Tamil News | Online Tamil News |
- தீபாவளி சிறப்பு ரயில்களும் 10 நிமிடங்களில் 'ஹவுஸ்புல்!': 'டிக்கெட்' கிடைக்காதவர்களுக்கு திண்டாட்டம் தான்
- உற்பத்தியை எட்டவில்லை; ஊழியர்களை நியமிக்கவில்லை: அடுத்துவொரு 'அம்மா' குடிநீர் உற்பத்தி நிலையமா?
- அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு அதிகாரிகள் பலிகடா
- தமிழகத்தின் முதல் தமிழ் பிராமி சமணர் பாறை: கிரானைட் கும்பலால் வெடிவைத்து தகர்ப்பு ?
- சி.பி.ஐ., விசாரணைக்கு தயார்: பிரதமர் மன்மோகன் அறிவிப்பு
- தமிழக அமைச்சர்களுக்கு அல் - குவைதா மிரட்டல்: தனியார் பள்ளியை தகர்க்க போவதாகவும் கடிதம்
- நேற்று - 'நானும் கொல்லப்படலாம்!' இன்று - 'என்னை கொசு கடித்தது!'
- மூன்றாவது அணியை வரவேற்கிறேன்: கருணாநிதி
- கட்டாய வசூல் நெருக்கடியால் தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் எஸ்கேப்
| Posted: சென்னை: தீபாவளி சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நேற்று 10 நிமிடங்களில் முடிந்ததால், இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள், ஏமாற்றத்துடன் திரும்பினர். டிக்கெட் கிடைக்காதவர்கள், தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்வது திண்டாட்டமாகவே இருக்கும் என, தெரிகிறது.தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், இம்மாதம், 30ம் தேதி முதல், நவ., 4ம் தேதி வரை, 'ஹவுஸ்புல்' ஆனது. இதனால், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என, தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சென்னை ... |
| உற்பத்தியை எட்டவில்லை; ஊழியர்களை நியமிக்கவில்லை: அடுத்துவொரு 'அம்மா' குடிநீர் உற்பத்தி நிலையமா? Posted: போக்குவரத்து கழகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், 'அம்மா' குடிநீர் திட்டப் பணிக்காக, கழக ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். கூடுதலாக ஒரு உற்பத்தி நிலையம் அமைக்கும் முன், கழகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய திட்டமிட வேண்டியது அவசியம்.கடந்த செப்., 15ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில், சூஅம்மா குடிநீர்' உற்பத்தி நிலையம் துவக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு, மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்ய திட்டமிட்ட போதிலும், எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.தொழில் நுட்ப கோளாறு: உற்பத்தி ... |
| அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு அதிகாரிகள் பலிகடா Posted: அரசியல்வாதிகள், அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தும் நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்படுவதும், அவர்கள் மீது, 'துறைரீதியான நடவடிக்கை' என்ற பெயரில், குற்ற வழக்குகள் தொடர்வதும் அதிகரித்து வருகிறது. 'இந்தப் போக்கு, நாட்டின் உயரிய, நிர்வாக முறையை சீர்குலைத்து விடும்' என, பாதிக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசில், நேர்மையாக பணியாற்றிய, துர்கா சக்தி நாக்பால் என்ற, இளம், பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, மணல் மாபியாக்களுக்கு எதிராக மேற்கொண்ட நியாயமான நடவடிக்கைகளுக்காக, ... |
| தமிழகத்தின் முதல் தமிழ் பிராமி சமணர் பாறை: கிரானைட் கும்பலால் வெடிவைத்து தகர்ப்பு ? Posted: திருநெல்வேலி: நெல்லை அருகே, 2000 ஆண்டுகள் பழமையான, 'சமணர் படுகை' கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 'கிரானைட்' கற்களுக்காக, பாறையை வெடிவைத்து தகர்த்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி அருகே உள்ளது மருகால்தலை. இங்குள்ள பாறைக் குன்று ஒன்றில், சமணர்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பே தங்கியதன் அடையாளமாக, 'சமணர் படுகை' கள் உள்ளன. இதை, 1906ம் ஆண்டில், எல்.ஏ.கேமைட் என்ற ஆங்கிலேய தொல்லியலார் கண்டறிந்தார். தமிழகத்தில் முதன்முறையாக, 'தமிழ் பிராமி' இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது.காவலாளி கிடையாது: இங்குள்ள பாறை, யானையின் உடல்பகுதி போல வளைந்திருக்கும். ... |
| சி.பி.ஐ., விசாரணைக்கு தயார்: பிரதமர் மன்மோகன் அறிவிப்பு Posted: புதுடில்லி: ''சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக உள்ளேன்,'' என, பிரதமர், மன்மோகன் சிங் கூறினார். ரஷ்யா, சீனா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று, நேற்று நாடு திரும்பிய, பிரதமர், மன்மோகன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், தானும் கொல்லப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார். அவர் அஞ்சத் தேவையில்லை. அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் அரசு வழங்கும். எனினும், அரசியலில், மனநிலை சரியில்லாத நபர்கள் அதிகரித்து விட்டது குறித்து வருத்தம் அடைகிறேன். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான, சி.பி.ஐ., விசாரணைக்கு தயாராக உள்ளேன். இந்த நாட்டின் சட்டத்தை ... |
| தமிழக அமைச்சர்களுக்கு அல் - குவைதா மிரட்டல்: தனியார் பள்ளியை தகர்க்க போவதாகவும் கடிதம் Posted: நாமக்கல்: தமிழக அமைச்சர்கள் மூவருக்கு அல் - குவைதா பயங்கரவாதிகள், வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.நாமக்கல் அடுத்த, காவெட்டிப்பட்டி தனியார் மேல்நிலைப் பள்ளி முதல்வருக்கு, கடந்த, 22ம் தேதி, மர்ம கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:வெடிகுண்டு வைப்போம்: தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில், அரசு, இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், உங்கள் பள்ளியை, வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். அப்போது, நாங்கள் யார் என்பது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிய வரும். ஏற்காடு இடைத்தேர்தலில், அவர் எந்த வேட்பாளரை ... |
| நேற்று - 'நானும் கொல்லப்படலாம்!' இன்று - 'என்னை கொசு கடித்தது!' Posted: சாகர்: ''ம.பி.,யை ஆளும், பா.ஜ., அரசு, சாலை வசதிகளை செய்துள்ளோம்; விமான நிலையங்கள அமைத்துள்ளோம் என, பிரசாரம் செய்கிறது. இவைகளா, ஏழைகளின் வயிற்றை நிரப்பும்? நான் இதற்கு முன், பந்தல்கண்ட் வந்திருந்த போது, கொசு கடித்தது; விவசாயி ஒருவர் கொடுத்த தண்ணீரை குடித்த போது, வயிற்றை புரட்டி எடுத்தது,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் கூறினார்.சட்டசபை தேர்தல்: பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி., மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, அம்மாநிலத்தில், இரண்டாவது நாளாக, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் தேர்தல் பிரசாரம் ... |
| மூன்றாவது அணியை வரவேற்கிறேன்: கருணாநிதி Posted: சென்னை: நாட்டின் நன்மைக்காக, எந்த அணி அமைந்தாலும், அந்த அணியை நான் வரவேற்கிறேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்,சென்னையில் அவரது பேட்டி: "இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது' என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்கிறேன். ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்ல இன்னும் முடிவெடுக்கவில்லை. அரசு போக்குவரத்து பஸ்களில் எல்லாம், இரட்டை இலை சின்னம் பெரிதாக பொறிக்கப்பட்டது பெரும் தவறு. இம்மாதம், 30ம் தேதி டில்லியில் மூன்றாவது அணி கூடுகின்ற கூட்டத்தில், தி.மு.க., கலந்து கொள்ள ... |
| கட்டாய வசூல் நெருக்கடியால் தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள் எஸ்கேப் Posted: சென்னை: லோக்சபா தேர்தல் நிதி வசூலிப்பில் மாநில நிர்வாகிகள், நெருக்கடி கொடுப்பதால், தே.மு.தி.க., மாவட்ட செயலர்கள், செய்வதறியாது திணறி வருகின்றனர்.தே.மு.தி.க.,விற்கு கட்சி ரீதியாக, 59 மாவட்ட செயலர்கள் உள்ளனர். சென்னையில் நடந்த தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தில், "மாவட்டங்களில் லோக்சபா தேர்தல் நிதியாக தலா, 1.50 கோடி ரூபாய் வசூல் செய்து தர வேண்டும்' என, கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்தது. மாதத்திற்கு, 50 லட்சம் ரூபாய் வீதம், மூன்று மாதங்களில், இந்த நிதியை வசூலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. வசூல் செய்வதில், மாவட்ட நிர்வாகிகள் மோசடி செய்து ஏமாற்றாமல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 25,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |