Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்

Posted: 30 Oct 2013 10:45 PM PDT

மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானிய பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பங்கேற்க உள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களின் மனித உரிமை நிலைமைகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய ஏற்கனவே இணங்கியுள்ளதாகக் […]

ஒரு கோடி டொலரில் உருவான உள்ளாடையுடன் அசத்தும் அழகி

Posted: 30 Oct 2013 10:18 PM PDT

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நடத்தும் பிரா கண்காட்சியில், ஒரு கோடி அமெரிக்க டொலர் மதிப்புடைய பிராவை அணிந்து காட்சிப்படுத்த மாடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் நியூ யார்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டொலர் மதிப்புடைய ஃபான்டெஸி பிராக்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த பிராக்களை அணிந்து நடக்கும் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் தீபாவளி

Posted: 30 Oct 2013 10:10 PM PDT

The White House

The White Houseஅமெரிக்காவின் நாடாளுமன்ற வளாகத்தில் முதன்முறையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் முக்கிய உறுப்பினர்கள், சிறப்பு மிக்க இந்திய அமெரிக்கர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புதன்கிழமை ஒன்றுகூடி பாரம்பரிய தீபமேற்றி தீபாவளியை கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிவப்புத் திலகமிட்டு, மலர்மாலை அணிவித்து, பொன்னாடை போற்றி வரவேற்கப்பட்டனர்.

இந்தியா மற்றும் இந்திய அமெரிக்கர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோ க்ரோலி மற்றும் பீட்டர் ரோஸ்காம் ஆகியோரால் இந்தக் கொண்டாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் மூலமாக இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்பட்டது.

இந்தக் கொண்டாட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ், ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் நான்ஸி பெலோசி, வெளியுறவுக் குழுவின் தலைவர் எட் ராய்ஸ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் ஹிந்து உறுப்பினர் துளசி கப்பார்டு, ஜனநாயகக் கட்சியின் ஒரே இந்திய அமெரிக்கர் அமி பேரா, தீபாவளி அஞ்சல்தலை வெளியிடுவதற்காக பிரசாரம் செய்த கரோலின் பி மலோனி, வெளியுறவுக் குழுவின் உறுப்பினர் எலியாட் ஏஞ்சல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் இந்திய விண்கலம்: இன்று பரீட்சார்த்த நடவடிக்கை

Posted: 30 Oct 2013 08:53 PM PDT

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இன்று வியாழக்கிழமை ஒத்திகை பார்க்கப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுதற்கான பட்டனை அழுத்துவதைத் தவிர அனைத்து நடைமுறைகளும் இந்த ஒத்திகையில் மேற்கொள்ளப்படும் என பி.எஸ்.எல்.வி. சி-25 திட்ட இயக்குநர் பி.குன்னிகிருஷ்ணன் கூறினார். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா, அதன் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் (இஸ்ரோ) நவம்பர் […]

இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர்

Posted: 30 Oct 2013 08:47 PM PDT

இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கிடையிலான நல்லுறவை பலப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஒருநாள் பயணமாக நவம்பர் 14ம் திகதி இந்தியா வருகிறார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் அவர் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் பிரதமராக டேவிட் கேமரூன் பதவியேற்ற 2010-ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவிற்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். பின்னர் இரண்டாம் முறையாக […]

உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியா 3வது இடம்

Posted: 30 Oct 2013 08:41 PM PDT

பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலகிலேயே அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உலக அளவில் 21 வது இடம் பிடித்துள்ளார். மொத்தமுள்ள 72 அரசியல் தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெண்களின் வரிசையில் சோனியா மூன்றாம் இடம் வகிக்கிறார். அதிகாரம் மிகுந்த தலைவர்களின் பட்டியலில் சோனியாவுடன் ஒப்பிடும் போது, பிரதமர் மன்மோகன் சிங் ஏழு இடங்கள் பின்தங்கி 28 வது இடத்தில் உள்ளார். ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உலகில் அதிகாரம் படைத்தவர்களில் […]

கிறிஸ் ஃப்ரூமிக்கு தங்க சைக்கிள் விருது

Posted: 30 Oct 2013 08:33 PM PDT

சிறந்த சைக்கிள் ஓட்டப் பந்தய வீரருக்கு அளிக்கப்படும் 2013-ம் ஆண்டுக்கான தங்க சைக்கிள் விருதை பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ் ஃப்ரூமி வென்றார். இவர், டூர் டீ பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்க சைக்கிள் விருதைப் பெறும் 2-வது பிரிட்டனைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஃப்ரூமி பெற்றார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தங்க சைக்கிள் விருதை பிரிட்டன் வீரர் சர் பிராட்லி விஜ்ஜின்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த விருது 1992-ம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு எதிராக டெல்லியிலும் ஆர்ப்பாட்டம்

Posted: 30 Oct 2013 08:23 PM PDT

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் மாநாட்டை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும் அல்லது இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய சோஷலிச ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் சயீத் தலைமை தாங்கினார். தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, தேசிய துணை தலைவர் சாம் குட்டி ஜாகோப், தேசிய பொது செயலாளர்கள் அப்சர் பாஷா, அப்துல் மஜீத் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐசிஆர்சி கருத்தரங்கில் பங்கேற்க ஜெகத் டயசுக்கு தடை

Posted: 30 Oct 2013 08:07 PM PDT

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிறிலங்கா இராணுவ அதிகாரிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு, அவுஸ்ரேலியாவில் நடத்தவுள்ள கருத்தரங்கிற்கு அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது. இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவுடனான உறவுகள் குறித்து அவசரமாக மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில், 57 வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பின்னர் ஜேர்மனிக்கான […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கூட்டமைப்பு-பாரதிய ஜனதா கட்சி பேச்சு

Posted: 30 Oct 2013 07:30 PM PDT

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறுமென அபிப்பிராய வாக்கெடுப்புகள் காட்டும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரதிய ஜனதா கட்சியுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தும் செயல்முறையை தொடங்கியுள்ளது என அக்கட்சியின் உத்தியோகத்தர்கள் கூறினர். பிரதானமாக தான் மருத்துவ காரணங்களினால் கடந்தவாரம் தமிழ் நாட்டுக்கு சென்ற போதிலும்இ பா.ஜ.கட்சியின் தமிழ் நாட்டு தலைவர்களுடன் பேச இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™