Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலங்கைப் பிரச்னை: பேரவைத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு
- நெல்லையில் ஆவணக் காப்பகம்: பரிசீலிக்க அமைச்சர் உறுதி
- கல்வியோடு கலாசாரத்தையும் கற்றுத்தர வேண்டும்: ஆட்சியர்
- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்: அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் தொடங்கியது
- தீபாவளி பண்டிகையொட்டி பெங்களூர்-திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
- மன்னார்புரத்தில் முனனாள் ராணுவ படை வீரர்களுக்கான மருத்துவமனை திறப்பு
- கம்பெனி பெயர்களில் போலி செல்போனை விற்ற 6 பேர் கைது
- திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 15 கோடி லாபம்
- விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம்
- அக்னியாறு- குண்டாறு இணைப்புக்கு ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு
- கூடங்குளத்தில் மின் உற்பத்தி மீண்டும் தாமதம்
- சதாப்தி, துரந்தோ ரயில்களில் பழைய முறையிலேயே உணவுப் பட்டியல்
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- தீயணைப்பு வீரர்கள் ரத்த தானம்
- அரசியல் விழிப்புணர்வு இளைஞர் மாநாடு நடத்த த.ம.மு.க முடிவு
- 144 தடை உத்தரவு: அரசு உத்தரவின்பேரில் பின்பற்றப்படுகிறதா?
- நெல்லையில் பிளாஸ்டிக் பைகள்-டம்ளர்கள் பறிமுதல்
- மண்ணெண்ணெய் விநியோகத்தில் நெரிசல்: கருப்பந்துறை பகுதி மக்கள் முற்றுகை
- மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டிகள்
- தீபாவளி பட்டாசுகளில் "கார்ட்டூன்' ஆதிக்கம்!
- நுகர்வோர் விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவு: அதிகாரி தகவல்
- திருச்சி ஐஐஎம்-க்கு நிரந்தர வளாகம் சிபிடபிள்யூவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- நெல்லை மாவட்டத்தில் 17 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம்
- கூட்டுறவு பேரங்காடியில் மலிவு விலை பலகாரப் பொருள்கள் விற்பனை
- சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் பேரணி, முற்றுகை
- சந்தையில் வியாபாரி வெட்டிக் கொலை
- மேட்டூர் அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு
- திருநெல்வேலி
- நவம்பர் 8-இல் காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம்
- தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: ரூ. 6 கோடி நஷ்டஈடு வழங்க 3 மருத்துவர்களுக்கு ஆணை
- மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ரத்து: மறுஆய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்
- ஆந்திர ஆளுநர் மீது தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு
- குடியரசுத் தலைவருடன் சீமாந்திரா எம்.பி., எம்எல்ஏக்கள் சந்திப்பு
- "முதல் சுதந்திரப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கண்டெடுக்கவே அகழாய்வு'
- இலவச பேருந்து பயண அட்டை வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
- ஜம்மு-காஷ்மீரில் கட்டடப் பணிகளை முறைப்படுத்த திட்டம்
- பேராவூரணி அருகே ஆற்றில் பெண் சடலம்
- அக்டோபர் 26 மின் தடை
- வசதி படைத்தவர்களுக்கான அரசியலில் பாஜக
- புதுகை மாவட்ட சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல்
- விரக்தியின் வெளிப்பாடே ராகுல் பேச்சு: பாஜக
- ஐக்கிய நாடுகள் சபை தின விழா கொடியேற்றம்
- மயிலாடுதுறை கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்
- கரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல்
- கரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வு
- மத உணர்வுகளைத் தூண்டி தேர்தலை சந்திக்க பாஜக திட்டம்
- அக்னியாறு- குண்டாறு இணைப்புக்கு ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு அரசுக்கு பரிந்துரை
- வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுவிற்கு ரசீது வழங்க வலியுறுத்தல்
- 100 சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு
- ராம்தேவ் சகோதரருக்கு பிடிவாரண்ட்
- ஜயங்கொண்டத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்
- தொழிற்கல்வி ஆசிரியர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம்
- ராகுலுக்கு சீக்கிய அமைப்பு கண்டனம்
- காப்பீடு பெறுவதற்காக காரை காணவில்லையென நாடகமாடிய இருவர் கைது
- போனஸ் அறிவிப்பு: சிமென்ட் ஆலை ஊழியர்கள் நன்றி
- விவசாயிகளுக்கு அக். 28-ல் தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி
- பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே காலமானார்
- குறைதீர்க் கூட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு
- 1,032 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
- கார் கவிழ்ந்து விற்பனை மேலாளர் சாவு
- 1600 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
- பொன்னமராவதி நாம் தமிழர் கட்சியின்புதிய நிர்வாகிகள்
- அக். 27-ல் ஓவியக் காட்சி, போட்டிகள்
- கோ-ஆப்டெக்ஸ் டிசைன்களை வடிவமைக்க ென்னையில் தனி ஸ்டுடியோ : உ. சகாயம்
- படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
- நாடாளுமன்றத் தேர்தல்:அக். 27-ல் தேமுதிக ஆலோசனை
- ரூ. 2 லட்சத்தில் புதிய கழிப்பறை: அரசுப் பள்ளியில் ரோட்டரி அமைத்தது
- அரிமளத்தில் இன்றுஓட்டுநர் நலவாரிய பதிவு முகாம்
- வினாடி-வினாவில் வென்றோருக்கு பரிசு
- இலுப்பூரில் விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
- புதுகை கொலை வழக்கு: தஞ்சையில் ஒருவர் சரண்
- கொக்கு சுட்டபோது சிறுவன் காயம்
- பள்ளிகளிலும் "கவின்மிகு தஞ்சை' இயக்கம்
- தமிழில் சிறந்த நாவல்களை உருவாக்குதல் அவசியம்
- 15 நாள்களில் பட்டா மாறுதல் ஆணை
- குழந்தைத் தொழிலாளி மீட்பு
- கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது வழக்கு
- கொலை வழக்கில் தேடப்பட்டவர் தஞ்சையில் சரண்
- பேராவூரணி அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு
- பேராவூரணி அருகே ஆற்றில் பெண் சடலம்
- நாகையில் தீபாவளி பலகாரம் தயாரிப்புக் கூடங்களில் திடீர் ஆய்வு
- வேதாரண்யத்தில் 245 பேருக்கு விரைவு பட்டா மாறுதல் ஆணை
- சூதாட்டத்தில் ஈடுபட்ட17 பேர் கைது
- பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
- மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் திருட்டு
- காங்கிரஸ் மதரீதியிலான தூண்டுதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- சிறுபான்மையினர் ஆணைய ஆலோசனைக் கூட்டம்
- தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- 2,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
- அரியலூர்
- ஸ்விஸ் டென்னிஸ்: காலிறுதியில் ஃபெடரர்
- சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச் அபாரம்
- டிஎன்சிஏ அணிகளுக்கு ஸ்பான்ஸர்: ஸ்ரீராம் குழுமம் அறிவிப்பு
- சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஜான்கோவிச் வெற்றி; அசரென்காவுக்கு பின்னடைவு
- பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஸ்மித் இரட்டைச் சதம்; தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு
- முதல் தர ஒருநாள் ஆட்டம்: இரட்டைச் சதத்தை தவறவிட்டார் வார்னர்!
- எஃப்1 பந்தயத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு
- எஃப்1 கார் பந்தயம்: 2013 சாம்பியன்ஷிப்பை முடிவு செய்யும் இந்திய கிராண்ட்ப்ரீ?
- கிராமங்களைப் புறக்கணித்து தடம்மாறி இயங்கும் மினி பஸ்களின் அனுமதியை ரத்து செய்யக் கோரிக்கை
| இலங்கைப் பிரச்னை: பேரவைத் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு Posted: 24 Oct 2013 01:31 PM PDT இலங்கைப் பிரச்னை தொடர்பாகத் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மீது இதுவரை திடமான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். |
| நெல்லையில் ஆவணக் காப்பகம்: பரிசீலிக்க அமைச்சர் உறுதி Posted: 24 Oct 2013 01:30 PM PDT திருநெல்வேலியில் ஆவணக் காப்பகம் அமைக்க பரிசீலிக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் (படம்) கூறினார். |
| கல்வியோடு கலாசாரத்தையும் கற்றுத்தர வேண்டும்: ஆட்சியர் Posted: 24 Oct 2013 01:29 PM PDT கல்வியோடு மாணவர்களுக்கு நமது கலாசாரம், பண்பாடு, ஒழுக்கநெறிகளையும் கற்றுத் தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ முரளிதரன். |
| ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்: அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் தொடங்கியது Posted: 24 Oct 2013 01:29 PM PDT ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் தொடங்கி விட்டது என்று பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி (படம்) தெரிவித்தார். |
| தீபாவளி பண்டிகையொட்டி பெங்களூர்-திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கம் Posted: 24 Oct 2013 01:29 PM PDT தீபாவளி பண்டிகையொட்டி பெங்களூர்- திருச்சிக்கு கூடுதலாக சிறப்பு ரயில் வரும் 28-ஆம் தேதி முதல் நவ.10-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. |
| மன்னார்புரத்தில் முனனாள் ராணுவ படை வீரர்களுக்கான மருத்துவமனை திறப்பு Posted: 24 Oct 2013 01:28 PM PDT திருச்சி மன்னார்புரத்தில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட முன்னாள் ராணுவ படைவீரர்களுக்கான மருத்துவமனையை பிராந்திய இராணுவ தளபதி லெப்டினெனட் ஜென்ரெல் வி.கே.பிள்ளை திறந்து வைத்தார். |
| கம்பெனி பெயர்களில் போலி செல்போனை விற்ற 6 பேர் கைது Posted: 24 Oct 2013 01:28 PM PDT திருச்சியில் செல்போன் கடைகளில் பிரபல செல்போன் நிறுவனங்களின் பெயர்களில் போலி செல்போன்களை விற்ற கடை உரிமையாளர்கள் ஆறு பேரை விடியோ தடுப்பு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ. 15 கோடி லாபம் Posted: 24 Oct 2013 01:28 PM PDT திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 2012-13ஆம் ஆண்டில் ரூ. 15.34 கோடி லாபம் ஈட்டியுள்ளது என்றார் அதன் தலைவர் (பொ) டி. ராமு. |
| விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டம் Posted: 24 Oct 2013 01:26 PM PDT சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி வியாழக்கிழமை பேரணி மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர். |
| அக்னியாறு- குண்டாறு இணைப்புக்கு ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு Posted: 24 Oct 2013 01:24 PM PDT தென்னக நதிகள் இணைப்பு பணிக்கு மாயனூர் காவிரி ஆற்றை குண்டாறுடன் இணைக்க ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| கூடங்குளத்தில் மின் உற்பத்தி மீண்டும் தாமதம் Posted: 24 Oct 2013 01:24 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 60 மணி நேரத்தைக் கடந்த பின்பும் வியாழக்கிழமை இரவு வரை மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படவில்லை. |
| சதாப்தி, துரந்தோ ரயில்களில் பழைய முறையிலேயே உணவுப் பட்டியல் Posted: 24 Oct 2013 01:23 PM PDT சதாப்தி, துரந்தோ ஆகிய முக்கியத் தொலைதூர விரைவு ரயில்களில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், முன்பிருந்த மு |
| Posted: 24 Oct 2013 01:23 PM PDT நெல்லை வழக்குரைஞர்கள் தமிழ் மன்றம் சார்பில், திருநெல்வேலியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 24 Oct 2013 01:23 PM PDT தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| அரசியல் விழிப்புணர்வு இளைஞர் மாநாடு நடத்த த.ம.மு.க முடிவு Posted: 24 Oct 2013 01:23 PM PDT பாளையங்கோட்டையில் நடைபெற்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் விழிப்புணர்வு இளைஞர் மாநாடு நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. |
| 144 தடை உத்தரவு: அரசு உத்தரவின்பேரில் பின்பற்றப்படுகிறதா? Posted: 24 Oct 2013 01:23 PM PDT தருமபுரியில் இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கும் 144 தடை உத்தரவு, அரசு அனுமதியுடன் பின்பற்றப்படுகிறதா என அரசிடம் கேட்டு தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| நெல்லையில் பிளாஸ்டிக் பைகள்-டம்ளர்கள் பறிமுதல் Posted: 24 Oct 2013 01:22 PM PDT திருநெல்வேலி நகரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து,பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். |
| மண்ணெண்ணெய் விநியோகத்தில் நெரிசல்: கருப்பந்துறை பகுதி மக்கள் முற்றுகை Posted: 24 Oct 2013 01:22 PM PDT மண்ணெண்ணெய் விநியோகிக்கும்போது ரேஷன் கடையில் ஏற்பட்ட நெரிசலைத் தொடர்ந்து, கருப்பந்துறை பகுதி மக்கள் காவல் நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர் |
| மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டிகள் Posted: 24 Oct 2013 01:22 PM PDT மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தனித்திறன் போட்டிகள் பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகின்றன. |
| தீபாவளி பட்டாசுகளில் "கார்ட்டூன்' ஆதிக்கம்! Posted: 24 Oct 2013 01:22 PM PDT தீபாவளியையொட்டி திருநெல்வேலியில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பு அடைந்துள்ளது. கார்ட்டூன் கதாநாயகர்களின் படங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசுகளுக்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது. |
| நுகர்வோர் விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவு: அதிகாரி தகவல் Posted: 24 Oct 2013 01:21 PM PDT இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது நுகர்வோர்களிடையேயான விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவாக காணப்படுகிறது என்றார் இந்திய தர நிர்ணய அமைவகத்தின் இயக்குநர் முகமது இஸ்மாயில். |
| திருச்சி ஐஐஎம்-க்கு நிரந்தர வளாகம் சிபிடபிள்யூவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 24 Oct 2013 01:21 PM PDT தமிழகத்தின் திருச்சியில் சுமார் ரூ.450 கோடியில் அமையவுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) நிரந்தர வளாகத்திற்கான கட்டுமானத் திட்ட மேலாண்மை ஆலோசனைக்காக திருச்சி ஐஐஎம் மற்றும் மத்திய பொதுப் பணித் துறை (சி.பி.டபிள்யூ.டி.) இடையே வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. |
| நெல்லை மாவட்டத்தில் 17 கிராமங்களில் இன்று அம்மா திட்ட முகாம் Posted: 24 Oct 2013 01:21 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வட்டங்களில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கூட்டுறவு பேரங்காடியில் மலிவு விலை பலகாரப் பொருள்கள் விற்பனை Posted: 24 Oct 2013 01:21 PM PDT திருநெல்வேலி கூட்டுறவு பேரங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலிவு விலையில் பலகாரப் பொருள்கள் விற்பனை தொடங்கப்பட்டது. |
| சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் பேரணி, முற்றுகை Posted: 24 Oct 2013 01:20 PM PDT சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கோரி வியாழக்கிழமை பேரணி மற்றும் முற்றுகையில் ஈடுபட்டனர். |
| சந்தையில் வியாபாரி வெட்டிக் கொலை Posted: 24 Oct 2013 01:20 PM PDT திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மக்கள் கூட்டம் நிறைந்த சந்தையில் வியாபாரி வெ. குமார் (38) வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| மேட்டூர் அணையிலிருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு Posted: 24 Oct 2013 01:19 PM PDT மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வியாழக்கிழமை முதல் மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. |
| Posted: 24 Oct 2013 01:19 PM PDT |
| நவம்பர் 8-இல் காவிரி மேற்பார்வை குழுக் கூட்டம் Posted: 24 Oct 2013 01:19 PM PDT காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் அதன் தலைவரான மத்திய நீர்வளத் துறைச் செயலர் அலோக் ராவத் தலைமையில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி கூடி விவாதிக்க உள்ளது. |
| தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: ரூ. 6 கோடி நஷ்டஈடு வழங்க 3 மருத்துவர்களுக்கு ஆணை Posted: 24 Oct 2013 01:17 PM PDT தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்தது தொடர்பாக, அப்பெண்ணின் கணவருக்கு ரூ. 5.96 கோடி நஷ்டஈடு வழங்குமாறு, சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ரத்து: மறுஆய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் Posted: 24 Oct 2013 01:13 PM PDT எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டது. |
| ஆந்திர ஆளுநர் மீது தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு Posted: 24 Oct 2013 01:13 PM PDT ஆந்திர மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| குடியரசுத் தலைவருடன் சீமாந்திரா எம்.பி., எம்எல்ஏக்கள் சந்திப்பு Posted: 24 Oct 2013 01:12 PM PDT தெலங்கானா தனி மாநிலத்தை அமைக்கும் முடிவை மத்திய அரசு தன்னிச்சையாக செயல்படுத்துவதால், இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஆந்திரத்தின் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரில் வலியுறுத்தினர். |
| "முதல் சுதந்திரப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கண்டெடுக்கவே அகழாய்வு' Posted: 24 Oct 2013 01:10 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ராஜா ராவ் ராம் பக்ஷ் சிங் கோட்டைக்குள் தங்கப் புதையல் இருப்பதாக நினைத்து தோண்டவில்லை; அங்கு முதல் இந்திய சுதந்திரப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை கண்டெடுக்கவே தோண்டுகிறோம் என்று மத்திய கலாசார துறை அமைச்சர் சந்திரேஷ் குமாரி கடோச் தெரிவித்தார். |
| இலவச பேருந்து பயண அட்டை வழங்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் Posted: 24 Oct 2013 01:10 PM PDT இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் எனக் கோரி பெரம்பலூர் கீழக்கனவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஜம்மு-காஷ்மீரில் கட்டடப் பணிகளை முறைப்படுத்த திட்டம் Posted: 24 Oct 2013 01:09 PM PDT ஜம்மு-காஷ்மீரில் அங்கீகாரமில்லாத கட்டுமானப் பணிகளைத் தடுக்கும் வகையில், ஒரு பெருந்திட்டத்தை உருவாக்க வேண்டும் என, அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு யோசனை தெரிவித்துள்ளது. |
| பேராவூரணி அருகே ஆற்றில் பெண் சடலம் Posted: 24 Oct 2013 01:09 PM PDT பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் புதுப்பட்டினம் 2 ஆம் நம்பர் வாய்க்காலில் துறவிக்காடு அருகே ஊதா நிறத் |
| Posted: 24 Oct 2013 01:09 PM PDT புதுக்கோட்டை திருவப்பூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (அக். 26) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. |
| வசதி படைத்தவர்களுக்கான அரசியலில் பாஜக Posted: 24 Oct 2013 01:09 PM PDT பாஜக கட்சியானது வசதி படைத்தவர்களுக்கான அரசியலில் ஈடுபடுவதாகவும், காங்கிரஸ் கட்சி சாதாரண மக்களுக்கான அரசியலில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார். |
| புதுகை மாவட்ட சிறையில் கைதியிடம் கஞ்சா பறிமுதல் Posted: 24 Oct 2013 01:09 PM PDT புதுக்கோட்டை மாவட்ட சிறையில் வியாழக்கிழமை சிறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் சிறைக் கைதியிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேலும் ஒரு வழக்கில் கைது |
| விரக்தியின் வெளிப்பாடே ராகுல் பேச்சு: பாஜக Posted: 24 Oct 2013 01:08 PM PDT விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல் காந்தியின் பேச்சு அமைந்துள்ளது என்று பாரதிய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. |
| ஐக்கிய நாடுகள் சபை தின விழா கொடியேற்றம் Posted: 24 Oct 2013 01:08 PM PDT ஐக்கிய நாடுகள் சபை தின விழாவையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் ஐ.நா சபை கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. |
| மயிலாடுதுறை கடைகளில் தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் Posted: 24 Oct 2013 01:08 PM PDT மயிலாடுதுறையில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தத அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், காலாவதியான உணவுப்பொருள்கள் ஆகியவற்றை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர். |
| கரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பறிமுதல் Posted: 24 Oct 2013 01:07 PM PDT தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், பைகள் கரூரில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்தும் |
| கரூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வு Posted: 24 Oct 2013 01:07 PM PDT கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரப் பணி களின் துணை இயக்குநர் நளினி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| மத உணர்வுகளைத் தூண்டி தேர்தலை சந்திக்க பாஜக திட்டம் Posted: 24 Oct 2013 01:07 PM PDT மத உணர்வுகளைத் தூண்டி மக்களவை தேர்தலைச் சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினார். |
| அக்னியாறு- குண்டாறு இணைப்புக்கு ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு அரசுக்கு பரிந்துரை Posted: 24 Oct 2013 01:07 PM PDT தென்னக நதிகள் இணைப்பு பணிக்கு மாயனூர் காவிரி ஆற்றை குண்டாறுடன் இணைக்க ரூ. 5,200 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுவிற்கு ரசீது வழங்க வலியுறுத்தல் Posted: 24 Oct 2013 01:07 PM PDT கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுவிற்கு ரசீது வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். |
| 100 சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு Posted: 24 Oct 2013 01:06 PM PDT அரியலூர் மாவட்டத்தில் 100 சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| ராம்தேவ் சகோதரருக்கு பிடிவாரண்ட் Posted: 24 Oct 2013 01:06 PM PDT பதஞ்சலி யோக பீட முன்னாள் பணியாளரை கடத்தி சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், யோகா குரு பாபா ராம்தேவின் சகோதரர் ராம் பரத்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| ஜயங்கொண்டத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் Posted: 24 Oct 2013 01:06 PM PDT அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| தொழிற்கல்வி ஆசிரியர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் Posted: 24 Oct 2013 01:06 PM PDT அரியலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| ராகுலுக்கு சீக்கிய அமைப்பு கண்டனம் Posted: 24 Oct 2013 01:06 PM PDT காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, 1984-ஆம் ஆண்டு இந்திரா காந்தி மறைவையொட்டி நடந்த கலவரத்தை மறைத்து தனது கருத்தைத் தெரிவித்ததாக சீக்கிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. |
| காப்பீடு பெறுவதற்காக காரை காணவில்லையென நாடகமாடிய இருவர் கைது Posted: 24 Oct 2013 01:05 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் காரை மறைத்துவைத்துவிட்டு, காணவில்லையென நாடகமாடிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| போனஸ் அறிவிப்பு: சிமென்ட் ஆலை ஊழியர்கள் நன்றி Posted: 24 Oct 2013 01:05 PM PDT அரியலூர் அரசு சிமென்ட் ஆலைத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க உத்தரவிட்டதற்காக தமிழக முதல்வருக்கு சிமென்ட் ஆலைத் தொழிலாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விவசாயிகளுக்கு அக். 28-ல் தீவன மேலாண்மைப் இலவசப் பயிற்சி Posted: 24 Oct 2013 01:05 PM PDT பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அக். 28-ம் தேதி அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளது. இதுகுறித்து, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே காலமானார் Posted: 24 Oct 2013 01:04 PM PDT பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார். |
| குறைதீர்க் கூட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் வெளிநடப்பு Posted: 24 Oct 2013 01:04 PM PDT சுழற்சி முறையில் பேச அனுமதி அளிக்காததால், விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| 1,032 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 24 Oct 2013 01:04 PM PDT விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் விண்ணப்பித்த 1,032 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| கார் கவிழ்ந்து விற்பனை மேலாளர் சாவு Posted: 24 Oct 2013 01:04 PM PDT பெரம்பலூர் அருகே, புதன்கிழமை கார் கவிழ்ந்ததில் தனியார் டயர் விற்பனை நிலைய மேலாளர் உயிரிழந்தார். |
| 1600 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் Posted: 24 Oct 2013 01:03 PM PDT புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலர்கள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது அரசால் தடைசெய்யப்பட்ட 1600 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| பொன்னமராவதி நாம் தமிழர் கட்சியின்புதிய நிர்வாகிகள் Posted: 24 Oct 2013 01:03 PM PDT நாம் தமிழர் கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய புதிய நிர்வாகிகள் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். |
| அக். 27-ல் ஓவியக் காட்சி, போட்டிகள் Posted: 24 Oct 2013 01:03 PM PDT புதுக்கோட்டைக்குப் புகழ்சேர்த்த ஓவியர் ராஜாவின் 6-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வரும் 27-ம் தேதி ஓவியக் காட்சியும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகளும் நடைபெறவுள்ளன. |
| கோ-ஆப்டெக்ஸ் டிசைன்களை வடிவமைக்க ென்னையில் தனி ஸ்டுடியோ : உ. சகாயம் Posted: 24 Oct 2013 01:03 PM PDT கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு டிசைன்களை வடிவமைக்க சென்னையில் தனி ஸ்டுடியோ நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் தமிழ்நாடு கைத்தறி நிறுவன மேலாண் இயக்குநர் உ. சகாயம். |
| படைவீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Posted: 24 Oct 2013 01:02 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோரின் வாரிசுகள் பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
