Tamil Star |
- ‘உறை பனி அறையில்’ பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரி (வீடியோ இணைப்பு)
- சோமாலியா சிறையில் வாடும் கனடிய இளம்சகோதரர்கள்
- சீனாவை தாக்கியது ‘உசாகி’ புயல்: 20 பேர் பலி
- இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடல் எல்லையில் கைது
- பிரான்ஸ் விமானத்தில் 1300 கிலோ கோகைன் போதைமருந்து மீட்பு
- எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஈரானின் அணுவாயுத அணிவகுப்பு
- மோடி ஒரு நவீன இராவணன்: சீறும் பிருந்தா கரத்
- செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்தியா
- விதவை பெண் கொடூரமாக கற்பழிப்பு
- ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய விஜய்!
| ‘உறை பனி அறையில்’ பயிற்சி பெற்ற இளவரசர் ஹாரி (வீடியோ இணைப்பு) Posted: 22 Sep 2013 11:00 PM PDT பிரிட்டன் இளவரசர் ஹாரி விஷேடமாக வடிவமைக்கப்பட்ட உறைபனி அறையில் 20 மணி நேரம் தங்கி இருந்தார். இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லசின் 2வது மகன் இளவரசர் ஹாரி. 29 வயதான இவர் வரும் நவம்பர் மாதம் நன்கொடை திரட்டும் முயற்சியாக பூமியின் தென்கோடியான அண்டார்டிகாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே, உறைபனி கண்டமான அண்டார்டிகாவில் தங்குவதற்கு முன்னோட்டமாக செயற்கையாக அமைக்கப் பட்ட அறைகளில் தங்கி ஹாரி ரி பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அண்டார்டிகாவுக்கு ஹாரி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சோமாலியா சிறையில் வாடும் கனடிய இளம்சகோதரர்கள் Posted: 22 Sep 2013 10:50 PM PDT
கனடாவில் பிறந்த கனடிய பிரஜைகளான 18 வயது Liiban, 15 வயது Jamal ஆகிய இரு சகோதரர்களையும் அவர்களது தந்தையார் Mohamed Noor கிழக்கு ஆப்ரிக்காவின் சோமாலியா எல்லையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பகுதிக்கு அனுப்பி வைத்தார். விடுமுறைக்கு சென்ற இவர்களின் விடுமுறையில் யூலை மாதம் 24ம் திகதி இடையூறு ஆரம்பமாகியது. அன்று பொலிஸ் அதிகாரிகள் இவர்களது பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். விசேட படையினருடன் வீட்டிற்குள் நுழைந்த பொலிசார் இளைஞர்கள் இருவரும் அரசியல்வாதி ஒருவரின் உறவுக்கார பெண்ணை கற்பழித்துள்ளாரகள் என குற்றம் சாட்டினர். ஒருவாரத்தின் பின்னர் இருவருக்கும் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக இளைஞர்களின் தந்தை கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், குற்றச்சாட்டு சம்பந்தமாக எந்தவித புலன் விசாரணை அல்லது நீதிமன்ற விசாரணையோ இடம்பெறவில்லை என்றும் சகோதரர்கள் இருவரும் ஒரு சட்டத்தரனியுடன் பேசுவதற்கும் முடியவில்லை என்றும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணை அவர்களுக்கு தெரியாதென்றும் அதுமட்டுமன்றி இருவரும் அந்நாட்டு மொழி பேசத்தெரியாதவர்களாகையால் அப்பகுதி இளம்வயதினர் எவரையும் தெரியாதென்றும் கூறப்பட்டுள்ளது. கனடா வெளிநாட்டு விவகார துறையினருக்கு 2 கனடிய பிரஜைகள் சோமாலிய நிலப்பகுதியில் கைதாகி சிறைவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. நைரேபியில் உள்ள கனடிய தூதரகம் குடும்பத்தினருக்கு உதவி அளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மேலதிக விபரங்களை வெளியிட தூதரகம் மறுத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் தகவல் பாதுகாப்பு கருதியே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் இளைஞர்கள் இருவரையும் பலவந்தமாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் அங்கு அவர்களை அடித்து துன்புறுத்தி குற்றச்சாட்டை ஒத்துக்கொள்ளும் படி வற்புறுத்தி உள்ளதாகவும் இளைஞர்களின் தந்தை மேலும் தெரிவித்துள்ளார். வாரத்தில் ஒருநாள் திங்கள் கிழமை 5 நிமிடங்கள் மட்டும் தன் பிள்ளைகளை பார்க்க அனுமதித்திருப்பதாகவும் நெருக்கம் நிறைந்த கூண்டுக்குள் தன் பிள்ளைகளின் வயதை விட இருமடங்கு அதிக வயதுடைய கைதிகளுடன் பிள்ளைகளை வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவை தாக்கியது ‘உசாகி’ புயல்: 20 பேர் பலி Posted: 22 Sep 2013 10:42 PM PDT பிலிப்பின்ஸ் மற்றும் தைவானைத் தொடர்ந்து உசாகி புயல் ஹாங்காங் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப்பகுதிகளை தாக்கியது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் தாக்கிய இப்புயலால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். குவாங்டாங் மற்றும் ஃபுஜியன் நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் முன்னெச்சரிக்கையாக 8-ஆம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டது. இதனால் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை மீனவர்கள் 12 பேர் இந்திய கடல் எல்லையில் கைது Posted: 22 Sep 2013 09:17 PM PDT இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவல் படையினரால் இவர்கள் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னைக்கு வட கிழக்கே 163 கடல் மைல் தூரத்தில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 இலங்கை மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2 மாதங்களில் 32 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 மீன்பிடி படகுகள் […] |
| பிரான்ஸ் விமானத்தில் 1300 கிலோ கோகைன் போதைமருந்து மீட்பு Posted: 22 Sep 2013 09:08 PM PDT வெனிசுவேலாவின் காரகாசிலிருந்து பிரான்சின் தலைநகர் பாரிசுக்கு வந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் வந்த 30 பெட்டிகள் எந்தப் பயணியின் பெயரிலும் பதிவு செய்யப்படவில்லை. சந்தேகப்பட்ட விமான நிலைய அதிகாரிகள் அவற்றைப் பிரித்து சோதனையிட்டபோது 1300 கிலோ எடையுள்ள சுத்தமான கோகைன் போதை மருந்துப் பொருள் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மதிப்பு 200 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அந்நாட்டு அதிகாரிகளால் நேற்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடும் ஈரானின் அணுவாயுத அணிவகுப்பு Posted: 22 Sep 2013 09:00 PM PDT ஈரான் அணுஆயுதங்களை நிறைய சேமித்து வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதையடுத்து அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது சில பொருளாதாரத்தடையை கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்து வருகிறது. ஆனால், ஈரான் ஆக்க வழிகளில் பயன்படுத்தவே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக கூறிவருகிறது. இந்நிலையில் 1980-1988 ஆண்டு வரை ஈரான்-ஈராக்கிடையே நடந்த போரின் நினைவுதினம் முன்னிட்டு நேற்று ஈரானில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடி ஒரு நவீன இராவணன்: சீறும் பிருந்தா கரத் Posted: 22 Sep 2013 08:53 PM PDT பாஜவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு ராவணனை விட தலைகள் அதிகம் என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா கரத் விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஜனநாயக மாதர் சங்கத்தின் 8வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா கரத் பேசுகையில், தற்போது நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து வகுப்புவாத சக்திகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. பாஜவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி ஒரு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்தியா Posted: 22 Sep 2013 08:21 PM PDT செவ்வாய்க் கிரகத்துக்கு அக்டோபர் 28-ஆம் தேதி விண்கலம் அனுப்ப தேசிய நிபுணர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) வட்டாரங்கள் தெரிவித்தன. செவ்வாய்க் கிரகத்துக்கு ஆராய்ச்சி விண்கலம் அனுப்பும் திட்டத்தை நிறைவேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரப் பணியாற்றி வருகிறது. 1,350 கிலோ எடை கொண்ட செவ்வாய் வட்ட சுற்றி (மார்ஸ் ஆர்பிடர்) விண்கலத்தை தயாரித்துள்ள இஸ்ரோ, பி.எஸ்.எல்.வி.-சி25 ராக்கெட் உதவியுடன் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அனுப்ப திட்டமிட்டுள்ளது. […] |
| விதவை பெண் கொடூரமாக கற்பழிப்பு Posted: 22 Sep 2013 08:16 PM PDT மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்தவர் சங்கீதா. கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த சங்கீதாவிற்கு, முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனையடுத்து தினமும் இரவில் அந்த டெம்போவிலேயே தனது குழந்தைகளுடன் தூங்கிவந்தார். வழக்கம்போல் நேற்று சங்கீதா டெம்போவில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் […] |
| ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டிய விஜய்! Posted: 22 Sep 2013 08:10 PM PDT பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும் தான் என்று நடிகர் விஜய் முதல்வர் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். விழாவுக்கு இளையதளபதி விஜய் வருவாரா, மாட்டாரா என்று இருந்தது. விழாவுக்கு விஜய் அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் விழாவில் கலந்து கொண்டார். விஜய்யில் கலந்துகொண்டு பேசிய விஜய், சினிமா 100 ஆண்டுகள் ஆனாலும் வளர்ந்து […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

