Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த 11 கட்சிகள் சேர்ந்து புதுகூட்டணி உருவாக்கம்: பொது வேட்பாளர்களை நிறுத்த முடிவு

Posted: 20 Oct 2013 11:14 PM PDT

பாராளுமன்றத்துக்கு இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன. மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசம், பீகார் உள்பட பெரிய மாநிலங்களில் கிடைக்கும் வெற்றிதான் ஆட்சி அமைக்க உதவும் என்பதால் பெரிய கட்சிகள் எல்லாம் பெரிய மாநிலங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றன. சிறிய மாநிலங்களை யாரும் அவ்வளவாக

காஷ்மீரில் இன்று நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் ஓட்டம்

Posted: 20 Oct 2013 10:57 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என எண்ணி பயத்தில் எழுந்தனர். அதன் பின்னர் தான் நில நடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.

திருப்பதியில் பலத்த மழை: பக்தர்கள் அவதி

Posted: 20 Oct 2013 10:12 PM PDT

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர கடலோர பகுதியில் மழை பெய்து வருகிறது. இதே போல் திருமலையிலும் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மாலை மழையின் வேகம் அதிகரித்தது. இதனால் கடுமையான குளிர் நிலவியது.

லல்லுபிரசாத் யாதவ் உயிருக்கு ஆபத்து: ஜெயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 20 Oct 2013 10:07 PM PDT

பீகார் முன்னாள் முதல்–மந்திரி லல்லு பிரசாத் யாதவுக்கு கால் நடை தீவன ஊழல் செய்ததாக 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி அருகில் உள்ள ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் மற்ற கைதிகளிடம் இருந்து லல்லு தனிமைப்படுத்தி, தனியாக வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் டி.வி. வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிப்பதை தவிர்க்க முடியாது: மத்திய மந்திரி பனபாக லட்சுமி பேட்டி

Posted: 20 Oct 2013 09:09 PM PDT

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய மந்திரியும், பபட்லா தொகுதி எம்.பி.யுமான பனபாக லட்சுமி பபட்லாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "ஆந்திராவை இரண்டு மாநிலங்களாக பிரிப்பது என்பது தவிர்க்க முடியாதது. அதே நேரத்தில் ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பிராந்திய (சீமாந்திரா) மக்களின் நலன் பாதுகாக்கப்படும்" என்று உறுதி

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை

Posted: 20 Oct 2013 04:07 PM PDT

டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

வீரப்ப மொய்லியை தொடர்ந்து அலுவலகத்திற்கு 15 கி.மீட்டர் நடந்து சென்ற இந்தியன் ஆயில் தலைவர்

Posted: 20 Oct 2013 03:35 PM PDT

எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி வாரம் ஒருமுறை பொது போக்குவரத்தை பயன்படுத்த உள்ளேன் என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி கடந்த மாதம் கூறி இருந்தார். அதன்படி கடந்த 9-ம் தேதி தனது இல்லத்தில் இருந்து காரில் அலுவலகம் செல்வதை தவிர்த்துப் சாஸ்திரி பவனில்

கற்பழிப்பு வழக்கில் ஆசாராம் பாபுவின் மனைவி - மகளிடம் குஜராத் போலீசார் விசாரணை

Posted: 20 Oct 2013 03:17 PM PDT

குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது

கொல்கத்தா: துரந்தோ ரெயிலில் ஏ.சி. இயங்காததால் ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

Posted: 20 Oct 2013 02:56 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் திகாவில் இருந்து ஹவுரா செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திகாவில் இருந்து புறப்பட்டது. முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இந்த அதிவிரைவு

மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற காண்ஸ்டபிள் கைது

Posted: 20 Oct 2013 02:13 PM PDT

மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் (சி.ஐ.எஸ்.எப்.) இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற காண்ஸ்டபிளை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா துறைமுகம் அருகேயுள்ள கார்டன் ரீச் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காண்ஸ்டபில் நீல்கண்டா பேராவுக்கும், இன்ஸ்பெக்டர்

நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. விசாரணை தொடர்பான அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நாளை தாக்கல்

Posted: 20 Oct 2013 01:52 PM PDT

பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித்துறை மந்திரி பொறுப்பு வகித்த காலத்தில் நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை பல்வேறு தரப்பினருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கை குற்றம் சாட்டியது

ஆந்திராவில் 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன 3 மாணவர்களின் பிரேதங்கள் அழுகிய நிலையில் கிடைத்தன

Posted: 20 Oct 2013 01:07 PM PDT

ஆந்திர மாநிலம், மேற்கு மாவட்டம், கடியம் பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ஒரு வாடகை காரில் 'பிக்னிக்' சென்றனர். அவர்கள் அனைவரும்

ராஜஸ்தான்: சிறை காவலர்களை துப்பாக்கியால் சுட்டு கைதிகளை கடத்திச் சென்ற முகமூடி கும்பல்

Posted: 20 Oct 2013 01:05 PM PDT

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தில் ஆயுதமேந்தி வந்த முகமூடி கும்பல் கிளை சிறையில் இருந்து 3 கைதிகளை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜலோர் மாவட்டம் சஞ்சோர் நகரில் உள்ள கிளை சிறைக்கு நேற்றிரவு ஆயுதமேந்திய

தேர்தல் நிதி அளிப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது: காங்கிரஸ் திட்டவட்டம்

Posted: 20 Oct 2013 12:34 PM PDT

தேர்தல் நிதி பெறும் அரசியல் கட்சிகள் தங்களுக்கு நிதி அளித்தவர்கள் யார்? எவ்வளவு தொகை அளித்தார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் தமிஷன் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக 10 ஆலோசனைகளையும் தேர்தல் கமிஷன் வெளியிட்டிருந்தது

ஒடிசாவில் பைலின் புயல் தாக்குதலில் 26 லட்சம் மரங்கள் சாய்ந்தன: வனத்துறை மந்திரி தகவல்

Posted: 20 Oct 2013 12:26 PM PDT

வங்கக் கடலில் உருவான பைலின் புயல் சமீபத்தில் ஒடிசா மாநிலத்தை தாக்கியது. இதன் காரணமாக அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில்

உத்தரபிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

Posted: 20 Oct 2013 11:26 AM PDT

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் துகாலி கிராமத்தைச் சேர்ந்த சிலர் துர்கா சிலையை கரைப்பதற்காக நேற்று டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்

உத்தரகாண்ட்: திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 15 பேர் பலி

Posted: 20 Oct 2013 11:17 AM PDT

உத்தரகாண்ட் மாநிலம், நைனிடால் மாவட்டத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் இன்றிரவு பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். உத்தரபிரதேசம் மாநிலம், அம்ரோஹா பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில்

டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி வேட்பாளர் பிரச்சினையால் பாரதீய ஜனதாவில் சிக்கல்

Posted: 20 Oct 2013 10:54 AM PDT

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 4-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. டெல்லி மாநிலம் உருவான பின்னர் இப்போதுதான் அங்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. எனவே இப்போதே டெல்லியில் தேர்தல்

உ.பி. விஷச் சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

Posted: 20 Oct 2013 10:35 AM PDT

உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் மாவட்டத்தின் முபாரக்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூரா சவுகான் (வயது 65) என்பவர் விஷச்சாராயம் விற்பனை செய்ததாக தெரிகிறது. அவரிடம் இருந்து அடார்டிகா, கவுடியா, அமிலோ, சாக்கியா உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த பலரும் சாராயம்

ரஷ்யாவின் 2-வது அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா குத்தகைக்கு எடுப்பது குறித்து பிரதமர் பயணத்தில் முடிவு

Posted: 20 Oct 2013 09:35 AM PDT

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் மும்பைத் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 'ஐஎன்எஸ் சிந்துரக்ஷக்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் அதிலிருந்த 18 ஊழியர்களுடன் எதிர்பாராதவிதமாக தீவிபத்தில் முற்றிலும் அழிந்தது. ஏற்கனவே இந்தியக் கப்பற்படையில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல்கள் பழமையானவையாகக் காணப்படும்போது இந்தத் தீவிபத்து ஒரு பெரிய பின்னடைவைத் தந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™