மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி நடவடிக்கை
- அரியானாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஜெர்மானியப் பெண்: போலீசார் விசாரணை
- தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் காயம்
- பா.ஜனதா பிரமுகர், பெண்கள் முன்னிலையில் இளம்பெண் அரை நிர்வாண நடனம்
- கால்நடைத்தீவன ஊழல்: நிதீஷ்குமாரும் சிக்குகிறார்
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது
- அமெரிக்க ஊழியர்களின் பணிநிறுத்தம்: இந்தியாவின் செவ்வாய்க்கிரக விண்கல திட்டத்தை பாதிக்குமா ?
- பாபா ராம்தேவ் நிறுவனத்தில் ‘ரெய்டு’ : ரூ. 20 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு
- ஓரினச் சேர்க்கையாளர்கள் - அரவாணிகளுக்கான 24 மணி நேர ‘கியு ரேடியோ’ : பெங்களூரில் துவக்கம்
- சிறுநீரை குடிக்கச் சொல்லி என்னை கொடுமைப்படுத்தினார்: டெல்லியில் மீட்கப்பட்ட வேலைக்கார சிறுமி பேட்டி
- 2ஜி-யையும் தாண்டி அனைத்து துறைகளையும் ஆட்சி செய்த நீரா ராடியாவின் தலையீடு
- மத்திய அரசின் தெலுங்கானா முடிவை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
- 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு
- டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி ரெயில் பயணிகள் கட்டணம் 2 சதவீதம் உயருகிறது
- இந்தியாவுக்கு எதிராக போராட ஆள் எடுத்த வழக்கு: 13 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை- சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: டெல்லியில் டிச.4-ந்தேதி வாக்குப்பதிவு
- 5 மாநில சட்டசபை தேர்தலில் ‘யாரும் வேண்டாம்’ என வாக்களிக்க வசதி
- ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன்ரெட்டி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
- ஒடிசா மாநிலத்தில் 12 மாவோயிஸ்ட்டுகள் போலீசாரிடம் சரண்
- ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி: தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அறிவிப்பு
| காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் அதிரடி நடவடிக்கை Posted: 04 Oct 2013 11:10 PM PDT காஷ்மீர் மாநிலம் கிரண் செக்டார் பகுதியில் ஊடுருவ கடந்த மாதம் சுமார் 40 பாகிஸ்தான் தீவிரவாதிகள் வந்தனர். எல்லையில் பதுங்கி இருக்கும் அவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் கடந்த 11 நாட்களாக கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அந்த 40 தீவிரவாதிகளில் இது வரை பாதி பேர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். இந்த நிலையில் கிரண் செக்டாரில் இன்று |
| அரியானாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஜெர்மானியப் பெண்: போலீசார் விசாரணை Posted: 04 Oct 2013 11:02 PM PDT ஜெர்மானியைச் சேர்ந்த ஜூடித் எய்னோ எஹ்னாஸ் (வயது 18) என்ற இளம்பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி இந்தியா வந்தார். அவர் அரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரில் உள்ள சிஆர் பார்க் என்னும் இடத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரண்டு சக நாட்டவர்களுடன் தங்கியிருந்தார். இளைஞர்களிடையே சமூக நீதி பிரச்சினைகள் தொடர்பாக அரசு சாரா ப்ரவா என்ற நிறுவனத்தில் இவர் வேலை செய்துவந்தார். அடுத்த வருடம் மே மாதம் அவர் ஜெர்மனிக்குத் திரும்புவதாக இருந்தார். இவர் கடந்த 2-ம் தேதி காணாமல் போனதாக அவருடன் தங்கியிருந்தவர்கள் |
| தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் சென்னையில் கைது: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் காயம் Posted: 04 Oct 2013 10:54 PM PDT சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது. இந்த நிலையில் சென்னையில் நேற்று திருப்பதி குடை ஊர்வலத்தில் நாசவேலையில் ஈடுபடும் சதி திட்டத்துடன் தீவிரவாதிகள் புகுந்து இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. |
| பா.ஜனதா பிரமுகர், பெண்கள் முன்னிலையில் இளம்பெண் அரை நிர்வாண நடனம் Posted: 04 Oct 2013 10:34 PM PDT கர்நாடக மாநிலம் பீதரில் விருந்தினர் விடுதி ஒன்றில் பா.ஜனதா பிரமுகர்கள் முன்னிலையில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் ஆபாச நடனம் ஆட, அதை சில ஆண்களும், பெண்களும் ஜோடியாக அமர்ந்து ரசிப்பது போன்ற காட்சி தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று ஒளிபரப்பாகி பெரும் |
| கால்நடைத்தீவன ஊழல்: நிதீஷ்குமாரும் சிக்குகிறார் Posted: 04 Oct 2013 10:25 PM PDT பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்– மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடைத் தீவன ஊழல் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையே கால்நடைத் தீவன ஊழலில் தற்போதைய பீகார் முதல்–மந்திரி நிதீஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் |
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது Posted: 04 Oct 2013 10:15 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, இன்று தொடங்குகிறது. உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, இன்று (சனிக்கிழமை) |
| அமெரிக்க ஊழியர்களின் பணிநிறுத்தம்: இந்தியாவின் செவ்வாய்க்கிரக விண்கல திட்டத்தை பாதிக்குமா ? Posted: 04 Oct 2013 05:36 PM PDT அமெரிக்காவில் தற்போது ஒபாமா அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் பொதுத்துறை ஊழியர்களின் பணிநிறுத்தம் லட்சக்கணக்கான மக்களை கவலைக்குரியதாக மாற்றியுள்ளது. இந்த நடைமுறை தற்போது இந்திய அரசின் லட்சிய விண்வெளித்திட்டமான செவ்வாய்க் கிரகத்திற்கு செலுத்த இருக்கும் விண்கலத் திட்டத்தையும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. |
| பாபா ராம்தேவ் நிறுவனத்தில் ‘ரெய்டு’ : ரூ. 20 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு Posted: 04 Oct 2013 02:48 PM PDT பிரபல யோகா பயிற்றுனர் பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி மருந்து மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ. 20 கோடி வரிஏய்ப்பு நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். |
| ஓரினச் சேர்க்கையாளர்கள் - அரவாணிகளுக்கான 24 மணி நேர ‘கியு ரேடியோ’ : பெங்களூரில் துவக்கம் Posted: 04 Oct 2013 02:38 PM PDT இந்தியாவிலேயே முதல் முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் மற்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களுக்கு என பிரத்யேகமான 24 மனிநேர வானொலி சேவையை பெங்களூரை சேர்ந்த 'கியு ரேடியோ' துவக்கியுள்ளது. |
| சிறுநீரை குடிக்கச் சொல்லி என்னை கொடுமைப்படுத்தினார்: டெல்லியில் மீட்கப்பட்ட வேலைக்கார சிறுமி பேட்டி Posted: 04 Oct 2013 12:58 PM PDT வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் |
| 2ஜி-யையும் தாண்டி அனைத்து துறைகளையும் ஆட்சி செய்த நீரா ராடியாவின் தலையீடு Posted: 04 Oct 2013 12:39 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் இடைத்தரகர் நீரா ராடியாவின் தொடர்புகளும், தலையீடும் தொலைத்தொடர்பு துறையையும் தாண்டி பல துறைகளை ஆட்சி செய்ததாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. |
| மத்திய அரசின் தெலுங்கானா முடிவை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Posted: 04 Oct 2013 11:59 AM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த முடிவை ஆதரித்தும், எதிர்த்தும் ஆந்திர அரசியல்வாதிகள் அணி திரள்கின்றனர். |
| 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: நரேந்திர மோடி வரவேற்பு Posted: 04 Oct 2013 10:04 AM PDT ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை வரவேற்று குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி 'டுவிட்டர்' வலைத்தளத்தில் எழுதி இருக்கிறார். 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதை நான் வரவேற்கிறேன். |
| டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி ரெயில் பயணிகள் கட்டணம் 2 சதவீதம் உயருகிறது Posted: 04 Oct 2013 09:49 AM PDT இந்தியாவில் ரெயில் பயணிகள் கட்டணம் கடைசியாக கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக பிப்ரவரி மாதம் 26–ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட ரெயில் பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருப்பினும் டீசல் விலை உயர்வு, மின்கட்டண அதிகரிப்பு, இதர செலவினங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை சரக்கு |
| Posted: 04 Oct 2013 09:15 AM PDT இந்தியாவுக்கு எதிராக போராட காஷ்மீரில் ஆள் எடுத்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறை போலீசார் அப்துல் ஜப்பார்,, ஷபர்நவாஸ், சபிர் புகாரி மற்றும் அப்துல் ஜலீல், தாடியந்தேவ்டா நசீர், சைனுப்தீன், பாசில், பி.முஜீப், ஷபாஸ், பெரோஸ், முகம்மதுநவாஸ், இப்ராகில் மவுலவி மற்றும் உம்மர் பரூக் ஆகிய 13 பேரை கைது செய்தனர். கைதான |
| 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு: டெல்லியில் டிச.4-ந்தேதி வாக்குப்பதிவு Posted: 04 Oct 2013 04:41 AM PDT ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் தேதியை நேற்று அறிவிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து இருந்தது. சில காரணங்களால் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரி வி.எஸ். சம்பத் அறிவித்தார். அதன்படி, டெல்லியில் டிசம்பர் 4-ந்தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 25-ந்தேதியும், ராஜஸ்தானில் டிசம்பர் 1-ந்தேதியும், |
| 5 மாநில சட்டசபை தேர்தலில் ‘யாரும் வேண்டாம்’ என வாக்களிக்க வசதி Posted: 04 Oct 2013 11:17 AM PDT ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தேர்தல் தேதியை நேற்று அறிவிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. சில காரணங்களால் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ். சம்பத் இன்று மாலை அறிவித்தார். |
| ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெகன்மோகன்ரெட்டி நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் Posted: 04 Oct 2013 07:33 AM PDT ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு, மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா (சீமாந்திரா) பகுதிகளில் காலை முதல் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் கடப்பா தொகுதி எம்.பி.யுமான |
| ஒடிசா மாநிலத்தில் 12 மாவோயிஸ்ட்டுகள் போலீசாரிடம் சரண் Posted: 04 Oct 2013 06:25 AM PDT ஒடிசா மாநிலத்தில் மாலங்கிரி மாவட்டத்தில் 12 மாவோயிஸ்ட்டுகள் போலீசாரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஒடிசா கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என அம்மாவட்ட காவதுறை ஆணையாளர் அகிலேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். சரண் அடைந்த மாவோயிஸ்ட்டுகளில் 5 பேர் பெண்கள் ஆவர். இந்த மாவோயிஸ்ட்டுகள் அனைவரும் கொலை-துப்பாக்கி சூடு, கண்ணிவெடிகள் |
| ஏற்காடு இடைத்தேர்தல் டிசம்பர் 4-ந்தேதி: தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் அறிவிப்பு Posted: 04 Oct 2013 05:08 AM PDT ஏற்காடு (தனி) தொகுதியின் அ.திமு.க. எம்.எல்.ஏ.வான எஸ்.பெருமாள், கடந்த ஜூலை 18-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஏற்காடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள இந்தத் தொகுதி உறுப்பினர் இடத்துக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டும். அதனால் ஜனவரி மாதம் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மிசோரம், ம.பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டியிருந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |