மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 3–ந் தேதி நடக்கிறது
- ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது
- எம்.பி. பதவி ராஜினாமா நிராகரிப்பு: சபாநாயகர் முடிவை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு
- கேரளாவில் தாய் கண் முன்பு 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து கொலை: கணவரின் தம்பி வெறிச்செயல்
- பலத்தமழை– ரெயில்கள் ரத்து: திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
- சபரிமலையில் 18–ம் படி அருகே பக்தர்கள் தேங்காய் உடைக்க தடை
- பாட்னா குண்டு வெடிப்பு: உளவுத்துறையின் செயலற்ற தன்மையை காட்டுகிறது - சுஷ்மாசுவராஜ் கண்டனம்
- ஆந்திராவில் லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
- பாட்னா குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம்: நிதிஷ்குமார் அறிவிப்பு
- பாட்னா குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு: 83 பேர் படுகாயம்
- ராகுல்காந்தி பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்ற சரத்பவார் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
- பாட்னா குண்டுவெடிப்பு சதிகாரர்கள் வீட்டில் வெடிப் பொருட்கள் - ஒசாமாவின் புகைப்படம் பறிமுதல்
- தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளதால் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்: டெல்லியில் விஜயாகாந்த் பேச்சு
- துப்பாக்கி சத்தம் இல்லாமல் தொடர்ந்து 4 நாட்களாக ஜம்மு எல்லைப் பகுதியில் அமைதி நிலவுகிறது
- பாட்னா தொடர்குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் ஜார்கண்ட் மாநில தீவிரவாதிகள்: போலீசார் தகவல்
- பாட்னா குண்டு வெடிப்பு: சோனியா காந்தி அதிர்ச்சி
- கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு
- நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு
- கொழிஞ்சாம்பாறை அருகே தந்தையை அடித்துக்கொன்ற மகன்
- வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி
| திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் 3–ந் தேதி நடக்கிறது Posted: 27 Oct 2013 10:39 PM PDT திருமலை–திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தீபாவளி பண்டிகையை யொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) 3–ந் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அதையொட்டி அன்று காலை 7 மணியில் இருந்து 9 மணி வரை கோவிலில் உள்ள கங்கா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை சர்வ பூபால வாகனத்தில் அமர வைத்து சிறப்பு பூஜைகளுடன் தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. |
| ஆந்திராவில் பலத்த மழை: 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது Posted: 27 Oct 2013 10:29 PM PDT வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் ஏற்பட்ட உடைப்பால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மழை வெள்ளத்தால் ஆந்திராவில் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விசாகப்பட்டினம், விஜயநகரம், |
| எம்.பி. பதவி ராஜினாமா நிராகரிப்பு: சபாநாயகர் முடிவை எதிர்த்து ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு Posted: 27 Oct 2013 10:16 PM PDT ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதி எம்.பி.யாக உள்ளார். மாநிலத்தை பிரித்து தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட காங்கிரஸ், தெலுங்கு தேச எம்.பி.க்கள் கடந்த ஆகஸ்டு மாதம் ராஜினாமா செய்தனர். |
| கேரளாவில் தாய் கண் முன்பு 2 குழந்தைகள் கழுத்தை அறுத்து கொலை: கணவரின் தம்பி வெறிச்செயல் Posted: 27 Oct 2013 10:12 PM PDT கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள ராணியை அடுத்த கீழாளூர் பகுதியைச் சேர்ந்தவர் சைபு. இவரது மனைவி பிந்து. இந்த தம்பதிக்கு மெல்பின் (வயது 7), மெபின் (2 ½) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். மெல்பின் 2–ம் வகுப்பு படித்து வந்தான். மெபின் பால்வாடிக்கு சென்று வந்தான் |
| பலத்தமழை– ரெயில்கள் ரத்து: திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது Posted: 27 Oct 2013 10:07 PM PDT ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழையால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது. வழக்கமாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். 1 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் கூடுவார்கள். ஆனால் தொடர் மழை காரணமாக ரெயில்கள் ரத்து போன்ற காரணங்களால் திருமலையில் நேற்று பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்தது. |
| சபரிமலையில் 18–ம் படி அருகே பக்தர்கள் தேங்காய் உடைக்க தடை Posted: 27 Oct 2013 09:31 PM PDT பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சென்று அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். விரைவில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளது. இந்த பூஜைகளின் போது சபரிமலையில் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் திரள்வார்கள். இதையொட்டி சபரிமலை பக்தர்களுக்கு வேண்டி வசதிகள் மற்றும் பாதுகாப்பு |
| பாட்னா குண்டு வெடிப்பு: உளவுத்துறையின் செயலற்ற தன்மையை காட்டுகிறது - சுஷ்மாசுவராஜ் கண்டனம் Posted: 27 Oct 2013 08:55 PM PDT பாட்னா தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியில், ''பாட்னாவில் பாரதீய ஜனதா கட்சி பிரசார கூட்டத்தின்போது வெடிகுண்டுகள் வெடித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இந்த சதித்திட்டம் குறித்து முன்தகவல் எதுவும் தெரிவிக்காதது, உளவுத்துறையின் செயலற்ற தன்மையை காட்டுகிறது'' என்று |
| ஆந்திராவில் லாரி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு Posted: 27 Oct 2013 08:32 PM PDT ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு சிமெண்டு மூடைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி பிரகாசம் மாவட்டத்தின் கொப்புர் பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். |
| பாட்னா குண்டுவெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம்: நிதிஷ்குமார் அறிவிப்பு Posted: 27 Oct 2013 08:10 PM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக பாட்னாவில் தொடர் குண்டுவெடிப்புகள் அரங்கேறின. இவற்றில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்புகளுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். குண்டுவெடிப்புகளுக்கு முன்னதாக நிதிஷ்குமார், பீகாரில் முங்கர் என்ற இடத்தில் சர்வதேச யோகா மாநாட்டில் பங்கேற்பதற்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தார். பாட்னாவில் எண்-1, அன்னி மார்க்கில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பு வாகனங்களும் |
| பாட்னா குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு: 83 பேர் படுகாயம் Posted: 27 Oct 2013 08:07 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறும் பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்ட பிரமாண்டமான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. |
| ராகுல்காந்தி பிரதமர் பதவிக்கு பொருத்தமற்றவர் என்ற சரத்பவார் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் Posted: 27 Oct 2013 08:02 PM PDT மத்தியிலும், மராட்டியத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித்தலைவர் சரத்பவார் சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல. அவர் இன்னும் பிரதமர் பதவிக்கு தயாராகவில்லை. அவர் முதலில் தனது துணிவையும், ஆற்றலையும் நிரூபிக்க வேண்டும். ராகுல் காந்தியோடு இணைந்து பணியாற்ற முடியாது" என கருத்து தெரிவித்தார். சரத்பவாரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் |
| பாட்னா குண்டுவெடிப்பு சதிகாரர்கள் வீட்டில் வெடிப் பொருட்கள் - ஒசாமாவின் புகைப்படம் பறிமுதல் Posted: 27 Oct 2013 05:04 PM PDT பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று ரெயில் நிலையம், திரையரங்கு மற்றும் நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் என 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. |
| தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளதால் தான் நாங்கள் இங்கு வந்துள்ளோம்: டெல்லியில் விஜயாகாந்த் பேச்சு Posted: 27 Oct 2013 03:46 PM PDT டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 70 எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் களத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய உள்ளனர். |
| துப்பாக்கி சத்தம் இல்லாமல் தொடர்ந்து 4 நாட்களாக ஜம்மு எல்லைப் பகுதியில் அமைதி நிலவுகிறது Posted: 27 Oct 2013 12:14 PM PDT காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த சில நாட்களாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தனர். குறிப்பாக கடந்த 14-ந்தேதியிலிருந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதல்களில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன், |
| பாட்னா தொடர்குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் ஜார்கண்ட் மாநில தீவிரவாதிகள்: போலீசார் தகவல் Posted: 27 Oct 2013 10:59 AM PDT பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று ரெயில் நிலையம், திரையரங்கு மற்றும் நரேந்திர மோடி பேசிய காந்தி மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் என 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. |
| பாட்னா குண்டு வெடிப்பு: சோனியா காந்தி அதிர்ச்சி Posted: 27 Oct 2013 10:29 AM PDT பீகார் மாநிலம் பாட்னாவில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 5 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த சோனியா காந்தி, இது குறித்து கூறும்போது, ''இது ஜனநாயகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான |
| கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி மீது கல் வீச்சு: நெற்றி காயத்தால் பணிகள் பாதிப்பு Posted: 27 Oct 2013 08:16 AM PDT கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டி இன்று போலீஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கண்ணூர் சென்றார். அங்கு அவர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி ஜனநாயக முன்னணி அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது சிலர் அவர் மீது திடீரென கல் வீசி தாக்கினர். |
| நிதிஷ் ஒரு சந்தர்ப்பவாதி: பாட்னா பொதுக்கூட்டத்தில் மோடி குற்றச்சாட்டு Posted: 27 Oct 2013 04:10 AM PDT பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று முதல் முறையாக பீகார் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் குறித்து மோடி கூறியதாவது:- |
| கொழிஞ்சாம்பாறை அருகே தந்தையை அடித்துக்கொன்ற மகன் Posted: 27 Oct 2013 03:52 AM PDT கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகேயுள்ளது கொடுவாயூர். இங்குள்ள மயிலாடு நாலுசென்டு காலனியைச் சேர்ந்த தொழிலாளி கங்காதரன் நாயர்(வயது 59). இவரது |
| வாரிசு அரசுகளை கைவிடுகிற போது ராகுலை இளவரசன் என்று அழைப்பதை நிறுத்துவேன்: மோடி Posted: 27 Oct 2013 03:12 AM PDT பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளார் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுவதற்கு முன்னர் காந்தி மைதானம் உள்பட 6 இடங்களில் குண்டு வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |