Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அறிவிக்க வருந்துகிறோம் - அன்பு தம்பி அருண் அவர்களின் தந்தையார் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டார்

Posted: 12 Oct 2013 11:51 AM PDT

அறிவிக்க வருந்துகிறோம் அன்பு தம்பி அருண் அவர்களின் தந்தையார் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணம் அடைந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.  அதிர்ச்சியில் என்ன எழுதுவது என்றே தெரியவில்லை ,  என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.  சில நிமிடம் முன்பு அருணிடம் பேசினேன் பஹ்ரைன் விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்ல காத்திருப்பதாக கூறினார். தம்பிக்கு இறைவன் துணை நின்று அவர் குடும்பத்தை ஆலமரமாக தாங்கும் சக்தியை கொடுக்க வேண்டுகிறேன். தம்பி அருண் அவர்களுக்கு ஆறுதல் ...

Excel-ல் உதவி தேவை

Posted: 12 Oct 2013 10:15 AM PDT

Excel‍ல் மாணவர்களின் இன்சியலை முன்னால் போட்டுவிட்டேன். அதனை பெயருக்குப் பின்னால் கொண்டு வர வேண்டும் முடியுமா?

யார் இவர்கள்? - விளையாட்டு

Posted: 12 Oct 2013 10:00 AM PDT

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. 

அட்சய பாத்திரம் - கேள்விகளை கேளுங்கள்

Posted: 12 Oct 2013 09:56 AM PDT

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்: வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

இதை பாருங்களேன் - மதுமிதா

Posted: 12 Oct 2013 09:55 AM PDT

அலோபதி சர்க்கரை நோய் வணிகம்!

Posted: 12 Oct 2013 08:54 AM PDT

முப்பது வயதைக் கடந்தாலே, சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. வீதிக்கு வீதி மருந்து நிறுவனப் படங்கள் பொறித்த குடைகளுக்குக் கீழ் நின்றுகொண்டு, சாலையில் போவோருக்கெல்லாம் 'இலவச சர்க்கரை'சோதனையும் செய்யப்படுகிறது. சில நூறு ரூபாய்கள் செலவழித்தால், சர்க்கரை சோதனை செய்யும் கையடக்க சாதனத்தை வீட்டிலேயே வாங்கி வைத்து தினசரி ஆகாரத்துக்கு முன்பும், பின்பும் சோதனை செய்து பார்த்துக்கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. தலைச்சுற்றல், மயக்கம், கை கால் நடுக்கம் போன்ற ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 12 Oct 2013 08:34 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)

Posted: 12 Oct 2013 07:13 AM PDT

கோயில் முன் பூமாலை வாங்க நின்றேன்- குழந்தையோடு பிச்சைக்காரி சாப்பாட்டுக்கு எதாவது குடு 'சாமி' பர்சை துலாவினேன் 1,2,5 சில்லறைகள்கள் இல்லை பத்து ரூபாய் நோட்டு தென்பட 'சில்லறை இல்ல போமா' என்றேன். "அப்பா பத்து ரூபாயைக் கொடுத்துடுப்பா குழந்தைய பாக்கப் பாவமா இருக்கு" என்றான் மகன். கை, கால் நல்லாதானே இருக்கு போ… மா… தரிசனம் முடித்து- 100 ஐ மகனிடம் கொடுத்து உண்டியலில் போடு என்றேன். "ஏம்பா… சாமிக்கு கை, கால் நல்லா தானே இருந்திச்சி ஒடைஞ்சி போயில்லையே?" என்றான். டே… சாமி கண்ண ...

மண்வாசனை...!! (Mano Red)

Posted: 12 Oct 2013 07:04 AM PDT

மணக்கும் மண்குடிசைகள், ஒழுகா ஓட்டு வீடுகள், ஒதுங்கி நிற்கும் ஒற்றை பெரிய ஆலமரம், ஒய்யார அய்யனார் சாமி என மொத்தமும் சுத்தமாய் மண்வாசனையுடன் கிராமம்..!! புழுதி பறக்கும் தெரு, புரவியில் பறக்கும் வேகம், சட்டை கழற்றும் பொடுசுகள், சகதி மண் களங்கள், உருண்டு புரண்டு வீடு சேரும் வரை பூமி அன்னையின் மடியில்..!! ஓரமாய் நிற்கும் மாட்டுவண்டி, ஒரு பக்கம் மேயும் மாடு, துணையாய் மாட்டுக்காரன், தூரத்தில் பனிப்புல், இயற்கையுடன் காதல், வானின் மொத்த புகைப்படமும் இவர்களை சுற்றியே..!!! கட்டாந்தரை ...

கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ

Posted: 12 Oct 2013 06:56 AM PDT

¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 12 Oct 2013 06:54 AM PDT

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

இது ஹைக்கூ கவிதைகளா...??? (Mano Red)

Posted: 12 Oct 2013 06:50 AM PDT

இரக்கமில்லாமல் நீ எத்தனை முறை ஒப்பனை செய்து கொண்டாலும், பாழாய்ப் போன கண்ணாடிக்கு பொறாமையும்,ஏமாற்றமுமே மிச்சம்..!! யாருக்கு தெரியும்..? நீ கோலம் தான் போடுகிறாயா, இல்லை, புதியதொரு உலகம் படைக்கிறாயா என்று..!! நீ கண்களை மூடிக் கொண்டால் எல்லாம் சரியாகி விடுமா..?? மரியாதையாக சொல் உனக்கும் பூக்களுக்கும் என்ன தொடர்பு..?? இதெல்லாம் உனக்கே கொஞ்சம் அதிகமாக தெரியவில்லை...!! இன்னும் அழகு வேண்டுமென காகிதப் பூக்களை மிரட்டி கேட்கிறாய்...!! அடியே கிறுக்கி, எங்காவது ...

துப்பறியும் சாம்பு-தேவன்-முழு நூலும்

Posted: 12 Oct 2013 06:43 AM PDT




பதிவிறக்க:
துப்பறியும் சாம்பு-தேவன்-முழு நூலும்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 12 Oct 2013 06:37 AM PDT

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன? – (விடுகதை)

Posted: 12 Oct 2013 06:13 AM PDT

1) குற்றம் செய்யாமலே குடுமி பிடிக்கிறான்? - அது என்ன? - 2) குட்டை பனையில் எட்டுமுட்டி – அது என்ன? - 3) குட்டைப் பிள்ளைக்கு குறுணி நகை – அது என்ன? - 4) குட்டைத் தண்ணீரில் எட்டுக் கப்பல் – அது என்ன? - 5) குட்டை மரத்தில் கொட்டாப்புள்ளி – அது என்ன - 6) குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக உயிர் விடுவேன் – நான் யார்? - 7) குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன? - 8) ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது ...

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

Posted: 12 Oct 2013 06:04 AM PDT

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் ,அங்கேயே தங்கிவிட இயற்கை அனுமதிக்கவில்லை . மனித இனம் , தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பூமியின் பல்வேறு இடங்களுக்கும் இடம்  பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .பல்வேறு மாறுதல்கள் அடைந்த பிறகு நாடு என்ற அமைப்பு உருவானது . இன்றும் பல்வேறு விலங்குகள் தங்களுக்கென்று எல்லைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றன . தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கை அனுபதிப்பதில்லை . அது போலவே மனிதனும் தனக்கென்று எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்கிறான் . வீடு ,வயல் ,பாதை ,ஊர் ,வட்டம் ...

‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று எழுதியவர் திரு.வி.க!

Posted: 12 Oct 2013 04:56 AM PDT

> தேசப்பிதா 'காந்திஜியை' 'காந்தியடிகள்' என்று குறிப்பிட்டு பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான். சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை 'காந்தியடிகள்' என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க 'நவசக்தி' பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார். > அன்னிபெசண்ட் அவர்களை 'அன்னை வசந்தை' என்றே திரு.வி.க எழுதுவார்.  'வல்லரசு' என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான். > சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த ...

வீட்டைப் பராமரிப்போம்!

Posted: 12 Oct 2013 04:37 AM PDT

பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டையும், ரசித்து ரசித்து செய்த உள்அலங்காரங்களையும் பராமரிப்பதில்தான் வீட்டின் அழகே அடங்கியிருக்கிறது. "என் கடன் வீடு கட்டி முடிப்பதே" என்பதுடன் முடங்கிவிட்டால், அழகு ஒளிரும் இல்லத்துக்கு நாம் காரணகர்த்தாவாக இருக்க முடியாது. காலை முதல் இரவு வரை காத்திருக்கும் வேலைகளுக்கு நடுவே பராமரிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தினசரி வாழ்வியலோடு பராமரிப்பையும் சேர்த்துவிட்டால் கவலை இல்லை. வீடு விசாலமாகத் தோற்றமளிக்க வேண்டுமென்றால், வீட்டில் ...

கள்ளமற்ற சிரிப்பு - புகைப்படம் போடுங்க...

Posted: 12 Oct 2013 03:28 AM PDT



காளிதாசனிடம் போஜ ராஜன் கேட்டானாம்
"உலகத்தில் உவமை இல்லாதது எது என்று".
-
காளிதாசன் கொஞ்சமும் நேரம் கடத்தாமல்
சொன்னானாம் "குழந்தைகளின் சிரிப்பு"
என்று.
-
காரணம் குழந்தகளிடமிருந்து தான் கள்ளமற்ற
சிரிப்புத் தோன்றும்.
-
---------------------------------------------------------


திருக்குறளைப் படித்து இன்னா செய்யாமையை அறிந்த லியோ டால்ஸ்டாய்!

Posted: 12 Oct 2013 03:16 AM PDT

வள்ளுவர் வழியில் காந்தியார் - இரா. செழியன் இந்தியாவில் 1918க்குப் பிறகு ஒத்துழையாமைப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய காந்தியார் மகாத்மா என்று பாராட்டப்பட்டார். அதற்கு முன்னதாகவே அவருக்கு மகாத்மா என்ற சிறப்புப் பெயர் கவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் தரப்பட்டது என்று பலரால் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த காலத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, எம்.கே.காந்தி, காந்தி ஆகிய பெயர்களில்தான் அவர்களுடைய கட்டுரைகள், கடிதங்கள், குறிப்புகள் எல்லாம் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்த ...

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்!

Posted: 12 Oct 2013 12:12 AM PDT

மாணவர்களின் வன்முறை எண்ணத்துக்கு சினிமாவும் மதுவும் காரணம்: வைகோ தூத்துக்குடியில் பொறியியல் கல்லூரி முதல்வரை மாணவர்களே படுகொலை செய்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இத்தகைய வன்முறை இளம் உள்ளங்களில் வளர்வதற்கு, திரைப்படங்களின் வன்முறைக் காட்சிகளும், மதுவும் காரணம் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி அடுத்த வல்லநாட்டுக்கு அருகில் உள்ள குழந்தை ஏசு பொறியியல் கல்லூரியின முதல்வர் சுரேஷ், இன்று காலை, ...

பிரதமராக விரும்பும் பாக்., சிறுமி மலாலா

Posted: 11 Oct 2013 11:59 PM PDT

நியூயார்க்: தலிபான் பயங்கரவாதிகளின், தாக்குதலுக்கு உள்ளான, சிறுமி மலாலா, ""பாகிஸ்தான் பிரதமர் ஆவதே என் லட்சியம்,'' என, கூறியுள்ளார். பாகிஸ்தானில், பெண் கல்விக்கு எதிராக, தலிபான்கள் குரல் கொடுத்து வந்தனர். இதை எதிர்த்து, பெண் கல்விக்கு ஆதரவாக, அந்நாட்டைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி மலாலா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனால், தலிபான்கள், மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், பலத்த காயமடைந்த மலாலா, லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயிர்பிழைத்தார். லண்டனில் குடியேறியுள்ள அவர், தன் படிப்பை ...

மஹாபாரதம்

Posted: 11 Oct 2013 11:43 PM PDT

மஹாபாரதம் தமிழ் MP3 ஆடியோ எங்கு கிடைக்கும்? கிருபானந்த வாரியார் பேசிய உரை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி!
ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்க்கு யாருடைய உரை (MP3) கிடைத்தாலும் பரவாயில்லை! ஜாலி

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -62)

Posted: 11 Oct 2013 11:42 PM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

மருத்துவமனைகளுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - தமிழகத்தில் அறிமுகம்

Posted: 11 Oct 2013 11:38 PM PDT

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தர அளவீடுகள் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன. காய்ச்சல், தலைவலி என்று சாதாரண மான நோய்கள் முதல் இதய அறுவை சிகிச்சை உள்பட மனிதர்களை அதிகம் அச்சுறுத்துகின்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் செல்கின்றனர். இவர்களில் சிலருக்கு மருத்துவமனை சார்ந்த கிருமிகளாலோ, மருத்துவ சிகிச்சையின்போது ஏற்படும் தவறுகளாலோ உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேற்கண்ட ...

தேவதச்சன் கவிதைகள்

Posted: 11 Oct 2013 11:03 PM PDT

காற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை காற்றில் அலைக்கழியும் வண்ணத்துப்பூச்சிகள், காலில் காட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன வெட்ட வெளியில் ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான் தூரத்து மேகங்களை சாலை வாகனங்களை மற்றும் சில ஆடுகளை. * பழத்தை சாப்பிட்டு விடு நாளைக்கென்றால் அழுகிவிடும் என்றாள் அம்மா வாங்கி விண்டு உண்டேன் இன்றை. நன்றி திண்ணை

தமிழில் GADGET - உதவி தேவை!

Posted: 11 Oct 2013 10:44 PM PDT

தமிழ் நாட்காட்டி, கடிகாரம், நாட் குறிப்பேடு - விண்டோஸில் உள்ளது போல
இவைகளை தமிழில் GADGET போல செய்து தரமுடியுமா?

உறவுகள் தெரிவிக்கவும்!

நன்றி
சாமி

நீங்களும் ஹேக் செய்யப்படலாம்?

Posted: 11 Oct 2013 10:17 PM PDT

என்ன நண்பர்களே தலைப்பை படித்ததும் அதிர்ச்சியடைந்து விட்டீர்களா? உங்கள் GMAIL மற்றும் FACEBOOK போன்ற கணக்குகள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் ஹேக் செய்யப்படலாம். இதில் GMAIL மற்றும் FACEBOOK போன்றநிறுவனங்களின் தவறுகள் எதுவுமே இல்லை. முற்றிலும் நாம் செய்யும் தவறுகளே நமக்கு ஆப்படிக்க ஆரம்பித்துவிடுகின்றன.ஹேக் செய்யப்படுவதிலிருந்து நமது கணக்குகளை பாதுகாப்பது எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. தயவுசெய்து இந்த வீடியோவினை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் ...

பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு

Posted: 11 Oct 2013 10:12 PM PDT

- உலகிலேயே அகிம்சை நெறியை முதன்முதலாக போதித்தவர் - மகாவீரர் - பாலகங்காதர திலகரின் சாட்டுப் பெயர் - லோகமான்ய - குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரின் பழைய பெயர் - கர்னாவதி - 'டாக்டர்' பாபா சாகேப் அம்பேத்கார்' என்ற திரைப்படத்தில் அம்பேத்கராக நடித்த நடிகர் - மம்முட்டி - வேலூரில் விடுதலை போராட்ட முதல் மாநில மாநாடு நடந்த ஆண்டு - 1940 - 'இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுப்படை' என்ற புரட்சி இயக்கத்தை உருவாக்கிய இருவரில் ஒருவர் பகத்சிங், மற்றொருவர் - சந்திர சேகர ஆஸாத் - ------------------------------------------------------------------------------

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 11 Oct 2013 09:57 PM PDT

9.10.2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/vb4gkwla11pwqb7/Kumudam9.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-பொதுஅறிவு உலகம் http://www.mediafire.com/download/97p9spr187ncc1f/Podhu-Arivu-Ulagam+1.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 10-10-2013-குமுதம் ரிப்போர்ட்டர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/ivxadhbhrlm2idi/Reporter10.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 11.10.2013-தினத்தந்தி வெள்ளிமலர் http://www.mediafire.com/download/vxkc5lmb1tcp26p/DTvellimalar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 7-10-2013-புதிய ...

விலையில்லா இலவசங்கள்...

Posted: 11 Oct 2013 08:53 PM PDT

"அட என்னங்க நீங்க! எனக்கு விஷயமே தெரியாதே! நாங்கள்ளாம் இப்படிக் குத்துக்கல்லாட்டம்(!) இருக்கிறப்போ எங்களை ஏன் பயன்படுத்திக்கவே இல்லை! நாங்க என்னவோ, நீங்க அருமையா சமாளிச்சு நடத்திக்கிட்டிருக்கீங்கன்னு நெனைச்சுப் போக, நீங்க என்னடான்னா எல்லாம் முடிஞ்சபிறகு இப்படி வந்து சொல்றீங்க! இப்படியா தயங்குகிறது எங்ககிட்டே? உங்களுக்கு செய்ய சந்தர்ப்பம் வராதான்னு காத்துக்கிட்டிருக்கோமே நாங்க! சொல்லப்போனா கடமையல்லவா பட்டிருக்கோம்" என்கிற பாணியில், ஒன்றைச் சாதிக்க முடியாமல் போன விஷயத்தில் எல்லாமே ...

அகராதிகள் பல படித்தும் புரியவில்லை..!

Posted: 11 Oct 2013 08:47 PM PDT

- ஊர்மரியாதை யாருக்கு சச்சரவில் சிறைவைப்பு கோவிலுக்குள் சிலைகள் *********** நள்ளிரவில் வியர்வை குளியல் மின்தடை ************ சாலையோரம் நிழல்தரும் அடுக்கு மாடி ********* காதல் தோல்வி கெளரவம் கிடைத்தது கவிஞன் ********* அகராதிகள் பலபடித்தும் அர்த்தம் புரியவில்லை காதல் ********** >குடந்தை அன்புமணி

விலையில்லா இலவசங்கள்...

Posted: 11 Oct 2013 07:40 PM PDT

ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா, ''ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார். மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர். அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார். வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது. அனால் எலித்தொல்லை குறையவில்லை. இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில் தெரிய ...

தமிழின் சில விவரங்கள்...8...!!!...இன்றைக்கு...!

Posted: 11 Oct 2013 07:37 PM PDT

அன்பர்களே, தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்... அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்... இஃது எட்டாவதாக.... கேட்பதற்கே ஒரு கிளர்ச்சி ஊட்டும் சொல். மனதில் ஏதே பல அலைகளை நாசுக்காக இட்டுச் செல்லும். அந்த அழுத்தத்தாலோ தெரியவில்லை சில தமிழருக்கு இதை பயன்படுத்த பிடிக்கவில்லை. "தமி" என்றால் தனித்துவமானது என்று பொருள் படும் என்று சிலர் ...

கொடுத்த முத்தங்கள் வீண்தானே..! - கவியருவி ம.ரமேஷ்

Posted: 11 Oct 2013 07:05 PM PDT

-
கண்ணை இறுக்கி
உன்னை
மனக்கண் நிறுத்தி
கொடுத்த
முத்தங்கள் எல்லாம்
வீண்தானே!
-
என்று கவிதை எழுத
முடிந்த உன்னால்
வேறு என்ன செய்ய முடிந்தது?
-
இன்று கவிதையாகவும்
கற்பனையாகவும்
தவிப்பது
நான் அல்லவா?
-
------------------
>கவியருவி ம.ரமேஷ்

ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

Posted: 11 Oct 2013 07:01 PM PDT

ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?

மேலும் பார்ட்டிசன் செய்வது எப்படி?

மவுன முத்தம்

Posted: 11 Oct 2013 06:56 PM PDT

அயர்ந்த தூக்கத்தை அலாரம் அவசரமாய் எழுப்ப… அதிவேகமாய் தொடங்குகிறது உன் அதிகாலை! - அவசரமாய் எழுந்து – சமைத்து குழந்தையை பள்ளிக்கு கிளப்பி என்னை அலுவலகம் அனுப்பி சாப்பிடாமலேயே… அலுவலக நேரம் கடந்து விட அடிபறியில் ஓடுவாய் - களைத்து திரும்புவாய்… மாலை கடந்த பொழுது! - அடுத்தடுத்து காத்திருக்கும் அழுக்குத் துணிகள்- கழுவாத பாத்திரங்கள் அடுத்த வேளை சமையல் வேலைகள்! - பாதி இரவில் நான் விழித்துப் பார்த்தால்… வளர்ந்த குழந்தையாய் உறங்கிக்கிடப்பாய்..! - நீயே அறியாமல் ஒரு ...

பெண் உரிமை பாடல்–வைரபாரதி

Posted: 11 Oct 2013 06:55 PM PDT

ஓம் ஷக்தி ஓம் ஷக்தி ஓம் பராஷக்தி பெண்மையை போற்றுடுவோம்! பாரதி பாடிவைத்தான் பெண்ணுரிமை ஷக்தியை காத்திடுவோம்! மங்கையர் தெய்வமேனும் மானிடரின் பாங்கினை போற்றிடுவோம்! கல்லென நிற்க வைத்தால் கயவர்கள் போக்கினை தூற்றிடுவோம்! ஆணும் பெண்ணும் ஒன்றேனும் அர்த்தநாரி சிவனை போற்றுகின்றோம்! பெண்களின் பேச்சுரிமை பொங்கிவர காதினை மூடுகின்றோம்! வீட்டுக்குள் பூட்டி வைக்கும் காலங்களை நாமிங்கு விரட்டி விட்டோம்! வர்த்தக ரீதியிலே பெண் மானத்தை காற்றிலே விட்டு விட்டோம்! கற்பங்கள் ஆணுக்கில்லை ...

வானத்தீர்த்தம்

Posted: 11 Oct 2013 06:55 PM PDT




-
பூமியை
மகிழ்விக்கிறது…
உன்னுடைய கூந்தலில் இருந்து
தவறி விழுந்த ரோஜா!
-
உனது முகத்தை
நனைத்த மழைத்தூறல்…
உன் அழகை
ஆசிர்வதிக்க
ஆண்டவன் தெளித்த தீர்த்தம்!
-
==============================
>பொ.ராஜா, சாலை புதூர்
நன்றி: வாராந்தரி ராணி

பொது அறிவு - விடை சொல்லுங்கள்

Posted: 11 Oct 2013 06:49 PM PDT

- !) வ.உ.சிதம்பரம்பிள்ளை செக்கிழுத்த சிறை எது? - 2) தாழ்த்தப்படவர்களுக்கு காந்திஜி வைத்த பெயர் என்ன? - 3) ஜாலியன் வாலாபாக் - அமைந்துள்ள மாநிலம் எது? - 4) 'அவ்வை இல்லம்' தொடங்கிய பெண்மணி யார்? - 5) மேல்சட்டை அணிய வசதி இல்லாத ஏழைக்குடும்பங்களைக் காந்திஜி கண்ட ஊர் எது? (தமிழ் நாட்டில் உள்ளது) - 6) ஆங்கிலத்தளபதி ராபர்ட் கிளைவின் கூட்டாளியாக இருந்தவர் யார்? - 7) காந்திஜிக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் பெயர் என்ன? - 8) இந்தியாவிலிருந்து வங்காளத்தை தனியாகப் பிரித்த ஆங்கில வைஸ்ராய் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™