Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' வாங்க குறைந்த வட்டி: கடன் தர வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் உத்தரவு

Posted:

புதுடில்லி: நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், 'டிவி, பிரிஜ், ஏ.சி., டூவீலர்' போன்ற வற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடத் தயாராகும் மக்கள், புதிய பொருட்களை வாங்க, இதன் மூலம் வழி ஏற்பட்டு உள்ளது. நுகர்வோர் சாதனங் களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, குறிப்பிட்ட தொகையை பங்கு மூலதனமாக வழங்கும்.கூடுதல் ...

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: சிரஞ்சீவி உட்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா

Posted:

புதுடில்லி: தனி தெலுங்கானா அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. ஆந்திராவை சேர்ந்த, சிரஞ்சீவி உட்பட மத்திய அமைச்சர்கள் 4 பேர், பதவியை ராஜினாமா செய்தனர். பதவி விலகியவர்கள் விபரம்:

சிரஞ்சீவி: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1955 ஆக., 22ல் பிறந்த இவர், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழ், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார். 2008ல், ...

முடியும் நிலையில் அரசு பஸ்களில் தீபாவளி முன்பதிவு: சிறப்பு பஸ்கள் அறிவிப்பு எப்போது?

Posted:

தீபாவளி பண்டிகைக்கு, தொலை தூரம் செல்லும் அரசு பஸ்களில், முன்பதிவு விறுவிறுப்பாகியுள்ளது, அக்., 31ம் தேதிக்கான முன்பதிவு முடிந்துள்ள நிலையில், மற்ற நாட்களுக்கான முன்பதிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.நவ., 2ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் வசிப்போர், சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம்.தொலைதூர பஸ்கள்: பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தொலைதூரம் செல்லும் பஸ்களில், முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன் - லைன் மூலமாகவும், முக்கிய பஸ் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களிலும் ...

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை

Posted:

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில், நான்கு நாட்களுக்கு முன், குற்றவாளி என, அறிவிக்கப்பட்ட, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர், லாலு பிரசாத் யாதவிற்கு, 65, நேற்று, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அடுத்த 11 ஆண்டுகளுக்கு, அவரால், தேர்தலில் போட்டியிட முடியாது. மேலும், பீகார் முன்னாள் முதல்வர், ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு, 76, நான்காண்டு சிறை தண்டனை விதித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கிய பீகாரில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, 1997ல் இருந்து, 2005 வரை ஆட்சி செய்தது. அப்போது, சட்டம் - ...

அவசர சட்டம் வாபஸ்: காங்., - பா.ஜ., தம்பட்டம்

Posted:

அவசர சட்டத்தை வாபஸ் பெற வைத்தது, தாங்கள் தான், என, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன.கிரிமினல் குற்றங்களில், சிறை தண்டனை பெறும் எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, பதவி நீக்கம் செய்யும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை, வலுவிழக்க செய்ய, மத்திய அரசு, அவசர சட்டம் கொண்டு வர முயற்சித்தது. ஆனால், கடைசி நேர திருப்பம் ஏற்பட்டு, அந்த அவசர சட்டத்தை, திரும்பப் பெறுவதாக, மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, 'அவசர சட் டத்தை, வாபஸ் பெற வைத்தது தாங்கள் தான்' என, காங்கிரசும், பா.ஜ.,வும், தெரிவித்து உள்ளன.இதுகுறித்து நேற்று, காங் கிரஸ் ...

அமெரிக்க பொருளாதார நெருக்கடி எதிரொலி: தேசிய பாதுகாப்பு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

Posted:

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆணைய ஊழியர்கள், 70 சதவீதம் பேருக்கு கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பார்லிமென்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க பார்லிமென்டில், ஒபாமா, அடுத்த ஆண்டுக்கான, பட்ஜெட் தாக்கல் செய்த போது, எதிர்க் கட்சியினரின் ஆதரவு இல்லாததால், அந்த பட்ஜெட்டை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அரசுக்கு ...

"அம்மாவே கண்டிச்சாங்க!': ராகுல் வருத்தம்

Posted:

ஆமதாபாத்: ""மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பான விவகாரத்தில், என் மனதில் தோன்றிய கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தேன்; அதற்காக அம்மா கண்டித்தார்கள். அதில் கடினமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தற்காக வருந்துகிறேன்,'' என, காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் கூறினார்.தண்டனை பெறும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது. காங்., துணைத் தலைவர் ராகுல், ""அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இது ...

தமிழகத்தில் "மாற்று அணி' உறுதி: தமிழருவி மணியன் பேட்டி

Posted:

மதுரை: ""லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் ம.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணி அமைவது, நூறு சதவீதம் உறுதி,'' என, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகவே, தேசிய அரசியலில், காங்., கூட்டணி செயல்படுகிறது என்பதை, அவசரச் சட்டம் தொடர்பாக அக்கட்சி எடுத்த முடிவுகள் காட்டுகின்றன. சோனியா குடும்பத்தின் பிடியில் காங்கிரஸ் உள்ளது. "ஆட்சி தலைமை மீது கட்சித் தலைமை அதிகாரம் செலுத்தக் கூடாது' என்ற நேருவின் எண்ணத்தை, ராகுல் தற்போது தகர்த்துள்ளார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ...

இன்ஜினியரிங் படிப்பு, ஆந்திராவிலும் படுத்தது: கல்லூரிகளை விற்பதில் பலரும் ஆர்வம்

Posted:

தமிழகத்தைப்போல், ஆந்திராவிலும், பொறியியல் கல்வி படுத்துவிட்டது. மாணவர்கள் மத்தியில், பொறியியல் படிப்பிற்கு வரவேற்பு இல்லாததால், "கல்லூரிகள் விற்பனைக்கு' என, ஆங்காங்கே, போர்டு வைத்து உள்ளனர்."இந்தியா, ஆண்டுக்கு, 15 லட்சம் பொறியாளர்களை தயார் செய்து, வெளியே அனுப்புகிறது. ஆனால், இவர்களில், 1.5 லட்சம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன' என, கொடாக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், 550 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 2 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 1.25 லட்சம் இடங்கள் மட்டுமே, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™