Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பட்டா கோரி முதல்வருக்கு மனு
- 5 மாநில பேரவைத் தேர்தல்: "நோட்டா' பொத்தானை பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
- உண்ணாவிரதம் இருந்த 7 கல்லூரி மாணவர்கள் கைது
- மினி பேருந்து மோதி ஒருவர் சாவு
- இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது
- காரைக்காலில் நூல் வெளியீட்டு விழா
- செயற்கைகோள் பயன்பாடு குறித்து அறிவியல் விஞ்ஞானி விளக்கம்
- "அம்மா' திட்டத்தில் 28,938 பேர் பயனடைந்துள்ளனர்
- மஞ்சக்குடியில் மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு
- நாகை மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல்
- மரக்கடை பள்ளியில்ஆங்கில வழிக் கல்வி பயிற்சி முகாம்
- எறிபத்த நாயனார் விழா
- திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது
- அக்.15-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- பெரம்பலூரில் அக். 19-ல் விளையாட்டுப் போட்டிகள்
- "வன உயிரினங்களைப் பாதுகாப்பது கடமை'
- விவேகானந்தர் ரத யாத்திரைக்கு வரவேற்பு
- பெண் குழந்தைகள் தின பேரணி
- சிறுதொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பங்கு மூலதனத் தொகை அதிகரிப்பு
- "பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக'
- விபத்தில் காலைஇழந்தவருக்கு திருநாவுக்கரசர் உதவி
- என்.சி.சி. மாணவர்களின் புகையிலை ஒழிப்பு பேரணி
- "தகுதியுள்ளோர் வாக்காளர்களாக கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்'
- அக். 17-ல் இலுப்பூரில் விரைவு பட்டா மாறுதல் திட்ட சிறப்பு முகாம்
- இழப்பீடு பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்
- இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை: சீமான்
- ராம ஜென்ம பூமியில் கோயில்: உ.பி. அரசின் கடிதத்தால் சர்ச்சை
- சிலை திருட முயன்ற 5 பேர் கைது
- 51 பள்ளிகளுக்கு 12,000 விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினிகள்
- மளிகைக் கடையில் ரூ. 32 ஆயிரம் திருட்டு
- கொரநாட்டு கருப்பூரில் "அம்மா' திட்ட 2-வது சுற்று தொடக்கம்
- நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் சுற்றிவளைப்பு
- மாதிரி விமானம் வடிவமைத்த பல்கலை. மாணவர்கள்
- விவசாயத்துக்கு முறைவைக்காமல்தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
- ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை மும்முரம்
- திருவாரூரில் உழவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்
- "முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை அவசியம்'
- நூலகங்களில்இலக்கிய சிற்றிதழ்களை பாகுபாடின்றி வாங்க வலியுறுத்தல்
- வாக்காளர் சேர்க்கை பணியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்
- நாளை முதல் கடலுக்குள் செல்ல விசைப்படகு மீனவர்கள் முடிவு
- பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டு சென்ற2 மாணவர்கள் மயிலாடுதுறையில் மீட்பு
- அக். 31-க்குள் தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க அழைப்பு
- பெண்ணிடம் நகையைப் பறித்த நான்கு பேரில் ஒருவர் கைது.
- அரியமங்கலத்தில் இருதரப்பினர்களிடையே மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
- நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் 6 பேர் நாகையில் சிகிச்சைக்கு அனுமதி
- வேளாங்கண்ணியில் விடுதி உரிமையாளர் வீட்டில் திருட்டு
- வேலைவாய்பற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- போலி என்கவுன்ட்டர்: அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை
- பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க சாதகமான சூழல் இல்லை
- அசாமில் உல்பா தீவிரவாதி சுட்டுக் கொலை
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான 15 வழக்குகள் தவறானவை
- 493 மாணவிகளுக்கு மடிக்கணினி
- வீட்டுமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
- 18-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- ஓட்டப்பிடாரத்தில் விழிப்புணர்வுப் பேரணி
- மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
- ஆறுமுகனேரியில் கோவில் கொடை விழாக்கள் நிறைவு
- கறவைமாடு வளர்ப்பு பயிற்சி முகாம்
- சாயர்புரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
- எட்டயபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- கோவில்பட்டியில் கண் பரிசோதனை முகாம்
- அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது
- கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
- விளையாட்டுப் போட்டி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம்
- "துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'
- முற்றுகைப் போராட்ட முயற்சி: 142 பேர் கைது
- திருச்செந்தூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
- விண்வெளி வார விழா
- கைப்பேசியில் மின் கட்டண விவரம்'
- 246 பேருக்கு மடிக்கணினி
- மஸ்கட்: விபத்தில் குமரி மாவட்ட இளைஞர் சாவு
- கால்வாயில் தவறி விழுந்து பாசன உதவியாளர் சாவு
- குமரி மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
- இந்திய மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் வெறிச்செயல்
- 56 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் மின் கட்டணம் செலுத்தும் சேவை தொடக்கம்
- தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்
- வண்ணான்விளையில் கால்நடை பாதுகாப்பு முகாம்
- பத்மநாபபுரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் தெற்கு ரயில்வே முன்பதிவு மையம்
- போலி வயதுச் சான்றிதழ் அளித்த சமாஜவாதி எம்.எல்.ஏ. மீது வழக்கு
- சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் ஜெகன்மோகன் ரெட்டி
- பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- நாகர்கோவிலுக்கு பேச்சிப்பாறை நீர்: திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடிவு
- ஊழியர்களின் தொடர் போராட்ட எதிரொலி: ஆந்திர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.700 கோடி இழப்பு
- நாளை குமரி பகவதியம்மன் நவராத்திரி பரிவேட்டை
- தேசிய அறிவியல் மாநாடு வழிகாட்டுதல் பயிற்சி
- 17-ல் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் தொடக்கம்
- தீ விபத்து விழிப்புணர்வு முகாம்
- பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு
- 18-ல் சர்வதேச ஃபிடே செஸ் போட்டி தொடக்கம்
- பைக் திருட்டு வழக்கு: 2 பேர் கைது
- தக்கலையில் இலக்கியப் பயிலரங்கம்
- மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி
- போலி மது: தகவல் அளிக்க இலவச தொலைபேசி வசதி
- பள்ளியில் விண்வெளி வார விழா
- போதை ஊசி: 3 பேரிடம் விசாரணை
- அதிமுக பிரமுகர் வீட்டில் திருட்டு
| Posted: 12 Oct 2013 01:20 PM PDT தங்களது விவசாய நிலத்திற்கு தமிழ்நாடு சிறு இனாம் ஒழிப்பு சட்டத்தின் மூலம் ரயத்துவாரி பட்டா வழங்க வலியுறுத்தி தொண்டைமான் நல்லூர் சத்திரத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அனுப்பினர். |
| 5 மாநில பேரவைத் தேர்தல்: "நோட்டா' பொத்தானை பயன்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு Posted: 12 Oct 2013 01:20 PM PDT 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை (நோட்டா) என்ற பொத்தானை பயன்படுத்தும்படி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு மத்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. |
| உண்ணாவிரதம் இருந்த 7 கல்லூரி மாணவர்கள் கைது Posted: 12 Oct 2013 01:20 PM PDT கும்பகோணத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த கல்லூரி மாணவர்கள் 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| மினி பேருந்து மோதி ஒருவர் சாவு Posted: 12 Oct 2013 01:20 PM PDT தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை மினி பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். |
| இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது Posted: 12 Oct 2013 01:20 PM PDT இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ. |
| காரைக்காலில் நூல் வெளியீட்டு விழா Posted: 12 Oct 2013 01:19 PM PDT ""காரைக்கால் அம்மையார் வாழ்வும் வாக்கும்'' என்ற தலைப்பில் 3-ம் பதிப்பு நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. |
| செயற்கைகோள் பயன்பாடு குறித்து அறிவியல் விஞ்ஞானி விளக்கம் Posted: 12 Oct 2013 01:19 PM PDT விண்வெளி வாரத்தையொட்டி, காரைக்கால் பள்ளியில் செயற்கைகோள் பயன்பாடு குறித்து அறிவியல் விஞ்ஞானி விளக்கம் அளித்தார். |
| "அம்மா' திட்டத்தில் 28,938 பேர் பயனடைந்துள்ளனர் Posted: 12 Oct 2013 01:19 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 522 கிராமங்களில் நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 28,989 பயனாளிகளின் கோரிக்கை உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் சி. நடராசன். |
| மஞ்சக்குடியில் மனுநீதி நாள் முகாம்: நலத் திட்ட உதவிகள் அளிப்பு Posted: 12 Oct 2013 01:18 PM PDT குடவாசல் வட்டம், மஞ்சக்குடியில் அண்மையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 425 பயனாளிகளுக்கு ரூ. 44.61 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| நாகை மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல் Posted: 12 Oct 2013 01:18 PM PDT நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே வெள்ளிக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
| மரக்கடை பள்ளியில்ஆங்கில வழிக் கல்வி பயிற்சி முகாம் Posted: 12 Oct 2013 01:18 PM PDT மன்னார்குடியை அடுத்துள்ள மரக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 12 Oct 2013 01:17 PM PDT கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற எறிபத்த நாயனார் யானையை துணித்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். |
| திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றியவர் கைது Posted: 12 Oct 2013 01:17 PM PDT அரியலூர் அருகே திருமணம் செய்வதாகப் பெண்ணை ஏமாற்றியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| அக்.15-ல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 12 Oct 2013 01:17 PM PDT அரியலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (அக்.15) நடைபெறுகிறது. |
| பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 12 Oct 2013 01:17 PM PDT 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் அரியலூரில் வெள்ளிக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பெரம்பலூரில் அக். 19-ல் விளையாட்டுப் போட்டிகள் Posted: 12 Oct 2013 01:16 PM PDT பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் அக். 19-ல் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. |
| "வன உயிரினங்களைப் பாதுகாப்பது கடமை' Posted: 12 Oct 2013 01:16 PM PDT வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாப்பது நமது கடமை என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| விவேகானந்தர் ரத யாத்திரைக்கு வரவேற்பு Posted: 12 Oct 2013 01:16 PM PDT பெரம்பலூர் மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்த சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது |
| Posted: 12 Oct 2013 01:15 PM PDT சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சிறுதொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பங்கு மூலதனத் தொகை அதிகரிப்பு Posted: 12 Oct 2013 01:15 PM PDT தமிழகத்தில் சிறு-குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்காகவும், சிறு தொழில் நிறுவனத்தின் நிதி ஆதாரத்தை பெருக்கவும் அந்த நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.16 கோடி பங்கு மூலதனம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| "பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக' Posted: 12 Oct 2013 01:15 PM PDT பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இயக்கம் அதிமுக என்றார் அந்தக் கட்சியின் மாநில மகளிரணிச் செயலரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான எல். சசிகலா புஷ்பா. |
| விபத்தில் காலைஇழந்தவருக்கு திருநாவுக்கரசர் உதவி Posted: 12 Oct 2013 01:15 PM PDT திமுக முன்னாள் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அறந்தாங்கி வி.சி. செல்வம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நேரிட்ட சாலை விபத்தில் தனது வலது காலை இழந்தார். |
| என்.சி.சி. மாணவர்களின் புகையிலை ஒழிப்பு பேரணி Posted: 12 Oct 2013 01:14 PM PDT புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படையினர் பங்கேற்ற புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| "தகுதியுள்ளோர் வாக்காளர்களாக கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும்' Posted: 12 Oct 2013 01:14 PM PDT வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ளவர்களை புதிய வாக்காளர்களாகச் சேர்ப்பதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜெ. சந்திரகுமார். |
| அக். 17-ல் இலுப்பூரில் விரைவு பட்டா மாறுதல் திட்ட சிறப்பு முகாம் Posted: 12 Oct 2013 01:14 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் வருகிற 17-ம் தேதி விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. |
| இழப்பீடு பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் Posted: 12 Oct 2013 01:13 PM PDT இந்திய தேசிய நெடுஞ்சாலை திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் கையகப்படுத்தப்பட்ட நில உடமைதாரர்கள் தாமதமின்றி விண்ணப்பித்து இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம். |
| இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை: சீமான் Posted: 12 Oct 2013 01:13 PM PDT ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை என்றார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான். |
| ராம ஜென்ம பூமியில் கோயில்: உ.பி. அரசின் கடிதத்தால் சர்ச்சை Posted: 12 Oct 2013 01:13 PM PDT அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் கோயில் கட்டுவது தொடர்பான உத்தரப் பிரதேச அரசின் கடிதத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. |
| Posted: 12 Oct 2013 01:13 PM PDT தோகைமலை அருகே கோயில் சிலையை திருட முயன்ற 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். |
| 51 பள்ளிகளுக்கு 12,000 விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினிகள் Posted: 12 Oct 2013 01:12 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 பள்ளிகளுக்கு ஏறத்தாழ 12,000 விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினிகளை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை வழங்கினார். |
| மளிகைக் கடையில் ரூ. 32 ஆயிரம் திருட்டு Posted: 12 Oct 2013 01:12 PM PDT தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை நடராஜன் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (50). இவர் இதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு கடையைப் பூட்டிச் சென்ற இவர் மீண்டும் |
| கொரநாட்டு கருப்பூரில் "அம்மா' திட்ட 2-வது சுற்று தொடக்கம் Posted: 12 Oct 2013 01:12 PM PDT கும்பகோணம் வட்டம், கொரநாட்டுகருப்பூரில் "அம்மா' திட்ட சிறப்பு முகாமின் இரண்டாவது சுற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| நவீன ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் சுற்றிவளைப்பு Posted: 12 Oct 2013 01:12 PM PDT இந்திய கடல் பகுதிக்குள் நவீன ஆயுதங்களுடன் நுழைந்த வெளிநாட்டுக் கப்பலை கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவினர், சனிக்கிழமை அதிகாலை சுற்றி வளைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. |
| மாதிரி விமானம் வடிவமைத்த பல்கலை. மாணவர்கள் Posted: 12 Oct 2013 01:12 PM PDT தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பயிலரங்கத்தில் மாணவர்கள் மாதிரி விமானங்களை வடிவமைத்து இயக்கினர். |
| விவசாயத்துக்கு முறைவைக்காமல்தண்ணீர் திறக்க வலியுறுத்தல் Posted: 12 Oct 2013 01:11 PM PDT காவிரி டெல்டா மாவட்டங்களில் தடையின்றி விவசாயப் பணிகள் நடைபெற முறைவைக்காமல் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு வலியுறுத்தியுள்ளது. |
| ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை மும்முரம் Posted: 12 Oct 2013 01:11 PM PDT ஆயுத பூஜையையொட்டி, காரைக்காலில் பூஜைப் பொருள்களான வாழைக்கன்று, தென்னை தோரணம், பூ வியாபாரம் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் களைகட்டியது. |
| திருவாரூரில் உழவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் Posted: 12 Oct 2013 01:11 PM PDT திருவாரூரில் மான்சாண்டோ நிறுவன எதிர்ப்பு நாளையொட்டி, பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் உழவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| "முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை அவசியம்' Posted: 12 Oct 2013 01:10 PM PDT மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு தன்னம்பிக்கை அவசியம் என்றார் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ். |
| நூலகங்களில்இலக்கிய சிற்றிதழ்களை பாகுபாடின்றி வாங்க வலியுறுத்தல் Posted: 12 Oct 2013 01:10 PM PDT அரசு நூலகங்களில் அனைத்து வகையான தமிழ் நூல்கள், இலக்கிய சிற்றிதழ்கள், நாளிதழ்களை பாகுபாடின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| வாக்காளர் சேர்க்கை பணியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் Posted: 12 Oct 2013 01:10 PM PDT வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை சேர்க்கும் பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்றார் ஆட்சியர் சி. நடராசன். |
| நாளை முதல் கடலுக்குள் செல்ல விசைப்படகு மீனவர்கள் முடிவு Posted: 12 Oct 2013 01:09 PM PDT கடந்த 38 நாள் போராட்டத்தை கைவிட்டு, திங்கள்கிழமை முதல் கடலுக்குள் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். |
| பெற்றோர் திட்டியதால் வீட்டைவிட்டு சென்ற2 மாணவர்கள் மயிலாடுதுறையில் மீட்பு Posted: 12 Oct 2013 01:09 PM PDT மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை சுற்றித் திரிந்த நாகையைச் சேர்ந்த 2 மாணவர்களை போலீஸார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். |
| அக். 31-க்குள் தொழிற்சாலைகள் உரிமம் புதுப்பிக்க அழைப்பு Posted: 12 Oct 2013 01:09 PM PDT திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகளை 2014ஆம் ஆண்டுக்கான உரிமம் புதுப்பிக்க வரும் அக். 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தொழிலகப் பாதுகாப்புத் துறை அழைப்புவிடுத்துள்ளது. |
| பெண்ணிடம் நகையைப் பறித்த நான்கு பேரில் ஒருவர் கைது. Posted: 12 Oct 2013 01:08 PM PDT திருச்சி பெரியக்கடைவீதியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்த சென்ற நான்கு பேரில் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். மற்ற மூன்று பேரை தேடிவருகின்றனர் |
| அரியமங்கலத்தில் இருதரப்பினர்களிடையே மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு Posted: 12 Oct 2013 01:08 PM PDT திருச்சி அரியமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இருதரப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீöது போலீஸார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர் |
| நாகை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் 6 பேர் நாகையில் சிகிச்சைக்கு அனுமதி Posted: 12 Oct 2013 01:07 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்ட வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை மீனவர்களின் தாக்குதலுக்குள்ளாகி வெள்ளிக்கிழமை கரை திரும்பினர். |
| வேளாங்கண்ணியில் விடுதி உரிமையாளர் வீட்டில் திருட்டு Posted: 12 Oct 2013 01:06 PM PDT நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் ஒருவரின் வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் திருட்டுப் போனது சனிக்கிழமை தெரியவந்தது. |
| வேலைவாய்பற்ற மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 12 Oct 2013 01:06 PM PDT நாகை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| Posted: 12 Oct 2013 01:05 PM PDT |
| Posted: 12 Oct 2013 01:05 PM PDT |
| போலி என்கவுன்ட்டர்: அமித் ஷாவிடம் சிபிஐ விசாரணை Posted: 12 Oct 2013 01:01 PM PDT கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. |
| பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க சாதகமான சூழல் இல்லை Posted: 12 Oct 2013 01:00 PM PDT பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்படவில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். |
| அசாமில் உல்பா தீவிரவாதி சுட்டுக் கொலை Posted: 12 Oct 2013 01:00 PM PDT அசாமில் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் உல்பா தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதிவான 15 வழக்குகள் தவறானவை Posted: 12 Oct 2013 12:49 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகள் தவறானவை என, சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கண்டறியப்பட்டது. |
| Posted: 12 Oct 2013 12:49 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 493 மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| வீட்டுமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம் Posted: 12 Oct 2013 12:48 PM PDT தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட செல்வநாயகிபுரம் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் முன்னணியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| 18-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 12 Oct 2013 12:48 PM PDT தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்டோபர் 18-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஓட்டப்பிடாரத்தில் விழிப்புணர்வுப் பேரணி Posted: 12 Oct 2013 12:48 PM PDT ஓட்டப்பிடாரம் வட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தருவைக்குளம் கிராமத்தில் புனித கேத்ரினா நடுநிலைப் பள்ளியில், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வுப் பேரணி, கலைவிழா நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் Posted: 12 Oct 2013 12:48 PM PDT தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஸ்டெர்லைட் இளம் மொட்டுக்கள் திட்டத்தின் இரண்டாம் ஆண்டின் தொடக்க விழா தாளமுத்துநகர் ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது |
| ஆறுமுகனேரியில் கோவில் கொடை விழாக்கள் நிறைவு Posted: 12 Oct 2013 12:47 PM PDT ஆறுமுகனேரியில் உள்ள கோவில்களில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற கொடை விழாக்கள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன. |
| கறவைமாடு வளர்ப்பு பயிற்சி முகாம் Posted: 12 Oct 2013 12:47 PM PDT :தமிழக அரசின் இலவச கறவை பசு மாடு பயனாளிகளுக்கான கறவைமாடு வளர்ப்புப் பயிற்சி முகாம் ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது. |
| சாயர்புரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் Posted: 12 Oct 2013 12:47 PM PDT சாயர்புரம் போப் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| எட்டயபுரம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு Posted: 12 Oct 2013 12:46 PM PDT எட்டயபுரம் அரண்மனை சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனாய வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் கண் பரிசோதனை முகாம் Posted: 12 Oct 2013 12:46 PM PDT புத்துயிர் ரத்ததானக் கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, டி.சி.டபிள்யூ. பவுன்டேஷன், தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது Posted: 12 Oct 2013 12:46 PM PDT கோவில்பட்டி அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். |
| கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 12 Oct 2013 12:45 PM PDT கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது. |
| விளையாட்டுப் போட்டி: கோவில்பட்டி பள்ளி சிறப்பிடம் Posted: 12 Oct 2013 12:45 PM PDT :புதூரில் நடைபெற்ற கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகளில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது. |
| "துப்புரவுப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 12 Oct 2013 12:45 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் துப்புரவுப் பணியாளர் பணியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| முற்றுகைப் போராட்ட முயற்சி: 142 பேர் கைது Posted: 12 Oct 2013 12:45 PM PDT தாதுமணல் கொள்ளையில் ஈடுபடுவோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 142 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| திருச்செந்தூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு Posted: 12 Oct 2013 12:45 PM PDT திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் உள்ள புனித சூசை அறநிலையத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| Posted: 12 Oct 2013 12:44 PM PDT திருச்செந்தூர் ஸ்டார்ஸ் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக விண்வெளி வார விழா நடைபெற்றது. |
| கைப்பேசியில் மின் கட்டண விவரம்' Posted: 12 Oct 2013 12:44 PM PDT திருச்செந்தூர் கோட்டத்துக்கு உள்பட்ட மின் இணைப்புகளுக்கான கட்டண விவரங்களை கைப்பேசியில் தெரிந்து கொள்ளும் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு, நுகர்வோர்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. |
| Posted: 12 Oct 2013 12:44 PM PDT எட்டயபுரம் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| மஸ்கட்: விபத்தில் குமரி மாவட்ட இளைஞர் சாவு Posted: 12 Oct 2013 12:43 PM PDT மஸ்கட்டில் கேஸ் லாரி வெடித்த விபத்தில் குமரி மாவட்ட இளைஞர் வியாழக்கிழமை இறந்தார். |
| கால்வாயில் தவறி விழுந்து பாசன உதவியாளர் சாவு Posted: 12 Oct 2013 12:43 PM PDT குலசேகரம் அருகே சனிக்கிழமை கால்வாயில் தவறி விழுந்து பாசன உதவியாளர் உயிரிழந்தார். |
| குமரி மாவட்ட இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் Posted: 12 Oct 2013 12:42 PM PDT குமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| இந்திய மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் வெறிச்செயல் Posted: 12 Oct 2013 12:42 PM PDT சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்த இந்திய மீனவர்களில் ஒருவரை பாகிஸ்தான் கடல் பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. மேலும் 30 மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது. |
| 56 தொடக்க கூட்டுறவு வங்கிகளில் மின் கட்டணம் செலுத்தும் சேவை தொடக்கம் Posted: 12 Oct 2013 12:42 PM PDT :கன்னியாகுமரி மாவட்டத்தில் 56 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 12 Oct 2013 12:42 PM PDT :நாகர்கோவிலில் தேமுதிக கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் Posted: 12 Oct 2013 12:42 PM PDT கர்நாடகத்தில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| வண்ணான்விளையில் கால்நடை பாதுகாப்பு முகாம் Posted: 12 Oct 2013 12:42 PM PDT வெள்ளிமலை பேரூராட்சி, வண்ணான்விளை கிராமத்தில் சிறப்பு கால்நடைப் பாதுகாப்புத் திட்ட முகாம் நடைபெற்றது. |
| பத்மநாபபுரம் நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் தெற்கு ரயில்வே முன்பதிவு மையம் Posted: 12 Oct 2013 12:41 PM PDT தக்கலை காமராஜர் பேருந்து நிலையத்தில் செயல்படும் தெற்கு ரயில்வே முன்பதிவு மையத்தில் அனைத்து தடங்களுக்கான ரயில்வே டிக்கட்டுகள், தட்கல், முன்பதிவு போன்ற வசதிகள் உள்ளன என பத்மநாபபுரம் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி தெரிவித்துள்ளார். |
| போலி வயதுச் சான்றிதழ் அளித்த சமாஜவாதி எம்.எல்.ஏ. மீது வழக்கு Posted: 12 Oct 2013 12:41 PM PDT உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜவாதி கட்சி சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. ஒருவர், தேர்தலில் போட்டியிடுவதற்காக போலியான வயது சான்றிதழை அளித்துள்ளதாக கூறப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் ஜெகன்மோகன் ரெட்டி Posted: 12 Oct 2013 12:40 PM PDT உண்ணாவிரதம் இருந்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி சிகிச்சைக்குப் பிறகு, வீடு திரும்பினார். |
| பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு Posted: 12 Oct 2013 12:40 PM PDT எட்டயபுரம் அரண்மனை சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி உடனாய வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| நாகர்கோவிலுக்கு பேச்சிப்பாறை நீர்: திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர முடிவு Posted: 12 Oct 2013 12:40 PM PDT பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் நகரின் குடிநீருக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஊழியர்களின் தொடர் போராட்ட எதிரொலி: ஆந்திர போக்குவரத்து கழகத்திற்கு ரூ.700 கோடி இழப்பு Posted: 12 Oct 2013 12:40 PM PDT ஆந்திரத்தை இரண்டாகப் பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இரண்டு மாத காலமாக நடத்திய தொடர் போராட்டத்தினால் அம்மாநில போக்குவரத்துக் கழகத்திற்கு சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| நாளை குமரி பகவதியம்மன் நவராத்திரி பரிவேட்டை Posted: 12 Oct 2013 12:40 PM PDT கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை பாணாசூரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் பரிவேட்டை நடைபெறுகிறது. |
| தேசிய அறிவியல் மாநாடு வழிகாட்டுதல் பயிற்சி Posted: 12 Oct 2013 12:39 PM PDT சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கான வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. |
| 17-ல் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் தொடக்கம் Posted: 12 Oct 2013 12:39 PM PDT :கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிளப்களுக்கு இடையேயான வாலிபால் போட்டிகள் நாகர்கோவிலில் அக்டோபர் 17 முதல் 19 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. |
| தீ விபத்து விழிப்புணர்வு முகாம் Posted: 12 Oct 2013 12:38 PM PDT தீபாவளி பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கத்தை தீயணைப்பு மீட்பு படையினர் பள்ளி மாணவர்கள் மத்தியில் செய்து காட்டினர். |
| பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு Posted: 12 Oct 2013 12:38 PM PDT ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. |
| 18-ல் சர்வதேச ஃபிடே செஸ் போட்டி தொடக்கம் Posted: 12 Oct 2013 12:38 PM PDT நாகர்கோவில் அருகே வின்ஸ் பொறியியல் கல்லூரியில் சர்வதேச ஃபிடே செஸ் போட்டி வெள்ளிக்கிழமை (அக்.18) தொடங்குகிறது. |
| பைக் திருட்டு வழக்கு: 2 பேர் கைது Posted: 12 Oct 2013 12:37 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய இருவரை தனிப்படை போலீஸார் கேரளத்தில் கைது செய்தனர். |
| தக்கலையில் இலக்கியப் பயிலரங்கம் Posted: 12 Oct 2013 12:37 PM PDT தக்கலையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இலக்கியப் பட்டறையின் முப்பதாவது பயிலரங்கம் தக்கலையில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மாணவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி Posted: 12 Oct 2013 12:37 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பில் வெற்றிபெற்ற, தவறிய மாணவர்களுக்கு குமரி மகாசபை அமைப்பு சார்பில் மூன்று மாத தொழிற்பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. |
| போலி மது: தகவல் அளிக்க இலவச தொலைபேசி வசதி Posted: 12 Oct 2013 12:37 PM PDT போலி மதுபானம் விற்பனை குறித்து பொதுமக்கள் ரகசிய தகவலை கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம் என பார் உரிமையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 12 Oct 2013 12:36 PM PDT ஈத்தாமொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக விண்வெளி வார விழா கொண்டாடப்பட்டது. |
| Posted: 12 Oct 2013 12:36 PM PDT நாகர்கோவிலில் போதை ஊசி கும்பலைச் சேர்ந்த மேலும் மூவரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். |
| அதிமுக பிரமுகர் வீட்டில் திருட்டு Posted: 12 Oct 2013 12:36 PM PDT சாத்தான்குளம் அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |