Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மழை சாவு 40 ஆக உயர்வு: ஆந்திராவில் 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது

Posted: 26 Oct 2013 11:49 PM PDT

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆந்திராவில் சமீபத்தில் தாக்கிய பாய்லின் புயலுக்கு தப்பிய மாவட்டங்கள் இந்த மழையில் சிக்கி சின்னா பின்னமாகி உள்ளது. 16 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. குறிப்பாக பிரகாசம், குண்டூர், கம்மம், வாரங்கல், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரங்கல்லில் அதிக பட்சமாக 6.3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

மாணவர்களிடம் ரூ.6 கோடி மோசடி: கைதான கேரள பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை

Posted: 26 Oct 2013 11:22 PM PDT

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி பகுதியைச் சேர்ந்தவர் கவிதா பிள்ளை (வயது 38). இவர் திருவனந்தபுரம் எர்ணா குளம், கொச்சி போன்ற இடங்களில் 'கே.ஜி.கே. கன்சல்டன்சி குழுமம்' என்ற பெயரில்

பாட்னா – டெல்லியில் பொதுக்கூட்டம்: நரேந்திரமோடி–ராகுல் இன்று பிரசாரம்

Posted: 26 Oct 2013 11:09 PM PDT

இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர்

பாட்னா ரெயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

Posted: 26 Oct 2013 11:00 PM PDT

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா தொண்டர்கள் ரெயில்களிலும், பஸ்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பாட்னா ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. உடனே ரெயில்வே பாதுகாப்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார்

Posted: 26 Oct 2013 09:24 PM PDT

இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்த முன்னாள் காலனி நாடுகள் அடங் கிய அமைப்பு தான் 'காமன்வெல்த்'. 1949–ம் ஆண்டு காமன் வெல்த் அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நைஜீரியா, மியான்மர், ஏமன், எகிப்து, ஈராக், இஸ்ரேல், சூடான், குவைத், பக்ரைன், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட 53 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் தலைமையகம் லண்டனில் செயல்படுகிறது. காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இங்கிலாந்து ராணி 2–ம் எலிசபெத்தும், பொது செயலாளராக இந்தியாவைச் சேர்ந்த கமலேஷ் சர்மாவும் செயல்பட்டு வருகிறார்கள்.

‘காஷ்மீர் பிரச்சினையில் ஒருபோதும் தலையிடமாட்டோம்’: அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு

Posted: 26 Oct 2013 08:50 PM PDT

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண உதவுமாறு அமெரிக்காவை பாகிஸ்தான் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தானின் இந்த கோரிக்கைக்கு செவிமடுக்க அமெரிக்கா தயாராக இல்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஒருவர் சமீபத்தில் கூறுகையில்; காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினை என்றும், இந்த பிரச்சினையை பொறுத்தமட்டில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் சிறிதளவு கூட மாற்றம் இல்லை என்றும் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழாக்களில் கவுன் அணியும் வழக்கத்திற்கு ஜனாதிபதி முடிவு கட்ட வேண்டும்: நிதிஷ் குமார் பேச்சு

Posted: 26 Oct 2013 03:39 PM PDT

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா ஐ.ஐ.டி.யின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றுது. இவ்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மாநில கவர்னர் டி.ஒய். பாட்டீல், முதல் மந்திரி நிதிஷ் குமார் ஆகியோர் பட்டமளிப்பு விழா மரபுகளின் படி கவுன் (அங்கி) மற்றும் தொப்பிகளை அணிந்திருந்தனர்

ராகுல் காந்தி வீட்டின் முன்னர் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்: உருவ பொம்மை எரிப்பு

Posted: 26 Oct 2013 03:14 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 62 பேர் பலியானார்கள்.

மகனை பிரதமராக்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவே ஆந்திராவை பிரிக்கும் முடிவை சோனியா எடுத்தார்: சந்திரபாபு நாயுடு

Posted: 26 Oct 2013 02:27 PM PDT

பயலின் புயலின் எதிரொலியாக ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று ஸ்ரீகாகுளம் மாவட்டத்திற்கு சென்றார்.

முசாபர் நகர் கலவரத்தால் இடம் பெயர்ந்த 1800 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

Posted: 26 Oct 2013 01:10 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 62 பேர்

டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் இன்று தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: விஜயகாந்த் பேசுகிறார்

Posted: 26 Oct 2013 12:43 PM PDT

டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 70 எம்.எல்.ஏ.க்களை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தல் களத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பதிவு செய்ய உள்ளனர்.

ஆசாராம் பாபுவுக்கு ஜோத்பூர் சிறையில் 'தலை தீபாவளி' : விசாரணை காவல் நவ. 6-ம் தேதி வரை நீட்டிப்பு

Posted: 26 Oct 2013 12:29 PM PDT

குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு

ஆந்திராவில் சிமெண்ட் லாரி ஏரியில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலி

Posted: 26 Oct 2013 11:53 AM PDT

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்காபுரம் பகுதி வழியாக சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி வந்துக் கொண்டிருந்தது. அந்த லாரியில் 10 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர்.

திருட்டு பைக்கில் ராஜஸ்தானை சுற்றி வந்த ராகுல் காந்தி: மோடி கடும் தாக்கு

Posted: 26 Oct 2013 11:34 AM PDT

பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நாடெங்கிலும் சுற்றுப் பயணம் செய்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார்.

ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தும் கட்சிக்கு பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு: ஜெகன் மோகன்

Posted: 26 Oct 2013 08:01 AM PDT

தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஆந்திராவில் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:- இது டெல்லியின் அகந்தைக்கும், தெலுங்கு மக்களின் சுய மரியாதைக்கும் இடையிலான

ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் வழக்கு

Posted: 26 Oct 2013 07:44 AM PDT

உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் துணைத்தலைவர், முசாபர் நகர் கலவரத்தில் தங்கள் உறவினர்களை இழந்த 10-15 முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு தங்கள் வசம் இழுக்க முயற்சி செய்ததாகவும், இத்தகவலை மத்திய உளவுத்துறை தெரிவித்ததாகவும் கூறினார்.

விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராஜஸ்தான் கூட்டத்தில் மோடி தாக்கு

Posted: 26 Oct 2013 06:09 AM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் உதய்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. வாஜ்பாய் ஆட்சியின்போது டீசல் விலை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 60 ரூபாயைத் தாண்டிவிட்டது. 100 நாட்களில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறினார்கள்

ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ஜெகன் மோகன் பொதுக்கூட்டம்: ஐதராபாத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்

Posted: 26 Oct 2013 05:08 AM PDT

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பு சீமாந்திரா பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மத்திய அரசு தெலுங்கானா மாநிலம் பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள்

டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவன புதிய விமான சேவை அடுத்த ஆண்டு துவக்கம்

Posted: 26 Oct 2013 04:58 AM PDT

மத்திய அரசு கடந்த ஆண்டு பன்னாட்டு விமான நிறுவனங்கள் 49 விழுக்காடு பங்குகளுடன் இந்தியாவில் விமான சேவையை தொடங்கலாம் என்று அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய டாடா நிறுவனமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானக் கம்பெனியும் சேர்ந்து உலகின் அதி நவீன விமான சேவையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டது.

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுடன் சண்டை: ஒருவன் சுட்டுக்கொலை

Posted: 26 Oct 2013 04:39 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநில சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™