Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்

Posted: 26 Oct 2013 11:57 PM PDT

உலகளாவிய ரீதியில் தற்போது அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது. இதன் காரணமாக அவற்றில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேஷன்களும் தொடர்ச்சியாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. இவற்றின் வரிசையில் தற்போது Cover எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனும் இணைந்துள்ளது. ஹோம் ஸ்கிரீனை மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியினை தரும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இயல்பாகவே ஹோம் ஸ்கிரீனிலுள்ள ஏனைய அப்பிளிக்கேஷன்களை நேரத்திற்கு நேரம் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

BMW 2 Series Coupe கார்கள் விற்பனைக்கு தயாராகின

Posted: 26 Oct 2013 11:50 PM PDT

கார் பாவனையாளர்களின் மனங்களை வென்ற BMW நிறுவனத்தின் புதிய அறிமுகமாக BMW 2 Series Coupe கார்கள் சந்தைக்கு வரவுள்ளன. அடுத்த வருட ஆரம்பத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இக்கார்கள் 228i, M235i மொடல்களை கொண்டுள்ளன. இதில் BMW 228i கார் ஆனது 240 குதிரை வலு உடையதாகவும் 5.4 செக்கன்களில் 155 mph எனும் வேகத்தை பெறக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை BMW M235i கார் 322 குதிரை வலு உடையதாகக் காணப்படுவதுடன் 4.8 செக்கன்களில் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

நாளை இங்கிலாந்தை 160 கி.மீட்டர் வேக கடும்புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 26 Oct 2013 11:42 PM PDT

download (3)

download (3)இங்கிலாந்து நாட்டை நாளை (திங்கட்கிழமை) 160 கி.மீட்டர் வேகத்தில் கடும்புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 100 மைல் (160 கி.மீட்டர்) வேகத்தில் தாக்கும் இந்த புயலை எதிர்கொள்ளும் விதமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி மக்கள் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் சீற்றத்தின் பாதிப்பாக 30 முதல் 40 செண்டி மீட்டர் மழையும் பெய்யக்கூடும். இதன் விளைவாக பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதைப் போன்ற கடும்புயல்கள்1987, 2000, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் இங்கிலாந்தை தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. நாளை இங்கிலாந்தை புயல் தாக்கும் போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் உஷார் நிலையில் இருக்கும்படியும் பிரதான சாலைகளில் உள்ள பாலங்கள் திடீரென மூடப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக நாடுகள் போலவே நாமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோம் -பிரசாத் காரியவசம்

Posted: 26 Oct 2013 11:31 PM PDT

srilankan-ambassador-to-India

srilankan-ambassador-to-Indiaஉலகில் உள்ள எல்லா நாடுகளையும் போலவே நாமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோம்

என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் மீறலினை ஒப்புக்கொண்டுள்ளார் . அதன்படி இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது . அதனை சரி செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
மேலும் அவர் தெரிவிக்கையில் , பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே உலகின் அனைத்து நாடுகளுமே ஏகமனதாக தீர்மானித்திருந்தன . அதன்காரணத்தினால் சர்வதேச நாடுகள் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்க வாய்ப்பில்லை .
 இருப்பினும் அமர்வுகளில் பங்கேற்க தவறும் நாடுகள் எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக் கூடும் . அதற்கமைய இந்திய பிரதமர் மன்மோகன் இந்தியாவிற்கு மட்டும் தலைவர் அல்ல எனவும் ஆசியாவிற்கும் தலைவர் . அவர் இதனை நினைவில் நிறுத்திக் கொண்டு இந்திய தீர்மானங்களை எடுக்க வேண்டும் .
இதேவேளை , இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பதனை இன்னமும் பிரதமர் மன்மோகன் சிங் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

This posting includes an audio/video/photo media file: Download Now

காமன் வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது : இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்க முடிவு

Posted: 26 Oct 2013 10:58 PM PDT

common

commenஇங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் காலனி நாடுகள் அடங் கிய அமைப்பு தான் 'காமன்வெல்த்'.

1949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், சூடான், குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 53 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இதன் தலைமையகம் லண்டனில் செயல்படுகிறது. காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இங்கிலாந்து ராணி 2–ம் எலிசபெத்தும், பொது செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மாவும் செயல்பட்டு வருகிறார்கள்.

நைஜீரியாவில் 1995–ல் கென்சரோ – விவா என்பவர் தூக்கில் போடப்பட்டதால் அந்த நாடு 1995–ல் இருந்து 1999–ம் ஆண்டு வரை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கிவிட்டது.

இதேபோல் பாகிஸ்தானில் அதிபர் பர்வேஸ் முஷ்ரப்பின் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1999–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை பாகிஸ்தான் சஸ்பெண்டு செய்யப்பட்டது.

அதன்பிறகு பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதை கண்டித்து அந்த நாடு மீண்டும் 2–வது முறையாக 2007–ம் ஆண்டு முதல் நீக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வேயில் அதிபர் முகாபே தேர்தல் மற்றும் நில சீர்திருத்தங்களில் மாற்றம் செய்ததால் அந்த நாடு 2003–ம் ஆண்டு சஸ்பெண்டு செய்யப்பட்டது. காமன்வெல்த் நாடுகள் மீது இதுபோன்று பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடந்ததால் அந்த நாட்டையும் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் இலங்கையில் வருகிற டிசம்பர் 15–ந்தேதி காமன்வெல்த் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

இதையடுத்து

இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் காலனி நாடுகள் அடங் கிய அமைப்பு தான் 'காமன்வெல்த்'.

இதையடுத்து காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. என்றாலும் மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது, இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்க முடிவு செய்துள்ளார்.

டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்து கொள்ள இருப்பதை உறுதி செய்தார்.

ஆனால் இந்தியாவில் இருந்து செல்லும் தூதுக் குழுவுக்கு தலைமை ஏற்பது யார்? என்பது அறிவிக்கப்படவில்லை. பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர்தான் தலைமை ஏற்கவேண்டும். அதுபற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சல்மான் குர்ஷித் பங்கேற்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி காமன் வெல்த் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக நேற்று அறிவித்தது. காமன்வெல்த் மாநாட்டில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். இதை காமன்வெல்த் மாநாட் டுக்கு எதிரான போராட்டமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தமிழ் தேசிய கூட்டணியின் மூத்த உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.

இந்த முடிவுக்கு இலங்கை மந்திரி ஜான் சேனவிரத்னே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பவர்கள் இலங்கையின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா பயணமாகும் கூட்டமைப்பு உறுப்பினர்கள்

Posted: 26 Oct 2013 10:48 PM PDT

TNA

TNAதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஆகியோரே அமெரிக்கா பயணமாகவுள்ளனர்.
புலம்பெயர் தமிழர்களால் அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட் டுள்ள நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காகவே இவர்கள் நாளை அங்கு பயணமாகவுள்ளனர்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் இவர்கள் இந்தியாவுக்கும் செல்லவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மீண்டும் சர்ச்சை:சந்தானம் மீது பாய்கிறது மகளிர் அணி

Posted: 26 Oct 2013 07:19 PM PDT

என்றென்றும் புன்னகை படத்தின் ஒரு காட்சியில் பெண் ஊழியர் ஒருவரை ‘நல்லாத்தானே இருக்க ஐநூரு ஆயிரத்துக்கே போயேன்’ என்று இரட்டை அர்த்தத்தில் நடிகர் சந்தானம் கமெண்ட் அடித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நேற்று முன்தினம் என்றென்றும் புன்னகை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற விளம்பரப் படப்பிடிப்புக் காட்சியில், சந்தானத்திடம் ஒரு பெண் வந்து ‘அஞ்சு பத்துக்குப் போகட்டுமா’ என்று அனுமதி கேட்கிறார். உடனே சந்தானம் டைமிங் என்ற பெயரில் ஏன்? நீ நல்லாத்தானே இருக்கிறே? ஆயிரம் ஐநூறுக்கே […]

This posting includes an audio/video/photo media file: Download Now

தீவிர அரசியலில் சச்சின்?

Posted: 26 Oct 2013 07:14 PM PDT

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட சச்சின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி டெண்டுல்கரை கடந்த ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக நியமித்தது. இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள சச்சின் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 9 கூட்டங்களில் அவர் பேச உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாதான் சச்சினிடம் பேசி அழைப்பு விடுத்தார் என்று கூறப்படுகிறது. […]

10 லட்சம் பேருக்கு காசநோய்: அதிர்ச்சி தகவல்

Posted: 26 Oct 2013 07:12 PM PDT

இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மிக மோசமான காச நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்தாண்டு மட்டும் இந்தியாவில் 2.7 லட்சம் பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளதாக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. கடந்தாண்டில் 4.5 லட்சம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காற்று மூலமாக பரவுவது காச நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான இருமல், சளி, காய்ச்சல், […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ராகுலை ‘இளவரசரே’ என்று கிண்டலடித்த மோடி

Posted: 26 Oct 2013 06:58 PM PDT

ஜான்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ராகுல் காந்தியை இளவரசரே என்று கிண்டலடித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நரேந்திர மோடி ஜான்சியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ஜான்ஸி ராணி பிறந்த மண்ணில் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏழை மக்களின் கண்ணீரை துடைக்கவே நான் இங்கு வந்துள்ளேன். பிறரை போல கண்ணீர் வடித்து பேச மாட்டேன், இந்த பகுதியில் நீர் ஆதாரம் இருந்தும் […]

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™