Tamil Star |
- இலங்கை மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை பல நாடுகள் விரும்பவில்லை – ஜீ.எல்.பீரிஸ்
- அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷிய அதிபர் புதினும் சிரியா நிலவரம் தொடர்பில் சந்திப்பு
- துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி
- கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் ,ஜனாதிபதி இன்று சந்திப்பு
- மாணவர்கள் விடா முயற்சி, தன்னம்பிக்கையோடு கடுமையாக உழைக்க வேண்டும் – அப்துல்கலாம்
- சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
- சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
- புலிகளுடன் போட்டி போட ஆசையா? சீனாவில் ஏற்பாடு
- நடந்தது என்ன? ஜனாதிபதி ஒபாமா விளக்கம்
- திஹார் உட்பட முக்கியச் சிறைகளைத் தாக்க சதி
| இலங்கை மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை பல நாடுகள் விரும்பவில்லை – ஜீ.எல்.பீரிஸ் Posted: 03 Oct 2013 10:35 PM PDT
சில சர்வதேச தரப்பின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். சில சர்வதேச தரப்புக்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அளவிற்கு உலகின் வேறு நாடுகளுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளினால் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை பல நாடுகள் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷிய அதிபர் புதினும் சிரியா நிலவரம் தொடர்பில் சந்திப்பு Posted: 03 Oct 2013 10:09 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| துவைக்கவே வேண்டாம். தானாகவே துவைத்துக் கொள்ளும் துணி Posted: 03 Oct 2013 09:56 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் ,ஜனாதிபதி இன்று சந்திப்பு Posted: 03 Oct 2013 09:42 PM PDT
வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனின் பதவிப்பிரமாணம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக சம்பந்தன், மஹிந்தவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்ற பின்னர் சம்பந்தன், மஹிந்தவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக முதலமைச்சர் சத்தியப் பிரமாணத்துக்காக ஜனாதிபதியை யாழ்ப்பாணத்துக்கு அழைப்பது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீhமானித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாணவர்கள் விடா முயற்சி, தன்னம்பிக்கையோடு கடுமையாக உழைக்க வேண்டும் – அப்துல்கலாம் Posted: 03 Oct 2013 09:34 PM PDT
இந்த விழாவில் மாணவ, மாணவிகளை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விவசாயம் என்பதை தொழிலாக அல்லாமல், அது ஒரு கலாசாரம் என்ற வகையில் இந்த பள்ளி செய்வது மகிழ்ச்சிக்கு உரியதாகும். ஒவ்வொரு மாணவர்களும் தனித்துவத்துடன் இருக்க வேண்டும். நான் இதுவரை ஒன்றரை கோடி மாணவர்களை சந்தித்து உள்ளேன். அவர்கள் தனித்துவத்துடன் இருப்பதாக என்னிடம் கூறினார்கள். மாணவர்கள் உயர்ந்த எண்ணத்துடன் இருக்க வேண்டும். அதை நிறைவேற்ற விடா முயற்சி, தன்னம்பிக்கையோடு கடுமையாக உழைக்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்கு தினமும் புத்தகம் படிக்க வேண்டும். எந்த விஷயத்தையும் மாணவர்கள் தொட்டு விட்டு விட்டு விடக்கூடாது. அதை முடிக்கும் வரை அயராது முயற்சி செய்ய வேண்டும். தோல்வியால் துவண்டு விடக்கூடாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை துணிவுடன் சந்திக்க வேண்டும். தாய்–தந்தை, மற்றும் ஆசிரியர்கள் நமக்கு வழிகாட்டிகள் ஆவார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார். இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதில், நாம் விஞ்ஞானத்தில் மேன்மேலும் வளர ராக்கெட் தயாரிப்பு அவசியம். இந்தியாவை இந்தியர்கள் ஆள தொடங்கி 60 ஆண்டுகளை கடந்து உள்ளோம். இது போன்ற சூழ்நிலையில் ராக்கெட் தயாரிப்பில் ஈடுப்பட்டால் தான் நாடு உயரும். மாணவர்கள் படிக்கும் போது அரசியலில் ஈடுபட வேண்டாம். படித்து முடித்து அரசியலில் ஈடுபடலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. தற்போது பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. நதிநீர் இணைப்பு, சாலை கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு நிறைய பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே பொறியியல் படிப்பை மாணவ, மாணவிகள் தொடர்ந்து படிக்கலாம். இவ்வாறு அவர் மாணவர்களின் கருத்துக்கு அப்துல் கலாம் பதில் அளித்தார். முன்னதாக பள்ளியின் சார்பில் பரம்பரை வித்யதான் என்ற நூலை வெளியிட்டு, பள்ளியின் இச்சேவை திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவிற்கு பள்ளி தாளாளர் சனத்குமார் தலைமை வகித்தார். மாணவன் விக்னேஷ்குமார் வரவேற்றார். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் ஸ்ரீவள்ளி, ஏடிஸ்பி ராஜன், டிஎஸ்பிக்கள் சந்தானபாண்டியன், கண்ணப்பன், ஒருங்கிணைப்பாளர் பென்னேஸ்வரன் விளக்கினார். நிகழ்ச்சிகளை 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீ தேவி தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி தக்ஷிணபிரியா நன்றி கூறினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted: 03 Oct 2013 07:11 AM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? Posted: 03 Oct 2013 06:53 AM PDT
நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. கடைசி லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டில் பெர்த் அணியையும், (ஏ பிரிவு) டிரினிடாட் டொபாக்கோ 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்சையும் (பி பிரிவு) தோற்கடித்தன. 'ஏ' பிரிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், மும்பை இந்தியன்ஸ் 10 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. ரன்ரேட்டில் வாய்ப்பை இழந்து ஒட்டோகோ அணி வெளியேறியது. இதேபோல லயன்ஸ், பெர்த் ஸ்கோர்செர்ஸ் அணிகளும் வெளியேற்றப்பட்டன. 'பி' பிரிவில் டிரினிடாட், சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு நுழைந்தன. ரன்ரேட்டில் டிரினிடாட் முதல் இடத்தையும், சென்னை சூப்பர்கிங்ஸ் 2–வது இடத்தையும் பிடித்தன. டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், பிரிஸ்பேன் ஹீட் அணிகள் வெளியேற்றப்பட்டன. இன்று ஓய்வு நாளாகும். நாளை (4–ந்தேதி) நடைபெறும் முதல் அரைஇறுதியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் – டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 3 வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீ ஆட்டத்தில் டிரினிடாட்டிடம் மோசமாக தோற்றது. ஆனால் நாளை அரைஇறுதி ஆட்டம் என்பதால் சென்னை வீரர்கள் முழு திறமையுடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010–ம் ஆண்டு சாம்பியனான சென்னை அணி 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எல்லா வகையிலும் சவாலாக திகழும். முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் அந்த அணி லீக் போட்டியில் அனைத்து ஆட்டத்திலும் (4 வெற்றி) வென்று இருந்தது. இதனால் ராஜஸ்தான் அணி சென்னையை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் நாளைய அரைஇறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் ஸ்டார்ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 5–ந்தேதி டெல்லியில் நடைபெறும் 2–வது அரை இறுதியில் டிரினிடாட் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிக்கு நுழைந்த 4 அணிகளில் மூன்று ஐ.பி.எல். அணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| புலிகளுடன் போட்டி போட ஆசையா? சீனாவில் ஏற்பாடு Posted: 03 Oct 2013 01:36 AM PDT சீனாவில் புலிகளுடன் கயிறு இழுக்கும் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஹுனான் பகுதியில் உள்ள மிருகக்காட்சி சாலையில் பல விதமான புலிகள் பராமரிக்கப்படுகின்றன. இங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில் புலிகளுடன் கயிறு இழுக்கும் போட்டியை நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கூண்டுக்குள் அடைக்கப்பட்ட புலியுடன் சிறு துவாரத்தின் வழியாக கயிறு செலுத்தப்பட்டு, அந்த கயிற்றில் சாக்குப்பையில் கோழி கறி கட்டப்பட்டிருக்கும். கூண்டுக்கு வெளியே பார்வையாளர்கள் மறு முனை கயிறை கொண்டு இழுத்து புலியுடன் விளையாடலாம். இந்த […] |
| நடந்தது என்ன? ஜனாதிபதி ஒபாமா விளக்கம் Posted: 03 Oct 2013 01:27 AM PDT
இந்த மூடல் நடவடிக்கையால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த அமெரிக்க அரசு இயந்திர செயல்பாடும் முடங்கிப் போயுள்ளது. தேசியப் பூங்காக்கள் மூடப்பட்டு விட்டன, அரசு துறைகள் செயல்படவில்லை. ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க போர் நினைவிடங்களும் கூட மூடப்பட்டு விட்டன. தேசிய நினைவுச் சின்ன அருங்காட்சியகமும் மூடப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் நடந்துள்ள முதல் மூடல் நடவடிக்கை இது என்பதால் அமெரிக்க மக்கள் பெரும் பரபரப்படுன் காணப்படுகின்றனர். மேலும் அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி ஒபாமாவின் பணியாளர்கள் கூட குறைக்கப்பட்டு விட்டனர். அதேசமயம் பென்டகன் தனது சிவில் பணியாளர்கள் 8 லட்சம் பேரில் பாதிப் பேரை கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து ஒபாமா கூறுகையில், இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடியரசுக் கட்சியினர் அரசுக்கு எதிராக கொள்கைப் போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்களே இன்றைய நிலைக்குக் காரணம். பல கோடி அமெரிக்கர்களுக்கு சுகாதாரத் திட்டம் போய்ச் சேருவதற்கு அவர்கள் தடையாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படையில் ஆள் குறைப்பு எதுவும் இல்லை. அங்கு முழு அளவில் வீரர்கள், பணியாளர்கள் பணியில் தொடர்கின்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| திஹார் உட்பட முக்கியச் சிறைகளைத் தாக்க சதி Posted: 03 Oct 2013 01:25 AM PDT தில்லி திஹார் சிறை உள்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கியச் சிறைகள் மீதோ அல்லது அதில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளை சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும் போதோ “இந்தியன் முஜாஹிதீன்’ பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறைக்கு உளவுத் துறை அண்மையில் அனுப்பியுள்ள எச்சரிக்கைக் குறிப்பில் கூறியிருப்பது: தில்லி திஹார் சிறை, மும்பை, புணே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் உள்ள முக்கியச் சிறைகளில் இந்தியன் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














