Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வேண்டாம் : நடுநிலையுடன் செயற்படுக‌ – ரவிநாத் ஆரியசிங்க

Posted: 09 Sep 2013 07:37 PM PDT

ravinath-ariyasinghe_CI

ravinath-ariyasinghe_CIஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாமல், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது ஆணையை நடுநிலையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று ஜெனிவாவுக்கான சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று ஆரம்பமான, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்காவில் தன்னைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ரவிநாத் ஆரியசிங்க, நவநீதம்பிள்ளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஐ.நா பிரதிநிதிக்கு சிறிலங்காவின் தற்போதைய நல்லிணக்க முயற்சிகள் குறித்து அறிந்து கொள்வதற்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளை குறிப்பிட்டது போன்று, அவரைச் சந்தித்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், புலம் பெயர்ந்துள்ள பிரிவினைவாத சக்திகளின் குற்றச்சாட்டே அது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனிதஉரிமை ஆர்வலர்களைப் பாதுகாக்கும் கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் கொண்டுள்ளதாகவும், எத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதுதொடர்பான ஆதாரங்களை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை – அனந்தி எழிலன்

Posted: 09 Sep 2013 07:15 PM PDT

elilans_wife_ananthi

elilans_wife_ananthiவன்னி இறுதி யுத்தத்தினில் மட்டும் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் வரை மரணமடைந்துள்ளதாக சர்வதேச தரப்புக்கள் அறிவித்துள்ளன.இலங்கை அரசின் இவ்வினப்படுகொலை தொடர்பினில் சர்வதேச விசாரணைகளை தமிழர்களாகிய நாம் கோரி வருகின்றோம்.இந்நிலையினில் கூட்டமைப்பின் தேர்;தல் விஞ்ஞாபனத்தினில் விடுதலைப்புலிகளது போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை தேவையென வலியுறுத்தப்படுவது தமிழ் மக்களது இலங்கை அரசின் இனப்படுகொலைக்கெதிரான விசாரணை கோருவதை மலினப்படுத்திவிடுவதாகவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தினில் இவ்விவகாரம் தொடர்பினில் தான் சம்மதித்திருக்கவில்லையென தெரிவித்ததுடன் இது தொடர்பினில்  தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.1990 இனில் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பாக இப்போதைய இனப்படுகொலையுடன்  ஒப்பிடுவது எவ்விதம் பொருந்துமென கேள்வி எழுப்பிய அவர் சர்வதேச விசாரணை தொடர்பாகவும் வலியுறுத்தினார்.

இலங்கை அரசு அமைத்திருக்கும் விசாரணை குழு வெறும் கண்துடைப்பேயென தெரிவித்த அவர் ஏற்கனவே இவ்வாறு அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் என்ன செய்தனவென கேள்வி எழுப்பினார்.நவிப்பிள்ளையுடனான சந்திப்பின் போது சர்வதேச விசாரணையாளர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்த அவர் அதுவே தற்போதைய தேவையெனவும் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை குறித்து மீண்டும் கவலை

Posted: 09 Sep 2013 06:58 PM PDT

nava

navaஇலங்கைக்கான தனது விஜயத்தின் போது தன்னை சந்தித்தவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறைகள், மற்றும் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் மீண்டும் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24வது மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

"இலங்கையில் புனர்நிர்மாணம், நல்லிணக்கம், போரின் பின்னரான பொறுப்புக் கூறல் ஆகியவற்றுடன், மத சகிப்பின்மை, ஆளுகையும் சட்டத்தின் ஆட்சியும் போன்ற பரந்துபட்ட மனித உரிமைகள் நிலவரம் ஆகியவற்றிலும் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து நானறிவதற்கு ஏதுவாக எனது அண்மைய விஜயத்துக்கு ஏற்பாடு செய்து உதவியமைக்காக நான் இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த மாநாட்டில், பின்னர் நடக்கவிருக்கும் மற்றுமொரு நிகழ்வில் இலங்கை குறித்த எனது அவதானங்களை நான் அறிக்கையிடுவேன். ஆனால், எனது விஜயத்தின் போது என்னைச் சந்தித்த மனித உரிமைக் காவலர்கள், செய்தியாளர்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய அடக்குமுறை, துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் குறித்து நான் எனது உடனடிக் கவலையையும் இங்கு வலியுறுத்த விழைகிறேன்." என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

இலங்கைக்கான அவரது விஜயத்தின் போது அவர் பலவிதமான விமர்சனங்களை இலங்கையின் கடும்போக்கு தேசியவாதிகளிடம் இருந்து எதிர்கொண்டார். சில அமைச்சரவை உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராக அவதூறாக கருத்து வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவரைச் சந்தித்த சில மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோர் மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

இவை குறித்து தனது இலங்கை விஜயத்தின் முடிவில் கூட நவிபிள்ளை அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தற்போது அது குறித்து அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 "ஐநாவுடனான ஒத்துழைப்பு, அதன் பிரதிநிதிகள், மற்றும் மனித உரிமைகளுக்கான பொறிமுறைகள்" குறித்த ஐநா தலைமைச் செயலரின் அறிக்கை இந்த மாநாட்டின் போது சமர்ப்பிக்கப்படும் என்றும், 2012 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் திகதி  முதல் 2013 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஐநாவுடன் ஒத்துழைத்ததற்காக அடக்குமுறைகளுக்கு உள்ளானார்கள், மிரட்டலுக்கு உள்ளானவர்கள் குறித்த விடயங்களும் அதில் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே இலங்கையில் ஐநா மனித உரிமைகள் ஆணையரைச் சந்தித்ததற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், செய்தியாளர்கள், மற்றும் சமூகத்தினர் மிரட்டப்பட்டதாகக் கூறி அவர்களது பாதுகாப்பு குறித்து நவி பிள்ளை அவர்கள் தனது உடனடிக் கவலையை வெளியிட்டமை குறித்து ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் தூதுவர் ஆரியசிங்க அவர்கள் பதிலளித்துள்ளார்.

ஆணையரின் விஜயத்தின் போதான சந்திப்புகள் ஐநாவின் கொழும்பு அலுவலகத்தால் சுயாதீனமாக ஏற்பாடு செய்யப்பட்டன என்று கூறியுள்ள அவர், இலங்கை அரசாங்கம், மனித உரிமை பாதுகாவலர்களுக்கான பாதுகாப்பை வழங்க அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், ஆகவே அப்படியான மிரட்டல், அல்லது தாக்குதல் சம்பவங்கள் ஏதாவது நடந்திருந்தால் அவை குறித்து குறிப்பான தகவல்களை ஐநா மனித உரிமைகள் ஆணையம் தந்து உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது – பன்னாட்டு இளைஞர் மாநாடு

Posted: 09 Sep 2013 09:33 AM PDT

1230

1230நவம்பர் 15 ஆம் தேதி தமிழர் குறுதி தோய்ந்த இலங்கைத் தீவில் 'காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டை' நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள். மார்ச் மாதத்தில் தமிழக மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டத்தை துச்சமென மதித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கையை பாதுகாத்த இந்தியா, இப்போது இனக்கொலையாளி இராசபக்சேவுக்கு 'காமன்வெல்த்தின் கெளரவத் தலைவர்' என்ற மகுடம் சூட்டப் போகின்றது. இலங்கை அரசானது - கடந்த 2009 ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒரு சிங்கள இனவெறி அரசு, போருக்குப் பின்னாலும், தமிழர் வாழ்விடங்களில் இலட்சக்கணக்கான சிங்கள இராணுவத்தினரை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு இராணுவ சர்வாதிகார அரசு தமிழர்களின் இந்து, இஸ்லாமிய, கிருத்துவ மத அடையாளங்களை அழித்து பெளத்த மயமாக்கி வரும் ஒரு பெளத்த மதவெறி அரசு. தமிழர்களின் தாயகப் பகுதியான வடகிழக்கை சிங்களமயமாக்கும் நோக்கத்தில் வேகமாக சிங்களர்களைக் குடியேற்றிவரும் ஒரு இன அழிப்பு அரசு.

இந்த இனக்கொலை இலங்கை அரசு மீது படிந்து கிடக்கும் அழிக்க முடியாத இரத்தக் கறையைத் துடைப்பதற்கான ஏற்பாடே அங்கு நடக்கப் போகும் காமன்வெல்த் மாநாடு. சேவ் தமிழ்ஸ் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவும் இணைந்து, தமிழினப் படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற முழக்கத்தோடு  சென்னையில் பன்னாட்டு இளைஞர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு மாணவர் இயக்கங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டு மாநாட்டு கோரிக்கைகளுக்கு வலு தமீழழத்திற்கான மாணவர் போராட்டக்குழுவின் மாணவர் திவ்யாவின் தலைமையில் காலை அமர்வு மாணவர்களின் அமர்வாக நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்திற்கு வெளியில் உள்ள இந்தியத் தொழில் நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், பிரித்தானியத் தமிழர் பேரவையின் (BTF) பிரதிநிதி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தமிழக வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், பேராசிரியர் பால் நியூமன்,மருத்துவர் எழிலன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தோழர் ச.இளங்கோவன் ஆகியோரும் இவ்வமர்வில் பங்கேற்று, ஏன் இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது என்பதை விளக்கியும், மாணவப் போராட்டங்களின் ஒருங்கிணைப்பையும் வலியுறுத்தியும் தமது கருத்துகளை பதிவு செய்தனர்.

தமிழக மாணவர் போராட்டத்தை வாழ்த்தியும் இம்மாநாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தெலுங்கானாவில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவத் தலைவர் அருணக் அவர்களும் தில்லிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிர்த்யுன் செய் அவர்களும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர். மேலும் உலகத் தமிழர் அமைப்பு (WTO), USTPAC, தமிழீழ மக்கள் அவை (ICET),நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் 'காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது' என்று கோரியும் இம்மாநாட்டை வாழ்த்தி செய்தி அனுப்பியிருந்தனர்.

தஞ்சை ரெங்கராஜ் கலைக்குழு அவர்களின் பறை இசையோடு துவங்கிய மாநாட்டின் பிற்பகல் நிகழ்வு

இந்நிகழ்வு கலை நிகழ்ச்சியோடு ஆரம்பமானது. கலை நிகழ்ச்சிக்கு பிறகு அரசியல் அமர்வு தொடங்கியது. மாலையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் தலைமையில் அரசியல் அமர்வு நடைபெற்றது. தமிழக அரசியல் தலைவர்கள் மதிமுக தலைவர் தோழர் வைகோ, இந்தியக் பொதுவுடைமை கட்சியைச் சேர்ந்த தோழர் வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சியின் தமிழக சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஜவாஹிருல்லா, திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அருண், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொது செயலாளர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ யின் மாநிலத் தலைவர் தோழர் தெஹலான் பாகவி, திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பேராசிரியர் மணிவண்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை இராம கிருஷ்ணன், தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் வெங்கட்ராமன், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தங்க தமிழ் வேலன், சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழினப் படுகொலை நடந்த இலங்கை மண்ணில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது எனவும், அப்படி மீறி நடைபெற்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அது எத்தகைய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை விளக்கியும், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமது கருத்துகளைப் பதிவு செய்தனர். மாநாட்டில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும், மாணவப் போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

சிங்கள அரசின் இனப்படுகொலையை ஆதரித்து ஈழத் தமிழர்களின் அரசியல் வேட்கையை அழிக்கத் துடிக்கும் இந்திய அரசைக் கண்டிக்கும் முகமாகவும், அதைத் தடுத்து நிறுத்த ஈழப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ள, உலங்கெங்கும் பரவி வாழும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து நிற்கின்றோம். என்பதை இந்திய அரசுக்கு எடுத்துச் சொல்வதே இந்த மாநாட்டின் நோக்கம். இம்மாநாட்டில் 700 க்கும் மேற்பட்ட மாணவர்களும் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். 2013 மார்ச் மாதம் சுடர்விடத் துவங்கிய மாணவப் போராட்டங்களின் பேரெழுச்சியின் தொடர் நிகழ்வாக இம்மாநாடு அமைந்திருந்தது. இந்த மாநாட்டின் தொடர்ச்சியாக இலங்கைப் புறக்கணிப்பு கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மாணவர்களும் இளைஞர்களும் இப்போராட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் -தொல்.திருமாவளவன்

Posted: 09 Sep 2013 08:21 AM PDT

thiru

thiruஇலங்கையில் இடம்பெறும் வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஈழத்தமிழ் உறவுகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகநாடுகளின் வற்புறுத்தல் காரணமாக இலங்கை அரசு தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்த முன்வந்துள்ளது. மாகாணசபை அமைவதால் தமிழர்களின் பிரச்சனைகள் முற்றாகத் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் அவர்களது உரிமை மீட்புப் போராட்ட பயணத்தில் இதுவும் பயன்கொடுக்கும். எனவே ஈழத் தமிழ் உறவுகள் அனைவரும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் தவறாமல் பங்கெடுக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்குப் பெருமளவில் வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். வடக்கு மாகாணத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் போட்டியிடுகின்றன என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழர் பிரச்சனை குறித்த தொலைநோக்குப் பார்வையோடு உள்ளது. தமிழரின் பாரம்பரிய பிரதேசமாகிய வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தன்னாட்சி கொண்ட தமிழ் மக்களின் ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்துவது, வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் சிவில் செயற்பாடுகளில் நிலவுகின்ற இராணுவ தலையீட்டை இல்லாமல் செய்து சுதந்திரமான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது, மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று பல்வேறு வாக்குறுதிகளை அது தனது தேர்தல் அறிக்கையில் முன்வைத்துள்ளது. தமிழர் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கிலும் கிழக்கிலுமாகப் பிரிந்து கிடக்கும் தமிழர்களையும் தமிழ் பேசும் முஸ்லிம்களையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகநாடுகளின் ஆதரவு அதிகரித்துவரும் வேளையில் ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடு இருப்பதை உலகுக்கு உணர்த்த வேண்டியது அவசியம். அதற்கு இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். வடக்கையும் கிழக்கையும் இணைப்பதென்பது முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு இருந்தால்தான் சாத்தியமாகும். அதுபற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்தவொரு முஸ்லிம் கட்சியும் கருத்து கூறவில்லை. அவர்களும் சிங்களப் பேரினவாதத்தின் தாக்குதலுக்கு ஆளாகிவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒருங்கிணைந்து தமது உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் முன்வரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரான்சில் பேய்! நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது

Posted: 09 Sep 2013 07:10 AM PDT

பிரான்சில் பேயோட்டும் சத்தத்தால் ஒரு நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் தென்மேற்கு பகுதியில் உள்ள செயிண்ட் ஆன்டனி லுமிக்ஸ் பகுதியில் 9.30 மணியளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தால் அதிர்சியுண்ட மக்கள் பொலிசில் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் ஒரு கட்டிடத்தில் இருந்து வந்த சத்தம் அது, அங்கே சென்று பார்த்ததில் சிலர் பேயோட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்பு பொலிசார் அந்த இடத்தில் இருந்து திரும்பியுள்ளனர். இதுகுறித்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தை பெற்றெடுத்த ஆண்

Posted: 09 Sep 2013 06:47 AM PDT

ஜேர்மனில் முதன் முறையாக ஆண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஜேர்மனியில் கடந்த மார்ச் மாதம் 18ம் திகதி தனது வீட்டிலேயே ஆண் ஒருவர், குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இவர் ஒரு திருநங்கை ஆவார். குழந்தையின் பிறப்பு குறித்து மருத்துவமனை பதிவேட்டில் பதிவதற்காக, குறித்த நபரிடம் குழந்தையின் தாயார் பெயரை கேட்டுள்ளனர். ஆனால் அந்தக் குழந்தைக்கு தாய் இல்லை, தந்தை மட்டுமே என்று அக்குழந்தையின் தந்தையான திருநங்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள், இவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் உள்ளது. திருநங்கையான நபர் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரமிக்க வைக்கும் நிலா! புகைப்படங்களை வெளியிட்ட நாசா

Posted: 09 Sep 2013 06:33 AM PDT

இன்ஸ்டாகிராமில் அமெரிக்காவின் நாசா அதிரடியாக இணைந்துள்ளதுடன், நிலவின் புகைப்படங்களை வெளியிட்டு பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், இன்ஸ்டாகிராமுடன் அதிரடியாக இணைந்துள்ளது. அத்துடன் நிலவின் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதலில் 2 படங்களை வெளியிட்டது, அதில் நிலாவின் பிரமாண்டம் அட்டகாசமாக இருக்கிறது. நிலவின் கிரே நிற பரப்பும், அதன் தரைத்தளமும் தெள்ளத் தெளிவாக தெரிகின்றன. 2வது படத்தில் பூமி படு அழகான கோணத்தில் காட்சி தருகிறது. மேலும் பல புகைப்படங்கள் வெளியிட உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலரான சுனிலா அபேசேகர இன்று காலமானார்

Posted: 09 Sep 2013 06:30 AM PDT

இலங்கையின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலரான சுனிலா அபேசேகர இன்று காலமானார். உடல் நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சுனிலா அபேசேகர கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை மற்றும் தெற்சாசிய நாடுகளில் பெண்களின் மனித உரிமை, மனித உரிமை தொடர்பில் பணிகளை ஆற்றி வந்தார். நெதர்லாந்து தலைநகர் ஹேக்கில் உள்ள சமூக கற்றைகளுக்கான நிறுவனத்தில் 1994 ஆம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்ற […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கருவளையத்தை போக்க சூப்பர் டிப்ஸ்

Posted: 09 Sep 2013 06:23 AM PDT

கண்ணைச் சுற்றிலும் உண்டாகும் கருவளையங்கள் அழகையே கெடுத்து விடும். மிக தீவிரமான வேலை அட்டவணைகளை கொண்டவர்களுக்கும் மற்றும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் கொண்டவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. இதனை ஒருசில வீட்டு வைத்தியங்கள் மூலம் போக்கிவிட முடியும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி பின்பு அதனை அரைத்து, அதில் உள்ள சாற்றினை இரண்டு பஞ்சுருண்டைகளால் நனைத்து கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் கருவளையங்கள் அகலும். […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™