Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


அமிர்தானந்தமயி பிறந்த நாள் விழாவில் பங்கேற்க நரேந்திரமோடி இன்று கேரளா வருகை

Posted: 24 Sep 2013 09:51 PM PDT

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. கொல்லத்தில் உள்ள அமிர்தபுரியில் இவருக்கு பிரமாண்டமான ஆசிரமம் உள்ளது. மாதா அமிர்தானந்தமயின் 60-வது பிறந்த நாள் விழா வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி `அமிர்த வருஷம் 60' என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவரது பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆசிரமத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்கள், அன்னதானம் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற விழாவில் நடிகர் மோகன்லால் கலந்து கொண்டு மாதா அமிர்தானந்தமயி பற்றிய புத்தகத்தை வெளியிட்டார். இன்று பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக சண்டிஹோமம் நடந்தது. இதில்

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க காஷ்மீர் எல்லைப்பகுதியில் ரோந்துப்பணி அதிகரிப்பு

Posted: 24 Sep 2013 09:13 PM PDT

காஷ்மீர் மாநிலம் மாச்சில் பகுதி எல்லைக்கோடு வழியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து மாச்சில் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக ராணுவ ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் கண்காணிப்பு பணிகளில் சிரமம்

ஜெகன்மோகன் ரெட்டி விடுதலைக்கு அரசியல் சாயம் பூசாதீர்: காங்கிரஸ்

Posted: 24 Sep 2013 08:47 PM PDT

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி விடுதலை விவகாரத்தில், அவருக்கும், காங்கிரசுக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக பா.ஜனதாவும், சந்திரபாபு நாயுடுவும் குற்றம் சாட்டி இருந்தனர். அதற்கு பதில் அளித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பி.சி.சாக்கோ கூறியதாவது:- ஜெகன், தனது விடுதலையை கொண்டாடட்டும். யாரும் ஜெயிலில் இருப்பதை காங்கிரஸ் விரும்புவது இல்லை. நாங்கள் ஜனநாயக கட்சி. அவரது விடுதலைக்கு அரசியல் உள்அர்த்தம் கற்பிக்கக்கூடாது.

சொத்து குவிப்பு வழக்கு: நீதிபதியின் பதவி காலத்தை நீட்டிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா வாதம்

Posted: 24 Sep 2013 05:16 PM PDT

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை கோர்ட்டு நீதிபதியின் பதவி காலத்தை நீட்டிக்க கோரும் வாதத்தை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

இந்தியர்களுக்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது: மோடிக்கு பிரதமர் கடிதம்

Posted: 24 Sep 2013 03:31 PM PDT

கென்யாவின் தலைநகர் நைரோபி வணிகவளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த இந்தியர்கள் மற்றும் இந்தியா வம்சா வழிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்று குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி நேற்று

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று அமெரிக்கா பயணம்

Posted: 24 Sep 2013 01:52 PM PDT

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று (புதன்கிழமை) அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். ஒபாமாவை நாளை மறுதினம் சந்திக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் 68-வது பொதுச்சபை கூட்டம் நேற்று

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசின் நிலையில் முரண்பாடு

Posted: 24 Sep 2013 01:34 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த 18-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்கள், தனியாருக்கு ஒதுக்கப்பட்டது எப்படி? என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக மத்திய அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து

Posted: 24 Sep 2013 12:44 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மணல் கடத்தும் கும்பல் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் மசூதியின் சுற்றுச்சுவரை இடித்து, கலவரம் உருவாக காரணமாக இருந்ததாக கூறி அவரை உத்தரபிரதேச அரசு கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க காஷ்மீர் எல்லையில் ரோந்துப்பணி அதிகரிப்பு

Posted: 24 Sep 2013 10:46 AM PDT

காஷ்மீர் மாநிலம் மாச்சில் பகுதி எல்லைக்கோடு வழியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை, பாதுகாப்பு படையினர் விரட்டியடித்தனர்.

சமூக பணிகளுக்காகவே காஷ்மீர் மந்திரிகளுக்கு ராணுவ நிதி வழங்கப்பட்டது: வி.கே.சிங்

Posted: 24 Sep 2013 09:51 AM PDT

தலைமை ராணுவ தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் வி.கே.சிங். ஏற்கனவே வயது பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கிய அவர், ஓய்வு பெற்றபின்னரும் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் நரேந்திரமோடியுடன் ஒரே மேடையில் வி.கே.சிங் தோன்றியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்

சஞ்சல்குடா சிறையிலிருந்து வீடு திரும்பினார்: ஜாமினில் வெளியே வந்த ஜெகன் மோகனுக்கு உற்சாக வரவேற்பு

Posted: 24 Sep 2013 09:41 AM PDT

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டி ஆட்சியில் இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த ஆண்டு மே மாதம் சி.பி.ஐ. வழக்கு பதிந்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் மீது 10 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

டீசல் விலையை மேலும் உயர்த்தும் திட்டம் இல்லை: மொய்லி

Posted: 24 Sep 2013 07:10 AM PDT

எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்யும் வகையில் டீசல் விலையை மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஜனவரி மாதம் முதல், மாதந்தோறும் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் அதிகப்படியான இழப்பை குறைக்கும் வகையில், மொத்தமாக டீசல் விலையை உயர்த்த பெட்ரோலியத்துறை

தண்டனை பெறும் எம்.பி.-எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க அவசர சட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 24 Sep 2013 05:52 AM PDT

குற்ற வழக்குகளில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக இருப்பதால் இதற்கு அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து, அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி

முசாபர்நகர் கலவரம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

Posted: 24 Sep 2013 05:35 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 16 பேரையும் கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இருப்பினும் சட்டசபை கூட்டத்தொடர் வரை காத்திருந்த போலீசார், கூட்டத் தொடர் முடிந்ததும் கைது நடவடிக்கையை தொடங்கினர். இந்த கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகவும், போலி வீடியோ சி.டி. வினியோகம்

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம்

Posted: 24 Sep 2013 05:08 AM PDT

டெல்லி மற்றும் வடமாநிலங்களில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவாக பதிவாகியிருந்தது. இதனால் அங்கு அதிக அளவில்

மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர்

Posted: 24 Sep 2013 02:39 AM PDT

மணிப்பூர் மாநிலத்தில் மக்கள் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற பெயரில் பிரிவினைகோரி தீவிரவாதிகள் போராடி வருகிறார்கள். அதுபோல ஐக்கிய புரட்சிகர முன்னணி என்றொரு தீவிரவாத இயக்கமும் செயல்பட்டு வருகிறது.

ஜெகன்மோகன் விடுதலை ஆவதற்கு காங்கிரசுடன் ஏற்பட்ட ரகசிய கூட்டணியே காரணம்: சந்திரபாபு நாயுடு

Posted: 24 Sep 2013 12:53 AM PDT

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை தெலுங்கு தேசதலைவர் சந்திரபாபு நாயுடு விமர்சித்து உள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் 180 இடங்களில் வெல்லும் கட்சியே ஆட்சி அமைக்கும்: சரத்பவார்

Posted: 24 Sep 2013 12:21 AM PDT

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்யாதவ் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:– பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு இருப்பதன் மூலம், அந்த கட்சி ஆட்சியை பிடித்து விடும் என்று என்று

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் - பிரதமருக்கு நரேந்திரமோடி கடிதம்

Posted: 24 Sep 2013 12:16 AM PDT

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் வணிக வளாகத்துக்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இந்தியர்கள் உள்பட 62 பேர் பலியானார்கள். கென்யாவில் குஜராத்தியர்கள் அதிக அளவில் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து குஜராத்தியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக முதல்–மந்திரியும், பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கென்யாவில் உள்ள இந்திய தூதருடன் டெலிபோனில் பேசினார். அங்குள்ள நிலைமை குறித்து கேட்டு நரேந்திரமோடி இந்திர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும்

கார்களுக்கு 27 சதவீதம், இரு சக்கர வாகனங்களுக்கு 62 சதவீத பெட்ரோல் பயன்படுகிறது: கணக்கெடுப்பில் தகவல்

Posted: 24 Sep 2013 12:08 AM PDT

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்றாலும், அதன் தேவையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. நாட்டின் பெட்ரோல் தேவை சுமார் 16 மில்லியன் டன் இது வாகனங்கள், விவசாயம், மீன்பிடி படகுகள், ஜெனரேட்டர்கள் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் எதற்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்தது. இதில் கார்களை விட இரு சக்கர வாகனங்களுக்கே அதிக அளவில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™