| நாடாளுமன்றத் தேர்தல்:அக். 27-ல் தேமுதிக ஆலோசனை Posted: 24 Oct 2013 01:02 PM PDT நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஏற்காடு இடைத்தேர்தல் குறித்த தேமுதிக மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) புதுக்கோட்டையில் நடைபெறவுள்ளது. |
| ரூ. 2 லட்சத்தில் புதிய கழிப்பறை: அரசுப் பள்ளியில் ரோட்டரி அமைத்தது Posted: 24 Oct 2013 01:02 PM PDT புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்ட மாணவிகளுக்கான புதிய கழிப்பறை திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. |
| அரிமளத்தில் இன்றுஓட்டுநர் நலவாரிய பதிவு முகாம் Posted: 24 Oct 2013 01:01 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் தொழிலாளர் அலுவலகம் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சார்பில், ஓட்டுநர் நலவாரியத்துக்கு உறுப்பினர்களைப் பதிவு செய்யும் முகாம் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது. |
| வினாடி-வினாவில் வென்றோருக்கு பரிசு Posted: 24 Oct 2013 01:01 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் இந்திய தொழில்நுட்பக் கல்வி சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான வினாடி- வினா அண்மையில் நடைபெற்றது. |
| இலுப்பூரில் விவசாய தொழிலாளர்கள் உண்ணாவிரதம் Posted: 24 Oct 2013 01:01 PM PDT இலுப்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். |
| புதுகை கொலை வழக்கு: தஞ்சையில் ஒருவர் சரண் Posted: 24 Oct 2013 12:59 PM PDT புதுக்கோட்டையில் நிகழ்ந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இளைஞர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். |
| கொக்கு சுட்டபோது சிறுவன் காயம் Posted: 24 Oct 2013 12:59 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே வியாழக்கிழமை கொக்கு சுட்டபோது குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்தான். |
| பள்ளிகளிலும் "கவின்மிகு தஞ்சை' இயக்கம் Posted: 24 Oct 2013 12:59 PM PDT தஞ்சாவூரில் பள்ளிகளுக்கும் கவின்மிகு தஞ்சை இயக்கம் கொண்டு செல்லப்படுகிறது என்றார் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தரும், கவின்மிகு தஞ்சை இயக்கத் தலைவருமான நல். ராமச்சந்திரன். |
| தமிழில் சிறந்த நாவல்களை உருவாக்குதல் அவசியம் Posted: 24 Oct 2013 12:59 PM PDT தமிழில் சிறந்த நாவல்களை உருவாக்கும் பணி அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் எழுத்தாளர் பிரபஞ்சன். |
| 15 நாள்களில் பட்டா மாறுதல் ஆணை Posted: 24 Oct 2013 12:58 PM PDT பட்டா மாறுதலுக்கான ஆணைகள் விண்ணப்பித்த 15 நாள்களில் வழங்கப்படும் என்றார் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| Posted: 24 Oct 2013 12:58 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே குழந்தைத் தொழிலாளராக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை சைல்டுலைன் அமைப்பினர் வியாழக்கிழமை மீட்டனர். |
| கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது வழக்கு Posted: 24 Oct 2013 12:58 PM PDT தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசத்தில் சாதிப்பெயரைக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| கொலை வழக்கில் தேடப்பட்டவர் தஞ்சையில் சரண் Posted: 24 Oct 2013 12:58 PM PDT புதுக்கோட்டையில் நிகழ்ந்த கார் இடைத்தரகர் கொலைச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த இளைஞர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். |
| பேராவூரணி அருகே இளைஞரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு Posted: 24 Oct 2013 12:57 PM PDT பேராவூரணி அருகே இளைஞரைத் தாக்கிய 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பேராவூரணி அருகேயுள்ள சின்னதெற்குக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (28). |
| பேராவூரணி அருகே ஆற்றில் பெண் சடலம் Posted: 24 Oct 2013 12:57 PM PDT பேராவூரணி அருகே கல்லணை கால்வாய் புதுப்பட்டினம் 2 ஆம் நம்பர் வாய்க்காலில் துறவிக்காடு அருகே ஊதா நிறத்தில் ஜாக்கெட், பச்சைப் பாவாடை அணிந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஆற்றில் கரை ஒதுங்கியது. |
| நாகையில் தீபாவளி பலகாரம் தயாரிப்புக் கூடங்களில் திடீர் ஆய்வு Posted: 24 Oct 2013 12:57 PM PDT நாகையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக, இனிப்பு - காரம் உள்ளிட்ட உணவுப்பொருள்கள் தயாரிப்புக் கூடங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| வேதாரண்யத்தில் 245 பேருக்கு விரைவு பட்டா மாறுதல் ஆணை Posted: 24 Oct 2013 12:56 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் விரைவு பட்டா மாறுதல் முகாமில் மனு அளித்த 245 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட17 பேர் கைது Posted: 24 Oct 2013 12:56 PM PDT சீர்காழியை அடுத்த செம்மங்குடி கிராமத்தில் புதன்கிழமை இரவு பணம் வைத்து சூதாடியதாக 17 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 24 Oct 2013 12:56 PM PDT மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி பசுபசி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த மோகன் மனைவி சிவகாமசுந்தரி (48). இவர் வியாழக்கிழமை அதிகாலை, அவரது வீட்டின் வாசல் பகுதியில் உள்ள் பூச்செடியில் பூப்பறித்துக்கொண்டிருந்தாராம். |
| மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் திருட்டு Posted: 24 Oct 2013 12:55 PM PDT மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் திருட்டுமயிலாடுதுறை, அக். 24: |
| காங்கிரஸ் மதரீதியிலான தூண்டுதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது Posted: 24 Oct 2013 12:55 PM PDT காங்கிரஸ் மதரீதியிலான தூண்டுதல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் குற்றஞ்சாட்டினார். |
| Posted: 24 Oct 2013 12:55 PM PDT திருவாரூரில் புதன்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழ்தார். |
| சிறுபான்மையினர் ஆணைய ஆலோசனைக் கூட்டம் Posted: 24 Oct 2013 12:54 PM PDT திருவாரூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 24 Oct 2013 12:54 PM PDT திருநள்ளாறு பகுதியில் இயங்கும் தனியார் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்தவர், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். |
| 2,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின Posted: 24 Oct 2013 12:54 PM PDT திருவாரூர் அருகே நன்னிலத்தில் சுமார் 2,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. |
| Posted: 24 Oct 2013 12:53 PM PDT |
| ஸ்விஸ் டென்னிஸ்: காலிறுதியில் ஃபெடரர் Posted: 24 Oct 2013 12:51 PM PDT ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் உள்ளூர் நாயகன் ரோஜர் ஃபெடரர். |
| சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச் அபாரம் Posted: 24 Oct 2013 12:50 PM PDT ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மெய்ன் அணி வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் 4 கோல்கள் அடித்து அசத்தினார். |
| டிஎன்சிஏ அணிகளுக்கு ஸ்பான்ஸர்: ஸ்ரீராம் குழுமம் அறிவிப்பு Posted: 24 Oct 2013 12:49 PM PDT தமிழக கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) சார்பாக உள்ள அனைத்து மாநில அணிகளுக்கும் ஸ்பான்ஸர் செய்வதாக நிதி நிறுவனமான ஸ்ரீராம் குழுமம் அறிவித்துள்ளது. |
| சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஜான்கோவிச் வெற்றி; அசரென்காவுக்கு பின்னடைவு Posted: 24 Oct 2013 12:49 PM PDT மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வார் என்று கருதப்படும் வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா, பின்னடைவைச் சந்தித்துள்ளார். |
| பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஸ்மித் இரட்டைச் சதம்; தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு Posted: 24 Oct 2013 12:47 PM PDT தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், டி வில்லியர்ஸின் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அந்த அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. |
| முதல் தர ஒருநாள் ஆட்டம்: இரட்டைச் சதத்தை தவறவிட்டார் வார்னர்! Posted: 24 Oct 2013 12:46 PM PDT முதல் தர ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற சாதனையை 3 ரன்களில் தவறவிட்டார் டேவிட் வார்னர். |
| எஃப்1 பந்தயத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு Posted: 24 Oct 2013 12:45 PM PDT எஃப்1 பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. |
| எஃப்1 கார் பந்தயம்: 2013 சாம்பியன்ஷிப்பை முடிவு செய்யும் இந்திய கிராண்ட்ப்ரீ? Posted: 24 Oct 2013 12:44 PM PDT கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஃபார்முலா 1 (எஃப்1) சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஜெர்மனியின் செபாஸ்தியன் வெட்டல், இந்த ஆண்டும் பட்டம் வெல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. |
| கிராமங்களைப் புறக்கணித்து தடம்மாறி இயங்கும் மினி பஸ்களின் அனுமதியை ரத்து செய்யக் கோரிக்கை Posted: 24 Oct 2013 12:42 PM PDT கிராமங்களைப் புறக்கணித்து, தடம்மாறி இயங்கும் மினி பஸ்களின் அனுமதியை ரத்து செய்ய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியை கேட்டுக் கொண்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |