Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பா.ஜனதாவில் இருந்து நீக்கம்: ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு ராம் ஜெத்மலானி வழக்கு

Posted: 25 Oct 2013 11:21 PM PDT

பிரபல கிரிமினல் வக்கீல் ராம் ஜெத்மலானி. பாரதீய ஜனதாவை சேர்ந்த இவர் கடந்த மே மாதம் 28–ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சிக்கு எதிராக நடந்து கொண்டதாக ராம் ஜெத்மலானியை 6 ஆண்டுக்கு நீக்கியது. பாரதீய ஜனதாவின் பார்லிமென்ட் குழு இந்த நடவடிக்கையை எடுத்தது. நிதின் கட்காரி தலைவராக இருந்தபோது அவரது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது கட்காரி பதவி விலக வேண்டும் என்று ஜெத்மலானி வலியுறுத்தினார். இதேபோல சி.பி.ஐ.

குறைந்த காற்றழுத்தம் தீவிரம்: ஆந்திரா- ஒடிசாவில் மழைக்கு 37 பேர் பலி

Posted: 25 Oct 2013 10:42 PM PDT

வங்க கடலில் உருவான பாய்லின் புயல் 10 நாட்களுக்கு முன் ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை தாக்கியது. அப்போது மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. பயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. பாய்லின் புயலைத் தொடர்ந்து கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. தமிழகத்தில் மழை தொடங்கிய நிலையில்

திருப்பதி கோவில் விடுதியில் கோவை பக்தர் பிணம்

Posted: 25 Oct 2013 10:25 PM PDT

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் குறைந்து உள்ளது. நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 43 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ளக்சின் 10 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிகிறது. 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு

திருப்பதியில் மீண்டும் சிறுத்தைப் புலி நடமாட்டம்

Posted: 25 Oct 2013 10:06 PM PDT

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்கு, கீழ்திருப்பதியில் இருந்து 4 பாதைகள் உள்ளன. மலைப்பாதை 1 மற்றும் 2 ஆகியவை வாகனங்கள் சென்று வருவதற்கும், 2 நடைபாதைகள் பக்தர்கள் நடந்து செல்வதற்கும் பயன் படுத்தப்படுகின்றன. திருமலையில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. காட்டுப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி, பாம்பு போன்றவை

திருவனந்தபுரம் அருகே விபத்தில் மாணவன் பலி: மினி பஸ்சுக்கு தீ வைப்பு

Posted: 25 Oct 2013 10:01 PM PDT

திருவனந்தபுரம் அருகே தொடுபுழா கரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதிஸ் ராஜன் (வயது 19). இவரது நண்பர் விஷ்ணு (19). இருவரும் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து

குடியரசு தலைவரின் மகள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என தகவல்

Posted: 25 Oct 2013 09:59 PM PDT

இந்தியப் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான ஷர்மிஷ்தா (47) பிரபல கதக் நடனக் கலைஞர் ஆவார். இவர் தனக்கென ஒரு நடனக் கலைஞர்கள் குழுவை அமைத்துக் கொண்டு நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றார். அது மட்டுமின்றி, குடியரசு தலைவரின் மனைவி உடல் நலக் குறைவு காரணமாக ராஷ்டிரபதி மாளிகையில் கொடுக்கப்படும் விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் இவர்தான் முன்னின்று கவனித்துக் கொள்ளுவார். பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவர் ஆனபின் அவரது தொகுதியான

வெங்காயம் திருட்டை தடுக்க ரகசிய காமிராவில் கண்காணிப்பு: குஜராத் வியாபாரிகள் ஏற்பாடு

Posted: 25 Oct 2013 09:57 PM PDT

வெங்காயத்துக்கு நாடெங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெங் காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி, காஷ்மீரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100–க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்பனையாகிறது

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய பாக்.தீவிரவாதி சுட்டுக்கொலை

Posted: 25 Oct 2013 09:33 PM PDT

இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதி களுக்கு பயிற்சி அளித்து காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவச் செய்கிறது. இதற்காக எல்லையில் இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. ஆனால் எல்லைப் பாது காப்பு படைவீரர்கள் பாகிஸ்தானுக்கு

பீகாரில் நாளை மோடி பங்கேற்கும் பிரமாண்ட கூட்டம்: 14 ரெயில்களில் தொண்டர்கள் வருகை

Posted: 25 Oct 2013 09:31 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று அவர் ஜான்சி நகரில் நடந்த பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் ராகுலின் சர்ச்சைக்குரிய பேச்சை குறிப்பிட்டு ஏராளமான கேள்விகளை எழுப்பினார்.

40 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம்

Posted: 25 Oct 2013 09:25 PM PDT

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஏர் இந்தியா விமான நிறுவனமும், இந்தியன் ஏர்லைன்சும் ஒன்றாக இணைக்கப்பட்டபோது இருந்த 29,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களின் சம்பளவிகிதம், பணி உயர்வு மற்றும் பணி நியதிகள் குறித்த பிரச்சினைகளை நிர்வாகத்தின் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி தர்மாதிகாரியின் தலைமையின்கீழ் நான்கு உறுப்பினர் கொண்ட குழுவொன்று ஊழியர்களின் பணி விதிமுறைகள் குறித்த அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தது தற்போது

சமூக வலைத்தளங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரத்துக்கு கட்டுப்பாடு: தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

Posted: 25 Oct 2013 09:03 PM PDT

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொடர்பாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. வேட்பாளர்கள் தங்கள் பிரசாரத்துக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது தொடர்பாக இப்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தலைமை தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு பெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது. அதில் விக்கிபீடியா, டுவிட்டர், யூ டியூப், பேஸ்புக் மற்றும் 'கணினி கேம்

பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன் தெலுங்கானா குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: ஷிண்டே

Posted: 25 Oct 2013 08:43 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரித்து தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய மாநில எல்லை வரையறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு 7 மத்திய மந்திரிகளை கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. அதன்படி புதிய மாநில எல்லை வரையறை, நதிநீர், மின்சார பங்கீடு மற்றும் சொத்து பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுவின் அறிக்கை மத்திய அரசிடம்

வங்காளதேச சந்தைகளில் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையாகும் இந்திய வெங்காயம்

Posted: 25 Oct 2013 08:31 PM PDT

நாள்தோறும் ஏறிக்கொண்டே போகும் வெங்காயத்தின் விலை சாமானியனின் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றது. இந்த விலையேற்றத்தையும், தட்டுப்பாட்டையும் சமாளிக்கும் வகையில் இந்திய அரசும் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தைக் கொள்முதல் செய்துவருகின்றது. ஆனால், தினந்தோறும் இந்தியாவிலிருந்து 2,500 டன் வெங்காயம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. மேற்கு வங்கத்தில் உள்ள ஐந்து ஏற்றுமதி மையங்கள் வழியாகவும் பழங்கள், வெங்காயம்

நாட்டின் கஜானாவில் யாரும் கைவைக்க முடியாதபடி காவல் காப்பேன்: மோடி பேச்சு

Posted: 25 Oct 2013 03:52 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையிலும் ஊழலுக்கு எதிராக என்ன செய்ய போகிறோம்? என்று பேச காங்கிரஸ் கட்சி மறுத்து வருகிறது.

டெல்லி அரசே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்து விற்க தேர்தல் கமிஷன் அனுமதி

Posted: 25 Oct 2013 03:28 PM PDT

நாடெங்கும் வெங்காயத்தின் விலை கடும் உயர்வை சந்தித்து வரும் நிலையில் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

பயலின் புயல் எதிரொலி: ஒடிசா, ஆந்திராவில் பெருவெள்ளம் - பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

Posted: 25 Oct 2013 12:37 PM PDT

பயலின் புயல் எதிரொலியாக ஒடிசா மற்றும் ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் ஆறு மற்றும் ஏரிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வல்லபாய் பட்டேல் அருங்காட்சியகம் திறப்பு விழாவில் பிரதமருடன் மோடி பங்கேற்பு

Posted: 25 Oct 2013 11:23 AM PDT

சர்தார் வல்லபாய் பட்டேலின் வரலாற்றை புறக்கணித்து விட்டு நேருவில் பரம்பரை புகழை காங்கிரஸ் கட்சி பறைசாற்றி வருவதாக குஜராத் முதல் மந்திரி நரேந்தி மோடி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை

Posted: 25 Oct 2013 09:25 AM PDT

ராஜஸ்தான் மாநிலத்தல் பால்வளம் மற்றும் கதர்துறை மந்திரியாக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் 35 வயதுபெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு அழைத்து கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாபுலால் நாகர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ்

ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு சுரங்க ஒதுக்கீடு: ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் வழங்கியது பிரதமர் அலுவலகம்

Posted: 25 Oct 2013 07:28 AM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., சமீபத்தில் தனது விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. மேலும் ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களைக் கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை பிரதமர்

முஸ்லிம் இளைஞர்கள் பற்றி ராகுல் காந்தியிடம் உளவுத்துறை கூறியது ஏன்? - பா.ஜனதா கேள்வி

Posted: 25 Oct 2013 07:22 AM PDT

முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்பு கொண்டு, அவர்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாகவும், இத்தகவலை உளவுத்துறை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி பரபரப்பான தகவலை வெளியிட்டார். ராகுல் காந்தியன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™