| உலகின் மிக இளம் விமானியாக கின்னஸில் பதிவு பெற்ற சீனாவைச் சேர்ந்த 5 வயதே நிரம்பிய சிறுவன் Posted: 03 Sep 2013 10:20 PM PDT 
5 வயதே நிரம்பிய சீனாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உலகின் மிக இளம் வயதில் விமான ஓட்டுநராக (pilot) விமானத்தைச் செலுத்தி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளான். டுவோடுவோ என்று செல்லப் பெயரால் அழைக்கப் படும் ஹே யிடே எனும் இச்சிறுவன் ஆகஸ்ட் 31 ஆம் திகதி பீஜிங் உயிரியல் பூங்காவிற்கு மேலாக அல்ட்ராலைட் விமானம் ஒன்றை 35 நிமிடம் ஓட்டி கின்னஸ் சாதனை புரிந்ததாக செவ்வாய்க்கிழமை சீன மீடியா அறிவித்துள்ளது. டுவோடுவோ விமானம் ஓட்டுவதைக் கற்றுக் கொண்ட ஏவியேஷன் கிளப்பின் இயக்குனரான ஷாங்க் யொங்குயி இது பற்றிக் கூறுகையில் இச்சிறுவன் 30 Km தூரத்துக்கு விமானத்தை ஓட்டியிருந்ததாகக் கூறியுள்ளார். மேலும் குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு இச்சிறுவனின் தந்தையான ஹே லியெஷெங் பேட்டியளிக்கையில் தனது மகன் வருங்காலத்தில் மிக வீரமும் திறமையும் மிக்க பைலட்டாக வர வேண்டும் எனவும் இத்துறையில் மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த வேண்டும் எனத் தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் எதில் அதிக ஆர்வம் காட்டி விளையாடுகின்றார்களோ அதற்கேற்ப அவர்களை ஊக்குவித்து சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறினார். விமானம் ஓட்டுவதைத் தவிர இச்சிறுவன் சர்வதேச படகோட்டும் போட்டி ஒன்றில் கலந்து கொண்டதுடன் புயல் மழை அடிக்கும் போது ஜப்பானின் ஃபுஜியாமா மலையில் ஏறியும் சாதனை படைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடா , ஜப்பான் நாடுகளில் கடும் நிலநடுக்கம் : எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை Posted: 03 Sep 2013 10:02 PM PDT 
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வன்கூவர் தீவுக்கு அப்பால் கடலுக்கடியில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளை தெற்கு ஜப்பானிலும் 6.9 அளவுள்ள கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேதவிபரங்கள் வெளியாகவில்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆண்களின் அழகை மெருகூட்ட… Posted: 03 Sep 2013 09:54 PM PDT 
ஆண்களுக்கு ஏற்ற அழகு பேஸ் மாஸ்க் பெண்களை விட ஆண்களுக்குத்தான் வெளியில் அலைச்சல் அதிகம். அதிலும் மார்கெட்டிங் வேலைக்கு செல்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கவேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒருமுறை வெளியில் சென்று வந்தாலே முகம் கருத்துவிடும். எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலேயே பேஸ் மாஸ்க் போடுங்களேன். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம். தேன், முட்டை தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியாகும். தக்காளி பழ மாஸ்க் ஒரு சில ஆண்களுக்கு முகத்தில் எண்ணெய் வடியும். அவர்களுக்கு தக்காளிப்பழம் எளிதான சிறந்த அழகு சாதனப் பொருளாக விளங்குகிறது. நன்கு கனிந்த தக்காளிப் பழத்தை தோல் நீக்கி அதனை பிசைந்து கொள்ளவும். அதில் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்திற்கு அப்ளை செய்யவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளிச் என்று ஆகும். வேப்பிலை மாஸ்க் வேப்பிலை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற மருந்துப் பொருளாகும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். வேப்பிலையை பறித்து வெதுவெதுப்பான நீரில் இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் அந்த இலையை மைய அரைத்துக்கொண்டு அதனுடன் சில துளிகள் பால் விட்டு பேஸ்ட் போல செய்யவும். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். ஆண்களுக்கு ஏற்ற அசத்தலான செலவில்லாத பேஸ் மாஸ்க் இது வாரத்திற்கு இரண்டு முறை உபயோகிக்கலாம். வெயில் காலத்திற்கு ஏற்றது.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் அதிசய கிளி சரணாலயம்…. Posted: 03 Sep 2013 09:53 PM PDT இந்தியாவில் அதிசய கிளி சரணாலயம்…. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒருக்கா இந்தப் பெண்ணின் தவில் வாசிப்பை கேட்டு தான் பாருங்களேன்…. Posted: 03 Sep 2013 09:51 PM PDT ஒருக்கா இந்தப் பெண்ணின் தவில் வாசிப்பை கேட்டு தான் பாருங்களேன்…. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடல் எடை குறைய முயன்று பாருங்கள் Posted: 03 Sep 2013 09:49 PM PDT 
1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும். 2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும். 3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும். 5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம். 6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும். 7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம். 8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது. 9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும். மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே... உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டும் வெண்டைக்காய் Posted: 03 Sep 2013 09:44 PM PDT 
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ளநார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவதுஅவதிகப்பட்டால்,பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப்பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும்உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது. வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கிநீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழதிரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச்சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம்வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாழை இலையின் மருத்துவ குணங்கள் Posted: 03 Sep 2013 09:40 PM PDT 
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும். நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூசிலாந்தில் குளிர்காலத்தில் இதுவரை இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு Posted: 03 Sep 2013 09:32 PM PDT 
நியூசிலாந்தில் இந்த வருடக் குளிர்காலம் வழக்கம்போல் உறையவைக்கும் குளிர்காலமாக இருக்கவில்லை.வெப்பநிலையை பதிவு செய்யத் தொடங்கிய நூறு ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவு அதிக வெப்பநிலை இந்த குளிர்காலத்தில் பதிவாகியுள்ளது. அந்நாட்டு தேசிய நீர் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வகம், இந்த குளிர்காலத்தில் நாடு முழுவதும் சராசரியாக 9.5 செல்சியஸ் வெப்பம் பதிவானதாகக் குறிப்பிட்டுள்ளது. இது வழக்கமான சராசரி வெப்பத்தை விட 1.2 செல்சியஸ் கூடுதலாகும். 1984ல் பதிவான மிக அதிகபட்ச வெப்பத்தை விட 0.3 செல்சிஸ் அதிகம். நியூசிலாந்தில் 1909 ஆம் ஆண்டு முதல் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் குளிர்கால மாதங்களாகும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரிட்டனில் மிகப்பெரிய நூலகத்தை பாகிஸ்தான் மாணவி, மலாலா யூசுப், நேற்று திறந்து வைத்தார் Posted: 03 Sep 2013 09:17 PM PDT 
பிரிட்டனில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகத்தை, பாகிஸ்தான் மாணவி, மலாலா யூசுப், நேற்று திறந்து வைத்தார். பாகிஸ்தானில், பெண் கல்விக்காக பிரசாரம் செய்த, மலாலா யூசுப்சாய், 16, என்ற மாணவியை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர். இதில், மலாலாவுக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மலாலாவுக்கு, லண்டனில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, உடல் நலம் தேறியுள்ள மலாலா, பிரிட்டனில் உள்ள, பர்மிங்காம் நகரில் படிக்கிறார். கடந்த, ஜூலை மாதம், ஐ.நா., சபையிலும், தன் பிறந்த நாளையொட்டி, மலாலா உரையாற்றினார். பர்மிங்காம் நகரில், 188 மில்லியன் பவுண்ட்ஸ் செலவில், மிகப்பெரிய நூலகம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை, மலாலா நேற்று திறந்து வைத்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |