Tamil News | Online Tamil News |
- மோடியின் கான்பூர் கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு
- பதவியை யார் பறிப்பது என்பதில் குழப்பம்: எம்.பி.,யாக நீடிக்கும் லாலு, ரஷீத் மசூத்
- தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் செயல்பாட்டிற்கு சபாஷ்
- தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க ஆயுத கப்பல்: மாலுமிகள் விரைவில் கைது
- அபுபக்கர் சித்திக்கை பிடிக்க, "ஆக்டோபஸ்' வருகை : பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தேடுதல்
- காங்., ஆதரவு பெற காய் நகர்த்தும் தே.மு.தி.க.,: தொடர் குடைச்சலால் தி.மு.க., தலைமை கடுப்பு
- 'ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் முறைகேடுகள் நடந்தது உண்மை'
- தயாளுவிடம் விசாரணை தாமதம்: துரிதப்படுத்தும்படி நீதிபதி உத்தரவு
- "பிரீ கேஜி' விஜயதசமி சேர்க்கை படு மும்முரம் : ஆறு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல்
- பயங்கரவாதிகள் வேட்டைக்கு உதவிய 245 போலீசாருக்கு பரிசு...:பக்ருதீனை பிடித்த இன்ஸ்பெக்டருக்கு 5 லட்சம் ரூபாய்
- காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பா? கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் கடிதம்
| மோடியின் கான்பூர் கூட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு Posted: கான்பூர்:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, உ.பி.,யில், பங்கேற்கும் பிரசார கூட்டத்துக்கு வரும்படி, காங்கிரசைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட, அனைத்து எதிர்க்கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.தீவிர பிரசாரம்:பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்களுக்கும் சென்று, லோக்சபா தேர்தலுக்காக, தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் கூட்டத்துக்கு, ஏராளமான மக்கள் வருகின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் வருகின்றனர்.இது, பா.ஜ.,வினரிடையே, குஷியை ... |
| பதவியை யார் பறிப்பது என்பதில் குழப்பம்: எம்.பி.,யாக நீடிக்கும் லாலு, ரஷீத் மசூத் Posted: சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், அதை தவிர்க்க பிறப்பிக்கப்பட்ட, அவசரசட்டம் வாபஸ் பெறப்பட்ட பிறகும் கூட, சிறை தண்டனை பெற்ற, இரண்டு எம்.பி.,க்களின் பதவி, இன்னும் பறிக்கப்படவில்லை. இவர்களது பதவி பறிப்பை, எப்படி அமல்படுத்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.சிறை தண்டனை: ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், லோக்சபா, எம்.பி.,யுமான லாலு பிரசாத்துக்கு, அக்டோபர், 3ல், ஐந்து ஆண்டு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. காங்கிரசைச் சேர்ந்த ராஜ்யசபா, எம்.பி., ரஷீத் மசூதுக்கும், மற்றொரு ஊழல் வழக்கில், செப்டம்பர் 19ல், சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இவருமே, சிறையில் ... |
| தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் செயல்பாட்டிற்கு சபாஷ் Posted: புவனேஸ்வர்:'பைலின்' புயல் தாக்கத்தால் ஏற்பட இருந்த பயங்கர உயிர் இழப்புகளை குறைத்ததற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் செயல்பாடு தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது. புயலின் வீரியத்தை முன்கூட்டியே கணித்து, அதற்கு ஏற்ப, அந்த குழு செயல்பட்டதால், ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில், லட்சக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப் பட்டன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே இதுவரை சாத்தியமாக இருந்த இத்தகய முயற்சி, நம் நாட்டில், பேரிடர் மேலாண்மை குழுவின் சீரான செயல்பாட்டால் முதல் முறை சாத்தியமாகி உள்ளது.25 பேர்: கடந்த 12ம் தேதி, ஒடிசா மாநிலம் ... |
| தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க ஆயுத கப்பல்: மாலுமிகள் விரைவில் கைது Posted: தூத்துக்குடி:தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் பிடிபட்ட, வெளிநாட்டு கப்பல் அதிகாரிகள் மீது, கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதேநேரத்தில், அமெரிக்க கப்பலின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை தொடர்பாக, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.கடந்த, 12ம் தேதி, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, 18 கடல் மைல் தொலைவில், 'சீமேன் கார்டு' என்ற வெளிநாட்டு கப்பல் நின்று கொண்டுஇருந்தது. கப்பலை, கடலோர காவல் படையினர் சுற்றி வளைத்தனர்.சியாரா ... |
| அபுபக்கர் சித்திக்கை பிடிக்க, "ஆக்டோபஸ்' வருகை : பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தேடுதல் Posted: அபுபக்கர் சித்திக்கை பிடிக்க, "ஆக்டோபஸ்' வருகை : பேர்ணாம்பட்டு வனப்பகுதியில் தேடுதல்வேலூர்: பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை பிடிக்க, ஆந்திராவிலிருந்து, "ஆக்டோபஸ்' கமாண்டோ படையினர், பேர்ணாம்பட்டு வனப்பகுதிக்கு வருகின்றனர்.இந்து தலைவர்கள் கொலை வழக்கில் கைதான, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார், வேலூரில் ரகசிய இடத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு காயம் அடைந்த, "பன்னா' இஸ்மாயில், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய மற்றொரு நபரான, அபுபக்கர் சித்திக்கை, போலீசாரால் ... |
| காங்., ஆதரவு பெற காய் நகர்த்தும் தே.மு.தி.க.,: தொடர் குடைச்சலால் தி.மு.க., தலைமை கடுப்பு Posted: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ரகசிய முடிவெடுத்துள்ள தே.மு.தி.க., தலைமை, காங்., ஆதரவை பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் இருந்து, தொடர் குடைச்சல் தருவதால், அக்கட்சி மீது, தி.மு.க., தலைமை கோபம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், ஆட்சியை மட்டுமின்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த, தி.மு.க.,விற்கு, விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தல், முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தேர்தலில், பலமான கூட்டணி அமைத்து வெற்றி பெற வேண்டும் என, அக்கட்சி தலைமை, வியூகம் வகுத்து வருகிறது. ஏற்காடு இடைத்தேர்தலை புறக்கணிக்க ... |
| 'ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் முறைகேடுகள் நடந்தது உண்மை' Posted: திருப்பதி: "திருப்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை தான்," என, தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பாபி ராஜு கூறியுள்ளார்.விசாரணை: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் நிறைவடைந்த பிறகு, நேற்று பாபி ராஜு கூறியதாவது: நடந்த முடிந்த பிரம்மோற்சவத்தில், தேவஸ்தானம் மற்றும் விஜிலென்ஸ் ஊழியர்கள், போலீசார், மற்ற துறைகள், தற்காலிக ஊழியர்கள், நல்ல முறையில் பணியாற்றினர். நாட்டின் பல பகுதிகளிலும், பிற நாடுகளிலும் நடந்த, ஏழுமலையான் கல்யாண உற்சவத்தில், முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான்; இதுகுறித்து விசாரணை ... |
| தயாளுவிடம் விசாரணை தாமதம்: துரிதப்படுத்தும்படி நீதிபதி உத்தரவு Posted: புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவிடம், விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சி.பி.ஐ.,க்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், விசாரணை நடந்து வருகிறது. இதில், சி.பி.ஐ., தரப்பு சாட்சியாக, தி.மு.க., கருணாநிதி மனைவி தயாளு, நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டது. "தயாளுவின் உடல்நிலையை காரணம் காட்டி, டில்லி வரமுடியாத நிலையில் உள்ளார்' என, அவரது மகள் செல்வி, சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இந்த ... |
| "பிரீ கேஜி' விஜயதசமி சேர்க்கை படு மும்முரம் : ஆறு மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வசூல் Posted: விஜயதசமி நாளான நேற்று, மாநிலம் முழுவதும், "பிரீ கேஜி' சேர்க்கை, அமோகமாக நடந்தது. ஆனால்,கட்டண நிர்ணயக்குழு வரையறைக்குள் "பிரீகேஜீ' வகுப்பு சேர்க்கப்படாததால், ஆறு மாதக் கல்விக்கு, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை, பள்ளிகளில் வசூலிக்கப்படும் அவலம் நடக்கிறது. தமிழக அரசு அமைத்துள்ள, கட்டண நிர்ணய குழு, எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டுமே, கட்டணங்களை நிர்ணயிக்கிறது. அதுவும், இக்குழு நிர்ணயிக்கும் கட்டணங்களை, பெரும்பாலான பள்ளிகள், கடைபிடிப்பதே கிடையாது. தங்கள் இஷ்டப்படி, பல ஆயிரம் ரூபாயை, கட்டணமாக வசூலிக்கின்றனர். பெரிய பள்ளிகளோ, சிறிய ... |
| Posted: சென்னை : பயங்கரவாதிகளை பிடிக்க உதவிய போலீசார், 251 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, பணப்பரிசுகளை அறிவித்து பாராட்டி உள்ளார். "போலீஸ்' பக்ருதீனைப் பிடித்த இன்ஸ்பெக்டர் வீரகுமாருக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். மேலும் மதுரை, திருமங்கலத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி செல்ல இருந்த பாதையில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் உட்பட, பல்வேறு வழக்குகளில் மதுரையைச் சேர்ந்த, ... |
| காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பா? கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் கடிதம் Posted: சென்னை: "இலங்கையில், நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, உரிய முடிவுகளை எடுப்போம்,'' என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.""இலங்கையில், அடுத்த மாதம், நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது,'' என, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலர், தியாகு,உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது, என, தி.மு.க.,வும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன்சிங்கை, நேற்று சந்தித்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 15,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |