Tamil Star |
- தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு உத்வேக இழப்பாகும்: டிராவிட் கருத்து
- புனேயில் ஒருநாள் போட்டி: இந்தியா–ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை
- ஜவ்வாதுமலையில் குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி
- அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு
- சீனாவில் 2 1/2 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு அரசு நிறுவனங்களில் பயிற்சி
- மலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான் தலிபான்கள் மிரட்டல்
- 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 20 சதவீதம் பேர் மனநோயால் அவதி
- பெட்ரோல் நிரப்பும் அவசரத்தில் புது மனைவியை மறந்த கணவர்
- மால்ட்டா அருகே படகு கவிழ்ந்து: 250 பேர் பலி?
- எதிர்கட்சி உறுப்பினர்களும் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
| தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு உத்வேக இழப்பாகும்: டிராவிட் கருத்து Posted: 11 Oct 2013 10:50 PM PDT தெண்டுல்கர் ஓய்வு பெறுவது இளம் வீரர்களுக்கு உத்வேக இழப்பாகும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் நவம்பர் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். தெண்டுல்கர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமின்றி அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. […] |
| புனேயில் ஒருநாள் போட்டி: இந்தியா–ஆஸ்திரேலியா நாளை பலப்பரீட்சை Posted: 11 Oct 2013 10:49 PM PDT பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 7 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் புனேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் போட்டியில் சிறப்பாக விளையாடியது போல் ஒருநாள் தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் டோனி தலைமையிலான இந்திய அணி உள்ளது. அணிக்கு மீண்டும் […] |
| ஜவ்வாதுமலையில் குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி Posted: 11 Oct 2013 10:49 PM PDT வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை நியுடெல்லி பகுதியை சேர்ந்தவர் முகைதீன் மகன் சர்புதீன்(வயது20). இர்பான் மகன் மியாஸ்(21), இம்தியாஸ் மகன் சுகியாஸ்(20) மற்றும் அக்பர், சதாம் இவர்களில் சுகியாஸ் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்கள் குளிக்க சென்றனர் நண்பர்களான 5 பேரும் நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அதில் தண்ணீர் இல்லாததால் அதில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டில் குட்டையாக […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு Posted: 11 Oct 2013 10:47 PM PDT சமீபத்தில் '24 அக்பர் சாலை' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2016–ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி பரவியது. இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். இருவரும் […] |
| சீனாவில் 2 1/2 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு அரசு நிறுவனங்களில் பயிற்சி Posted: 11 Oct 2013 10:46 PM PDT 2 1/2 லட்சம் பத்திரிகையாளர்களுக்கு அரசு செய்தி நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளித்து, சான்றிதழ்களும் வழங்க சீன அரசு முடிவு செய்துள்ளது. தற்போதைய நடைமுறையின்படி, பத்திரிகை துணையாசிரியர்கள், நிருபர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாம்களை உடக உரிமையாளர்களே நடத்தி வருகின்றனர். சமூகத்தின் பொறுப்புமிக்க பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள் தங்களது பொறுப்பை உயர்ந்து செயல்படும் வகையில் அவர்களுக்கு அரசு செய்தி நிறுவனங்களின் மூலம் 3 மாத கட்டாய பயிற்சி அளிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இதற்கென தனியார் அச்சு ஊடகம், […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மலாலாவின் புத்தகத்தை விற்பவர்களையும் கொல்வோம்: பாகிஸ்தான் தலிபான்கள் மிரட்டல் Posted: 11 Oct 2013 10:42 PM PDT பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது. தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார். பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ள மலாலாவின் பெயர் உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் […] |
| 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 20 சதவீதம் பேர் மனநோயால் அவதி Posted: 11 Oct 2013 10:40 PM PDT இந்தியாவில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 20 சதவீதம் பேர் மனம் சார்ந்த நோய்களில் சிக்கி அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது. உ.பி.யில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவ பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆதரவுடன் நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரிய வந்துள்ளது. உலக மனநல தினமான கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையின் முடிவின்படி, நகர் பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெட்ரோல் நிரப்பும் அவசரத்தில் புது மனைவியை மறந்த கணவர் Posted: 11 Oct 2013 10:37 PM PDT பெட்ரோல் நிரப்பும் மும்முரத்தில், புது மனைவியை மறந்து, காரை வேகமாக கிளப்பி சென்ற ஜெர்மன் நாட்டவரால் அவரது மனைவி தவிக்க நேர்ந்தது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த புது மண தம்பதியர், பிரான்ஸ் நாட்டில், தேனிலவை கொண்டாடி விட்டு, நேற்று முன்தினம், பெர்லினுக்கு திரும்பி கொண்டிருந்தனர். வழியில், பேட் ஹர்ஸ்பீல்டு என்ற இடத்தில் மணமகன், காரில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து, காரில் தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி அருகே இருந்த கழிவறைக்கு எழுந்து சென்றார். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மால்ட்டா அருகே படகு கவிழ்ந்து: 250 பேர் பலி? Posted: 11 Oct 2013 10:35 PM PDT மால்ட்டா நாட்டுக்கும் இத்தாலியின் சிசிலி தீவுக்கும் இடையே கடலில் படகு கவிழ்ந்து 250 அகதிகள் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து மால்ட்டா கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு சிசிலி அருகே கடலில் கவிழ்ந்தது. மால்டாவில் இருந்து 130 கி.மீ. தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துப் பகுதிக்கு மீட்புப் படகுகளும் ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடுமையான காற்று வீசி வருவதால் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்கட்சி உறுப்பினர்களும் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். Posted: 11 Oct 2013 10:33 PM PDT வடமாகாணசபையின் அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. நட்புணர்வை வெளிப்படுத்துமொரு நடவடிக்கையாகவே தமது பதவி பிரமாண நிகழ்வினை அவர்கள் முதல்வர் சீ.வீ.விக்கினேஸ்வரன் முன்னிலையினில் நடத்த தீர்மானித்திருப்பதாக கூறப்படுகின்றது. முன்னதாக நேற்று கொழும்பில் தமது சத்தியப்பிரமாணத்தை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அது தடுக்கப்பட்டு முதமைச்சர் முன்னிலையினில் சத்தியப்பிரமாணம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அங்கத்தவர்களது பதவி பிரமாணச்சர்ச்கை முடிவுக்கு வந்ததும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிய வருகின்றது. இதனிடையே கூட்டமைப்பின் அமைச்சர்கள் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |