Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் மத்திய மந்திரிக்கு கைது வாரண்ட்: மேற்கு வங்காள கோர்ட்டு உத்தரவு

Posted: 28 Sep 2013 10:59 PM PDT

மத்திய ரெயில்வே இணை மந்திரி அதிர்ரஞ்சன் சவுத்ரி. இவர் காங்கிரஸ் எம்.பி.யாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த மத்திய மந்திரியான அதிர்சவுத்ரிக்கு கொலை வழக்கில் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு ஜெயில்: ரூ.50 லட்சம் அபராதமும் விதிப்பு

Posted: 28 Sep 2013 10:42 PM PDT

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி சஷிகர்ணாவத். இவர் தற்போது விளையாட்டுத்துறை மன்ற துணை செயலாளராக இருந்து வருகிறார். சஷிகர்ணாவத் கடந்த 1999–2000ம் ஆண்டில் மண்ட்லா மாவட்ட பஞ்சாயத்துக்கு தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அவர் ரூ.34 லட்சத்துக்கு நோட்டு, புத்தகம், பேனா உள்பட ஸ்டேசனரி பொருட்கள் வாங்கியதாக போலியான பில்லை தயாரித்து ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். ஊழல், மோசடி, கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம்: பஸ்சில் நெரிசலில் சிக்கி கும்பகோணம் சிறுமி பலி

Posted: 28 Sep 2013 10:19 PM PDT

புரட்டாசி 2–வது சனிக்கிழமையான நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் மாநிலத்தில் பஸ்கள் ஓடாத நிலையிலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருமலையில் குவிந்தனர். தமிழக பக்தர்கள் அதிக அளவில் இருந்தனர். தர்ம தரிசனத்துக்கு பக்தர்கள் 30 மணி நேரம் காத்து நின்றனர். பாதயாத்திரையாக வந்தவர்கள் 12 மணி நேரமும், சிறப்பு தரிசன கட்டண பக்தர்கள் 8 மணி நேரமும் காத்து நின்றனர். முடி காணிக்கை, லட்டு பிரசாதம் என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள்

கிரெடிட் கார்டில் மோசடி நடந்தால் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளே பணத்தைத் திருப்பித் தரவேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

Posted: 28 Sep 2013 10:13 PM PDT

கிரெடிட் கார்ட் திட்டத்தில் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருவதால் அவற்றின் பாதுகாப்பு முறைகளை ஜூலை மாதத்திற்குள் அதிகப்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. பணம் எடுக்கும் இயந்திரங்களில் மின்னணு சிப் மற்றும் கிரெடிட் கார்ட் உடையவர் பணம் எடுக்கும்போது அவரை அங்கீகரிக்கும்விதமாக அவர் பதிவு செய்யவேண்டிய ரகசியக் குறீயீட்டு எண் போன்றவற்றை செயல்படுத்துமாறு கேட்டிருந்தது. ஆனால் வங்கிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்த

60–வது பிறந்தநாள் விழா: 21 மணி நேரம் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அமிர்தானந்தமயி

Posted: 28 Sep 2013 09:45 PM PDT

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. இவரது 60–வது பிறந்தநாள் விழா கொல்லத்தில் உள்ள இவரது ஆசிரமமான அமிர்தபுரியில் 'அமிர்தவருஷம்–60' என்று பக்தர்களால் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 1 வாரமாக அமிர்தபுரி ஆசிரமத்தில் பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும், இலவச மருத்துவ முகாம்கள், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகள், அன்னதானம், விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் குஜராத் முதல்–மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர்

டெல்லியில் இன்று நரேந்திரமோடி பிரமாண்ட பொதுக்கூட்டம்: 5 லட்சம் பேர் திரள்கின்றனர்

Posted: 28 Sep 2013 09:22 PM PDT

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திரமோடி வளர்ச்சி யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முக்கிய நகரங்களில் பேசி வருகிறார். ஐதராபாத், போபால், திருச்சி ஆகிய நகரங்களில் அவருடைய பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பல லட்சம் பேர் திரண்டிருந்தனர். இதேபோன்ற பொதுக்கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடக்கிறது. டெல்லியில் நடப்பதால் கூட்டத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். டெல்லியை பொருத்தவரை பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் விரைவில் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க உள்ளது. அங்கு காங்கிரசிடம் உள்ள மாநில ஆட்சியை கைப்பற்ற

குளிர்கால கூட்டத் தொடரின்போது தனித்தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: சுஷ்மா சுவராஜ் பேச்சு

Posted: 28 Sep 2013 05:05 PM PDT

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது மத்திய அரசு தனித்தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அவ்விதம் நிறைவேற்ற தவறினால் தனித்தெலுங்கானா கோரிக்கையை முன்வைத்து பா.ஜ.க. தனது இரண்டாம் கட்ட போராட்டத்தில்

இந்திய ராணுவம் மற்றும் இந்தியாவின் இமேஜை வி.கே.சிங் களங்கப்படுத்தி விட்டார்: பரூக் அப்துல்லா பேட்டி

Posted: 28 Sep 2013 04:46 PM PDT

காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு இந்திய ராணுவம் பண உதவி செய்ததாக கூறியதன் மூலம் இந்திய ராணுவத்தின் இமேஜை மட்டுமல்ல, இந்தியாவின் இமேஜையே முன்னாள் ராணுவ தளபதி களங்கப்படுத்தி விட்டார் என காஷ்மீர் முன்னால் முதல் மந்திரியும், தற்போதைய எம்.பி.யும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான

ஜார்கண்ட்: மாவோயிஸ்ட் தலைவர் மனைவியுடன் கைது

Posted: 28 Sep 2013 03:58 PM PDT

ஜார்கண்ட் மாநிலம், கார்வா மாவட்டத்தில் அட்டூழியம் புரிந்து வந்த மாவோயிஸ்ட் இயக்க தலைவர் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர். உபேந்திர கார்வா மற்றும் அவரது மனைவி மீனா கார்வா ஆகியோரை அவர்களது சொந்த கிராமமான கிராகண்ட்டில்

லல்லுவை காப்பாற்றவே அவசர சட்டம்: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு

Posted: 28 Sep 2013 02:48 PM PDT

கால்நடை தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பையொட்டி பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவை காப்பாற்றவே தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி அவசர சட்டத்தை இயற்றியுள்ளது என வெங்கய்யா நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்

திருச்சியை அடுத்து இன்று டெல்லியில் மோடி பொதுக்கூட்டம்: 5 லட்சம் மக்கள் திரள்வார்கள் என கணிப்பு

Posted: 28 Sep 2013 02:25 PM PDT

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களிடையே சுறுசுறுப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்

மும்பை: கட்டிடம் இடிந்து பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்வு - நிறுவன அதிபர் கைது

Posted: 28 Sep 2013 12:14 PM PDT

மும்பை டாக்யார்டு சாலையில் பாபுகெனு மார்க்கெட் அருகில் உள்ள 30 ஆண்டு கால பழைமை வாய்ந்த 5 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று முன்தினம் காலை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு குடியிருந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்பு

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரிப்பு

Posted: 28 Sep 2013 08:53 AM PDT

மும்பை டாக்யார்டு சாலையில் பாபுகெனு மார்க்கெட் அருகில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டிடம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு குடியிருந்த ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

அவசர சட்டம் குறித்து ராகுல் விமர்சனம்: பிரதமர் பதவி விலக பா.ஜனதா வலியுறுத்தல்

Posted: 28 Sep 2013 05:39 AM PDT

குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக இந்த சட்டம் காத்திருக்கு நிலையில், இந்த சட்டம் முட்டாள்தனமானது என்றும், உடனே

பாலக்காடு சோலையூரில் சந்தன மரம் வெட்டிக்கடத்த முயன்ற 7 பேர் கைது

Posted: 28 Sep 2013 05:08 AM PDT

கேரள மாநிலம் பாலக்காடு சோலையூர் வனஅதிகாரி அப்துல்லாவுக்கு மூச்சுகடவு வனப்பகுதியில் சிலர் சந்தனமரம் வெட்டிக்கடத்துவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அப்துல்லா மற்ற அதிகாரிகளான ராமதாஸ், மணிகண்டன், ராமன் மற்றும் வன ஊழியர்களுடன் சோலையூர் மூச்சுகடவு வனப்பகுதிக்கு சென்றார். அங்கு 7 பேர் கும்பல் இரண்டு சந்தன மரங்களை வெட்டிக்கொண்டிருந்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

Posted: 28 Sep 2013 04:44 AM PDT

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் குணால் கோஷ், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில தொழில்துறை மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சோலார் பேனல் மோசடி வழக்கு: நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளிக்க தயார்- பிஜு ராதாகிருஷ்ணன்

Posted: 28 Sep 2013 04:23 AM PDT

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், நாட்டிய கலைஞர் ஷாலுமேனன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவி செய்ததாக முதல்– மந்திரி உம்மன்சாண்டியின் உதவி யாளராக இருந்த டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம்ராஜ் ஆகியோரும் கைதானார்கள். இதற்கு பொறுப்பேற்று முதல்–மந்திரி பதவியிலிருந்து

பலத்த பாதுகாப்பை மீறி ஸ்ரீநகரில் இன்று தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்

Posted: 28 Sep 2013 03:10 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளது. கதுவா மாவட்டத்தில் வியாழக்கிழமை 3 தீவிரவாதிகள் ஊடுருவி, காவல்நிலையம் மற்றும் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

திருமண வாழ்க்கை முறிந்து: பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய 226 பெண்கள் குடியுரிமை இன்றி குழந்தைகளுடன் அவதி

Posted: 28 Sep 2013 01:14 AM PDT

திருமண வாழ்க்கை முறிந்து பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய 226 பெண்கள் குழந்தைகளுடன் அவதிப்படுகின்றனர். வெளிநாட்டு ஆண்களை திருமணம் செய்யும் இந்திய பெண்கள் சிலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானியரை திருமணம் செய்த பெண்களில் பெரும்பாலானவர்கள் சிக்கலில் தவிக்கின்றனர். அவர்களில் 226 பெண்கள் தற்போது தங்கள் குழந்தைகளுடன் இந்தியா திரும்பியுள்ளனர். அவர்களில் 6 பேர் இந்துக்கள். விவாகரத்து மற்றும் கணவரின் திடீர் மரணம் போன்ற காரணங்களால் அவர்கள் தங்களது பிறந்த மண்ணுக்கு வந்துள்ளனர்.

கேரளாவுக்கு நாளை சோனியாகாந்தி வருகை ‘அனைவருக்கும் பூமி’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்

Posted: 28 Sep 2013 12:09 AM PDT

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்– மந்திரியாக உம்மன்சாண்டி பதவி வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவி சோனியாகாந்தியை கேரளாவுக்கு அழைத்து வர கட்சியின் மாநில நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வந்தனர். கடந்த மாதம் சோனியா கேரளாவில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் திடீரென சோனியாவுக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™