Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிருதிவி ஏவுகணை சோதனை வெற்றி

Posted: 06 Oct 2013 10:58 PM PDT

இந்தியாவின் பாதுகாப்புக்காக பிருதிவி ரக ஏவுகணைகள் உருவாக்கப் பட்டுள்ளன. இதில் பிருதிவி– 2 ரக ஏவுகணைகள் சுமார் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. பிருதிவி–2 ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்கு சேர்க்கப்பட்டு விட்டது. இந்த ரக ஏவுகணையில் சுமார் 500 கிலோ முதல் 1000 கிலோ வரை எடை கொண்ட வெடி மருந்துகளை வைத்து பயன்படுத்த

பணம் சம்பாதிப்பதற்கு அரசியலே சிறந்த வழி: காங்கிரஸ் எம்.பி.

Posted: 06 Oct 2013 10:48 PM PDT

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை எம்.பி. சவுத்திரி பிரேந்தர் சிங் அம்பாலாவில் ஒரு கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது:– மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக முன்பு பலரும் அரசியலுக்கு வருவார்கள். ஆனால் இப்போது அந்த நிலை மாறி விட்டது. இப்போது ஏதாவது வேலை கிடைக்கா விட்டால் அரசியலுக்கு வந்து விடுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு

ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது: கூடுதல் கட்டணத்தை பரிசோதகர்கள் வசூலித்தனர்

Posted: 06 Oct 2013 09:29 PM PDT

பட்ஜெட் ஏற்பாடு டீசல் விலை உயர்வு, மின்கட்டணம் அதிகரிப்பு, இதர செலவின பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ரெயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க கடந்த பிப்ரவரி

டெல்லியில் இன்று சந்திரபாபு நாயுடு காலவரையற்ற உண்ணா விரதத்தை தொடங்கினார்

Posted: 06 Oct 2013 09:20 PM PDT

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிப்பதற்கு ராயலசீமா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கடந்த சில தினங்களாக உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. விஜயநகரம் பகுதியில் கலவரம் வெடித்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளனர். தொடர்ந்து ராயலசீமா பகுதியில் பதட்டம் நிலவுகிறது. தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்துக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது பல்வேறு கட்சிகள் அதற்கு ஆதரவு அளித்தன.

இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்: மத்திய அரசு வழங்குகிறது

Posted: 06 Oct 2013 08:41 PM PDT

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது. மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில், அதே சமயம் தரமான செல்போன்கள் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு செல்போன்கள் வழங்குவதன் மூலம் சமுதாய பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.4,850 கோடி செலவாகும் என்றும், இந்த நிதியை 'யூனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் பண்டு' (யு.எஸ்.ஓ.எப்) வழங்கும். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு விவசாயம், சுகாதாரம், கல்வி, நிதி சேவை, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அளிக்கப்படும். இதன் காரணமாக அவர்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது கிராமப்புற தொலைபேசி சேவைகளை அதிகரிப்பதால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் இதன் தாக்கம் தெரியும். பொருளாதார, சமுதாய சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களது வறுமை நிலையும் படிப்படியாக மறையும். அ

ஏர்-இந்தியாவைத் தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது: அஜித் சிங் அறிவிப்பு

Posted: 06 Oct 2013 05:29 PM PDT

ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் தனியார் வசம் அளிக்கப்படலாம் என்று சமீபத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சினரிடமிருந்து பெருத்த எதிர்ப்பு

ரூ.35 ஆயிரத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு டெல்லி சிறார் காப்பகத்தில் இருந்து 33 இளம் குற்றவாளிகள் தப்பியோட்டம்

Posted: 06 Oct 2013 04:57 PM PDT

சிறார்கள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 35 ஆயிரம் ரூபாயையும் கொள்ளையடித்துக் கொண்டு 33 இளம் குற்றவாளிகள் தப்பிச்சென்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் வரும் சிறை உடைப்பு காட்சிகளுக்கு சற்றும் குறையாமல் இந்த சாகசத்தை சிறுவர்கள் என கூறப்படும் குற்றவாளிகள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் சிறைக்கு சென்று லல்லுவை சந்தித்தார்

Posted: 06 Oct 2013 04:12 PM PDT

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவை சந்தித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் நலம் விசாரித்தார்

அன்னா ஹசாரே என்னுடன் இருந்தால் ஆம் ஆத்மி கட்சியின் பலம் மேலும் பெருகும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Posted: 06 Oct 2013 03:20 PM PDT

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரசுக்கு போட்டியாக பா.ஜ.க.வும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் மும்முரமாக களத்தில் குதிக்கின்றன

சல்மான் குர்ஷித் இன்று இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுமா?

Posted: 06 Oct 2013 02:54 PM PDT

மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் 2 நாள் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து விட்டதாக கூறி தமிழக மினவர்களை பிடித்து சிறையில் அடைக்கும் இலங்கை கடற்படையினர் அவர்களின் படகு

கைதிகளுக்கு மது சப்ளை செய்த சிறை வார்டன் கையும் களவுமாக பிடிபட்டார்

Posted: 06 Oct 2013 02:35 PM PDT

ஒடிசா மாநிலம், பெர்ஹம்பூர் மாவட்டத்தின் கோடாலா பகுதியில் உள்ள கிளை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு சிறை ஊழியர்களே மது வகைகளை சப்ளை செய்வதாக உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன

குஜராத் முதல் மந்திரியாக 13வது ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்கும் நரேந்திர மோடி

Posted: 06 Oct 2013 02:16 PM PDT

குஜராத் முதல் மந்திரியாக தொடர்ந்து 12 ஆண்டுகளை இன்று நிறைவு செய்யும் நரேந்திர மோடி, நாளை 13வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். குஜராத் முதல் மந்திரியாக இருந்த கேசுபாய் பட்டேலை அப்பதவியில் இருந்து விலக செய்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி 7-10-2001 அன்று நரேந்திர மோடியை முதல் மந்திரியாக்கினார்

2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை விட ரூ.68 கோடி அதிகம் செலவிட்ட பா.ஜ.க.

Posted: 06 Oct 2013 01:53 PM PDT

2009 பாராளுமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் செலவிட்ட தொகை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தற்போது வெளியாகியுள்ளது. ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் ரூ.380.04 கோடியும், கைப்பற்ற முயன்று தோற்றுப்போன பா.ஜ.க. ரூ.448.66 கோடியும் செலவிட்டுள்ளன

ரஷ்யா - சீனாவில் பிரதமர் மன்மோகன் சிங் 20, 22 தேதிகளில் சுற்றுப் பயணம்

Posted: 06 Oct 2013 01:35 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா மற்றும் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 20ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கும் பிரதமர் அணு விபத்து இழப்பீடு தொடர்பான இந்தியாவின் நிலையை விளக்கி கூறுவார்

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 2 போலீசார் டிஸ்மிஸ்

Posted: 06 Oct 2013 12:52 PM PDT

வழிதவறி தவித்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 2 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. சம்பவத்தன்று டெல்லி விகாஸ்புரியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே வழிதவறி வந்த இளம்பெண்ணை பார்த்த போலீஸ்காரர் அமீத் டோமர் என்பவர் அவளிடம் நைசாக பேசி அதே குடியிருப்பில் வசிக்கும் குர்ஜிந்தர் சிங் என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கே அமீத் டோமரும், குர்ஜித் சிங்கும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து விடுபட அவள் போட்ட கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள் மகளிர் அவசர உதவி மையத்துக்கு தகவல் அளித்தனர்.

டெல்லி பூங்காவில் அவசரமாக தரையிறங்கிய ராணுவ விமானம்

Posted: 06 Oct 2013 11:59 AM PDT

இந்திய விமானப்படை 8-10-1932 அன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, ஆண்டுதோறும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாப்படுகிறது. அன்றைய தினத்தில் வானில் சீறிப்பாயும் போர் விமானத்தை இயக்கும் விமானப்படையினர் பல்வேறு சாகசங்களை

மேற்கு வங்காளத்தில் மருமகளை கற்பழித்துக் கொன்ற மாமனார் கைது

Posted: 06 Oct 2013 11:45 AM PDT

மேற்கு வங்காள மாநிலம், பரதமன் மாவட்டம் சோர்டங்கா கிராமத்தை சேர்ந்த ராக்கி(20) என்பவர் மர்மமான முறையில் நேற்று முன்தினம் தூக்கில் பிணமாக தொங்கினார். இவரது கணவர் சஞ்ஜீவ் பெங்களூரில் வேலை செய்து வருவதால் தனது மாமனாரின் வீட்டில் ராக்கி வாழ்ந்து

தெலுங்கானா பிரச்சினை: சில சென்னை-ஆந்திரா ரெயில்கள் நாளை ரத்து

Posted: 06 Oct 2013 08:09 AM PDT

ஆந்திராப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்து 29-வது மாநிலத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஆந்திரப்பிரதேச மின்சார ஊழியர்களும் இப்போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதையடுத்து சென்னையிலிருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் சில ரெயில்கள் நாளை

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 25 பேர் பலி

Posted: 06 Oct 2013 07:15 AM PDT

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பருவமழை காரணமாக நேற்று இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இதில் அவுரங்பாத் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் மின்னல் தாக்கியது. அப்போது விளையாடிக்கொண்டிருந்த 4 குழந்தைகள் மற்றும் வயலில்

யுரேனியம் தாதுப்பொருளை உஸ்பெகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்

Posted: 06 Oct 2013 05:13 AM PDT

இந்தியா தனது அணுமின்உலைகளை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் திட்டத்தில் இருக்கின்றது. இதற்கான அதிகப்படி எரிபொருள் தேவைக்கான யுரேனியம் தாதுவை உஸ்பெகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யும் திட்டத்தில் இந்தியா இருக்கின்றது. இது குறித்து விவாதிக்க இந்திய அணுசக்தித் துறையின் அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வாரம் உஸ்பெகிஸ்தான் சென்றது. சென்ற மாதம் ரஷ்யாவின் தாஷ்கண்ட்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™