Tamil Star |
- பொதுநலவாய அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது
- வடகிழக்கு இணைந்த தாயகமே இறுதித்தீர்வு! இதனை யாருமே பிரித்துப் பார்க்கக்கூடாது
- பேரரசர் குவாங் பயன்படுத்திய பீங்கான் 110 கோடி ரூபாவுக்கு விற்பனை
- ரஷ்யாவில் கலவரமாக மாறிய ஓரினச் சேர்க்கையாளர் பேரணி
- ஆப்கன்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
- அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்த மலாலா
- அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்: ஒபாமா எச்சரிக்கை
- ராமர் கோவில் கட்டுவது தொடர்பில் சர்ச்சை
- பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை
- மஹிந்த ராஜபக்ச பயணிக்கும் விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயணம் செய்தது
| பொதுநலவாய அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது Posted: 12 Oct 2013 11:27 PM PDT
பொதுநலவாய நாடுகள் அமைப்பும், பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் அமைப்பும் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கத் தவறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். மாற்றத்தை ஏற்படுத்துமாறு சர்வதேச சமூகம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகவும், இது குறித்து பொதுநலவாய நாடுகள் அமைப்பும் உரிய அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்ற காரணத்தினாலேயே பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் அமர்வுகளில் பங்கேற்கபதனை நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அடிப்படை கொள்கைகள் கோட்பாடுகளை உதாசீனம் செய்யும் இலங்கைக்கு எவ்வாறு இரண்டாண்டுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பது என கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஜனநாயக கொள்கைகள் கோட்பாடுகளை மதிப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடகிழக்கு இணைந்த தாயகமே இறுதித்தீர்வு! இதனை யாருமே பிரித்துப் பார்க்கக்கூடாது Posted: 12 Oct 2013 11:23 PM PDT எதிர்வரும் நவம்பர் 27ம் திகதியை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் கனவை சுமந்தவர்களாக நாம் எமது மண்ணில் தமிழர்களாக வாழக்கூடிய தீர்வுக்காக உழைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நேற்று முன்தினம் நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், வட கிழக்கு இணைந்த தாயகம் தான் இறுதித்தீர்வு. இதையாரும் பிரித்துப் […] |
| பேரரசர் குவாங் பயன்படுத்திய பீங்கான் 110 கோடி ரூபாவுக்கு விற்பனை Posted: 12 Oct 2013 11:10 PM PDT சீன பீங்கான் கிண்ணம், ஹாங்காங்கில் உள்ள ஒரு ஏல விற்பனை நிலையத்தில் 110 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. 19ம் நூற்றாண்டின் சாங்க்வா காலத்தில் சீனாவில், கலை மற்றும் கைத்தொழில் புகழ் பெற்று இருந்தன. பீங்கானால் செய்யப்பட்ட சிறிய அழகான, இந்த ‘மிங்’ கிண்ணத்தை, அப்போதைய பேரரசர் குவாங் பயன்படுத்தினார். ஆசிய கலைப் பொருட்களின் விற்பனைக்குப் பெயர் பெற்ற, ஹாங்காங்கின், சூதேபி ஏல நிறுவனத்தில், நடந்த விற்பனையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கலை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷ்யாவில் கலவரமாக மாறிய ஓரினச் சேர்க்கையாளர் பேரணி Posted: 12 Oct 2013 09:36 PM PDT உலகின் பல்வேறு நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கி இருந்தாலும் ரஷ்யாவில் ஆனோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து வாழ்வதை அரசு தடை செய்துள்ளது. அது மட்டுமின்றி, ஓரினச் சேர்க்கை தொடர்பாக வெளிபடையாக பேசுவதோ சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதோ தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓரினச் சேர்க்கையாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சதுக்கத்தில் நேற்று பேரணி நடத்தினர். பேரணி நடந்த இடத்திற்கு வந்த சுமார் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆப்கன்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் Posted: 12 Oct 2013 09:32 PM PDT
அந்த படைகளை வாபஸ் பெறும் ஒப்பந்தத்தில் ஆப்கனுடன், இந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. நேட்டோ படைவீரர்கள் ஒட்டுமொத்தமாக ஆப்கனை விட்டுச்சென்றால், நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் தெரிவித்திருந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், ஜான் கெர்ரி ஆகியோர் இடையே 2-ஆவது நாளாக சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. முன்னேற்ற நிலை: இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், "இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்ற நிலையை அடைந்துவருகிறது. இதில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன' என்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்த மலாலா Posted: 12 Oct 2013 09:06 PM PDT
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் அமெரிக்காவின் முதற் பெண்மணி மிச்செல் ஒபாமா மற்றும் ஒபாமாவின் புதல்வியும் கலந்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெண்களுக்கான கல்வி தொடர்பில் மலாலாவின் முயற்சிகளுக்கு இதன்போது ஒபாமா நன்றிகளையும் தெரிவித்துள்ளார். அத்துடன் மிச்செல் ஒபாமா, மலாலாவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்கப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்: ஒபாமா எச்சரிக்கை Posted: 12 Oct 2013 09:04 PM PDT
இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில், "இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீர்கள். சாதாரண நிலையில் நாடு இல்லை. 17 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இது அனைவரையும் பாதிக்கும். இதற்கு குடியரசுக் கட்சியினர் தான் காரணம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் பாதிப்பு ஏற்படும், வர்த்தகம் தடைப்படும், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும், பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாது. இதனால் அரசு செலுத்த வேண்டிய தவணைத் தொகையைச் செலுத்த முடியாமல், கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் அமெரிக்கா இடம் பெறும். இதன் மூலம் நாட்டின் நம்பகத்தன்மை குலைந்துவிடும். முதலில் அமெரிக்க வரவு செலவு திட்டத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். கடன் உச்சவரம்பை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லையேல் நாட்டின் பொருளாதாரம் முடங்கும் என்றார் ஒபாமா. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ராமர் கோவில் கட்டுவது தொடர்பில் சர்ச்சை Posted: 12 Oct 2013 09:01 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில், அகிலேஷ்யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் உள்துறை செயலார் சரேஷ் சந்திர மிஸ்ரா, பொலிஸ் டி.ஜி.பி.க்கு அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவது தொடர்பாக கடிதம் ஒன்று எழுதி இருந்தார். சோம்நாத் கோவிலை கட்டியதைப்போல் அயோத்தி ராமர்ஜென்ம பூமியில் மீண்டும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக, 14-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும்படி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. சர்ச்சையை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை Posted: 12 Oct 2013 08:45 PM PDT பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் கார்கைவாடி கிராமத்தை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்டகாலமாகவே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் மற்றொரு குடும்பத்தினரை வெட்டினர். இந்த சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகள் என 3 பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக […] |
| மஹிந்த ராஜபக்ச பயணிக்கும் விமானம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயணம் செய்தது Posted: 12 Oct 2013 08:02 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட விமானமொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் விமான சேவை அதிகாரசபை தமது கடமையை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறியதாகக் குறிப்பிடப்படுகிறது. விமானம் பயணம் செய்வதற்கு பொருத்தமானதா என்பதனை உரிய முறையில் சோதிக்கப்படவில்லை. ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் சோதனையிடப்பட வேண்டியது அவசியமானதாகும். அரச தலைவர் பயணம் செய்யம் விமானம் உரிய தரத்தைக் கொண்டிருக்கின்றதா என்பது பரிசோதனை செய்வது வழமையாகும். […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






