Daily Thanthi |
- ஏற்காடு தொகுதியில் ரூ.10 லட்சம் வெள்ளிப்பொருட்கள் சிக்கின ரூ.3¾ லட்சம் ரொக்கம் பறிமுதல்
- முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெரிகின்றன இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் நிபுணர்கள் கருத்து
- கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது சென்செக்ஸ் 113 புள்ளிகள் வீழ்ச்சி
- ஐ.டி., மருந்து துறையின் முன்னேற்றத்தால் 213 நிறுவனங்களின் வருவாய் 14.5% அதிகரிப்பு
- பாராளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் காப்பீட்டு சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரம்
- ஸ்பெயின் நாட்டில் 6 கோடி டெலிபோன் பேச்சை அமெரிக்கா ஒட்டு கேட்டது: புதிய குற்றச்சாட்டு
- மும்பை கோர்ட்டில் இருந்து தப்பிய தீவிரவாதி அப்சல் உஸ்மானி மீண்டும் கைது
- டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அவதூறு வழக்கில் ஆஜராகாததால் கோர்ட்டு நடவடிக்கை
- பாட்னா தொடர்குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: பாரதீய ஜனதா
- இந்திய அழகி மனாசி மொகி
| ஏற்காடு தொகுதியில் ரூ.10 லட்சம் வெள்ளிப்பொருட்கள் சிக்கின ரூ.3¾ லட்சம் ரொக்கம் பறிமுதல் Posted: 28 Oct 2013 09:45 AM PDT வாழப்பாடி, ஏற்காடு தொகுதியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள் சிக்கின. மேலும், ரூ.3¾ லட்சம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தல் ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் 4–ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறார்கள். வெள்ளிப்பொருட்கள் சிக்கின |
| Posted: 28 Oct 2013 09:12 AM PDT புதுடெல்லி முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தெரிவதால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எச்.டீ.எஃப்.சி. வங்கியின் தலைமை பொருளியல் வல்லுனர் அபீக் பருவா இது குறித்து கூறுகையில், ''பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி ஏற்படவில்லையென்றாலும் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டைக் காட்டிலும் 2014–ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும்'' என்று தெரிவித்தார். நிதி அமைச்சர் |
| கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது சென்செக்ஸ் 113 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 28 Oct 2013 09:09 AM PDT மும்பை பங்கு வியாபாரம் தொடர்ந்து ஐந்தாவது தினமாக திங்கள்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 113 புள்ளிகளை இழந்தது. ஆக, பங்கு வியாபாரத்தில் கரடியின் ஆதிக்கம் நீடிக்கிறது. வட்டிச் செலவினம் பாரத ரிசர்வ் வங்கி இன்று வெளியிடும் பணக் கொள்கை ஆய்வு அறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டியை 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது என பெரும்பாலான பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வங்கிகளின் வட்டிச் செலவினம் அதிகரிப்பதுடன், கார், நுகர்வோர் சாதனங்கள் போன்றவற்றின் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. |
| ஐ.டி., மருந்து துறையின் முன்னேற்றத்தால் 213 நிறுவனங்களின் வருவாய் 14.5% அதிகரிப்பு Posted: 28 Oct 2013 09:08 AM PDT மும்பை நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 213 நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபம் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. மருந்து மற்றும் ஐ.டி. துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் செயல்திறனே இதற்கு முக்கிய காரணமாகும். சவால் |
| Posted: 28 Oct 2013 09:07 AM PDT புதுடெல்லி பாராளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவதற்கான சீர்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஒப்புதல் |
| ஸ்பெயின் நாட்டில் 6 கோடி டெலிபோன் பேச்சை அமெரிக்கா ஒட்டு கேட்டது: புதிய குற்றச்சாட்டு Posted: 28 Oct 2013 08:51 AM PDT மாட்ரிட் அமெரிக்காவின் உளவுப்பிரிவு நடத்திய உலக நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சு ஒட்டுக்கேட்பு மற்றும் உளவு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த செயலுக்காக அமெரிக்காவின் தோழமை நாடுகளான பிரான்சு, ஜெர்மனி ஆகியவை போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் டெலிபோனை 10 ஆண்டுகளாக ஒட்டு கேட்பதாகவும், இந்த விவகாரம் ஜனாதிபதி ஒபாமாவிற்கு 2010–ம் ஆண்டே தெரியும் என்றும் ஆனாலும் அவர் தடுக்கவில்லை என்றும் பரபரப்பு தகவல் வெளியானது. |
| மும்பை கோர்ட்டில் இருந்து தப்பிய தீவிரவாதி அப்சல் உஸ்மானி மீண்டும் கைது Posted: 28 Oct 2013 08:43 AM PDT மும்பை, குஜராத் தலைநகர் ஆமதாபாத் நகரில் கடந்த 2008–ம் ஆண்டு 21 இடங்களில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் 56 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 37 வயதான முக்கிய தீவிரவாதி அப்சல் உஸ்மானியை மராட்டிய மாநில தீவிரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர். அவன் மீதான வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 20–ந்தேதி அப்சல் உஸ்மானி உள்பட 19 பேரை போலீசார் ஜெயிலில் இருந்து மோக்கா கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டு கட்டிடத்தில் இருந்து அப்சல் உஸ்மானி தப்பி ஓடிவிட்டான். |
| Posted: 28 Oct 2013 08:41 AM PDT புதுடெல்லி, டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித், அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால், அவருக்கு கோர்ட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. அவதூறு வழக்கு டெல்லி மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தா மீது டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித், டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். மாநகராட்சி தேர்தலில், தன்னை அநாகரிக வார்த்தைகளால் விஜேந்தர் குப்தா விமர்சித்ததாக ஷீலா தீட்சித் அவ்வழக்கில் குற்றம் சாட்டி இருந்தார். இவ்வழக்கில், கடந்த ஆகஸ்டு 6–ந் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. |
| பாட்னா தொடர்குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி: பாரதீய ஜனதா Posted: 28 Oct 2013 08:38 AM PDT பாட்னா, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்ட மைதானத்தில் தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் பலியானோர் குடும்பத்திற்கு பாரதீய ஜனதா கட்சி, தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. இந்த தகவலை பா.ஜ.கட்சியின் மூத்த தலைவர் கிரிராஜ்சிங் வெளியிட்டார். பலியானவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பீகார் மாநில முன்னாள் துணை முதல்–மந்திரி சுசில்குமார் மோடி, கட்சியின் பீகார் மாநில தலைவர் மங்கல் பாண்டே, நந்தகிஷோர் யாதவ் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். காயம் அடைந்தவர்களையும் பா.ஜ. தலைவர்கள் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். |
| Posted: 28 Oct 2013 08:36 AM PDT ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நவம்பர் 9–ந் தேதி நடைபெறும் பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க அழகிகள் குவிந்துள்ளனர். இதை முன்னிட்டு நடந்த அலங்கார தினம் அணிவகுப்பில் இந்திய அழகி மனாசி மொகி(4–வதாக இருப்பவர்) மற்றும் பல்வேறு நாட்டு அழகிகள் கலந்து கொண்ட போது எடுத்த படம். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |