மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பாராளுமன்ற தேர்தல்: காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- கருத்து கணிப்பில் தகவல்
- கொழும்பில் காமன் வெல்த் மாநாடு: பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க முடிவு
- நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது
- மராட்டிய மாநிலத்தில் 3 போலீசார் சுட்டுக் கொலை: நக்சலைட்டுகள் அட்டூழியம்
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தனி தெலுங்கானா உருவாகும்: திக் விஜய்சிங் பேட்டி
- ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு
- திருப்பதி கோவில் தரிசன வரிசையில் துபாய் பக்தரிடம் ரூ.18 லட்சம் திருட்டு: வாலிபர் கைது
- சீமாந்திராவில் பஸ் போக்குவரத்து சீரானது: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு
- ஐதராபாத்தில் 28–ந்தேதி நடக்கும் ஜெகன்மோகன் கூட்டத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி
- உத்தரபிரதேசத்தில் சோனியாவை நோயாளியாக சித்தரித்து காங். விளம்பரப் பலகை
- புகையிலைக்கு வரிவிலக்கு அளித்து பீகார் அரசு உத்தரவு
- 2014 - பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு தகவல்
- குஜராத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை 3 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த 5 பேர் கைது
- ஷிர்டி சாய்பாபா ஆலயம் - பால் தாக்கரே நினைவிடத்தை குண்டு வைத்து தகர்ப்போம்: தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம்
- 2014ல் மத்திய ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என அத்வானி கூறியதை நான் நம்புகிறேன்: மோடி பேச்சு
- மத்தியபிரதேசம் நவராத்திரி விழா நெரிசலில் சிக்கி சிகிச்சை பெறுபவர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறுகிறார்
- ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க மாட்டேன்: குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபு பிடிவாதம்
- காஷ்மீர் குப்வாராவில் பதுங்கியிருந்த வெளிநாட்டு தீவிரவாதி சுட்டுக்கொலை
- மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்: 20 பேர் கைது
- தென் சீனக்கடலில் சுனாமி முன் எச்சரிக்கை மையத்தை நிர்மாணிக்கிறது இந்தியா
| பாராளுமன்ற தேர்தல்: காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- கருத்து கணிப்பில் தகவல் Posted: 16 Oct 2013 11:15 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக திகழும் என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற 2014–ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இது முடிந்ததும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும், இதர சிறிய கட்சிகளும் இப்போதே |
| கொழும்பில் காமன் வெல்த் மாநாடு: பிரதமர் மன்மோகன்சிங் புறக்கணிக்க முடிவு Posted: 16 Oct 2013 11:01 PM PDT இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின் போது லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தது. இதற்கு உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பில் இலங்கை அரசின் மனித உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக மக்கள் மற்றும் கட்சிகளின் வற்புறுத்தல் காரணமாக இந்திய அரசு அந்த தீர்மானத்தை ஆதரித்தது. |
| நரேந்திர மோடி அலையால் உ.பி., பீகாரில் காங். செல்வாக்கு இழக்கிறது Posted: 16 Oct 2013 10:55 PM PDT நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். |
| மராட்டிய மாநிலத்தில் 3 போலீசார் சுட்டுக் கொலை: நக்சலைட்டுகள் அட்டூழியம் Posted: 16 Oct 2013 10:52 PM PDT பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் அட்டூழியம் தொடர்கதையாக உள்ளது. நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய–மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. என்றாலும் அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக போலீசாரை குறி வைத்து தாக்குகிறார்கள். இந்த நிலையில் மராட்டிய போலீசார் மீது நக்சலைட்டுகள் இன்று |
| பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தனி தெலுங்கானா உருவாகும்: திக் விஜய்சிங் பேட்டி Posted: 16 Oct 2013 10:25 PM PDT ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள், பஸ் போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 1½ மாதங்களாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இப்போது பஸ் ஊழியர்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர். இதனால் பஸ் போக்குவரத்து தொடங்கியது. |
| ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு Posted: 16 Oct 2013 10:23 PM PDT பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்வரரு தலைமையில் மேல்சாந்தி தாமோதரன் போற்றி கோவில் நடையை திறந்து வைத்தார். |
| திருப்பதி கோவில் தரிசன வரிசையில் துபாய் பக்தரிடம் ரூ.18 லட்சம் திருட்டு: வாலிபர் கைது Posted: 16 Oct 2013 10:17 PM PDT ஆந்திராவில் பஸ் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று தர்ம தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆனது. துபாய் நாட்டில் குடியிருப்பவர் பிரசாந்த் சக்சேனா. இவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் திருமலை வந்தார். |
| சீமாந்திராவில் பஸ் போக்குவரத்து சீரானது: திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு Posted: 16 Oct 2013 10:09 PM PDT சீமாந்திராவில் பஸ் போக்குவரத்து தொடங்கியதும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. சீமாந்திராவில் பஸ் போக்குவரத்து தொடங்கிய 4 நாட்களிலேயே பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரத் தொடங்கி விட்டனர். பஸ்களிலும், நடைபாதைகளிலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. |
| ஐதராபாத்தில் 28–ந்தேதி நடக்கும் ஜெகன்மோகன் கூட்டத்திற்கு ஐகோர்ட்டு அனுமதி Posted: 16 Oct 2013 10:08 PM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி போராட்டங்கள் நடத்தினார். இந்த நிலையில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஐதராபாத்தில் வருகிற 19–ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்தார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கூட்டம் நடத்த ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால் பொதுக்கூட்டம் நடத்த கால அவகாசம் இல்லாததால் கூட்டத்தை 28–ந்தேதி நடத்த ஜெகன் மோகன்ரெட்டி முடிவு செய்து உள்ளார். பிரமாண்டமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் ஜெகன்மோகன்ரெட்டி பங்கேற்று பேசுகிறார். இதற்கிடையே ஜெகன் மோகன்ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகல் கவர்னர் நரசிம்மாவை சந்தித்து பேசுகிறார்கள். மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கவர்னரிடம் அவர்கள் மனு கொடுக்கிறார்கள். மேலும் இதுகுறித்து விவாதிக்க சட்டச |
| உத்தரபிரதேசத்தில் சோனியாவை நோயாளியாக சித்தரித்து காங். விளம்பரப் பலகை Posted: 16 Oct 2013 04:58 PM PDT உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க சிவில் லைன்ஸ் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி படங்கள் இடம் பெற்றிருந்தன |
| புகையிலைக்கு வரிவிலக்கு அளித்து பீகார் அரசு உத்தரவு Posted: 16 Oct 2013 03:20 PM PDT இந்தியாவின் புகையிலை விளைச்சலில் முக்கிய இடம் வகிக்கும் பீகாரில் புகையிலையின் மீதான வரிக்கு விலக்கு அளித்து முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்த விவசாயிகள் புகையிலை |
| 2014 - பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும்: கருத்துக் கணிப்பு தகவல் Posted: 16 Oct 2013 02:28 PM PDT 2014-பாராளுமன்ற தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, 2009 தேர்தலில் 259 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி |
| குஜராத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை 3 நாட்களாக அடைத்துவைத்து கற்பழித்த 5 பேர் கைது Posted: 16 Oct 2013 01:58 PM PDT குஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகேயுள்ள மபாடியா பாரா என்ற இடத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது பெண் பெற்றோருடன் வசித்து வந்தார். பலகாரம் தருவதாக ஆசைகாட்டி கடந்த 13ம் தேதி அப்பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டிற்கு நத்தா கோலி என்பவர் அழைத்து சென்றார். அந்த வீட்டில் |
| Posted: 16 Oct 2013 01:35 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா ஆலயத்தின் மீது நவம்பர் 9-ம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். ஷிர்டி ஆலய நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட அந்த கடிதத்தில் நவம்பர் 9ம் தேதி ஷிர்டி ஆலயத்தின் |
| 2014ல் மத்திய ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என அத்வானி கூறியதை நான் நம்புகிறேன்: மோடி பேச்சு Posted: 16 Oct 2013 11:52 AM PDT குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல் முறையாக நரேந்திர மோடியை அத்வானி பாராட்டியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. "மோடி பிரதமர் ஆனால் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைவேன். மோடியிடம் வழக்கத்திற்கு மாறான ஒரு தகுதி உள்ளது |
| Posted: 16 Oct 2013 11:34 AM PDT மத்தியபிரதேச மாநிலம் ததியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் துர்காதேவி கோவிலில் கடந்த 13-ம் தேதி நவராத்திரி விழா நடந்தது. அதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிந்து நதி பாலத்தின் வழியாக நடந்து சென்றனர். அவர்கள் தரிசனத்துக்காக பாலத்தின் மீது காத்து இருந்தனர் |
| ஆண்மை பரிசோதனைக்கு ஒத்துழைக்க மாட்டேன்: குஜராத் ஆஸ்பத்திரியில் ஆசாராம் பாபு பிடிவாதம் Posted: 16 Oct 2013 10:47 AM PDT குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவரை அவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி இரவு பாலியல் பலாத்காரம் |
| காஷ்மீர் குப்வாராவில் பதுங்கியிருந்த வெளிநாட்டு தீவிரவாதி சுட்டுக்கொலை Posted: 16 Oct 2013 09:08 AM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் அத்துமீறும் பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் போது தீவிரவாதிகளும் இடையே இந்தியாவிற்குள் ஊடுருவி வருகின்றனர். அப்படி ஊடுருவும் |
| மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்: 20 பேர் கைது Posted: 16 Oct 2013 08:08 AM PDT மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கள்ளக்காதல் ஜோடியை அரை நிர்வாணமாக்கி, கரிபூசி ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கிராமத்தில் வசித்து வந்த திருமணமான 35 வயது பெண் ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயது வாலிபருடன் தொடர்பு வைத்துள்ளார். அவர்கள் |
| தென் சீனக்கடலில் சுனாமி முன் எச்சரிக்கை மையத்தை நிர்மாணிக்கிறது இந்தியா Posted: 16 Oct 2013 07:44 AM PDT கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் 9.3 ரிக்டர் வரையிலான மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமியால் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. அப்போது 3 லட்சம் மக்கள் இறந்துபோயினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |