Tamil Star |
- உலக பொருளாதாரத்தை அமெரிக்க கடன் நெருக்கடி பாதிக்கும்
- ராபர்ட் கென்னடி படுகொலை காட்சியை படம் பிடித்த புகைப்பட கலைஞர் மரணம்
- விந்தணு உற்பத்தியைக் குறைக்கும் 10 விடயங்கள்
- முதல்வர் பதவிப்பிரமாணம் தொடர்பில் த.தே.கூ.வுக்குள் சர்ச்சையா?
- துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி வந்தாச்சு
- கேரளாவில் பரபரப்பு அமைச்சர் வீடு அருகே குண்டு வெடித்தது
- சிறுமி பலாத்காரம் வாலிபர் பிடிபட்டார்
- பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை – இந்தியா
- விக்கினேஸ்வரன் கோத்தாவுடன் படை குறைப்பு பற்றி பேசினாராம் !
- த.தே.கூவின் தீர்மானம்: ஐ.தே.க.,ஜே.வி.பி பாராட்டு
| உலக பொருளாதாரத்தை அமெரிக்க கடன் நெருக்கடி பாதிக்கும் Posted: 04 Oct 2013 09:00 PM PDT
அமெரிக்காவில் இப்போதுள்ள சூழல் நிதிச் சுமையை குறைக்க உதவாது. அரசுத்துறைகள் மூடப்பட்டுள்ளதால் இன்னும் அதிக பாதிப்பையே ஏற்படுத்தும். இது அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிப்படைய செய்யும். எனவே, இந்த நிலையை உடனடியாக போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரிசெய்ய, வருங்காலங்களில் நிதி சீரமைப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும். அதேசமயம், வருவாயை அதிகரிக்க செய்து, கடன் நெருக்கடியை குறைக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டின் கடன் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, ஜப்பானில் பணியாளர்கள் தரப்பில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளதால் 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் 4 சதவீதம் அதிகரிக்கும். இதுபோன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் (ஜி7 நாடுகள் கூட்டமைப்பு) பங்கு மட்டும் உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் ஆகும். எனவே, இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகள் மற்ற நாடுகளிலும் பிரதிபலிக்கும். இதுபோன்ற நாடுகள் தேசிய திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், சர்வதேச சமூகத்துக்கு ஏற்ற வகையில் திட்டங்களை செயல்படுத்துவது மிக அவசியம் என்றார் கிறிஸ்டீன் லகார்ட். இந்நிலையில் அமெரிக்காவில் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால், 2008ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற அல்லது அதைவிட மோசமான நிதி நெருக்கடி நிலையை மீண்டும் சந்திக்க நேரிடும் என அந்நாட்டின் நிதி அமைச்சர் ஜாக் லூ கருத்து தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு சம்பளம்: அரசுத்துறைகள் மூடப்பட்டதால் சுமார் 8 லட்சம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையை மாற்ற, குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 20 எம்.பி.க்கள் இணைந்து அரசுத்துறை நிறுவனங்கள் இயங்க வலியுறுத்தி கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம், வேலையை இழந்துவாடும் சில அரசுத்துறையினருக்கு மட்டும் சம்பளம் வழங்க இரு சபைகளிலும் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒபாமாவின் ஆசியப் பயணம் ரத்து அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் எதிரொலியாக, அந்நாட்டு அதிபர் ஒபாமா இந்த வாரத்தில் மேற்கொள்ளவிருந்த ஆசியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜேய் கார்னி கூறுகையில், "அதிபர் ஒபாமா, இந்தோனேசியா மற்றும் புருணே ஆகிய ஆசிய நாடுகளில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது' என்றார். இந்தோனேசியாவில் சனிக்கிழமை (5ஆம் தேதி) நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார கருத்தரங்கிலும், அதைத்தொடர்ந்து புருணேவில் கிழக்காசிய மாநாட்டிலும் ஒபாமா பங்கேற்பதாக இருந்தது. இந்த வாரம் ஒபாமாவின் மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஒபாமாவுக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்தோனேசியா மற்றும் புருணே செல்வார் என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராபர்ட் கென்னடி படுகொலை காட்சியை படம் பிடித்த புகைப்பட கலைஞர் மரணம் Posted: 04 Oct 2013 08:55 PM PDT
ராபர்ட் கென்னடியின் முழு பெயர் ராபர்ட் எப். பாபி கென்னடி ஆகும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அம்பாசடர் ஓட்டலில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்ற ராபர்ட் கென்னடி 5.6.1968 அன்று நள்ளிரவில் சென்றார். அந்த ஹோட்டல் சமையல் அறை பகுதி வழியே சென்றால் கூட்ட அரங்கிற்கு விரைவாக சென்று விடலாம் என சிலர் கூறினர். இந்த முடிவுக்கு அவரது மெய்காப்பாளர்கள் சம்மதிக்கவில்லை. அதையும் மீறி அவர் கூட்ட நெரிசல் மிக்க அப்பகுதி வழியாக நடந்து சென்ற போது பாலஸ்தீன நாட்டை சேர்ந்த சிர்ஹன் சிர்ஹன் என்ற இளைஞன் அவரை நோக்கி தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். ராபர்ட் கென்னடியின் உடலை 3 தோட்டாக்கள் துளைத்தன. 5 மெய்காப்பாளர்களும் காயமடைந்தனர். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் காலை மரணமடைந்தார். ராபர்ட் கென்னடி குண்டடிபட்டு தரையில் துடித்த காட்சியை பில் எப்ரிட்ஜ் என்ற புகைப்பட கலைஞர் தனது கேமராவில் சிறை பிடித்தார். மறுநாள் காலை பத்திரிகைகளில் அவை பிரசுரமாகி அமெரிக்க மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தின. 'உங்களுக்கு அருகாமையில் துப்பாக்கி சூடு நடந்து பிரபல அரசியல்வாதி குண்டடி பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில் உங்களால் எப்படி, ஆற அமர அந்த காட்சியை புகைப்படம் எடுக்க முடிந்தது ?' என்று பில் எப்ரிட்ஜை நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், 'நாம் வெறும் நிருபர்கள் மட்டுமல்ல. வரலாற்றாளர்களும் கூட' என அவர் பதிலளித்தார். இதைபோல், போர் காட்சிகள், உலக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை தன் காமிரா கண்களால் சிறைபிடித்து பலரது பாராட்டுகளை பெற்ற இவர் 1965-ம் ஆண்டு ஹெராயின் போதைக்கு அடிமையாகிப் போன நியூ யார்க் நகரில் வசிக்கும் இளம்தம்பதியர் தொடர்பான புகைப்பட கட்டுரையையும் வெளியிட்டு புகழின் உச்சிக்கே சென்றார். ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகரான அல் பசினோவின் நடிப்பில் இந்த புகைப்பட கட்டுரையை ஆதாரமாக வைத்து 'தி பேனிக் இன் நீடில் பார்க்' என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு ஹாலிவுட் வெற்றிப் படங்களின் பட்டியலில் நீங்கா இடத்தை பெற்றது. இவ்வளவு சிறப்புகளுக்கு சொந்தக்காரரான பில் எப்ரிட்ஜ் (75) கடந்த மாதம் கீழே விழுந்து, காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உடலின் ரத்தத்தில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| விந்தணு உற்பத்தியைக் குறைக்கும் 10 விடயங்கள் Posted: 04 Oct 2013 08:47 PM PDT நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல விடயங்களால் ஆண்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருகிறது. சுடுநீர் குளியல் பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. உள்ளாடை அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும் ஆண் விதையானது வெப்பமாகி விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதல்வர் பதவிப்பிரமாணம் தொடர்பில் த.தே.கூ.வுக்குள் சர்ச்சையா? Posted: 04 Oct 2013 08:42 PM PDT வட மாகாண முதல்வர், யாரிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது என்பது குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடு நிலவியதாக வரும் செய்திகளில் உண்மை இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கிறார் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன். வடமாகாண சபையின் உறுப்பினர்கள் இலங்கை ஜனாதிபதியின் முன்பாக சத்தியப் பிரமாணம் செய்வது தொடர்பாக கட்சிக்குள் இரு வேறு வகையான கருத்துக்கள் இருந்தாலும், வடமாகாண மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| துவைக்கவே வேண்டாம் தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி வந்தாச்சு Posted: 04 Oct 2013 08:35 PM PDT
இது போன்ற புலம்பல் ஆசாமிகளுக்காக தன்னாலேயே துவைத்துக் கொள்ளும் புதிய வகை துணி வந்து விட்டது. ரொம்பவும் சந்தோஷப்படாதீங்க... இந்த துணி வந்துள்ளது இங்கல்ல... அமெரிக்காவில்... அமெரிக்க ராணுவத்தில் '' யு.எஸ். சோல்ஜர் ரிசர்ச் டெலவப்மெண்ட், இன்ஜினியரிங் சென்டர்'' என்ற ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி தாவுரங் என்பவர் புதிய வகை துணி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 5 செட் யூனிபார்ம் வழங்கப்படுகிறது. காடு, மலை, மேடு என்று பணியாற்றும் ராணுவ வீரர்கள் தங்கள் உடுப்புகளை பணியிடங்களில் துவைத்துக் கொள்ள வசதிகள் இருப்பதில்லை. இதனால் பல வீரர்கள் அழுக்குத் துணியோடு இருக்க வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. இதையடுத்து ராணுவ வீரர்களுக்கு துவைக்க வேண்டிய அவசியம் இல்லாத துணியை கண்டறிந்தால் என்ன என்ற சிந்தனை தாவுரங்குக்கு ஏற்பட்டது. அதன் வெளிப்பாடுதான் துவைக்காத துணி. இவர் கண்டறிந்துள்ள இந்த புதிய வகை துணியில் ''ஓம்னி போபிக் கோட்டிங்'' என்ற வகை ரசாயன பூச்சு கலந்து நெய்யப்பட்டுள்ளது. இந்த பூச்சு பூசப்பட்ட துணியில் தயாரிக்கப்பட்ட ராணுவ சீருடையை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தினாலும் அழுக்கு ஆகாது. மேலும் கிரீஸ், சேறு போன்ற கறைகள் பட்டாலும், சீருடையை கழட்டி உதறினால் அதுவும் போய்விடும். அதே போல உடம்பில் எந்த மட்டமான துர்நாற்றம் இருந்தாலும் அதுவும் சீருடையில் காட்டாது. சீருடை நறுமணத்தோடு இருக்கும். புதிய வகை துணி குறித்து தாவுரங் கூறியதாவது: போர்க் கள முனையில் இருக்கும் எங்கள் வீரர்களுக்கு முகாம் அலுவலகங்களில் துணி துவைப்பதற்காக இயந்திர வசதிகள் உள்ளன. ஆனால் எல்லைகளில் பணியாற்றும் வீரர்கள் துணி துவைப்பதற்காக வர இயலாது. ராணுவப்பணி என்பது மிகவும் கடுமையானது. அவர்கள் இங்கு வந்து செல்வதை தவிர்க்கும் வகையில் புதிய ரக துணி கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ரசாயன கலவையால் உடல் நலத்துக்கு எவ்வித பிரச்னையும் வராது. புதிய ரக துணியில் தைக்கப்பட்ட சீருடைகள் கான்சாஸ் மாகாணம் போர்ட் ரெய்லி என்ற பணியிடத்தில் உள்ள வீரர்களுக்கு சோதனை முறையில் கொடுத்து அணிவித்தோம். எவ்வித பிரச்னையும் இல்லை. இந்த துணியானது தனக்குத்தானே சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அதாவது கழட்டி உதறினால், துவைத்தது போன்ற புத்துணர்வோடு சீருடை காணப்படும் என்றார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| கேரளாவில் பரபரப்பு அமைச்சர் வீடு அருகே குண்டு வெடித்தது Posted: 04 Oct 2013 08:19 PM PDT கேரளாவில் அமைச்சர் வீடு அருகே நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். கேரளாவில் கண்ணூர் அருகேயுள்ள பானூர் பாறாடு பகுதியில் கேரள விவசாய அமைச்சர் மோகனன் வீடு உள்ளது. அங்கிருந்து 500 மீட்டர் தூரத்தில் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகம் உள்ளது. இதன் அருகே சிறிய மைதா னம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மைதானத்தில் குண்டு வெடித்தது. இதை கேட்ட அப்பகுதியினர் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் குண்டு வீசியிருக்கலாம் என கருதி விரைந்து சென்று […] |
| சிறுமி பலாத்காரம் வாலிபர் பிடிபட்டார் Posted: 04 Oct 2013 08:02 PM PDT சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நியூ அசோக் நகர் பிளாக் 'பி' பகுதியை சேர்ந்த சிறுமி பாவ்னா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சம்பவத்தன்று வெளியே சென்ற பாவ்னா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பாவ்னாவை தேடி வந்தனர்.இந்நிலையில், பாவ்னாவை வாலிபர் ஒருவர் பாண்டவ் நகரில் […] |
| பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை – இந்தியா Posted: 04 Oct 2013 07:26 PM PDT பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் அமர்வுகளில் பங்கேற்பதனை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தியா அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 7ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குர்ஷித் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. […] |
| விக்கினேஸ்வரன் கோத்தாவுடன் படை குறைப்பு பற்றி பேசினாராம் ! Posted: 04 Oct 2013 07:20 PM PDT வடக்கு மாகாணசபையின் பாதுகாப்பு தொடர்பினில் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாவை சந்தித்து பேசியுள்ளார்.எனினும் இதுவொரு நட்புறவு சந்திப்பேயென முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனின் ஆதரவாளர்கள் தரப்பினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது வடக்கினில் படைக்குறைப்பு பற்றி பெரிதும் பேசியிருந்த சீ.வி.விக்கினேஸ்வரன் இன்;றைய தினம் இடம்பெற்ற கோத்தாவுடனான சந்திப்பினில் இதுபற்றி பேசியிருந்தாராவென்பது தெரியவில்லை.அவருடன் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற அங்கத்தவர் சுமந்திரனும் சென்றிருந்ததாக கூறப்பட்ட போதும் அதுவுறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இதனிடையே முன்னதாக மஹிந்தவுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் கலந்து […] |
| த.தே.கூவின் தீர்மானம்: ஐ.தே.க.,ஜே.வி.பி பாராட்டு Posted: 04 Oct 2013 07:13 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) பாராட்டியுள்ளன. இந்த முடிவானது நல்லிணக்கத்துக்கு சாதகமான ஒரு சமிக்ஞை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது அவர்கள் தமது பிரிவினைத்திட்டத்திலிருந்து விலகிவந்துள்ளதை காட்டுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளரான விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார். தமிழ்;த்தேசியக்கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது புதுப்பாதையொன்றை காட்டுவதாக அமைந்துள்ளது எனவும்; எதிர்காலத்தில் சாதகமான […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





