Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரியானா அரசு பழிவாங்குகிறது: ஐ.ஏ.எஸ்., அதிகாரி புகார் கடிதம்

Posted:

சண்டிகார் : காங்., தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின், நில மோசடி விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததால், தான் பழிவாங்கப்படுவதாக, அரியானா மாநில தலைமை செயலருக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா கடிதம் எழுதியுள்ளார்.அரியானாவில், பூபிந்தர் ஹூடா தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் உள்ளது. இதை பயன்படுத்தி, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் நில ஒப்பந்தம் செய்து கொண்டார். போலி ஆவணங்கள் மூலம், நிலத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.இதை, மாநில சீர்திருத்தத் துறை இயக்குனராக ...

சென்னையில் மினி பஸ்: இன்று துவக்குகிறார் ஜெ.,

Posted:

சென்னை மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான, மினி பஸ்களின் இயக்கத்தை, முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்.சென்னை, நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், முதல் கட்டமாக, 50 மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், எட்டு போக்குவரத்து கழகங்களுக்கு, 610 புதிய பஸ்களும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதிய பணப்பயன்களுக்காக, 257 கோடி ரூபாய் நிதியும் வழங்கப்படுகிறது. பஸ்சிலிருந்து ரயிலுக்கு: சென்னையில், மாநகர பஸ்கள் செல்ல முடியாத பகுதிகளில் வசிப்போருக்காக, 2012 - 13 பட்ஜெட்டில், '100 மினி பஸ்கள் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. பஸ் ...

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு, ஜெகதீஷ் சர்மா எம்.பி., பதவி பறிப்பு

Posted:

ஊழல் வழக்கில், சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத், மற்றும் ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரும், எம்.பி., பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான, முறையான உத்தரவை, சபாநாயகர் மீராகுமார் பிறப்பித்தார்.இதையடுத்து, லாலுபிரசாத், இனி, 11 ஆண்டுகளுக்கு, தேர்தலில் போட்டியிட முடியாத நிலை, உறுதியாகியுள்ளது.ஊழல் வழக்கில், இரண்டாண்டுக்கு மேல், சிறை தண்டனை பெறும் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்கும் தீர்ப்பை, கடந்த ஜூலை மாதம், சுப்ரீம்கோர்ட் பிறப்பித்தது. அவசர சட்டம் வாபஸ்:அதை வலுவிழக்கச் செய்யும் விதமாக, மத்திய அரசு ஒரு ...

நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல்

Posted:

புதுடில்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையின், தற்போதைய நிலவரம் குறித்து, சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்தது.நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில், நடந்த முறைகேட்டால், மத்திய அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.வழக்கு பதிவு:இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த முறைகேடு தொடர்பாக, 13 வழக்குகளை பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை மேற்கொண்டது. கடைசியாக, தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் ...

இலங்கையை புறக்கணிக்க வேண்டும்: தி.மு.க., பிரஷர்; காங்., 'அப்செட்!'

Posted:

இலங்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு, தி.மு.க., தொடர்ந்து கொடுத்து வரும் அழுத்தம் காரணமாக, காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்துள்ளது.அண்டை நாடான இலங்கையை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற வற்புறுத்தலுக்கு, மத்திய அரசு அடிபணியுமானால், எதிர்காலத்தில், சீனா, பாகிஸ்தானுடன், இலங்கை கைகோர்க்கும் நிலை வந்து விடும் என்பதே, காங்கிரசின் அதிருப்திக்கு காரணம்.தவிர்க்கும் முடிவு:'அடுத்த மாதம், இலங்கையில் நடக்கும், காமன்வெல்த் நாடுகள் மாநாட்டை, இந்தியா புறக்கணிக்க வேண்டும்; இந்தியாவின் சார்பில் யாரும், அதில் கலந்து கொள்ளக்கூடாது. அது குறித்து, ...

ஒரு கிலோ வெங்காயம் விலை 100 ரூபாயை தொட்டது: பதுக்கல், ஏற்றுமதியை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்

Posted:

புதுடில்லி:ஒரு கிலோ வெங்காயத்தின் விலை, பாட்னா உள்ளிட்ட, நாட்டின் பல பகுதிகளில், 100 ரூபாயை தொட்டு விட்டது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வெங்காயத்தின் விலை, மேலும் அதிகரிக்குமோ என, மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதையடுத்து, வெங்காயத்தை பதுக்குவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் முடிவு செய்துள்ளது.வெங்காயத்தின் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கிலோ, 30லிருந்து, 40 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, வெங்காயத்தின் விலை எகிறத் துவங்கியது. ஒரு கிலோ ...

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க தே.மு.தி.க.,-- எம்.எல்.ஏ.,க்கள் தயக்கம்

Posted:

ஆறு மாதம் "சஸ்பெண்ட்' நடவடிக்கை ரத்தான பிறகும், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், சிலர், சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு பதிலாக, கட்சி அலுவல் தொடர்பான சுற்றுபயணம் செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது.சட்டசபையில், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கும் இடையே, கூட்டணி தொடர்பாக நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் காரசாரமாக மோதிக் கொண்டனர். சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி, 10 நாட்கள் விஜயகாந்த், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். தன் மீதான ...

லோக்சபா தேர்தலில் யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும்? அ.தி.மு.க., சர்வே

Posted:

வரும் லோக்சபா தேர்தல் குறித்து, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க., தலைமை சர்வே நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலில், எந்த வேட்பாளர் போட்டியிட்டால், வெற்றி பெறலாம் என்பது உட்பட, பல விஷயங்கள், சர்வேயில் கண்டறியப்படுகின்றன. லோக்சபா தேர்தல், இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், தர்மபுரி, கிருஷ்ணகிரி என, இரு லோக்சபா தொகுதிகள் உள்ளன. அவை இரண்டும், தற்போது, தி.மு.க., வசம் உள்ளன. வரும், லோக்சபா தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளையும், தி.மு.க.,விடம் இருந்து பறிக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் தீவிரமாக உள்ளனர். "இரு தொகுதியிலும் ...

கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி துவங்கியது: தென்மாநில தொகுப்பில் 160 மெகா வாட் சேர்ப்பு

Posted:

திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதலாவது அணு உலையில், மின் உற்பத்தி வெற்றிகரமாக துவங்கி உள்ளது. நேற்று காலை, 160 மெகாவாட் மின்சாரம் திருநெல்வேலி மத்திய தொகுப்பில் சேர்க்கப்பட்டது. அந்த மின்சாரம், தென் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், 17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணுஉலையில், "கிரிட்டிகாலிட்டி' எனப்படும், மின் உற்பத்திக்கான நிலையை அடைவதற்கான பணிகள், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™