Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


விக்னேஷ்வரனுக்கு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

Posted: 24 Sep 2013 09:12 PM PDT

vijayakanth

vijayakanthவடமாகாண சபைக்கான முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஷ்வரனுக்கு  தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை வடக்கு மாகாணத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும், அமையவிருக்கும் அரசிற்கு தலைமை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஷ்வரனுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மிக தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை புரிந்துகொண்டு இலங்கை அரசு அந்த பகுதியில் இருக்கிற இராணுவத்தை உடனடியாக விலக்கிக்கொண்டு, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் ஆட்சி நடத்திட ஒத்துழைப்பு தருவதோடு, அதிகார பரவலையும் தந்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூட்டமைப்பு உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் : கட்சித் தலைவர் சம்பந்தன் முன்னிலையிலா?

Posted: 24 Sep 2013 09:01 PM PDT

TNA-logo

TNA-logoஅண்மையில் நடைபெற்று முடிந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

வட மாகாணசபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரனும், ஏனைய 29 உறுப்பினர்களும் யார் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. பதவிப் பிரமாணம் கட்டாயமாக ஜனாதிபதி அல்லது ஆளுநர் முன்னிலையில் செய்ய வேண்டிய சட்டத் தேவைகள் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சட்டத்தின் அடிப்படையிலேயே பதவிப் பிரமாண நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் கூட பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் கட்சித் தலைவர் சம்பந்தனின் முன்னிலையில் கூட பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். இதேவேளை, வட மகாணசபையின் முதலமைச்சராக கட்சி விக்னேஸ்வரனை ஏக மனதாக தெரிவு செய்துள்ளதாக வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்திற்காக‌ பிரதமர் மன்மோகன்சிங் இன்று அமெரிக்கா பயணம்

Posted: 24 Sep 2013 08:17 PM PDT

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhi

India's Prime Minister Manmohan Singh smiles in New Delhiஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஒபாமாவை நாளை மறுதினம் சந்திக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 68-வது பொதுச்சபை கூட்டம் நேற்று தொடங்கியுள்ளது. அக்டோபர் 1-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. இந்த கூட்டத்தில் தீவிரவாதத்தை ஒடுக்குதல், ஆயுதங்களை கைவிடல், ஐ.நா. சீர்திருத்தங்கள், மேம்பாடு ஆகியறை குறித்து முக்கியமாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மன்மோகன்சிங் 28-ந்தேதி கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அவர் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு குறித்தும் அவர் தனது கருத்துக்களை தெரிவிக்க உள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் இடையே வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசினா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசக்கூடும் என தெரிகிறது. முன்னதாக நாளை மறுதினம் (27-ந் தேதி) வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்துப் பேசுகிறார். மதிய விருந்துடன்கூடிய இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2009-ம் ஆண்டுக்கு பின்னர் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து, தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவது இது மூன்றாவது முறை. இந்த சந்திப்பின்போது, இருதரப்பு வர்த்தக மேம்பாடு, ராணுவத்துறையில் ஒத்துழைப்பு, பொருளாதாரத்துறையில் ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச விவகாரங்கள் பற்றி மன்மோகன்சிங்கும், ஒபாமாவும் விரிவாகப் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விசா நடைமுறையில் அமெரிக்கா செய்ய உத்தேசித்துள்ள மாற்றங்கள், இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு தடைச்சுவராக அமையும் என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான இந்தியாவின் கவலையை ஒபாமாவிடம் மன்மோகன்சிங் தெரிவித்து, பரிகாரம் தேடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான சிவில் அணுசக்தி உடன்படிக்கையை அமல்படுத்தும் வகையில் இந்திய அணுசக்தி கழகம் மற்றும் அமெரிக்காவின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்த ஒப்பந்தம், அணு உலையையும், உதிரிபாகங்களையும் விற்பனை செய்கிற நிறுவனமே, அணு உலையில் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறபோது இழப்பீடையும் வழங்க வேண்டும் என்ற சட்ட விதியை தளர்த்துவது தொடர்பான அம்சம் இடம் பெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறிலங்காவில் ஐ.நா அமைப்பு ரீதியாக தோல்வியை தழுவியுள்ளது – பான் கீ மூன்

Posted: 24 Sep 2013 08:00 PM PDT

Ban Ki-moon

Ban Ki-moonபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காவில் ஐ.நா தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொட்ரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், ஐ.நா அமைப்பு ரீதியாக  தோல்வியை தழுவியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை என்றும், ஐ.நா அமைப்பு பொருத்தமான அல்லது முழுமையான செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஹுன் சென் பிரதமர் பதவியைத் தொடர கம்போடிய பாராளுமன்றம் அனுமதி

Posted: 24 Sep 2013 07:54 PM PDT

hun-sen_2469368b

hun-sen_2469368bகம்போடிய நாட்டில் ஜூலை மாதம் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சி 68 இடங்களையும், சாம் ரெய்ன்ஸி தலைமையிலான நேஷனல் ரெஸ்க்யு கட்சி 55 இடங்களையும் கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 1985 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் பதவியில் இருக்கும் கம்போடியா மக்கள் கட்சித் தலைவர் ஹுன் சென் மீண்டும் ஐந்து வருடங்களுக்கு பிரதமர் பதவியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியபோதும் இது குறித்த விசாரணையை ஆளும் கட்சி மறுத்துவிட்டது. தொடர்ந்து பல வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்றபோதும் கம்போடிய பாராளுமன்றம் ஹுன் சென் பிரதமர் பதவியைத் தொடர அனுமதி அளித்துள்ளது. சென்ற வார இறுதியில் அன்கோர்வாட்டில் உள்ள கோவில் வளாகத்தில் கூடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் குறித்த விசாரணை நடைபெறும்வரை பாராளுமன்றத்திற்கு செல்லுவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளனர். தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஹுன் சென், எதிர்க்கட்சியுடனான பேச்சு வார்த்தைக்கான கதவு இன்னும் மூடப்படவில்லை, ஆனால் அவர்கள் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ளவேண்டும், பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். ஹுன் சென் பதவியேற்கும் இன்று, தலைநகர் பினாம்பென்னிலும், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இருக்கும் என்று எதிர்க்கட்சி தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷன் உட்பட, அனைத்து மாநில நிறுவனங்களும் பிரதமர் ஹுன் சென்னின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது எதிர்க்கட்சியினர் தங்கள் எதிர்ப்புகளை போராட்டங்கள் மூலம் மட்டுமே தெரிவிக்க முடியும் என்று பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. 61 வயதாகும் ஹுன் சென் தனது 70 ஆவது வயது வரை பிரதமர் பதவியில் இருப்பேன் என்று சபதமிட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வாலிபர் கைது : ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி செல்ல முயற்சி

Posted: 24 Sep 2013 07:37 PM PDT

4Arrest_iStockphoto

4Arrest_iStockphotoமலேசியாவிற்கு பால்பவுடரில் மறைத்து வைத்து ரூ. 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி செல்ல முயன்ற வாலிபரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை மலேசியாவிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பாதுகாப்பு சோதனைக்கு வந்தனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை போட்டனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த பரகத்அலி (வயது 29) என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவிற்கு செல்ல வந்திருந்தார். அவரது உடமைகளை சோதனை போட்டபோது, அதில் 10 பால் பவுடர் டின்கள் இருந்தன. அதிக பால் பவுடர் டின்களை ஏன் கொண்டு செல்கிறீர்கள்? என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டனர். அதற்கு இது விலை உயர்ந்த பால் பவுடர். மலேசியாவில் கிடைக்காது என்பதால் அங்குள்ள உறவினர்கள். நண்பர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பால்பவுடர்களை பிரித்து சோதனை போட்டனர். அப்போது, அதில் கேட்டமைன் போதைப்பொருள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ரூ.2 கோடி மதிப்புள்ள 20 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பரகத்அலியின் விமான பயணத்தை ரத்து செய்த பாதுகாப்பு அதிகாரிகள் சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் வந்து 20 கிலோ கேட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர். மேலும், அதை கடத்த முயன்ற பரகத்அலியையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நவநீதம்பிள்ளையின் கடிதம் வெளிவிவகார அமைச்சினை வந்தடையவில்லை

Posted: 24 Sep 2013 07:23 PM PDT

Navaneetham-pillay1

Navaneetham-pillay1தான் தெரிவித்ததாகக் கூறி பொய்யான முறையில் வெளியிடப்பட்ட கருத்துகளைத் திருத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசைக் கேட்டுள்ளமை தொடர்பான கடிதம் இன்னும் வெளிவிவகார அமைச்சினை வந்தடையவில்லை என அந்த அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

நவிபிள்ளை அண்மையில் இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டிருந்த போது கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள சிங்கள அரசியல் தலைவரான டி. எஸ். சேனநாயக்காவின் சிலையை அங்கிருந்து அகற்றுமாறு அவர் அரச தலைவரைக் கேட்டிருந்தார் என செய்திகள் வெளிவந்திருந்தன. இதனை மறுத்திருந்த நவிபிள்ளை, இலங்கை அரசு தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகக் கூறியிருந்தார். உண்மைக்கு மாறான இவ்வாறான கருத்துகளை உடனடியாகச் இலங்கை அரசு திருத்திக் கொள்ள வேண்டுமென்றும் நவிபிள்ளையின் அலுவலகம் இலங்கை அரசைக் கேட்டிருந்த்து. ஆனால், இது தொடர்பான வேண்டுகோளைக் கொண்ட கடிதம் தமது அமைச்சை இன்னமும் வந்தடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம்- முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை

Posted: 24 Sep 2013 07:19 PM PDT

TNA

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பனர்களிடையேயான விசேட சந்திப்பொன்று நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், ராகவன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக சங்கையா ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான இரண்டு போனஸ் ஆசனங்களை யார் யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பல விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்த காரணத்தினால் இது தொடர்பாக உடனடியாக முடிவெதுவும் எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளர் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்கு இருவரைத் தெரிவுசெய்து பரிந்துரைக்குமாறு அறிவிக்கும்போது இதுபற்றி தீர்மானிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இதுபோல் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய நான்கு அமைச்சர்கள் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பிலும் இறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

இராணுவ குறைப்பு, ஆளுனர் நீக்கம் குறித்து சிறிலங்கா அரசுடன் விரைவில் பேச்சு – சி.வி. விக்னேஸ்வரன்

Posted: 24 Sep 2013 07:12 PM PDT

vikneswaran

vikneswaranவடக்கில், இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், ஆளுனரை மாற்றுவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப் போவதாக, வடக்கு மாகாண முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

வடக்கில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது தொடர்பாகவும், வடக்கில் ஆளுனராகத் தற்போது பணியாற்றும் முன்னாள் இராணுவ அதிகாரியை நீக்குவது தொடர்பாகவும், முன்னுரிமை கொடுத்து பேசப் போவதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமது சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் மக்கள் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், எனவே வடக்கிலுள்ள மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் எப்போதெல்லாம் தமது அரசியல் உரிமைக்காக போராட்டம் நடத்தினரோ, அப்போதெல்லாம் அவர்கள் விடுதலைப் புலிகளாக அடையாளப்படுத்தப்பட்டனர்.

ஆனால், தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள், விடுதலைப் புலிகள் தோன்றுவதற்கு முன்னரே இருந்து வந்துள்ளது.

எனவே, சிறிலங்கா அரசாங்கம், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை, விடுதலைப் புலிகளுடனோ, வேறு எவருடனோ தொடர்புபடுத்தி, தவறாக வழிநடத்தக் கூடாது.

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண அரசு, அதிகாரப்பகிர்வு தொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சு நடத்த தயாராகி வருகிறது.

புதிய அரசாங்கம், மனிதஉரிமை நிலையை உறுதியாகப் பேணவும், அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுக்கவும், அதிகாரங்களை பகிர்ந்து- குறிப்பாக, காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்து- சிறிலங்கா அரசாங்கம் உதவ வேண்டும்.

எமது ஒருமைப்பாடு, அடையாளம் என்பனவற்றைப் பேணியவாறு, வடக்கை அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லா நல்ல முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குவோம்.

வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள், மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், மாகாண ஆட்சிக்கு உதவியாகச் செயற்பட வேண்டும்.

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க எதிர்பார்த்துள்ளேன், எனது முதல் வெளிநாட்டுப் பயணம் அவரைச் சந்திப்பதற்கான பயணமாகவே இருக்கும்" என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பேச்சு படு அபத்தமானது – காசி ஆனந்தன்

Posted: 24 Sep 2013 07:06 PM PDT

kasi-ananthan

kasi-ananthanதமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்.முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்கினேஸ்வரனின் பேச்சு படு அயோக்கியத்தனமானது என உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் காட்டமான தொனியில் காணொளிச் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.

அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். தமிழர் கூட்டமைப்பினை ஏன் ஆதரித்தார்கள் என்றால் அந்த கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற சிங்கள ஆட்சியாளர்கள் படுதோல்வி அடையவேண்டும் என்ற நோக்கோடுதான் மக்கள் இந்த வாக்கினை அளித்திருக்கின்றார்கள். தமிழர் கூட்டமைப்பினை ஏன் ஆதரித்தார்கள் என்றால் அந்த கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற சிங்கள ஆட்சியாளர்கள் படுதோல்வி அடையவேண்டும் என்ற நோக்கோடுதான் மக்கள் இந்த வாக்கினை அளித்திருக்கின்றார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™