Tamil News | Online Tamil News |
- இலங்கையில் கேட்பாரற்று வீணாகும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள்
- பார்வை இல்லாதவரை கண்மூடித்தனமாக தாக்கிய "போலீஸ்'
- அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி : 8 லட்சம் ஊழியர்கள் தற்காலிக வேலை இழப்பு
- 'அம்மா குடிநீர்' திட்டத்தால் சிக்கலில் போக்குவரத்து கழகங்கள்
- ஏற்காடு தொகுதியில் களமிறங்க தே.மு.தி.க., முடிவு
- டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசிடம் முதல்வர் ஜெ., வலியுறுத்தல்
- பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்: மன்மோகன்
- உணவு பாதுகாப்பு திட்டத்தில் அமைச்சர் பவார் அதிருப்தியா?
- ஊழலுக்காக சிறை தண்டனை பெற்ற எம்.பி.,க்கள் 3 பேர்: சுப்ரீம் கோர்ட் அதிரடியால் அரசியல்வாதிகள் கலக்கம்
- தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் ஊழல் : சி.பி.ஐ., விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
| இலங்கையில் கேட்பாரற்று வீணாகும் தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் Posted: ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, அங்குள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 9.35 கோடி ரூபாய் மதிப்புள்ள, தமிழக விசைப்படகுகளை மீட்க முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்.இந்திய, இலங்கை கடல் எல்லையில் பாரம்பரியமாக இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் இதுவரை, 304 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதில், 70 பேர் சிறையில் உள்ளனர். அவர்களின், 32 விசைப்படகுகள் இலங்கை மன்னார், நீர்கொழும்பு, காங்கேசன் துறை, ஊர்காவல் துறை, திரிகோணமலை கடற்கரைகளில் கேட்பாரற்று நிற்கின்றன.இந்நிலையில், நாகை மீனவர்களின் ... |
| பார்வை இல்லாதவரை கண்மூடித்தனமாக தாக்கிய "போலீஸ்' Posted: விருதுநகர்: அரசு பஸ்சில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், திருமங்கலம் போலீசார், மனித நேயம் மறந்து, பார்வை இழந்த மாற்றுத் திறனாளியை கடுமையாக தாக்கினர். காயமடைந்த அவர், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி, 28. மாற்றுத் திறனாளியான (பார்வை இழந்தவர்) இவர், ரயில்வேயில் பணிபுரிந்து, இறந்த தன் தந்தையின் வாரிசு வேலையை பெறுவதற்காக, நேற்று முன்தினம், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளை சந்திக்க சென்றார். மாலை, 5:00 மணிக்கு, மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து, ... |
| அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி : 8 லட்சம் ஊழியர்கள் தற்காலிக வேலை இழப்பு Posted: வாஷிங்டன் : அமெரிக்காவில், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, அதிபர் பதவி ஏற்று ஆட்சி செய்து வரும் ஒபாமா அரசுக்கு, புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பார்லிமென்டில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பின், அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக, பாரக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்ட பின், அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெருமளவு மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அவரின் புதிய சிந்தனைகள் மக்களின் எதிர்பார்பிற்கு ஏற்ப, பல மாற்றங்களை நிகழ்த்தினாலும், உலக ... |
| 'அம்மா குடிநீர்' திட்டத்தால் சிக்கலில் போக்குவரத்து கழகங்கள் Posted: போக்குவரத்து கழகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், 'அம்மா குடிநீர்' திட்டத்தில், போக்குவரத்து கழக ஊழியர்களை பயன்படுத்தி வருவது, கழகங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.22,053 பேருந்துகள்:தமிழகத்தில் உள்ள, 8 போக்குவரத்து கழகங்களில், 22,053 பேருந்துகள் உள்ளன. இந்த கழகங்களில், 1.43 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மட்டும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். தற்போது, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில், 10 சதவீதம் பற்றாக்குறை நீடிக்கிறது.தொழில்நுட்ப பணியாளர்களை பொறுத்தவரை, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ... |
| ஏற்காடு தொகுதியில் களமிறங்க தே.மு.தி.க., முடிவு Posted: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது.பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட, ஏற்காடு தொகுதியின் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பெருமாள், ஜூலை, 18ம் தேதி இறந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் உறுதியானது. விரைவில், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை நடத்தவுள்ள தேர்தல் கமிஷன், அப்போது, ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பையும் வெளியிடும் என, கூறப்படுகிறது. தமிழகத்தில், வரும், 20ம் தேதி துவங்கும் என, கருதப்படும் வடகிழக்கு பருவமழை, டிசம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.மலைப்பகுதியான ஏற்காட்டில், இந்த நேரத்தில் தேர்தல் ... |
| டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசிடம் முதல்வர் ஜெ., வலியுறுத்தல் Posted: சென்னை : டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், என, மத்திய அரசை, முதல்வர் ஜெயலலிதா, வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு; கட்டுக்கடங்காத பண வீக்கம்; பொருளாதார மந்த நிலை என, பல்வேறு பிரச்னைகளை, கடந்த சில மாதங்களாக, மக்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.இவற்றுக்கு தீர்வு காண, நடவடிக்கை எடுக்காமல், மாதம்தோறும் டீசல் விலையை, மத்திய அரசு உயர்த்தி வருகிறது.இந்த மாதம், இன்று முதல், டீசல் விலை, லிட்டருக்கு, 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் ... |
| பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன்: மன்மோகன் Posted: புதுடில்லி:அவசர சட்டம் குறித்து, ராகுல் விமர்சித்ததால், பிரதமர் பதவியிலிருந்து விலகுவது என்ற கேள்விக்கே இடமில்லை,'' என, மன்மோகன் சிங் தெரிவித்தார். அமெரிக்க பயணம் முடிந்து, நாடு திரும்பும் வழியில், விமானத்தில், நிருபர்களிடம் பேசிய, மன்மோகன் சிங் கூறியதாவது:குற்ற வழக்குகளில், தண்டனை பெறும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்றும் வகையில், அவசர சட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு முற்பட்டது. ஆனால், அந்த அவசர சட்டத்திற்கு, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில், மத்திய அரசின் செயல் சரியானதல்ல என்றும் கூறியுள்ளார். எந்த விஷயத்திலும், ... |
| உணவு பாதுகாப்பு திட்டத்தில் அமைச்சர் பவார் அதிருப்தியா? Posted: புதுடில்லி : ''உணவு பாதுகாப்பு திட்டத்தால், எனக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு. அதே நேரத்தில், உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாக வைத்து தான், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமே தவிர, வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருக்க கூடாது,'' என, மத்தியவிவசாயத் துறை அமைச்சர், சரத் பவார் கூறினார்.மத்திய விவசாய துறை அமைச்சரும், தேசியவாத காங்., கட்சி தலைவருமான, சரத் பவார் கூறியதாவது:உணவு பாதுகாப்பு திட்டத்தால், நான் அதிருப்தி அடைந்துள்ளதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. ஏழைகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் எந்த திட்டத்துக்கும், நான் அதிருப்தி ... |
| ஊழலுக்காக சிறை தண்டனை பெற்ற எம்.பி.,க்கள் 3 பேர்: சுப்ரீம் கோர்ட் அதிரடியால் அரசியல்வாதிகள் கலக்கம் Posted: புதுடில்லி: மருத்துவ படிப்பிற்கான ஒதுக்கீட்டில், ஊழல் செய்த வழக்கில், காங்., ராஜ்யசபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ரஷீத் மசூதுக்கு, நேற்று, நான்காண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கால்நடை தீவன ஊழல் வழக்கில், நேற்று முன்தினம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான லாலு பிரசாத் யாதவும், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., ஜெகதீஷ் சர்மாவும், குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊழலுக்காக தண்டனை பெற்ற எம்.பி.,க்கள் எண்ணிக்கை, மூன்றாகிஉள்ளது.சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, இவர்கள் மூவரின் பதவி பறிபோவது உறுதியாகியுள்ளதால், ... |
| தமிழகத்தில் ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் ஊழல் : சி.பி.ஐ., விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு Posted: புதுடில்லி:தமிழகத்தில் நடந்த, 16 ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரும், 22ம் தேதி விசாரிக்கப்பட உள்ளது.தமிழகத்தில், மதுரை மாவட்டத்தில் செயல்படும் கிரானைட் குவாரிகளில் பல்லாயிரம் கோடிக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக, மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம், தமிழக அரசுக்கு அறி"க்கை அனுப்பினார். அவரைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டராக வந்த அன்சுல்மிஸ்ரா நடவடிக்கை எடுத்தார். இதில், 50 மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பதாக தெரியவந்தது.மேலூர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 02,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |