மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பழனியில் இருந்து கேரளாவுக்கு 180 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: கார் பறிமுதல்–டிரைவர் கைது
- திருவனந்தபுரத்தில் பேக்கரியில் வாங்கிய கேக்கில் இறந்து கிடந்த பல்லி: உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு
- ஆந்திரா- ஒடிசாவுக்கு ஆபத்து: 240 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும்- 7 லட்சம் பேர் வெளியேற்றம்
- உடல்நிலை தேறியது: ஜெகன் மோகன் ரெட்டி இன்று ‘டிஸ்சார்ஜ்’
- அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு
- 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 20 சதவீதம் பேர் மனநோயால் அவதிப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்
- தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த கூடாது: தேர்தல் கமிஷன் அதிரடி
- ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரெயில் கட்டணங்கள் 17-ம் தேதி முதல் மேலும் உயர்வு
- மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் பாய்லின் புயல் இன்று மாலை 6 மணிக்கு ஒடிசாவை தாக்கும்: 3 லட்சம் மக்கள் வெளியேற்றம்
- உ.பி.யில் மூளையழற்சி நோயால் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்தது
- ஆந்திராவில் 60 நாள் நீடித்த போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது: 13 மாவட்டங்களிலும் பஸ்கள் ஓடும்
- ஆசாராம் பாபுவின் மகன் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு
- மோடி பிரதமரானால் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத முகாம்கள் இழுத்து மூடப்படும்: பா.ஜ.க. நம்பிக்கை
- தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி
- ஒடிசாவை நெருங்கியது பாய்லின் புயல்: மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்
- தெலுங்கானா மாநில உருவாக்கம்: அமைச்சர்கள் குழு மீண்டும் 19-ம் தேதி ஆலோசனை
- ஆந்திர பவனில் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு வெளியேற்றம்: போலீசாருடன் தொண்டர்கள் தள்ளுமுள்ளு
- தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு ரூ.1846 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
- பாராளுமன்றத் தேர்தல்: 3–வது அணி அமைக்க இடதுசாரிகள் முயற்சி- சமாஜ்வாதி கட்சியுடன் பேச்சுவார்த்தை
- டி.எஸ்.பி. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா பையா மீண்டும் மந்திரியாக நியமனம்
| பழனியில் இருந்து கேரளாவுக்கு 180 லிட்டர் எரிசாராயம் கடத்தல்: கார் பறிமுதல்–டிரைவர் கைது Posted: 11 Oct 2013 11:28 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை மீனாட்சிபுரம் அருகே நேற்று மாலை பாலக்காடு மாவட்ட மது விலக்கு உதவி கமிஷனர் சலிம்குமார் தலைமையில் உதவி போலீஸ் அதிகாரிகள் சஜிவ்குமார். கோபகுமார், சவுகத்அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். |
| திருவனந்தபுரத்தில் பேக்கரியில் வாங்கிய கேக்கில் இறந்து கிடந்த பல்லி: உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு Posted: 11 Oct 2013 11:15 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சிபு. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியிலிருந்து கேக் வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று அதனை குழந்தைகளுக்கு கொடுத்தார். குழந்தைகள் கேக்கை பிட்டபோது அதற்குள் இறந்த பல்லி ஒன்று இருந்தது. அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் கேக்கை தந்தையிடம் கொடுத்தனர். அவர் |
| ஆந்திரா- ஒடிசாவுக்கு ஆபத்து: 240 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசும்- 7 லட்சம் பேர் வெளியேற்றம் Posted: 11 Oct 2013 11:14 PM PDT வங்கக்கடலில் கடந்த வாரம் அதிக சக்தி வாய்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த வார தொடக்கத்தில் அது பெரும் புயலாக மாறியது. பயங்கர சீற்றத்தடன் கரையை நோக்கி நகர்ந்து வரும் அந்த புயலுக்கு 'பாய்லின்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாய்லின் புயலால் ஆந்திராவின் வட பகுதி மற்றும் ஒடிசா மாநிலத்தின் தென் பகுதிகளில் கடும் சேதம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து புயலை எதிர்கொள்ள இரு மாநில அரசுகளும் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்த நிலையில் பாய்லின் புயலின் தாக்கம் மிக, மிக கடுமையாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. பெரும்பாலான புயல்கள் கரையை நெருங்கும் |
| உடல்நிலை தேறியது: ஜெகன் மோகன் ரெட்டி இன்று ‘டிஸ்சார்ஜ்’ Posted: 11 Oct 2013 10:31 PM PDT ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டு அருகே தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். உண்ணாவிரதம் 5–வது நாளாக நீடித்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி உடல்நிலை பாதிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்தது. மேலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் ஜெகன்மோகன் ரெட்டி |
| அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை: சோனியாகாந்தி அறிவிப்பு Posted: 11 Oct 2013 09:29 PM PDT சமீபத்தில் '24 அக்பர் சாலை' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 2016–ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்துவிட்டதாகவும் செய்தி பரவியது. இந்த தகவல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்திக்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார். இருவரும் 40 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் ராம்விலாஸ் பஸ்வான் நிருர்களிடம் கூறியதாவது:– |
| 60 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 20 சதவீதம் பேர் மனநோயால் அவதிப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் Posted: 11 Oct 2013 05:12 PM PDT இந்தியாவில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 20 சதவிதம் பேர் மனம் சார்ந்த நோய்களில் சிக்கி அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது. உ.பி.யில் உள்ள சத்ரபதி சாஹீஜி மருத்துவ பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இந்திய மருத்துவ |
| தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த கூடாது: தேர்தல் கமிஷன் அதிரடி Posted: 11 Oct 2013 04:05 PM PDT பதவிக்காலம் முடிவடைய உள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, டெல்லியில் டிசம்பர் 4-ந்தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 25-ந்தேதியும், ராஜஸ்தானில் டிசம்பர் 1-ந்தேதியும், மிசோரமில் டிச.4-ந்தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். |
| ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரெயில் கட்டணங்கள் 17-ம் தேதி முதல் மேலும் உயர்வு Posted: 11 Oct 2013 03:39 PM PDT பட்ஜெட் ஏற்பாடு டீசல் விலை உயர்வு, மின்கட்டணம் அதிகரிப்பு, இதர செலவின பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ரெயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தாக்கலான ரெயில்வே பட்ஜெட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. |
| Posted: 11 Oct 2013 03:08 PM PDT வங்க கடலில் உருவான 'பாய்லின்' புயல் நேற்று மாலை 6 மணி அளவில் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயல் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்கிறது |
| உ.பி.யில் மூளையழற்சி நோயால் பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்தது Posted: 11 Oct 2013 02:07 PM PDT உத்திரபிரதேச மாநிலத்தில் மூளையழற்சி (என்சபேலிடிஸ்) நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு உத்தரபிரதேசத்தில் வாழும் மக்களை மூளையழற்சி நோய் தாக்கி |
| Posted: 11 Oct 2013 01:19 PM PDT தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றுபட்ட ஆந்திரா எப்போதும் போல் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தயும் நீமாந்திரா பகுதியில் உள்ள ஆந்திர போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 60 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். |
| ஆசாராம் பாபுவின் மகன் கோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு Posted: 11 Oct 2013 12:44 PM PDT ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் நடத்திவரும் ஆசாராம் பாபு (72) மீது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரப்பிரதேச மாணவி பாலியல் புகார் கூறினார். இதையடுத்து ஆசாராம் பாபு கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் அந்த இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார். |
| மோடி பிரதமரானால் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத முகாம்கள் இழுத்து மூடப்படும்: பா.ஜ.க. நம்பிக்கை Posted: 11 Oct 2013 11:51 AM PDT இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றால் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத முகாம்களை இழுத்து மூடப்படும் சூழ்நிலை ஏற்படும் என பா.ஜ.க. துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி |
| தாஜ்மகாலில் போட்டோ எடுத்த விவகாரம்: மன்னிப்பு கேட்டார் உலக அழகி Posted: 11 Oct 2013 06:41 AM PDT உலக அழகி ஒலிவியா கல்போ 10 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை செருப்பு அணிந்தபடி சென்று பாரம்பரிய நினைவுச் சின்னமான தாஜ்மகாலை சுற்றிப் பார்த்த ஒலிவியா, அங்குள்ள 'டயானசீட்' என்ற இடத்தில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். |
| ஒடிசாவை நெருங்கியது பாய்லின் புயல்: மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் Posted: 11 Oct 2013 05:59 AM PDT வங்கக் கடலில் அந்தமான் அருகில் உருவான பாய்லின் புயல், மிகவும் வலுவடைந்து வடமேற்கு நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. ஒடிசாவின் கோபால்பூரில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் நாளை மாலை ஆந்திராவுக்கும் ஒடிசாவுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சராசரியாக 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. |
| தெலுங்கானா மாநில உருவாக்கம்: அமைச்சர்கள் குழு மீண்டும் 19-ம் தேதி ஆலோசனை Posted: 11 Oct 2013 04:03 AM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை உருவாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் கடலோர பகுதிகள் மற்றும் ராயலசீமா பகுதியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவை பிரிப்பதை |
| ஆந்திர பவனில் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபு வெளியேற்றம்: போலீசாருடன் தொண்டர்கள் தள்ளுமுள்ளு Posted: 11 Oct 2013 03:29 AM PDT தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆந்திராவின் சீமாந்திரா பகுதியில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். பல்வேறு தலைவர்கள் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். |
| தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு ரூ.1846 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு Posted: 11 Oct 2013 02:53 AM PDT தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்காக தமிழகத்திற்கு இந்த ஆண்டு ரூ.1846 கோடி கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்றும், ஏற்கனவே இந்த ஆண்டு ரூ.2844 |
| பாராளுமன்றத் தேர்தல்: 3–வது அணி அமைக்க இடதுசாரிகள் முயற்சி- சமாஜ்வாதி கட்சியுடன் பேச்சுவார்த்தை Posted: 11 Oct 2013 01:24 AM PDT பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2014) தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளுக்கு மாற்றாக 3–வது அணி அமைக்க சில மாநில கட்சிகள் முயற்சிகள் செய்தன. ஆனால் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் சமீபத்தில் பேட்டியளிக்கும் போது 2014–ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு 3–வது அணி அமைக்கமாட்டோம். தனி தனியாக நின்று வெற்றி பெற்ற பிறகு 3–வது அணியை அமைப்போம் |
| டி.எஸ்.பி. கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜா பையா மீண்டும் மந்திரியாக நியமனம் Posted: 11 Oct 2013 01:12 AM PDT உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய எம்.எல்.ஏ. ரகுராஜ் பிரதாப் சிங் என்ற ராஜா பையா. கடந்த தேர்தலில் இவர் சுயேச்சையாக வெற்றி பெற்றார். அகிலேஷ் யாதவ் முதல்– மந்திரியாக பதவி ஏற்றதும் ராஜா பையாவை மந்திரியாக நியமனம் செய்தார். அவருக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை துறை ஒதுக்கப்பட்டது. இவர் மீது 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை மந்திரியாக நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பிரதாப்கர் மாவட்டம் பாலிபூர் கிராமத்தில் நடந்த மோதலின்போது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |