Tamil Star |
- இலங்கையின் முதலாவது நனோ விஞ்ஞான பூங்கா இன்று திறப்பு
- வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு ஜெயலலிதா மறுப்பு
- ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்! அதிர்ச்சி தகவல்
- விண்டோஸ் 8.1-யை நிறுவ வேண்டுமா?
- உலகின் முதலாவது 8 Core Porcessor கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
- iOS சாதனங்களுக்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன்
- உங்களது பாஸ்வேர்ட் வலிமையாக இருக்கிறதா?
- பாகிஸ்தான் அணியிலிருந்து யூனிஸ் கான் நீக்கம்
- ஐரோப்பிய பிரீமியர் லீக்: நேற்றைய போட்டி முடிவுகள்
- 1,000 டன் தங்கப் புதையல்: சாமியாரின் கனவு பலிக்குமா?
| இலங்கையின் முதலாவது நனோ விஞ்ஞான பூங்கா இன்று திறப்பு Posted: 20 Oct 2013 10:07 PM PDT
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த மையம் திறந்து வைக்கப்படும் என்றும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை நனோ தொழில்நுட்;ப நிறுவனமும்,தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நனோ தொழில்நுட்ப சிறப்பு மையம் என்ற பெயரில் ஜூன் 2012 இல் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப் பூங்கா ஹோமாக பிட்டிப்பனவில் 50 ஏக்கர் காணியில் 2018.5 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 1771.5 மில்லியன் ரூபாவையும் 310 மில்லியன் ரூபாவை தனியார் துறைப் பங்குதாரர்களான மாஸ், பிரன்டிக்ஸ், டயலொக், ஹேய்லிஸ், லொடிஸ்டர் மற்றும் லங்கம் ஆகிய நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளன. உலக சந்தைத் தரத்திற்கு ஏற்ப புதிய இயற்கை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராச்சி செயற்பாடுகளை விஸ்தரித்தல், உள்நாட்டு சர்வதேச பிரச்சினையான விவசாயம்இ உடல்நலம் சுகாதாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் தீர்வுகாணல், புதிய கண்டுபிடிப்புகளை ஏற்படுத்துதல் ஆகியனவே நனோ தொழில்நுற்ப சிறப்பு மையத்தின் நோக்கமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு ஜெயலலிதா மறுப்பு Posted: 20 Oct 2013 08:37 AM PDT வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா வடமாகாண முதலமைச்சரை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. உயர் ராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தச் சந்திப்பை வடக்கிலிருந்த பிரபல தமிழ் தலைவரான அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நெருங்கிய உறவினரொருவர் ஏற்பாடு செய்திருந்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வேண்டுகோளின் பேரில் இந்த […] |
| ஆசாராமின் ஆசிமத்திற்குள் கருக்கலைப்பு மையம்! அதிர்ச்சி தகவல் Posted: 20 Oct 2013 05:32 AM PDT பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு மையம் செயல்பட்டுவந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆசாராம் பாபு மீது தொடர்ந்து பல பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்களை வற்புறுத்தி பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியான நிலையில், ஆசாராமின் ஆசிரமத்தில் கருக்கலைப்பு மையம் செயல்பட்டதாக குஜராத் பொலிசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண் ஒருவர் […] |
| விண்டோஸ் 8.1-யை நிறுவ வேண்டுமா? Posted: 20 Oct 2013 05:25 AM PDT முன்னணி இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப் ஆனது மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது. இவ் இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறவே தற்போது அதன் புதிய பதிப்பான விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இதனை நிறுவிக்கொள்வதற்கு தேவையான அம்சங்களை கணனி கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். அவையாவன, 1. குறைந்தது 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor. 2. பிரதான நினைவகமாக 1 GB RAM. 3. 16GB […] |
| உலகின் முதலாவது 8 Core Porcessor கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் Posted: 20 Oct 2013 05:05 AM PDT தற்போது காணப்படும் Processor-களை விடவும் உயர் வினைத்திறன் கொண்ட 8 Core Processor ஐ உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசியினை சம்சுங் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த Processor ஆனது Octa-core Processor என அழைக்கப்படுகின்றது. இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution தொடுதிரையினக் கொண்டதாகவும், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மேலும் இதன் Processor 1.5GHz வேகத்தில் செயல்படக்கூடியது, இதில் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது. […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| iOS சாதனங்களுக்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன் Posted: 20 Oct 2013 04:56 AM PDT மொபைல் சாதனங்களில் இலகுவாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தக்கூடியவாறு பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் அப்பிளின் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதும், மேம்படுத்தப்பட்டதுமான புதிய அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பேஸ்புக் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போஸ்ட், மற்றும் கருத்துக்களை(Comments) எடிட் செய்யும் வசதியும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி This posting includes an audio/video/photo media file: Download Now |
| உங்களது பாஸ்வேர்ட் வலிமையாக இருக்கிறதா? Posted: 20 Oct 2013 04:52 AM PDT இன்றைய காலகட்டத்தில் ஒரு சில எழுத்துகளும், எண்களும் தான் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது. நாம் ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும், அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகி விடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு […] |
| பாகிஸ்தான் அணியிலிருந்து யூனிஸ் கான் நீக்கம் Posted: 19 Oct 2013 11:50 PM PDT பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் இருந்து மூத்த வீரர் யூனிஸ் கான் நீக்கப்பட்டார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(யு.ஏ.இ) சென்றுள்ள பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி அக்டோபர் 30ம் திகதி சார்ஜாவில் நடக்கிறது, இத்தொடருக்கான 16 பேர் கொண்ட வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் மூத்த வீரர் யூனிஸ் கான் நீக்கப்பட்டார். இவர் கடைசியாக தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரில் […] |
| ஐரோப்பிய பிரீமியர் லீக்: நேற்றைய போட்டி முடிவுகள் Posted: 19 Oct 2013 11:49 PM PDT ஐரோப்பிய பிரீமியர் லீக் காற்பந்து போட்டித் தொடரில் நேற்றைய தினம் எட்டு போட்டிகள் இடம்பெற்றன. அதன் முடிவுகள் வருமாறு, நியுகெஸ்டல் அணிக்கும் லிவர் பூல் அணிக்கும் இடையிலான போட்டி 2 – 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. ஆர்சனல் அணி நோர்விச் அணியை 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. செல்சீ அணிக்கும், கார்டிப் அணிக்கும் இடையிலான போட்டியில் செல்சீ அணி 4 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. எவர்டன் அணி […] |
| 1,000 டன் தங்கப் புதையல்: சாமியாரின் கனவு பலிக்குமா? Posted: 19 Oct 2013 11:48 PM PDT உத்திரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 1,000 டன் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் 2வது நாளாக தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. உன்னாவ் அருகே கெடா எனும் கிராமத்தில் மன்னர் ராஜா ராவ் ராம் பாக் சிங் என்பவரது சிதிலமடைந்த கோட்டை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தூக்கிலிடப்பட்ட இவர், இந்த கிராமத்தைச் சேர்ந்த சோபன் சர்க்கார் என்பவர் கனவில் தோன்றி, தமது கோட்டையில் 1,000 டன் புதையல் இருப்பதாக தெரிவித்துள்ளாராம். இதனைத் தொடர்ந்து நேற்று […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

