Tamil Star |
- 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம் – ராஜபட்ச
- ராஜபக்ச தப்பிக்க இந்தியா துணை போகக் கூடாது : அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும் – டாக்டர் ராமதாஸ்
- தமிழகத்தில் நடைபெறும் எதிர்ப்புகளுக்கு இலங்கை அரசாங்கம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை -தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
- அதிர்ச்சி அளிக்கும் அதிரடி காட்சி
- பனிமலைகளை ஊடறுக்கும் அதிசய கண்ணாடி
- நடுவரை வெறுப்பேற்றிய அஜ்மலுக்கு எச்சரிக்கை
- நீர்த்தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி
- கிளீன் போல்டான சச்சின்
- கலால் தீர்வை அதிகாரிகள் எனக் கூறி கொள்ளையிட்ட இருவர் விளக்கமறியலில்
- அலைகளின் நடுவே அட்டகாசம் புரியும் அணில்!
| 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம் – ராஜபட்ச Posted: 27 Oct 2013 07:05 PM PDT
கொழும்பில் இருந்து அங்குள்ள விமான நிலையத்திற்கு சீன அரசின் நிதி உதவியுடன் (300 மில்லியன் அமெரிக்க டாலர்) 28 கி.மீ.தூரத்துக்கு விரைவு சாலை அமைக்கப்பட்டது. இந்த விரைவு சாலையின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதிபர் ராஜபட்ச பேசும்போது கூறியது: 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதிக்குப் (பிரபாகரன் மரணமடைந்த நாள்) பிறகு இலங்கை மண்ணில் பயங்கரவாதச் செயல்களோ, ரத்த ஆறோ ஓடவில்லை. நாடு அமைதிப் பூங்காவாக மாறியது. எதிர்கால சந்ததிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நாட்டில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மக்கள் எனக்கு முழு ஒத்துழைப்புத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன். இலங்கை அரசு மீது ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம். இதற்காக 6 மாதத்துக்கு ஒரு முறை ஜெனீவா சென்று அதற்கான பதிலை அளித்து வருகிறோம். ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் பற்றி மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை மண்ணில் அடிக்கடி நடைபெற்ற குண்டுவெடிப்புகள் பற்றியோ, குண்டு வீச்சுகள் பற்றியோ எந்த கேள்வியும் கேட்கவில்லை என்று ராஜபட்ச தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Oct 2013 08:04 AM PDT
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அம்மாநாட்டில் இந்தியா நிச்சயமாக பங்கேற்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார். ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்து உலகின் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்த ராஜபக்ச, உலக நாடுகளின் கண்டனத்திலிருந்து தப்புவதற்காகவே கொமன்வெல்த் மாநாட்டை கொழும்பில் நடத்தத் துடிக்கிறார். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தரும் தார்மீகக் கடமை இந்திய அரசுக்கு இருக்கும் நிலையில், ராஜபக்ச தப்பிக்க இந்தியா துணை போகக் கூடாது. எனவே, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். கொமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்காக தமிழக சட்டப் பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்த வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கண்டிப்பாக பங்கேற்கும் என்றும், இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்கப் போவது குடியரசுத் தலைவரா, பிரதமரா, குடியரசுத் துணைத் தலைவரா அல்லது தாமா? என்பது தான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார். கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை ஆராய்ந்து சாதகமான முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதிக்காமல், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று சல்மான் குர்ஷித் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமலும், இலங்கையுடன் உறவு வைத்துக் கொள்ளாமலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? என்று சல்மான் குர்ஷித் கேட்டிருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும். இம்மாதத் தொடக்கத்தில் இலங்கை சென்ற குர்ஷித் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் தாக்கப்படுவது குறித்தோ அல்லது கைது செய்யப்படுவது குறித்தோ எதுவும் பேசவில்லை. மாறாக ராஜபக்சவின் குரலாக மாறி, தமிழக மீனவர்கள் பேராசையுடன் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளங்களையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதாக குற்றஞ்சாட்டினார். அது மட்டுமின்றி, மீனவர் நலன் சம்பந்தப்பட்ட கச்சதீவு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தடை விதித்தவரும் இவர் தான். இப்படிப்பட்டவர் தான் தமிழக மீனவர்களை பாதுகாப்பதற்காகவே கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக கூறுகிறார். அமைச்சரின் பேச்சைக் கேட்கும் போது ஆடு- ஓநாய் பழமொழி நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் கூறியிருக்கிறார். இது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்காத நிலையில், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று குர்ஷித் கூறுகிறார் என்றால், அவர் பிரதமரை விட அதிக அதிகாரம் பெற்றவரா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும். கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பதுடன், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 27 Oct 2013 07:57 AM PDT
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புகள் தொடர்பில் அரசாங்கம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை. அத்துடன் இந்திய பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளாதது பெரிய பிரச்சினைகள் எதனையும் ஏற்படுத்தாது என்றார். கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தி அண்மையில் சென்னையில் உள்ள பிரித்தானிய தூதரகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் தமிழக சட்டச் சபையியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே குணதாச அமரசேகர இந்த கருத்துக்களை வெளியிட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அதிர்ச்சி அளிக்கும் அதிரடி காட்சி Posted: 27 Oct 2013 07:43 AM PDT |
| பனிமலைகளை ஊடறுக்கும் அதிசய கண்ணாடி Posted: 27 Oct 2013 07:38 AM PDT |
| நடுவரை வெறுப்பேற்றிய அஜ்மலுக்கு எச்சரிக்கை Posted: 27 Oct 2013 07:34 AM PDT விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர் அஜ்மலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துபாயில் பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதன் மூன்றாவது நாளில் பாகிஸ்தான் சுழல் சயீத் அஜ்மல் வீசிய 162வது ஓவரை, தென் ஆப்ரிக்க அணியின் மார்னி மார்க்கெல் எதிர்கொண்டார். இதில் பந்து கேட்ச் ஆனதாக அஜ்மல் செய்த முறையீட்டை நடுவர் இயான் கவுல்ட் நிராகரித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே மார்க்கெல் முதல் ஸ்லிப்பில் யூனிஸ் கானிடம் பிடிபட்டு […] |
| நீர்த்தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி Posted: 27 Oct 2013 07:28 AM PDT |
| Posted: 27 Oct 2013 07:23 AM PDT ரஞ்சி கிண்ண போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் 5 ஓட்டங்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். ஹரியானாவின் ரோடக்கில் நடந்த ரஞ்சி கிண்ண போட்டியில் இன்று மும்பை- ஹரியானா அணிகள் மோதின. மும்பை அணியில் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார். இவரது தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதால், இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது, இதனையடுத்து களமிறங்கிய […] |
| கலால் தீர்வை அதிகாரிகள் எனக் கூறி கொள்ளையிட்ட இருவர் விளக்கமறியலில் Posted: 27 Oct 2013 07:19 AM PDT கலால் தீர்வை அதிகாரிகள் எனக் கூறி, மக்களை சிரமத்துக்குள்ளாக்கி பணம், பொருட்களை கொள்ளையிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மினுவன்கொட – யாகொடமுல்ல பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் (25) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் வசமிருந்து 10,330 ரூபா பணம், பெண்ணொருவரின் கைப்பை, கையடக்கத் தொலைபேசிகள் எட்டு, இரண்டு கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் ஜஎல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதோடு, நேற்றையதினம் மினுவன்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். […] |
| அலைகளின் நடுவே அட்டகாசம் புரியும் அணில்! Posted: 27 Oct 2013 07:17 AM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









