Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் கைது

Posted: 09 Sep 2013 10:55 PM PDT

பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாத இயக்கம் காஷ்மீரில் பல ரகசிய முகாம்களை நடத்தி வருகிறது. காஷ்மீரில் அந்த அமைப்பின் தளபதியாக இருந்தவன் மன்சூர் என்ற ஷாம்ஸ்பாய். காஷ்மீரில் நடக்கும் தீவிரவாத செயல்களை மன்சூர்தான் ஒருங்கிணைத்து நடத்தி வந்தான். குப்பாரா மாவட்டத்தை சேர்ந்த இவன் லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தில் மூத்த தளபதிகளில் ஒருவனாக கருதப்பட்டான்.

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 7 மாநிலங்களுக்கு கலவர அபாயம்: மத்திய உள்துறை எச்சரிக்கை

Posted: 09 Sep 2013 10:29 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை கேலி செய்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. அது மெல்ல, மெல்ல மாவட்டம் முழுவதும் பரவி கலவரமாக வெடித்தது

பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பு: மீனாட்சி நடராஜன் எம்.பி.க்கு முதலிடம்

Posted: 09 Sep 2013 10:16 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2009–ம் ஆண்டு மே மாதம் பதவி ஏற்றது. அன்று முதல் கடந்த 4½ ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற கூட்டத் தொடர்களில் எம்.பி.க்களின் பங்கேற்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. எம்.பி.க்கள் அனைவரும் சராசரியாக 77 சதவீதம் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொண்டது அந்த ஆய்வில் தெரிய வந்தது. தனிப்பட்டவர்கள் என்ற ரீதியில் பார்த்த போது காங்கிரஸ் எம்.பி.க்களில் மீனாட்சி நடராஜன் 85 சதவீத நாட்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றுள்ளார். அதோடு இவர் 16 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். அப்போது இவர் 135 கேள்விகளையும் எழுப்பினார். மத்திய பிரதேச மாநிலம் மந்தசர் தொகுதியில் இருந்து தேர்வான இந்த 40 வயது தமிழ்ப்பெண், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் வட்டாரத்தில் இருப்பவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 'லட்சத்தீவு காங்கிரஸ் எம்.பி ஹம்துல்லா சயீது 82 சதவீத நாட்கள் பாராளுமன்றத்துக்கு வந்து 2–வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 572 கேள்விகள் கேட்டது குறிப்பிடத்தக்கது.

தாவூத் இப்ராகிமை கைது செய்ய அமெரிக்காவின் உதவியை நாட முடிவு: ஷிண்டே தகவல்

Posted: 09 Sep 2013 08:08 PM PDT

தாவூத் இப்ராகிமை கைது செய்ய அமெரிக்காவின் உதவியை நாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி சுசில் குமார் ஷிண்டே தெரிவித்தார். மும்பை தொடர் குண்டுவெடிப்பு சூத்ரதாரியும், நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறான். அவனை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டு வருகிறது. ஆனால் தாவூத் இப்ராகிம் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த பயங்கர

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted: 09 Sep 2013 05:15 PM PDT

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்படுவது உறுதியாகிவிட்டது. அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத்

மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு

Posted: 09 Sep 2013 03:26 PM PDT

மும்பையில் சாவேரி பஜார், ஒபேரா ஹவுஸ் மற்றும் தாதர் பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 13-ந்தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

பெங்களூரில் ‘இஸ்கான்’ கோவில் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி

Posted: 09 Sep 2013 01:36 PM PDT

பெங்களூரில் உள்ள 'இஸ்கான்' கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள். பெங்களூர் புறநகரில் கனகபுரா சாலையில், புகழ்பெற்ற 'இஸ்கான்' கோவில் உள்ளது. நேற்று இந்த கோவிலின் காம்பவுண்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இடிந்த சுவர், அருகில் இருந்த 4 வீடுகள் மீது விழுந்து சேதப்படுத்தியது.

ரிலையன்சுக்கு எதிரான மனு: விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்

Posted: 09 Sep 2013 12:14 PM PDT

மத்திய அரசு சமீபத்தில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், எனவே, மத்திய அரசுக்கும், ரிலையன்சுக்கும் இடையிலான நெருக்கம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தனர்.

மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கு: தீர்ப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு

Posted: 09 Sep 2013 11:02 AM PDT

புதுடெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இதில் ஒருவர் இளங்குற்றவாளி என்பதால் அவர் மீது இளம் குற்றவாளிகளுக்கான ஆணையத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உத்தரபிரதேச கலவரம்: நீதி விசாரணைக்கு உத்தரவு

Posted: 09 Sep 2013 09:17 AM PDT

உத்தரபிரதேச மாநில கலவரம் குறித்து விசாரிக்க நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் ஒற்றை உறுப்பினரைக் கொண்ட நீதி விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, கலவரம் பற்றி விசாரித்து தனது அறிக்கை மற்றும் சிபாரிசுகளை 2 மாதங்களுக்குள்

மேற்கு வங்க மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 49 குழந்தைகள் சாவு

Posted: 09 Sep 2013 06:44 AM PDT

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா அருகே மாநில அரசால் நடத்தப்படும் பி.சி.ராய் குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 7 நாட்களில் 49 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் பல்வேறு நோய்களால் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இது குறித்து விசாரணை நடத்த 3 நபர் கொண்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம்

பேஸ்புக்கில் கேரள மந்திரியுடன் சரிதா நாயரை இணைத்து போலி புகைப்படம்: வாலிபர் மீது வழக்கு

Posted: 09 Sep 2013 12:51 AM PDT

கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவி பொருத்தி தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக சரிதா நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த மோசடி கும்பலுக்கு உதவியதாக கேரள மந்திரிகள், அரசு அதிகாரிகள் மீது எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டு புகார் கூறி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கேரள மந்திரி குஞ்ஞாலிகுட்டியும் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயரும் இணைந்து இருப்பது போன்ற புகைப்படத்தை

தா.கிருஷ்ணன் கொலை வழக்கு: தமிழக அரசு மேல் முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 09 Sep 2013 12:29 AM PDT

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் 2003–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மு.க. அழகிரி, முன்னாள் மதுரை துணை மேயர் மன்னன் உள்பட 13 பேர் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததையடுத்து வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தா.கிருஷ்ணன் கொலை வழக்கு

2012–13–ம் ஆண்டில் பிரதமர் உள்பட 56 மந்திரிகள் சொத்து கணக்கு காட்டவில்லை

Posted: 09 Sep 2013 12:02 AM PDT

மத்திய மந்திரி சபையில் 76 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு தோறும் சொத்துக் கணக்கை தாக்கல் செய்வது நடைமுறையாக உள்ளது. மொத்தம் உள்ள 76 மத்திய மந்திரிகளில் 2012–13–ல் நிதி ஆண்டுக்கான சொத்துக் கணக்கை இதுவரை 19 மந்திரிகள் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் இந்த கணக்கை தாக்கல் செய்யவில்லை. இது தவிர 56 மத்திய மந்திரிகளும் நடப்பு ஆண்டுக்கான சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை. 10 கேபினட் மந்திரிகள் இந்த நிதி ஆண்டுக்கான சொத்துக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சோனியாவுக்காக காத்திருக்கும் தெலுங்கானா ஆவணங்கள்: விரைவில் தனிமாநில அறிவிப்பு

Posted: 08 Sep 2013 11:34 PM PDT

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திர பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் சரி, தெலுங்கானாவை உருவாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே உத்தரவின் பேரில் தெலுங்கானா பிரிவுக்கான எல்லா ஆவணங்களையும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தயார் செய்து முடித்து விட்டனர். அடுத்தக்கட்டமாக மத்திய மந்திரி சபையில் இதற்கு ஒப்புதல்

உத்தரபிரதேசத்தில் வன்முறைக்கு 31 பேர் பலி: மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை

Posted: 08 Sep 2013 11:16 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவால் கிராமத்தில் கடந்த மாதம் ஒரு பெண் கேலி செய்யப்பட்டதால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கேலி செய்த வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் சாதி கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாரதீய கிஷான் யூனியன் என்ற அமைப்பு மகா பஞ்சாயத்து கூட்டத்தை கூட்டி சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் கலவரம் ஏற்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™