Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஐதேகவின் தோல்விக்கு ரணிலே காரணம் – மைத்திரி

Posted: 28 Sep 2013 11:00 PM PDT

நடந்துமுடிந்த மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியுற்றமையானது எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, மக்கள் நிராகரித்துள்ளமையை புலப்படுத்துவதாக அந்த கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன தெரிவித்தார். நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமது கட்சியின் தலைவரை மாற்றுமாறு கோரி எதிர்வரும் 5ஆம் திகதி தெவிநுவரவிலிருந்து கொழும்பு வரை பாத யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரை பாதுகாப்பளித்து ஒப்பந்தத்தில் வைத்திருக்க […]

பொலிசின் அவசரத்திற்கு உதவும் நானோ கார்

Posted: 28 Sep 2013 10:39 PM PDT

டெல்லி பொலிசாரின் அவசர சேவைப் பிரிவு வாகனமாக டாடா நானோ பயன்படுத்த உள்ளது. டெல்லி, பிரகதி மைதானத்தில் நடந்து வரும் சர்வதேச பாதுகாப்பு துறை உபகரண கண்காட்சியில் இந்த கஸ்டமைஸ் நானோ கார் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அணில் கோஸ்வாமி இந்த காரை அறிமுகம் செய்து வைத்தார். டெல்லி பொலிசார் நானோ கார் குறித்து கூடுதல் தகவல்களை கூறுகையில், டெல்லி பொலிஸ் கட்டுப்பாட்டு அறையின் அவசர சேவைப் பிரிவு வாகனமாக நானோ கார் பயன்படுத்தப்பட […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமியை மீளப்பெற ஜெயலலிதாவின் உதவியை நாட திட்டம்

Posted: 28 Sep 2013 10:35 PM PDT

தமிழ்நாடு சிலைகள் காப்பகத்திலுள்ள தமது ஆலயத்திற்குரிய சிலை என நம்பப்படும் முருகன் சிலையை மீளப்பெற தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியை நாடுவதற்கு வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 2005 – 2007 ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெருகல் பிரதேச மக்களும் தமது இருபபிடங்களிலிருந்து வெளியேறி சுமார் ஒன்றரை வருடங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிகமாக தங்கியிருந்தனர். குறித்த காலப்பகுதியிலேயே ஆலயத்தின் […]

உலகின் மிகப்பெரிய சக்தி இந்தியா: ஒபாமா(வீடியோ இணைப்பு)

Posted: 28 Sep 2013 10:25 PM PDT

உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா வளர்ந்து வருகிறது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, ஆசிய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பெரிய சக்தியாக இந்தியா விளங்கி வருகிறது. மேலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என கூறியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அவசியம் – சம்பந்தன்

Posted: 28 Sep 2013 10:23 PM PDT

இலங்கையில் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. வட மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையிலான ஒரு தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள் இப்படியான தீர்ப்பு வந்துள்ளது என்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு காணி அதிகாரம் ஒரு அடிப்படை காரணமாக அமைந்தது என்றும் அவர் கூறுகிறார். வடகிழக்கில் நிலவக் கூடிய இன […]

இன்று உலக இருதய தினம்

Posted: 28 Sep 2013 10:21 PM PDT

இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலகில் இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது 2030ல் 2 கோடியே 30 லட்சமாக உயரும் எனவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத மாரடைப்புகள், தடுக்கக் கூடியவை. இருதயத்தை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டெம்பர் கடைசி ஞாயிறு (செப்டெம்பர் 29) உலக இருதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. […]

செக்ஸ் சுற்றுலா செல்லும் இத்தாலியர்கள்

Posted: 28 Sep 2013 09:59 PM PDT

சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. ஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் […]

பாகிஸ்தானுக்கு இந்திய பிரதமர் மன்மோகன் எச்சரிக்கை

Posted: 28 Sep 2013 09:54 PM PDT

பயங்கரவாதத்துக்கு துணைபோவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் கோரிக்கையை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் பிரச்னை உள்பட பாகிஸ்தானுடனான அனைத்துப் பிரச்னைகளையும் சிம்லா உடன்பாட்டின்படி, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் மன்மோகன் […]

நவிப்பிள்ளையின் அறிக்கைக்கு ஆதாரம் கேட்கின்றார் மஹிந்த

Posted: 28 Sep 2013 09:41 PM PDT

"ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, பேரவையில் சமர்ப்பித்த இடைக் கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கவலைகள் குறித்து விசாரணை நடத்துவதானால் அதற்கு ஆதாரங்கள் தேவை" என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ தெரிவித்துள்ளார். இடைக்கால (வாய்மூல) அறிக்கையில் நவநீதம்பிள்ளை எழுப்பியுள்ள பல கவலைகள் குறித்து இலங்கையில் தன்னைச் சந்தித்த போது அவர் எதுவும் கூறவில்லை என்றும் மஹிந்த ராஜபக்­ஷ கூறியுள்ளார். இலங்கையைச் சில நாடுகள் கொடுமைப்படுத்துகின்றன. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் 68 […]

சட்டத்தை மீறிச் செயற்பட்டால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் – சம்பிக்க

Posted: 28 Sep 2013 09:36 PM PDT

சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் முரண்பாடுகளை தூண்டு;ம் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா […]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™