Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் இன்று

Posted: 18 Oct 2013 11:26 PM PDT

இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் இன்று அதிகாலை 3.20 மணியில் இருந்து காலை 7.20 மணி வரை நிகழ்ந்துள்ளது. வானில் நிகழக்கூடிய மாற்றங்களில் சூரிய கிரகணம், சந்திரகிரணம் ஆகியவை அடிக்கடி நிகழக்கூடியவை ஆகும். பெரும்பாலான சமயங்களில் இந்த கிரகணங்களை எல்லா நாடுகளிலும் காண முடிகிறது. சில சமயங்களில் சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் காணலாம். சந்திரகிரகணம் 'கருநிழல் சந்திரகிரகணம்', 'புறநிழல் சந்திரகிரகணம்' என இருவகைப்படும். பெரும்பாலும் புற நிழல் சந்திரகிரகணம்தான் நிகழ்கிறது. எப்போதாவதுதான் கருநிழல் சந்திரகிரகணம் வருகிறது. […]

This posting includes an audio/video/photo media file: Download Now

எங்களுக்கு மனித உடல் வேண்டும்: மாணவர்கள்

Posted: 18 Oct 2013 10:20 PM PDT

கர்நாடக மாநிலத்தில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் மனித உடல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் பயின்று வரும் மருத்துவ கல்லூரியை சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை வகுப்பு மாணவர்கள் அனாடமி எனப்படும மனித உடல்களை வைத்து நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு போதுமான உடல்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். பொதுவாக ஒரு பயிற்சி வகுப்பில் ஒரு மனித உடலை கொண்டு 10 முதல் 12 மாணவர்கள் வரையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது […]

ரகுராம் ராஜன் கையெழுத்தோடு வெளியாகும் 10 ரூபாய் நோட்டு

Posted: 18 Oct 2013 10:17 PM PDT

மும்பை ரிசர்வ வங்கி புதிதாக 10 ரூபாய் தாள்கனை வெளியிடவுள்ளது. ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிடவுள்ள 10 ரூபாய் தாள்களில் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஜனின் கையெழுத்து இடம் பெற உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், புதிதாக வெளியிடவுள்ள 10 ரூபாய் தாள்களில் ரூபாய் சின்னத்தா முன்னும் பின்னுமாகவும், மகத்மா காந்தி வரிசை 2005 படமும், ரகுராம் ராஜனின் கையெழுத்தும் இதில் அச்சடிக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அச்சிடப்படும் வருடமும் தாளின் பின்புறத்தில் […]

நடிகர் சந்தானத்தின் மீது தமிழக அரசிடம் புகார்!

Posted: 18 Oct 2013 10:14 PM PDT

ஆல் இன் ஆல் அழகுராஜா பட ட்ரைலரில் அரசின் குட்கா எதிர்ப்பு விளம்பரப் படத்தைக் கிண்டலடிப்பது போல சந்தானம் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசிடம் இதுகுறித்து தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி புகார் செய்துள்ளது. அதில், ஆல் இல் ஆல் அழகுராஜா படத்தின் ட்ரைலரில் குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை நக்கலடித்துள்ளார். அந்த விளம்பரத்தில் தம்மடிக்க வேண்டும் என கார்த்தி கேட்க, அதற்கு சந்தானம் குட்கா விளம்பரத்தில் வரும் முகேஷின் குரலை இமிடேட் பண்ணி பேசிக் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஷ்ய எரிமலை சீற்றம்: மாற்று வழியில் செல்லும் விமானங்கள்

Posted: 18 Oct 2013 10:11 PM PDT

ரஷ்யாவின், வடக்கு பகுதியில் பெட்ரோபாவலோவஸ்க் என்னுமிடத்திலுள்ள மிக உயரமான எரிமலை சீற்றமடைந்து, சாம்பலை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. உலகின் மிகப் பெரிய, எரிமலைகளில், கிளூசெவஸ்கியும் ஒன்று. ரஷ்ய எரிமலையான கிளூசெவஸ்கி, 15,584 அடி உயரம் கொண்டது. எரிமலையில் இருந்து, ஏறக்குறைய, 10 கி.மீ., உயரத்திற்கு எழுந்த சாம்பல், சுற்றுப்புறத்தில் ஏறக்குறைய 200 கி.மீ., தூரத்திற்கு பரவியது. எரிமலை வெடிக்கத் துவங்கியதையடுத்து, மாற்று வழியில் விமானங்களை இயக்கும்படி, விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனிதர்களைப் போல் உரையாடும் மார்மோùஸட் குரங்குகள்

Posted: 18 Oct 2013 10:07 PM PDT

மார்மோùஸட் இனத்தைச் சார்ந்த குரங்குகள் மனிதர்களைப்போல உரையாடிக்கொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். “உலகிலேயே மிகச் சிறிய குரங்கினமான மார்மோùஸட்கள் 8 அங்குல நீளம் கொண்டவை. 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஒன்றுக்கொன்று உரையாடிக்கொள்கின்றன’ என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிஃப் காஸன்ஃபார் கூறியது:  ”இவற்றின் உரையாடல்கள் பறவை, தவளை போன்ற மற்ற விலங்கினங்கள் எழுப்பும் குரலோசையில் இருந்து வேறுபட்டு மனித உரையாடல்களுடன் ஒத்துள்ளன. இதன்காரணமாகவே மார்மோùஸட் குரங்குகள் சிம்பன்ஸி, மனிதக் குரங்குகள் போன்ற […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியா ரசாயன ஆயுத ஒழிப்புப் பணிகள்: ஒபாமா பாராட்டு

Posted: 18 Oct 2013 10:02 PM PDT

america and syriya

america and syriyaசிரியாவிலிருந்து ரசாயன ஆயுதங்களை வெளியேற்ற ஐ.நா. எடுத்துவரும் உறுதியான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடன் வரம்பு மசோதாவை நிறைவேற்றப்பட்டு, அரசுத் துறை முடக்கம் முடிவுக்கு வந்த பின்பு, முதல் முறையாக அந்நாட்டுக்கு வியாழக்கிழமை வருகை தந்திருந்த இத்தாலிய பிரதமர் என்ரிகோ லெட்டாவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பின்பு, செய்தியாளர்களிடையே அதிபர் ஒபாமா பேசினார். அப்போது அவர் கூறுகையில், சிரியாவின் ரசாயன ஆயுதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானம் மட்டுமல்ல, அதனைத் தொடர்ந்து அதற்காக எடுக்கப்பட்டு வரும் உறுதியான நடவடிக்கைகளும் மிகுந்த பாராட்டுக்குரியது. சிரியாவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் இத்தாலி முக்கிய பங்கு வகித்து வருகிறது என்று தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடிக்காக பாதை மாறிய தமிழக முதல்வர்

Posted: 18 Oct 2013 09:51 PM PDT

முதல்வர் ஜெயலலிதா, வழக்கமாக செல்லும் பாதையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வந்ததால் தமிழக முதல்வர் மாற்றுப்பாதையில் சென்றார். சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்க, நேற்று மாலை, குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, கடற்கரை சாலை வழியாக வந்தார். அவர் வருவதற்கு முன் தமிழக முதல்வர் பகல் 2:00 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார். அவரை கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள், கறிக்கோழி வளர்ப்பு நிறுவன […]

நாடகமாடுகிறது இந்தியா! கொந்தளிக்கும் தமிழகம்

Posted: 18 Oct 2013 08:21 PM PDT

இலங்கையில் 23-வது கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. மாணவர்களும் வியாபாரிகளும் பொதுநல அமைப்புகளும்கூட ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு பதில் சொல்லாமல் மத்திய அரசு மௌனம் காப்பதால், போராட்டங்கள் மேலும் வலுக்கின்றன. கடந்த 10-ம் தேதி முதல், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். சட்டக் கல்லூரிக்கு எதிரே பந்தலிட்டு… மணிகண்டன், க்ராந்தி பிரித்திவிராஜ், ஜான்சன், ராஜு, யுவராஜ் ஆகிய ஐந்து […]

புலி ஆதரவாளரிடம் இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை

Posted: 18 Oct 2013 07:56 PM PDT

இலங்கை போர் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீளாய்வு அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருவரிடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணிகள் தொடர்பிலான இந்த மீளாய்வு அறிக்கையும் பரிந்துரைகளும் இன்னமும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், இந்த ஆவணம் புலி ஆதரவாளரான அமெரிக்காவைச் சேர்ந்த ரசல் லீ என்பவருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை நிரந்தரக் காரியாலயம் உறுதி செய்துள்ளது. உள்ளக […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™