Tamil Star |
- இன்று அதிகாலை ஜப்பானில் நில நடுக்கம்
- வடக்கு மாகாண முதல்வர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது
- மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காது
- நண்பர்களுக்குள் உளவு பார்க்கும் செயல் : அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம்
- பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா ? கூட்டமைப்பினர் மந்திராலோசனை
- வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் மாதம் 11ஆம் திகதி – தவிசாளர் கந்தையா சிவஞானம்
- லாரா–பாண்டிங்கைவிட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்: ஆஸ்திரேலியா வீரர் ஷான் டெய்ட்
- பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேற்றம்
- ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடலாம் : கென்யா கிரிக்கெட் சங்கம் அழைப்பு
- முன் சில்லு இல்லாமல் தரை இறங்கிய Boeing விமானம்
| இன்று அதிகாலை ஜப்பானில் நில நடுக்கம் Posted: 25 Oct 2013 10:25 PM PDT
அப்போது அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து கடலில் சுனாமி (ராட்சத) அலைகள் ஏற்பட்டன. அவை வழக்கத்தை விட சுமார் 3 அடி உயரத்துக்கு சீற்றத்துடன் எழும்பி வந்து கரையில் சிறிதளவு தாக்கின. அதை தொடர்ந்து ஜப்பானின் அவசர சேவை மையம் கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. அதிகாலை நேரத்திலும் வீடுகளில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதிக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இங்குதான் புகுஷிமா அணு உலை உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு பூகம்பமும், சுனாமியும் தாக்கியதில் அணு உலைகள் வெடித்து சேதம் அடைந்தன. அதில் இருந்து வெளியேறிய கதிர்வீச்சினால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இந்த முறை சுனாமி தாக்குதலின்போது புகுஷிமா அணுஉலையில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே ராட்சத அலைகள் குறைந்து விட்டதால் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து புகுஷிமா அணு உலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதித்த நிபுணர்கள் தெரிவித்தனர். ஜப்பானில் நேற்று 7.6 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் பொருட்சேத விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கு மாகாண முதல்வர் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது Posted: 25 Oct 2013 10:19 PM PDT
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களிடையேயான கலந்துரையாடல் யாழ்.நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று மணி நேரம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வு முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்றது. இதில் ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினருக்கும் ஒவ்வொரு அமைச்சின் கீழான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ். செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன், புளொட் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோவின் செயலாளர் நாயகமும் மாகாணசபை உறுப்பினருமான க.சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சு மூன்று மணி நேரம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் வடக்கு மாகாண சபையின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பிலும் இதில் ஆராயப்பட்டது. அத்துடன் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கெடுப்பது தொடர்பாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதன்போது அனைவரும் பொதுநலவாய மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கக் கூடாதென்றே வலியுறுத்தியுள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காது Posted: 25 Oct 2013 08:08 PM PDT
பிரித்தானிய காலனித்துவ நாடுகள் வரிசையில் 54 வது நாடாக இருந்த மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா அந்த அமைப்பில் இருந்து இந்த மாதத்தில் விலகிக்கொண்டது. இது தொடர்பில் கம்பியாவின் அரச தொலைக்காட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியா இனி ஒருபோதும் பிரித்தானிய காலனித்துவ நாடுகளுடன் இணையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் கம்பியா 1965ம் ஆண்டு பொதுநலவாய நாடுகளின் அணியில் இணைந்தது. அதன்போது சேர் டௌடா ஜவாரா கம்பியாவின் ஜனாதிபதியாக இருந்தார். 1994 ஜூலை 24ம் திகதி சேர் டௌஜா ஜவாராவின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியமையைத் தொடர்ந்து கம்பியா 1995ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. இந்தநிலையிலேயே கம்பியா தமது சுய விலகலை அறிவித்துள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நண்பர்களுக்குள் உளவு பார்க்கும் செயல் : அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம் Posted: 25 Oct 2013 08:00 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா ? கூட்டமைப்பினர் மந்திராலோசனை Posted: 25 Oct 2013 07:47 PM PDT
இருப்பினும் இது தொடர்பில் எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படாத நிலையில் கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. இரா. சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், பொதுநலவாய மகாநாடு போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட கூட்டத்தினை விரைவில் கொழும்பில் நடத்துவது என்றும் அங்கு தீர்மானிக்கப்பட்டது This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடமாகாண சபையின் அடுத்த அமர்வு நவம்பர் மாதம் 11ஆம் திகதி – தவிசாளர் கந்தையா சிவஞானம் Posted: 25 Oct 2013 06:54 AM PDT
வடமாகாண சபையின் கன்னி அமர்வு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிலையில் முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன. தவிசாளாராக கந்தையா சிவஞானமும் உபதவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தவிசாளர் கந்தையா சிவஞானம் தலைமையில் அவை நிகழ்வுகள் நடைபெற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுற்றது. இதன்போது அடுத்த அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி நடைபெறுமெனவும் தவிசாளர் அறிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| லாரா–பாண்டிங்கைவிட தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்: ஆஸ்திரேலியா வீரர் ஷான் டெய்ட் Posted: 25 Oct 2013 05:12 AM PDT
நவீன கிரிக்கெட்டின் சகாப்தமான அவரை முன்னாள், இன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் லாரா, ரிக்கி பாண்டிங்கை விட தெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேன் என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீரர் ஷான் டெய்ட் கூறியுள்ளார். மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷான் டெய்ட் கூறியதாவது:– எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பார்த்த வரையில் பிரையன் லாரா, ரிக்கிபாண்டிங்கை விட சச்சின் தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன். அவர் எல்லா சூழ்நிலையிலும் சிறப்பாக ஆட கூடியவர். அவருக்கு எதிராக பந்து வீச்சியது பெருமையான விஷயம். அவரது விக்கெட் மிகப்பெரியது. வருகிற ஆசஷ் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெல்லும். இவ்வாறு அவர் கூறினார். வேகப்பந்து வீச்சாளரான ஷான் டெய்ட் 160.7 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அதிவேக பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெற்று உள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரெஞ்சு ஓபன் சூப்பர் சீரிஸ்: பி.வி.சிந்து, சாய்னா நேவால் வெளியேற்றம் Posted: 25 Oct 2013 04:52 AM PDT
இதேபோல் 6-ம்நிலை வீராங்கனையான ஜி ஹியுன் சங்கைத் தோற்கடித்த பி.வி.சிந்து, நேற்று தன்னை எதிர்த்து விளையாடிய 30-ம் நிலையில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டு வீராங்கனையான கிர்ஸ்டி கில்மோரிடம் 21-10, 19-21, 16-21 என்ற கணக்கில் தோற்றுப் போனார். சிந்துவின் இந்த ஸ்திரமற்ற நிலை எப்போதும் தொடர்ந்து காணப்படுகின்றது. தற்போதுள்ள நிலையில் இந்திய வீரர்களில் எஞ்சியுள்ளது ஆனந்த் பவார் மட்டுமே ஆவார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் விளையாடலாம் : கென்யா கிரிக்கெட் சங்கம் அழைப்பு Posted: 25 Oct 2013 04:45 AM PDT
இவற்றிலிருந்து தேர்வு செய்யப்படும் 6 அணிகளே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வங்காளதேசத்தில் நடைபெற உள்ள உலககோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் தகுதியைப் பெறும். இந்த ஆண்டிற்கான சர்வதேசக் கோப்பை மற்றும் உலக கிரிக்கெட் லீக் தொடரில் ஏமாற்றத்தைப் பெற்ற கென்யா அடுத்த வருடத்திற்கான உலகத் தேர்வினுள் தகுதி பெறும் முனைப்புடன் உள்ளது. இந்த அணியில் தலைவராகவும், துணைத் தலைவராகவும் விளையாடி வந்த ஸ்டீவ் டிக்காலோ (வயது 42) மற்றும் தாமஸ் ஒடாயோ (வயது 36) ஆகிய இருவரும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டனர். ஆயினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். அணியில் உள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்க ஒரு துடிப்பான தலைமை தேவை என்று எண்ணும் கென்யா கிரிக்கெட் சங்கம் இவர்கள் இருவரையும் மீண்டும் விளையாட அழைத்துள்ளது. சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றபோதிலும், நைரோபி கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் திறமையுடன் விளையாடி வருகின்றனர். எனவே, கென்யா அணியைத் தலைமை தாங்கவும், வழி நடத்தவும் இவர்களை மீண்டும் அழைத்துள்ளோம் என்று கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| முன் சில்லு இல்லாமல் தரை இறங்கிய Boeing விமானம் Posted: 25 Oct 2013 04:23 AM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












