மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: நடைபயண பக்தர்களுக்கு இலவச லட்டு
- 5 மாநிலங்களுக்கு நவம்பர் 25–ந்தேதி முதல் சட்டசபை தேர்தல்: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
- காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- தெலுங்கானாவுக்கு ஒப்புதல்: 13 மாவட்டத்தில் பந்த்- சீமாந்திரா முடங்கியது
- மும்பை–புனே நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கி 4 பேர் பலி
- கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறது: சதானந்த கவுடா
- ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானங்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்கியது
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை: மேற்கு வங்காள முதல்-மந்திரி அறிவிப்பு
- லல்லுவுக்கு 5 ஆண்டு சிறை: காங்கிரஸ், பா.ஜனதா கருத்து என்ன?
- தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சீமாந்திரா பகுதியில் 48 மணி நேர முழுஅடைப்பு
- மத்திய மந்திரிசபையில் இருந்து சிரஞ்சீவி உள்பட 4 மந்திரிகள் ராஜினாமா
- 5 ஆண்டு தண்டனையை எதிர்த்து லல்லு பிரசாத் 17–ந் தேதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு
- நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- அவசரச்சட்டம் குறித்த எனது உணர்வுகள் தவறானதல்ல: ராகுல் காந்தி
- உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோவிலின் நன்கொடைகள் மருத்துவ உதவியாக வழங்கப்படும்
- குறைபாடுள்ள காரை விற்றதால் நஷ்டஈடு வழங்க மாருதி நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு
- திருமலையில் ரூ.70 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி: 5–ந்தேதி முதல் மந்திரி அடிக்கல் நாட்டுகிறார்
- ரெயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்: மல்லிகர்ஜுன கார்கே
- இந்தியன் முஜாகிதீன் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட முக்கிய சிறைகளை தாக்க தீவிரவாதிகள் சதி
- சோலார் பேனல் மோசடி விவகாரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி வீட்டை முற்றுகையிட கம்யூனிஸ்டு முடிவு
| திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா நாளை தொடக்கம்: நடைபயண பக்தர்களுக்கு இலவச லட்டு Posted: 03 Oct 2013 11:00 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவில் புரட்டாசி மாத பிரமோற்சவம் நாளை (5–ந் தேதி) தொடங்குகிறது. 13–ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருமலை தேவஸ்தானம் மிக விரிவான முறையில் செய்துள்ளது. கோவில் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. விழாவையொட்டி தினமும் கடை வீதிகளில் மலையப்ப சாமி வீதி உலா நடை பெறுகிறது. |
| 5 மாநிலங்களுக்கு நவம்பர் 25–ந்தேதி முதல் சட்டசபை தேர்தல்: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு Posted: 03 Oct 2013 10:51 PM PDT ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதியை நேற்று அறிவிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து இருந்தது. சில காரணங்களால் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. நாளை (சனிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. வருகிற நவம்பர் மாதம் 25–ந்தேதியில் இருந்து 29–ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் மிரட்டல் காரணமாக அங்கு கூடுதல் பாதுகாப்புடன் |
| காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 03 Oct 2013 10:35 PM PDT காஷ்மீர் மாநிலம் கிரண் செக்டாரில் கடந்த 10 நாட்களாக தீவிரவாதிகள் அட்டகாசம் செய்து வருகிறார்கள். கடந்த மாத இறுதியில் காஷ்மீருக்குள் ஊடுருவும் திட்டத்துடன் சுமார் 40 லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் அங்கு வந்தனர். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதுங்கி இருக்கும் அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து ஊடுருவ முயற்சி செய்தபடி உள்ளனர். |
| தெலுங்கானாவுக்கு ஒப்புதல்: 13 மாவட்டத்தில் பந்த்- சீமாந்திரா முடங்கியது Posted: 03 Oct 2013 10:28 PM PDT ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இதற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளைக் கொண்ட சீமாந்திரா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். என்றாலும் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு உறுதியாக இருந்தது. |
| மும்பை–புனே நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் சிக்கி 4 பேர் பலி Posted: 03 Oct 2013 09:22 PM PDT மும்பை–புனே நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு புனேவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணி புரியும் 4 பேர் மும்பை நோக்கி காரில் சென்றனர். அப்போது உர்சி டோல் நாக்கா அருகே வந்தபோது, முன்னால் சென்ற காரின் |
| கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி மக்களுக்கு எதிராக செயல்படுகிறது: சதானந்த கவுடா Posted: 03 Oct 2013 09:07 PM PDT கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி சதானந்த கவுடா சிக்மகளூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– எடியூரப்பா மீண்டும் பா.ஜனதாவில் எப்போது இணைவார் என்று கர்நாடக பா.ஜனதா தொண்டர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இவர் விரைவில் |
| ஏர் இந்தியாவின் டிரீம்லைனர் விமானங்களுக்கு ஜப்பான் அனுமதி வழங்கியது Posted: 03 Oct 2013 05:31 PM PDT ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் விமானங்ககள் பாட்டரி பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் வானில் பறப்பதற்கு தொடங்கியபோதும் சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்றன. இதனால், சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு இந்தியாவின் சிவில் போக்குவரத்து விமானங்களின் பாதுகாப்பு குறித்த உத்திரவாதத்தினை வலியுறுத்தியது |
| வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.1,500 மாத உதவித்தொகை: மேற்கு வங்காள முதல்-மந்திரி அறிவிப்பு Posted: 03 Oct 2013 03:23 PM PDT மேற்கு வங்காள மாநில அரசு, வேலை தேடும் இளைஞர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,500 அறிவித்து உள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:- மேற்கு வங்காள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 8 கோடி பேர். இதில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர் |
| லல்லுவுக்கு 5 ஆண்டு சிறை: காங்கிரஸ், பா.ஜனதா கருத்து என்ன? Posted: 03 Oct 2013 12:57 PM PDT லல்லு பிரசாத்துக்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி, "சி.பி.ஐ. விசாரணை சுயமாக நடைபெறுகிறது |
| தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சீமாந்திரா பகுதியில் 48 மணி நேர முழுஅடைப்பு Posted: 03 Oct 2013 12:32 PM PDT தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் 48 மணி நேரம் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த முழுஅடைப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்குகிறது |
| மத்திய மந்திரிசபையில் இருந்து சிரஞ்சீவி உள்பட 4 மந்திரிகள் ராஜினாமா Posted: 03 Oct 2013 11:57 AM PDT தனி தெலுங்கானா குறித்து மத்திய மந்திரிசபை முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் நேற்று ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்தன. ஆந்திர மாநில மந்திரிகள் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்கள் முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டியை சந்தித்து பேசினார்கள் |
| 5 ஆண்டு தண்டனையை எதிர்த்து லல்லு பிரசாத் 17–ந் தேதி ஐகோர்ட்டில் மேல்முறையீடு Posted: 03 Oct 2013 10:49 AM PDT மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லல்லுபிரசாத் யாதவுக்கு ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இதனை எதிர்த்து 17–ந் தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்கிறார் |
| நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானவை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 03 Oct 2013 09:09 AM PDT ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கான மாநிலம் உருவாக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் முடிவு செய்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தெலுங்கான பகுதி மக்களும், எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திர பகுதி எம்.பி. எம்.எல்.ஏ-க்களும் பதவி விலகி வருகின்றனர். |
| அவசரச்சட்டம் குறித்த எனது உணர்வுகள் தவறானதல்ல: ராகுல் காந்தி Posted: 03 Oct 2013 08:02 AM PDT எம்.பி. எம்.எல்.ஏ.-க்களை பாதுகாக்க அரசு கொண்டுவந்த அவசரச்சட்டம் முழு முட்டாள்தனமானது, அதி கிழித்து தூர எரியவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். இது அரசியல் வட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. |
| உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோவிலின் நன்கொடைகள் மருத்துவ உதவியாக வழங்கப்படும் Posted: 03 Oct 2013 06:46 AM PDT 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் மகாகாளேஸ்வரர் கோவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி நகரில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு வரும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை ஐந்து கோடியைத் தாண்டுகின்றது. இது தவிர தங்கம், வெள்ளியிலான காணிக்கைகளும் இறைவனுக்கு |
| குறைபாடுள்ள காரை விற்றதால் நஷ்டஈடு வழங்க மாருதி நிறுவனத்துக்கு கோர்ட் உத்தரவு Posted: 03 Oct 2013 05:21 AM PDT கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் பிரவேன் சந்திர ஷெட்டி என்பவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன், 2003-ம் ஆண்டில், மாருதி நிறுவனத்திடமிருந்து அவர்களின் தயாரிப்பான புதிய வேகன்- ஆர் மாடல் காரை வாங்கியுள்ளார். ஆரம்பம் முதலே அந்தக் காரை ஓட்டும்போது அவர் அசாதாரண அதிர்வுகளை உணர்ந்தார். அதுபோல புதிய கார் என்றபோதிலும் அதில் தொடர்ந்து ஏதோ ரிப்பேர்கள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. ஒவ்வொரு முறையும் கார் அவருக்கு செலவு வைத்துக் கொண்டு இருந்தது. எவ்வளவு செலவு செய்தும் அதிர்வுகள் நின்றபாடில்லை |
| திருமலையில் ரூ.70 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி: 5–ந்தேதி முதல் மந்திரி அடிக்கல் நாட்டுகிறார் Posted: 03 Oct 2013 04:28 AM PDT திருமலையில் ரூ.70 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதிக்கு ஆந்திர முதல்– மந்திரி 5–ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 5–ந்தேதி மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 13–ந் தேதி வரை விழா தொடர்ந்து நடக்கிறது. ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி வருகிற 5–ந்தேதி திருமலைக்கு வருகிறார். ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து வந்து வழங்குகிறார். |
| ரெயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்: மல்லிகர்ஜுன கார்கே Posted: 03 Oct 2013 04:05 AM PDT டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரெயில்வே துறை அமைச்சர் மல்லிகர்ஜுன கார்கே ரெயில் கட்டணம் உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறினார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- |
| இந்தியன் முஜாகிதீன் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட முக்கிய சிறைகளை தாக்க தீவிரவாதிகள் சதி Posted: 03 Oct 2013 02:14 AM PDT டெல்லி திகார், மும்பை, புனே, ஜெய்ப்பூர் உள்பட முக்கிய சிறைகளில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கிய |
| சோலார் பேனல் மோசடி விவகாரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி வீட்டை முற்றுகையிட கம்யூனிஸ்டு முடிவு Posted: 03 Oct 2013 02:08 AM PDT சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி அமைத்து தருவதாக கேரளாவில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது. இந்த வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், டி.வி. நடிகை ஷாலுமேனன் மற்றும் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் அலுவலக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இந்த வழக்கு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மோசடிக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை உம்மன்சாண்டி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |