Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தடையை மீறி பாப்பாரப்பட்டியில் குமரி அனந்தன் இன்று உண்ணாவிரதம்
- மும்பைக்கு 72 துருப்பிடிக்காத மின்சார ரயில்கள்
- சித்த மருத்துவ படிப்பு: இன்னும் 10 நாள்களில் கலந்தாய்வு
- காதலன் மீது ஆசிட் வீசிய பெண் கைது
- மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: "வேட்பாளர்களை நிராகரிக்கும்' பொத்தானுடன் மின்னணு இயந்திரங்கள்
- பிரிட்டன் தூதராக ரஞ்சன் மத்தாய்
- பிரணாப் இன்று பெல்ஜியம் பயணம்
- "ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டுகிறது நீதி'
- பட்கலின் உதவியாளர் மற்றொரு வழக்கில் கைது
- நடிகர் சஞ்சய் தத் பரோலில் விடுவிப்பு
- காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவோம்
- லாலுவுக்கு சிறை, மோடிக்கு வருத்தம்
- தான்சானியாவில் 2 நாளிதழ்களுக்கு தடை விதிப்பு
- வங்கதேச எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனை
- சிரியாவில் சீன தூதரகம் மீது பீரங்கி குண்டு தாக்குதல்
- துபையில் இந்தியர் மர்ம சாவு
- இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: பாலஸ்தீனியர் சாவு
- "பயங்கரவாத தாக்குதலை மட்டுமே அமெரிக்க உளவுப்பிரிவு கண்காணிக்கிறது'
- குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் பிரதமர்: அவசரச் சட்டம் வாபஸ்?
- காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலக வேண்டும்: ராஜ்நாத் சிங்
- வி.கே.சிங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
- சிமி தீவிரவாதிகள் 7 பேர் சிறையிலிருந்து தப்பியோட்டம்
- உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்தால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் வெற்றி அடையும்
- உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் தேவைநமது
- தலைநகரில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு
- முதல்வர் ஷீலா தீட்சித் குறித்த மோடியின் விமர்சனம் சரியானதே
- ஆம் ஆத்மி கட்சியில் சீக்கியர்களுக்குதனிப் பிரிவு தொடக்கம்
- சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்புகள் விவகாரம்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு
- பிரணாப் இன்று பெல்ஜியம் பயணம்
- வியட்நாமில் வெள்ளம், சூறாவளி: 2.5 லட்சம் வீடுகள் பாதிப்பு
- ஒற்றுமையை உறுதிப்படுத்துவதில் "ஆகாசவாணி' முக்கியப் பங்கு
- அமெரிக்க ஒப்பந்தத்தால் ரஷிய உறவில் பாதிப்பு ஏற்படாது
- அமைதிக் கருத்தரங்கம்
- ஐரோப்பாவின் உயரிய விருதுக்கு ஸ்னோடென், மலாலா தேர்வு
- வன உயிரின வார விழிப்புணர்வு ஊர்வலம்
- தமிழக மூத்த குடிமக்கள் தில்லியில் பேரணி
- முதன்முறையாக கணக்கு விவரங்களை வெளியிட்டது வாடிகன் வங்கி
- "குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்'
- "டிசம்பர் 16' பாலியல் வழக்கு: 8-இல் அடுத்த விசாரணை
- மன்மோகன் சிங்கை கிராமத்துப் பெண் என்று விமர்சிக்கவில்லை
- பாலியல் வழக்கு:இளைஞருக்கு10 ஆண்டு சிறை
- வீட்டு வேலைக்காரப் பெண்ணை தாக்கிய சம்பவம்: ஒருவர் கைது
- வெனிசுலாவிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்
- சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம்
- தொழிற்சாலை நுழைவுவாயிலை மூடியவர்கள் கைது
- வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் ஆட்சியர்
- "இந்தியன் ஆயில் நிறுவன பங்கு விற்பனை: இது உகந்த நேரம் அல்ல'
- அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது
- மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் குறித்து விவாதிக்க வேண்டுகோள்
- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- அண்ணா நூற்றாண்டு பூங்காவில் அண்ணா சிலை எங்கே?
- ஹுண்டாய் தொழிற்சாலையில் சுகாதாரத் துறையினர் திடீர்
- இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்
- புத்தேரி சாலையை சீரமைக்க கோரிக்கை
- வேலை வழங்க கோரி மாற்றுதிறனாளி மனு
- அரசு பஸ் மோதிகட்டடத் தொழிலாளி சாவு
- வீடு புகுந்து 5 பவுன் திருட்டு
- மந்த கதியில் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமானப் பணி
- வீடுகளை அபகரிக்கும் பெண் மீது நடவடிக்கை கோரி மனு
- குடியிருப்புகளை பாதிக்காமல் தாம்பரம் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை
- "தினமணி' நாளிதழில் வந்த செய்தியை அடுத்து செங்கல்பட்டில் நகராட்சி ஆணையர் நியமித்து திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
- செங்கல்பட்டு நகராட்சி ஆணையராக அ.பாஸ்கர், திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
- அகதிகள் சிறப்பு முகாமில் ஒருவர் உண்ணாவிரதம்
- மர்மக் காய்ச்சல்: சுகாதாரத் துறை சார்பில் தடுப்புப் பணி தீவிரம்
- உலக முதியோர் தினம்:பள்ளி மாணவிகள் பாத பூஜை
- ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
- கோபுர கலசம் திருட சதி: 8 பேர் கைது
- டி.வி.எஸ். விற்பனை 16% உயர்வு
- கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு வந்த நபர் மீது தாக்குதல்
- தி.மு.க. தெருமுனைப் பிரசாரம்
- நில மோசடி வழக்குக்கு பதில் அவதூறு வழக்கு: முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமி பேச்சு
- கோயில் விடுதியில் நிறுத்திய பைக் திருட்டு
- ஃபோர்டு விற்பனை 51% அதிகரிப்பு
- காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- பயன்பாடில்லாத பயணிகள் நிழற்குடை
- மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 16% அதிகரிப்பு
- திருத்தணி தொகுதி வாக்காளர் பட்டியல்: கோட்டாட்சியர் வெளியிட்டார்
- கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதியில்...
- உடல் தகுதியுடையவர்கள் ரத்த தானம் வழங்க வேண்டும்
- பழனி வார்டுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும்
- போடியில் அதிமுக-திமுக மோதல்: அமைதிப் பேச்சு
- கொடைக்கானலில் திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- பழனி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி: ஒருவர் கைது
- மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
- மதிமுக செயற்குழுக் கூட்டம்
- நாட்டுநலப்பணித் திட்ட முகாம்
- பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் குழுக்களுக்கு பயிற்சி
- சிவகாசியில் ஓவியர்கள் ஆலோசனைக் கூட்டம்
- எஸ்.துரைச்சாமிபுரத்தில் அக். 9 துணைத் தலைவர் தேர்தல்
- காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- கலசலிங்கம் பல்கலை.யில் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி
- சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
- இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 35 பாம்பன் மீனவர்கள் இன்று ராமேசுவரம் வருகை
- ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.44 லட்சம்
- திருவாடானையில் திமுக துண்டு பிரசுரம் விநியோகம்
- எமனேசுவரத்தில் பட்டு ஜவுளி விற்பனையாளர்கள் 3 நாள் கடையடைப்பு
- பரமக்குடியில் நகராட்சிப் பணியாளர்களுடன் காய்கறி வியாபாரிகள் மோதல்
- அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
| தடையை மீறி பாப்பாரப்பட்டியில் குமரி அனந்தன் இன்று உண்ணாவிரதம் Posted: 01 Oct 2013 12:51 PM PDT தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாரத மாதா கோயில் கட்டக் கோரி, தடையை மீறி பாப்பாரப்பட்டியில் புதன்கிழமை (அக்.2) உண்ணாவிரதத்தைத் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் தெரிவித்தார். |
| மும்பைக்கு 72 துருப்பிடிக்காத மின்சார ரயில்கள் Posted: 01 Oct 2013 12:48 PM PDT மும்பை புறநகர் ரயில் சேவைக்காக துருப்பிடிக்காத இரும்பினால் தயாரிக்கப்பட்ட ரயில்களை ஐ.சி.எஃப். தயாரித்து வழங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப். பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார். |
| சித்த மருத்துவ படிப்பு: இன்னும் 10 நாள்களில் கலந்தாய்வு Posted: 01 Oct 2013 12:46 PM PDT சித்த மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் பத்து நாள்களில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். |
| காதலன் மீது ஆசிட் வீசிய பெண் கைது Posted: 01 Oct 2013 12:44 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்: "வேட்பாளர்களை நிராகரிக்கும்' பொத்தானுடன் மின்னணு இயந்திரங்கள் Posted: 01 Oct 2013 12:44 PM PDT மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்கு இயந்திரங்களில் "அனைத்து வேட்பாளர்களும் நிராகரிப்பு' என்ற பொத்தான் புதிதாக சேர்க்கப்படுகிறது. |
| பிரிட்டன் தூதராக ரஞ்சன் மத்தாய் Posted: 01 Oct 2013 12:43 PM PDT பிரிட்டனுக்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 01 Oct 2013 12:43 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறு நாள் அரசு முறைப்பயணமாக பெல்ஜியம், துருக்கி ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை புறப்படுகிறார். |
| "ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டுகிறது நீதி' Posted: 01 Oct 2013 12:42 PM PDT ஊழல்வாதிகளுக்கு உரிய பாடம் புகட்டும் வகையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி வருகின்றன என்று ரஷீத் மசூத் விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன. |
| பட்கலின் உதவியாளர் மற்றொரு வழக்கில் கைது Posted: 01 Oct 2013 12:30 PM PDT இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கலின் நெருங்கிய உதவியாளரான மொகித் மஞ்சர் இமாமை, மற்றொரு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| நடிகர் சஞ்சய் தத் பரோலில் விடுவிப்பு Posted: 01 Oct 2013 12:29 PM PDT மும்பையில் 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள நடிகர் சஞ்சய் தத் (53), நான்கு மாதங்களுக்குப்பின் புணே எரவாடா சிறையில் இருந்து பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். |
| காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவோம் Posted: 01 Oct 2013 12:26 PM PDT மகாத்மா காந்தியின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு, பின்பற்றுவதன் மூலம் அவற்றை இறவாப் புகழுடையதாக ஆக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறைகூவல் விடுத்துள்ளார். |
| லாலுவுக்கு சிறை, மோடிக்கு வருத்தம் Posted: 01 Oct 2013 12:24 PM PDT ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அந்த மாநிலத்தின் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் நிதீஷ் குமாருக்கு சாதகமாக அமையும் என்பதால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருத்தத்தில் உள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. |
| தான்சானியாவில் 2 நாளிதழ்களுக்கு தடை விதிப்பு Posted: 01 Oct 2013 12:21 PM PDT தான்சானியா நாட்டில், தேசத்துரோக கருத்துக்களைப் பரப்புவதாகக் கூறி, ஸ்வாஹிலி மொழியில் வெளியாகும் இரண்டு முக்கிய நாளிதழ்களுக்கு அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. |
| வங்கதேச எதிர்க்கட்சி தலைவருக்கு மரண தண்டனை Posted: 01 Oct 2013 12:20 PM PDT கடந்த 1971-ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்ட புகாரில் வங்கதேச எதிர்கட்சித்தலைவருக்கு அந்நாட்டு சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. |
| சிரியாவில் சீன தூதரகம் மீது பீரங்கி குண்டு தாக்குதல் Posted: 01 Oct 2013 12:20 PM PDT சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சீன தூதரகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பீரங்கி குண்டு தாக்குதலில் அந்த அலுவலக கட்டடம் பெருத்த சேதம் அடைந்தது. துப்புரவுப் பணியாளர் ஒருவரும் படுகாயமடைந்தார். |
| Posted: 01 Oct 2013 12:19 PM PDT ஐக்கிய அரபு எமிரேட் தலைநகர் அபுதாபியில் 62 வயது மதிக்கத்தக்க இந்தியர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
| இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: பாலஸ்தீனியர் சாவு Posted: 01 Oct 2013 12:19 PM PDT இஸ்ரேல் எல்லையில் நுழைய முயன்றதாக பாலஸ்தீனியர் ஒருவரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றனர். |
| "பயங்கரவாத தாக்குதலை மட்டுமே அமெரிக்க உளவுப்பிரிவு கண்காணிக்கிறது' Posted: 01 Oct 2013 12:19 PM PDT அமெரிக்க உளவுப்பிரிவு, பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. |
| குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் பிரதமர்: அவசரச் சட்டம் வாபஸ்? Posted: 01 Oct 2013 12:18 PM PDT தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க வகை செய்யும் அவசரச்சட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மன்மோகன் சிங் புதன்கிழமை சந்திக்க உள்ளார். |
| காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலக வேண்டும்: ராஜ்நாத் சிங் Posted: 01 Oct 2013 12:17 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலக வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கோரியுள்ளார். பிரதமரின் மரியாதையைக் குலைக்கும் விதமாக பேட்டி அளித்ததற்காக அவரை பதவியிலிருந்து விலகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். |
| வி.கே.சிங்கிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் Posted: 01 Oct 2013 12:17 PM PDT பிறந்த தேதி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை விமர்சித்ததற்காக, முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கிற்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. |
| சிமி தீவிரவாதிகள் 7 பேர் சிறையிலிருந்து தப்பியோட்டம் Posted: 01 Oct 2013 12:16 PM PDT தடைசெய்யப்பட்ட சிமி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 விசாரணைக் கைதிகள் காண்ட்வா மாவட்ட சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை குளியல் அறை சுவரை உடைத்து தப்பிச் சென்றனர். இவர்களில் இருவர் சில ஆண்டுகளுக்கு முன் மூன்று பேரை சுட்டுக் கொன்ற கொலைக் கைதிகள் ஆவர். |
| உள்நாட்டில் உற்பத்தி அதிகரித்தால் உணவுப் பாதுகாப்புச் சட்டம் வெற்றி அடையும் Posted: 01 Oct 2013 12:15 PM PDT : உள்நாட்டில் வேளாண் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தால் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் நோக்கம் வெற்றி அடையும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறினார். |
| உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் தேவைநமது Posted: 01 Oct 2013 12:15 PM PDT தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் வலியுறுத்தினார். |
| தலைநகரில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு Posted: 01 Oct 2013 12:14 PM PDT பயிற்சித் திறனற்ற, பகுதித் திறனுடைய, திறன்பெற்ற தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தைத் தில்லி பிரதேச அரசு உயர்த்தியுள்ளது என்று முதல்வர் ஷீலா தீட்சித் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: |
| முதல்வர் ஷீலா தீட்சித் குறித்த மோடியின் விமர்சனம் சரியானதே Posted: 01 Oct 2013 12:14 PM PDT தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் குறித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள் மிகவும் சரியானவைதான் என்று அக் கட்சியின் தில்லி பிரதேச தலைவர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: |
| ஆம் ஆத்மி கட்சியில் சீக்கியர்களுக்குதனிப் பிரிவு தொடக்கம் Posted: 01 Oct 2013 12:14 PM PDT ஆம் ஆத்மி கட்சியில் சீக்கியர்களுக்கென தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அப் பிரிவின் தலைவராக பர்மிந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்புகள் விவகாரம்: தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்குப் பதிவு Posted: 01 Oct 2013 12:13 PM PDT சென்னையில் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் உயரதிகாரிகள் இருவர் மீது சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. |
| Posted: 01 Oct 2013 12:13 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆறு நாள் அரசு முறைப்பயணமாக பெல்ஜியம், துருக்கி ஆகிய நாடுகளுக்கு புதன்கிழமை புறப்படுகிறார். |
| வியட்நாமில் வெள்ளம், சூறாவளி: 2.5 லட்சம் வீடுகள் பாதிப்பு Posted: 01 Oct 2013 12:13 PM PDT மத்திய வியட்நாமில் திங்கள்கிழமை ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளத்தால் 2.5 லட்சம் வீடுகள் சரிந்தன. ஒரு சிறுவன் உள்பட மூவர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்துள்ளனர். |
| ஒற்றுமையை உறுதிப்படுத்துவதில் "ஆகாசவாணி' முக்கியப் பங்கு Posted: 01 Oct 2013 12:12 PM PDT "நாட்டின் ஒற்றுமையை உறுதிப்படுத்தும் எண்ணத்திற்கு ஆகாசவாணி (அகில இந்திய வானொலி) முக்கியப் பங்காற்றியுள்ளது' என்று "பிரசார் பாரதி' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜவாஹர் சர்க்கார் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். |
| அமெரிக்க ஒப்பந்தத்தால் ரஷிய உறவில் பாதிப்பு ஏற்படாது Posted: 01 Oct 2013 12:12 PM PDT அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டாலும், ரஷியாவுடனான இந்தியாவின் உறவில் பாதிப்பு ஏற்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். |
| Posted: 01 Oct 2013 12:12 PM PDT அமைதி குறித்த கருத்தரங்கம் மற்றும் தர்ஷன் கல்வி நிறுவன ஆண்டு விழா ஆகியவை தில்லி தால்கதோரா விளையாட்டரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
| ஐரோப்பாவின் உயரிய விருதுக்கு ஸ்னோடென், மலாலா தேர்வு Posted: 01 Oct 2013 12:11 PM PDT அமெரிக்காவின் ரகசிய நடவடிக்கைளை உலகுக்கு அம்பலப்படுத்திய ஸ்னோடென், பெண் குழந்தைகளுக்கான கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா உள்ளிட்ட 5 பேர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மிக உயரிய விருதான "சஹாரோவ் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| வன உயிரின வார விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 01 Oct 2013 12:11 PM PDT வன விலங்கு உயிரின வார விழாவையொட்டி தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தமிழக மூத்த குடிமக்கள் தில்லியில் பேரணி Posted: 01 Oct 2013 12:11 PM PDT தமிழகத்தைச் சேர்ந்த அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பினர் தில்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்களுக்கு வருமான வரி உச்சவரம்பை உயர் |
| முதன்முறையாக கணக்கு விவரங்களை வெளியிட்டது வாடிகன் வங்கி Posted: 01 Oct 2013 12:11 PM PDT பணமோசடி சர்ச்சையில் சிக்கிய வாடிகன் வங்கி, வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் வங்கி கணக்குகளை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. |
| "குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்' Posted: 01 Oct 2013 12:10 PM PDT வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர் அன்மோல் சர்னா (24) கொலை வழக்கை குற்றப் பிரிவு போலீஸார் விசாரித்தால் உண்மைகள் பல வெளிவரும்' என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இது குறித்து அன்மோலின் தாய் சுஷ்மா சர்னா கூறுகையில், "என் மகன் இறப்பதற்கு முன்பு ப |
| "டிசம்பர் 16' பாலியல் வழக்கு: 8-இல் அடுத்த விசாரணை Posted: 01 Oct 2013 12:10 PM PDT "டிசம்பர் 16' பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை சரியா என்பது குறித்து ஆய்வு செய்து வரும் தில்லி உயர் நீதிமன்றம் அடுத்த விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. |
| மன்மோகன் சிங்கை கிராமத்துப் பெண் என்று விமர்சிக்கவில்லை Posted: 01 Oct 2013 12:10 PM PDT இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை நான் ஒருபோதும் ""கிராமத்துப் பெண்'' என்று விமர்சிக்கவில்லை என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். |
| பாலியல் வழக்கு:இளைஞருக்கு10 ஆண்டு சிறை Posted: 01 Oct 2013 12:10 PM PDT கணவரை இழந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞருக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தில்லி மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
| வீட்டு வேலைக்காரப் பெண்ணை தாக்கிய சம்பவம்: ஒருவர் கைது Posted: 01 Oct 2013 12:09 PM PDT ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணைத் தாக்கியதாக தில்லியை சேர்ந்த பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| வெனிசுலாவிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் Posted: 01 Oct 2013 12:09 PM PDT நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் கூறி அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 3 பேரை வெனிசுலாவிலிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார். |
| சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு அபராதம் Posted: 01 Oct 2013 12:09 PM PDT ஒரகடம் பகுதியில் சரக்கு வாகனங்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் உள்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. |
| தொழிற்சாலை நுழைவுவாயிலை மூடியவர்கள் கைது Posted: 01 Oct 2013 12:08 PM PDT உள்ளூர் பகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என செங்காடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் நுழைவு வாயிலை இழுத்து மூடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் ஆட்சியர் Posted: 01 Oct 2013 12:08 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29.29 லட்சம் வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் லி. சித்ரசேனன் வெளியிட்டார். |
| "இந்தியன் ஆயில் நிறுவன பங்கு விற்பனை: இது உகந்த நேரம் அல்ல' Posted: 01 Oct 2013 12:08 PM PDT இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பங்கு விற்பனைக்கு இது உகந்த நேரம் இல்லை என்று பெட்ரோலிய அமைச்சகம் கருத்து தெரிவித்திருக்கிறது. |
| அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது Posted: 01 Oct 2013 12:08 PM PDT செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் அருகில் ஜூலை மாதம் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பொன்விளைந்த களத்தூரைச் சே |
| மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் குறித்து விவாதிக்க வேண்டுகோள் Posted: 01 Oct 2013 12:07 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 633 ஊராட்சிகளிலும் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| Posted: 01 Oct 2013 12:07 PM PDT பட்டா வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்குப் பட்டா வழங்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட |
| அண்ணா நூற்றாண்டு பூங்காவில் அண்ணா சிலை எங்கே? Posted: 01 Oct 2013 12:07 PM PDT காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது சிலை எங்கே? என்று தினமணி நாளிதழில் வெளிவந்த செய்தியை சுட்டிக் காட்டி தி.மு.க. உறுப்பினர் கேள்வி எழுப்பியதால், நகர்மன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஹுண்டாய் தொழிற்சாலையில் சுகாதாரத் துறையினர் திடீர் Posted: 01 Oct 2013 12:06 PM PDT ஹுண்டாய் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த காவலாளி மர்ம காய்ச்சலால் இறந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் செவ்வாய்க்கிழமை தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் Posted: 01 Oct 2013 12:06 PM PDT காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும், புதன்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார். அனைத்து ஊராட்சிகளிலும், காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வே |
| புத்தேரி சாலையை சீரமைக்க கோரிக்கை Posted: 01 Oct 2013 12:05 PM PDT காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரியில் கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே புத்தேரி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவ |
| வேலை வழங்க கோரி மாற்றுதிறனாளி மனு Posted: 01 Oct 2013 12:05 PM PDT அரசு வேலை வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளி ஒருவர் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமாரிடம் மனு அளித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தெ |
| அரசு பஸ் மோதிகட்டடத் தொழிலாளி சாவு Posted: 01 Oct 2013 12:05 PM PDT கல்பாக்கம் அருகே அரசு பஸ், இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார். |
| வீடு புகுந்து 5 பவுன் திருட்டு Posted: 01 Oct 2013 12:04 PM PDT திருப்போரூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 5 பவுன் நகையைத் திருடிச் சென்றனர். |
| மந்த கதியில் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமானப் பணி Posted: 01 Oct 2013 12:04 PM PDT : குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமானப் பணி கடந்த 3 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருவதால் பழைய கட்டடத்திலேயே இடநெருக்கடியோடு அலுவலகம் இயங்கி வருகிறது. எனவே கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| வீடுகளை அபகரிக்கும் பெண் மீது நடவடிக்கை கோரி மனு Posted: 01 Oct 2013 12:04 PM PDT திருப்போரூர் அருகே பெண் ஒருவர் வீடுகளை அபகரித்து வாடகைக்கு விட்டுவிடுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். |
| குடியிருப்புகளை பாதிக்காமல் தாம்பரம் புறவழிச்சாலை அமைக்க கோரிக்கை Posted: 01 Oct 2013 12:03 PM PDT தாம்பரம் புறவழிச்சாலை அமைக்கும்போது குடியிருப்புகளை பாதிக்காமல் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உள்பட்ட ஆலப்பாக்க |
| Posted: 01 Oct 2013 12:03 PM PDT "தினமணி' நாளிதழில் வந்த செய்தியை அடுத்து செங்கல்பட்டில் நகராட்சி ஆணையர் நியமித்து திங்கள்கிழமை பொறுப்பேற்றார். |
| செங்கல்பட்டு நகராட்சி ஆணையராக அ.பாஸ்கர், திங்கள்கிழமை பொறுப்பேற்றார். Posted: 01 Oct 2013 12:03 PM PDT செங்கல்பட்டு நகராட்சி ஆணையராக அ.பாஸ்கர், திங்கள்கிழமை பொறுப்பேற்றார். செங்கல்பட்டு நகராட்சி ஆணையராக பொறியாளர் கணேசன் ஆணையர் பொறுப்பில் |
| அகதிகள் சிறப்பு முகாமில் ஒருவர் உண்ணாவிரதம் Posted: 01 Oct 2013 12:02 PM PDT செங்கல்பட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் ஒருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார். |
| மர்மக் காய்ச்சல்: சுகாதாரத் துறை சார்பில் தடுப்புப் பணி தீவிரம் Posted: 01 Oct 2013 12:01 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக மர்மக் காய்ச்சல் பரவி வருவதால் அதைத் தடுக்கும் பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஏகாட்டூர், சேலை, வெண்மனம்புதூர், நெடும்பரம், நெல்வாய் |
| உலக முதியோர் தினம்:பள்ளி மாணவிகள் பாத பூஜை Posted: 01 Oct 2013 12:01 PM PDT புழல் ஜெயின் வித்யாஸ்ரம் பள்ளியில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. |
| ஆசிரியர்கள் பற்றாக்குறை: மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் Posted: 01 Oct 2013 12:00 PM PDT ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் பணியாற்றுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனக்கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களுடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கோபுர கலசம் திருட சதி: 8 பேர் கைது Posted: 01 Oct 2013 12:00 PM PDT கோயில் கோபுர கலசம் திருடுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக 8 பேரைத் திருப்பாலைவனம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| Posted: 01 Oct 2013 12:00 PM PDT சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பாளரான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் செப்டம்பர் மாத விற்பனையில் 16 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. |
| கொலை வழக்கு: நீதிமன்றத்துக்கு வந்த நபர் மீது தாக்குதல் Posted: 01 Oct 2013 12:00 PM PDT கொலை வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வந்த நபர் மீது எதிர்தரப்பினர் நடத்திய திடீர் தாக்குதல் சம்பவத்தால் பொன்னேரியில் பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் அருகே உள்ள சோலையம்மன் நகரில் வசித்து வரும் ஆறுமுகத்தின் மகள் ல |
| Posted: 01 Oct 2013 11:59 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் அ.தி.மு.க.வைக் கண்டித்து தி.மு.க.வினர் திங்கள்கிழமை தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை நடத்தினர். |
| நில மோசடி வழக்குக்கு பதில் அவதூறு வழக்கு: முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமி பேச்சு Posted: 01 Oct 2013 11:59 AM PDT சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சி தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா திங்கள்கிழமை பாடியநல்லூரில் நடைபெற்றது. |
| கோயில் விடுதியில் நிறுத்திய பைக் திருட்டு Posted: 01 Oct 2013 11:59 AM PDT கோயில் விடுதியில் நிறுத்தி செல்லப்பட்ட பக்தரின் இரு சக்கர வாகனம் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளது. |
| ஃபோர்டு விற்பனை 51% அதிகரிப்பு Posted: 01 Oct 2013 11:59 AM PDT செப்டம்பர் மாதத்தில் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் கார் விற்பனை எண்ணிக்கை 14,217 ஆக இருந்தது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 51 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. |
| காருடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 01 Oct 2013 11:58 AM PDT சோழவரம் அருகே காருக்குள் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். |
| பயன்பாடில்லாத பயணிகள் நிழற்குடை Posted: 01 Oct 2013 11:58 AM PDT : பயணிகள் நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், அதனைச் சுற்றிலும் முட்புதர் வளர்ந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. |
| மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு Posted: 01 Oct 2013 11:58 AM PDT திருவள்ளுர் மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 2013-ஐ மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். |
| ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 16% அதிகரிப்பு Posted: 01 Oct 2013 11:58 AM PDT இந்தியாவின் மிகப் பெரிய இரண்டு சக்கர தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செப்டம்பர் மாத விற்பனை 16 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. |
| திருத்தணி தொகுதி வாக்காளர் பட்டியல்: கோட்டாட்சியர் வெளியிட்டார் Posted: 01 Oct 2013 11:58 AM PDT திருத்தணி தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியலை ஆர்.டி.ஓ. கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். |
| கும்மிடிப்பூண்டி, பொன்னேரி தொகுதியில்... Posted: 01 Oct 2013 11:57 AM PDT பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை பொன்னேரி கோட்டாட்சியர் பார்த்திபன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். |
| உடல் தகுதியுடையவர்கள் ரத்த தானம் வழங்க வேண்டும் Posted: 01 Oct 2013 11:56 AM PDT உடல் தகுதியுடைய அனைவரும் ரத்த தானம் செய்ய முன் வரவேண்டும் என, ரத்த கொடையாளர் தின விழாவில் பங்கேற்ற, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தார். |
| பழனி வார்டுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 01 Oct 2013 11:56 AM PDT பழனியில் வார்டுகளில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள், நகராட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. |
| பொருளாதார வளர்ச்சி விகிதம் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் Posted: 01 Oct 2013 11:56 AM PDT நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று மத்திய அரசுக்கு நம்பிக்கை இருப்பதாக பொருளாதாரத் துறை செயலர் அரவிந்த் மாயாராம் (படம்)தெரிவித்திருக்கிறார். |
| போடியில் அதிமுக-திமுக மோதல்: அமைதிப் பேச்சு Posted: 01 Oct 2013 11:56 AM PDT போடியில் திங்கள்கிழமை, தமிழக அரசின் குறைகளை விளக்கும் திமுக.வினர் நடத்திய தெருமுனைப் பிரசாரத்தில், அவதூறாகப் பேசப்பட்டதாம். இதனை தட்டிக் கேட்கச் சென்ற நகர்மன்றத் தலைவர் |
| கொடைக்கானலில் திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு Posted: 01 Oct 2013 11:55 AM PDT கொடைக்கானலில் திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| பழனி கோயிலில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 8 லட்சம் மோசடி: ஒருவர் கைது Posted: 01 Oct 2013 11:55 AM PDT பழனி தேவஸ்தானத்தில் கண்காணிப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 8.19 லட்சம் மோசடி செய்தவரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல் Posted: 01 Oct 2013 11:54 AM PDT சாத்தூர் அருகே பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்களை அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் புதன்கிழமை வழங்கினார். சாத்தூர் ஒன்றியத்தில் |
| Posted: 01 Oct 2013 11:54 AM PDT விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் செயற்குழுக் கூட்டம், அக்கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது |
| Posted: 01 Oct 2013 11:54 AM PDT விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகேயுள்ள கோவில்பட்டியில் மல்லாங்கிணர் எம்.எஸ்.பி. செந்திக்குமார நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டுநலப்பணித் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமையாசிரியர் இராஜாமணி சாமுவேல் தேவசகாயம், மாவட்ட கல்வி அலுவலர் |
| பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் குழுக்களுக்கு பயிற்சி Posted: 01 Oct 2013 11:53 AM PDT : விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் விதிமீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. |
| சிவகாசியில் ஓவியர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 01 Oct 2013 11:53 AM PDT சிவகாசியில் உள்ள ஓவியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிவகாசி ஆர்ட்ஸ் கிளப் வளாகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு ஓவியர் எஸ். குற்றாலம் தலைமை வகித்தார். |
| எஸ்.துரைச்சாமிபுரத்தில் அக். 9 துணைத் தலைவர் தேர்தல் Posted: 01 Oct 2013 11:53 AM PDT விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற அக். 9-ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. |
| காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 01 Oct 2013 11:53 AM PDT : காங்கிரஸ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் |
| கலசலிங்கம் பல்கலை.யில் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி Posted: 01 Oct 2013 11:52 AM PDT கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழகம்-பள்ளி தொடர்பு திட்டத்தில் உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கணினிப் பயிற்சி தகவல் தொழில்நுட்பத் துறை ஆய்வுக் கூடத்தில் நடைபெற்றது. |
| சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு Posted: 01 Oct 2013 11:52 AM PDT சிவகங்கை மாவட்டத்தில் 2013-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் வெளி யிட்டார். மொத்த வாக்காளர்கள் 9,57,505. இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர். |
| இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 35 பாம்பன் மீனவர்கள் இன்று ராமேசுவரம் வருகை Posted: 01 Oct 2013 11:51 AM PDT எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலிருந்து விடுதலையான பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கின்றனர். |
| ராமேசுவரம் கோயில் உண்டியல் வருவாய் ரூ.44 லட்சம் Posted: 01 Oct 2013 11:51 AM PDT உலகப் புகழ்பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான வெளி மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் காணிக்கையாக |
| திருவாடானையில் திமுக துண்டு பிரசுரம் விநியோகம் Posted: 01 Oct 2013 11:51 AM PDT திருவாடானை தாலுகா, திருவாடானை ஒன்றியம் சார்பில் திமுக-வினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். |
| எமனேசுவரத்தில் பட்டு ஜவுளி விற்பனையாளர்கள் 3 நாள் கடையடைப்பு Posted: 01 Oct 2013 11:51 AM PDT பரமக்குடி-எமனேசுவரத்தில் பட்டு நூல் விலை உயர்வைக் கண்டித்து கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அக்டோபர் 1 முதல் 3-ம் தேதி வரை 3 நாள் கடையடைப்பு செய்வதாக முடிவு செய்துள்ளனர். |
| பரமக்குடியில் நகராட்சிப் பணியாளர்களுடன் காய்கறி வியாபாரிகள் மோதல் Posted: 01 Oct 2013 11:50 AM PDT பரமக்குடி அங்காளம்மன் கோயில் தெருவில் செவ்வாய்க்கிழமை காய்கறி கடை வியாபாரிகள் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட காய்கறிகளை அகற்ற நகராட்சிப் |
| அனுமதி பெறாத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் Posted: 01 Oct 2013 11:50 AM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் நகர் ஊரமைப்புத் துறையின் அனுமதி பெறாமல் இருந்தால், அவை உடனடியாகப் பூட்டி சீல் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |