பில் வைத்து எரித்தார். நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் சுசீல் சர்மாவுக்கு ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து சுசீல் சர்மா சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். |
| Posted: 08 Oct 2013 03:10 AM PDT கடந்த இரண்டு வாரங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் கெரன் செக்டர் வழியாக எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 40 தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இறந்த தீவிரவாதிகளின் உடல்கள் காட்டிலேயே புதைக்கப்பட்டுள்ளன. இதனால் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள கெரன் செக்டரில் |
| பிரம்மோற்சவ 4–வது நாள் விழா: கல்பவிருட்ச வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா Posted: 08 Oct 2013 01:55 AM PDT திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5–ந்தேதி மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வருகிறார். பிரம்மோற்சவ விழா 4–வது நாளான இன்று காலை 9 மணிக்கு கல்பவிருட்ச வாகனத்தில் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாடவீதிகளில் வீதிஉலா வந்தார். |
| சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி: மந்திரி தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை Posted: 08 Oct 2013 01:47 AM PDT கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அடுத்த மாதம் 17–ந்தேதி முதல் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் தொடங்கும். இவ்விழாவை காணவும், அய்யப்பனை தரிசிக்கவும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆண்டுக்காண்டு பக்தர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை |
| மும்பைக் கடற்பரப்பில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் கசிவு: சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் Posted: 07 Oct 2013 11:37 PM PDT மும்பை கடற்பகுதியில் உரன் பகுதியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம் உள்ளது. இங்கு ஞாயிறன்று இரவு அங்கிருந்த எண்ணெய்க் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டதில் 5,000 லிட்டர் கச்சா எண்ணெய் அரபிக் கடலில் கசிந்துள்ளதாகத் தகவல் வெளியானது. கடலின் நீர்ப்பரப்பில் 10 கி.மீ தொலைவிற்கு பரவியுள்ள இந்த எண்ணெய்க் கசிவினால் கரையோரம் முழுவதும் எண்ணெய்த் திட்டுகள் காணப்படுகின்றன. உரன் கடற்பகுதியில் உள்ள மோராவிலிருந்து கரஞ்சா கிராமம் வரை சாம்பல் கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த எண்ணெய்ப் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |