மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அமெரிக்க ராணுவத்தின் முதல் சீக்கிய வீரருக்கு உயர் பதவி
- ஒடிசாவில் பைலின் புயலில் சிக்கி தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்பு
- மும்பை: இளம்பெண்ணை கற்பழித்ததாக கார் டிரைவர் கைது
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான உ.பி. அரசு கடிதத்தால் சர்ச்சை
- பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
- 200 கி.மீ. வேகத்தில் ஒடிசாவை தாக்கியது பைலின்: கூரை, கதவு, கண்ணாடிகள் பறந்தன - 5 பேர் பலி
- ராஜஸ்தானில் வேன்-கார் மோதல்: யாத்ரீகர்கள் 6 பேர் பலி
- ஒடிசாவை தாக்கியது பைலின் புயல்: 200 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கிறது
- அமர்சிங்கின் ‘லோக் மஞ்ச்’ விரைவில் வேறு அரசியல் கட்சியுடன் இணைகிறது: ஜெயப்பிரதா
- எந்த நேரத்திலும் தாக்கலாம் பைலின் புயல்: பேய்க்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு
- ராமர் கோவில் தொடர்பான உ.பி. அரசின் கடிதம் மதச்சார்பற்ற கூட்டமைப்பின் சதி: பா.ஜனதா கடும் தாக்கு
- பீகாரில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை
- எழுதிக் கொடுத்ததை படிக்கும் ‘அப்பாவி குழந்தை’ ராகுல்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் கிண்டல்
- பைலின் புயலால் மோசமான வானிலை: மேற்குவங்க சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்தார் பிரணாப்
- பாய்லின் புயல்: ஒடிசாவில் கனமழைக்கு ஒருவர் பலி
- தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றிலிருந்த குண்டு அகற்றம்
- பாய்லின் புயல் எச்சரிக்கை: ஹவுரா-விசாகப்பட்டினம் வழித்தடத்தில் 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
- திருவனந்தபுரம் அருகே மண் சரிந்து கட்டிட தொழிலாளி பலி
- பிரமோற்சவ 8–வது நாள் விழா: குதிரை வாகனத்தில் ஏழுமலையான் பவனி
- பாய்லின் என்றால் நீலக்கல் என்று அர்த்தம்
| அமெரிக்க ராணுவத்தின் முதல் சீக்கிய வீரருக்கு உயர் பதவி Posted: 12 Oct 2013 10:49 PM PDT டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். 2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார். |
| ஒடிசாவில் பைலின் புயலில் சிக்கி தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்பு Posted: 12 Oct 2013 10:28 PM PDT வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான பைலின் புயல் ஒடிசா மாநிலத்தில் நேற்று கரை கடந்தது. இந்த புயல் கரையை நெருங்கியபோது கடும் சூறாவளிக் காற்று வீசியது. |
| மும்பை: இளம்பெண்ணை கற்பழித்ததாக கார் டிரைவர் கைது Posted: 12 Oct 2013 09:17 PM PDT தானா மாவட்டம் நாலாசோப்ரா கிழக்கு சந்தோஷ் பவன் பகுதியை சேர்ந்தவர் ராஜு வர்மா (வயது38). கார் டிரைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை வெளியிடங்களை சுற்றிப்பார்க்க தனது காரில் அழைத்து சென்றார். |
| அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான உ.பி. அரசு கடிதத்தால் சர்ச்சை Posted: 12 Oct 2013 05:16 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில், அகிலேஷ்யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் உள்துறை செயலார் சரேஷ் சந்திர மிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி.க்கு அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவது தொடர்பாக கடிதம் ஒன்று எழுதி இருந்தார் |
| பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் Posted: 12 Oct 2013 12:33 PM PDT காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகளில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வாலாட்டி வரும் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் இந்திய நிலைகளின் மீது நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர். பூஞ்ச் எல்லைக்கோட்டு பகுதியில் உள்ள கிருஷ்ணகட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய நிலைகளின் |
| 200 கி.மீ. வேகத்தில் ஒடிசாவை தாக்கியது பைலின்: கூரை, கதவு, கண்ணாடிகள் பறந்தன - 5 பேர் பலி Posted: 12 Oct 2013 11:14 AM PDT 72 மணி நேரமாக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த பைலின் புயல் ஒடிசாவின் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரை பகுதியை சுமார் 200 கி.மீட்டர் வேகத்தில் தாக்கியது. இன்று இரவு 10 மணியளவில் இப்பகுதியை புயல் தாக்கிய போது அங்குள்ள வீட்டு கூரைகள் |
| ராஜஸ்தானில் வேன்-கார் மோதல்: யாத்ரீகர்கள் 6 பேர் பலி Posted: 12 Oct 2013 09:45 AM PDT ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டு 15 பேர் வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். ராஜிவாசர் என்னுமிடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்த அவர்களது வேன் எதிரே வந்த காருடன் பயங்கரமாக மோதியது. இதில் வேனில் வந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். |
| ஒடிசாவை தாக்கியது பைலின் புயல்: 200 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கிறது Posted: 12 Oct 2013 09:36 AM PDT வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக தீவிரமடைந்து பைலின் புயலாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. இந்த புயல் இன்று மாலை ஆந்திராவின் வடக்கு பகுதிக்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 200 முதல் 230 கி.மீ. வரை அசுர வேகத்தில் காற்று வீசும் என்றும், இதனால் 5 மாநிலங்கள் கடுமையாக |
| அமர்சிங்கின் ‘லோக் மஞ்ச்’ விரைவில் வேறு அரசியல் கட்சியுடன் இணைகிறது: ஜெயப்பிரதா Posted: 12 Oct 2013 08:36 AM PDT உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங், கட்சி தலைவர் முலாயம் சிங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். அவருடன் ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற ஜெயப்பிரதாவும் வெளியேறினார். பின்னர் ராஷ்டிரிய லோக் மஞ்ச் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் அமர்சிங். ஆனால் |
| எந்த நேரத்திலும் தாக்கலாம் பைலின் புயல்: பேய்க்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு Posted: 12 Oct 2013 08:04 AM PDT வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மிக தீவிரமடைந்து பைலின் புயலாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. இந்த புயல் இன்று மாலை ஆந்திராவின் வடக்கு பகுதிக்கும், ஒடிசா மாநிலத்திற்கும் இடையில் கரையை கடக்கும் என்றும், அப்போது மணிக்கு |
| ராமர் கோவில் தொடர்பான உ.பி. அரசின் கடிதம் மதச்சார்பற்ற கூட்டமைப்பின் சதி: பா.ஜனதா கடும் தாக்கு Posted: 12 Oct 2013 07:04 AM PDT அயோத்தியில் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவது தொடர்பாக உள்துறை செயலாளர் எழுதிய கடிதம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக அக்டோபர் 14-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், இதில் மாநில டி.ஜி.பி. மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. |
| பீகாரில் நிலத்தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தலை துண்டித்து கொலை Posted: 12 Oct 2013 05:55 AM PDT பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டம் கார்கைவாடி கிராமத்தை சேர்ந்த இரு குடும்பத்தினரிடையே நீண்டகாலமாகவே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ஒரு குடும்பத்தினர் மிகவும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் மற்றொரு குடும்பத்தினரை வெட்டினர். இந்த சண்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த |
| எழுதிக் கொடுத்ததை படிக்கும் ‘அப்பாவி குழந்தை’ ராகுல்: சமாஜ்வாடி கட்சி தலைவர் ஆசம் கான் கிண்டல் Posted: 12 Oct 2013 05:48 AM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மதக்கலவரத்தின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்தோர்களை நேற்றிரவு சந்தித்து விட்டு திரும்பிய உ.பி. அரசின் கேபினட் மந்திரிகளில் ஒருவரான ஆசம் கான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவர் கூறியதாவது:- |
| பைலின் புயலால் மோசமான வானிலை: மேற்குவங்க சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்தார் பிரணாப் Posted: 12 Oct 2013 05:09 AM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துர்கா பூஜையை கொண்டாடுவதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான மிராட்டி கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். |
| பாய்லின் புயல்: ஒடிசாவில் கனமழைக்கு ஒருவர் பலி Posted: 12 Oct 2013 03:03 AM PDT வங்கக் கடலில் உருவான பாய்லின் புயல் வலுவடைந்து ஒடிசாவை நெருங்கிவிட்டது. இந்த புயல் இன்று மாலை கரையை கடக்கும்போது 200 கி.மீ. வேகத்தில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே |
| தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றிலிருந்த குண்டு அகற்றம் Posted: 12 Oct 2013 02:50 AM PDT தீவிரவாதி போலீஸ் பக்ருதீனின் கூட்டாளி பன்னா இஸ்மாயில் ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கி இருந்தான். அங்கு தீவிரவாதிகளை பிடிக்க முயன்றபோது நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தான். இதனால் அவனால் பேசமுடியாமல் போய்விட்டது. |
| பாய்லின் புயல் எச்சரிக்கை: ஹவுரா-விசாகப்பட்டினம் வழித்தடத்தில் 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து Posted: 12 Oct 2013 02:43 AM PDT வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான அதிக சக்தி வாய்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை பெரும் புயலாக மாறி வடமேற்கு நோக்கி செல்கிறது. பாய்லின் என்று அழைக்கப்படும் இந்தப் புயல் இன்று மாலை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களுக்கு இடையில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திருவனந்தபுரம் அருகே மண் சரிந்து கட்டிட தொழிலாளி பலி Posted: 12 Oct 2013 01:41 AM PDT திருவனந்தபுரம், ஸ்ரீகாரியம் அருகில் உள்ள கோவில் பகுதியில் கட்டிட வேலை நடந்து வந்தது. இதற்காக தொழிலாளிகள் மண் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு பகுதியில் 7 தொழிலாளிகள் மண் தோண்டியபோது திடீரென மண்சரிந்து விழுந்தது. உடனே 6 தொழிலாளிகள் அங்கிருந்து ஓடி விட, பிரகாஷ் (வயது 42) என்பவர் மட்டும் மண் சரிவில் சிக்கிக் கொண்டார். இதில் அவர், பரிதாபமாக இறந்து போனார். |
| பிரமோற்சவ 8–வது நாள் விழா: குதிரை வாகனத்தில் ஏழுமலையான் பவனி Posted: 12 Oct 2013 01:36 AM PDT திருப்பதி கோவிலில் இன்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பதி கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 5–ந்தேதி தொடங்கியது. நேற்று ஏழுமலையான் சூரியபிரபை வாகனத்தில் பவனிவந்தார். இரவு 9 மணிக்கு ஏழுமலையான் சந்திரபிரபை வாகனத்தில் பவனி வந்தார். இதில் |
| பாய்லின் என்றால் நீலக்கல் என்று அர்த்தம் Posted: 12 Oct 2013 01:29 AM PDT வங்க கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் முறை கடந்த 2004–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆசிய நாடுகள் சுழற்சி முறையில் இந்த பெயர்களை சூட்டி வருகின்றன. அதன்படி இன்று ஒடிசாவை தாக்கும் புயலுக்கு பாய்லின் என்ற பெயரை தாய்லாந்து நாடு கொடுத்துள்ளது. தாய்லாந்து மொழியில் பாய்லின் என்றால் ''நீலக்கல்'' என்று அர்த்தம். நவராத்தினங்களில் ஒன்றான நீல மாணிக்கல் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |