மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பஞ்சாபில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையங்கள் விரைவில் திறப்பு: முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல்
- மாதா அமிர்தானந்தமயி 60–வது பிறந்தநாள் விழா: கேரளாவில் 6 நாள் கொண்டாட்டம்
- ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி சிலை தீவைத்து எரிப்பு: தெலுங்கானாவை தடுக்க சதி நடப்பதாக குற்றச்சாட்டு
- கேரளாவில் மழை குறைந்தது: இடுக்கி அணை திறப்பு தள்ளிவைப்பு
- ஆந்திராவில் நாளை `பந்த்': திருப்பதிக்கு வரவேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள்
- மத்திய பிரதேசத்தில் 25-ந்தேதி பா.ஜனதா பிரமாண்ட கூட்டம்: ஒரே மேடையில் அத்வானி, மோடி
- இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் 25-ந் தேதி வேலை நிறுத்தம்
- பா.ஜனதாவில் சேர விரும்புகிறவர்களுக்கு மத்திய அரசு தொல்லை கொடுக்கிறது: ராஜ்நாத் சிங்
- பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்
- குர்லாவில் குழந்தையை கடத்த முயன்ற பெண் உள்பட 4 பேர் கைது
- சென்னை விமானநிலையம் தனியார் மயமாகிறது?: டெல்லியில் ஆலோசனை
- மும்பையில் விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது
- மும்பை சென்டிரலில் மின்சார ரெயில் பெட்டி தடம் புரண்டது
- காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்
- மும்பை: சிறுமியை கற்பழிக்க முயன்றவர் கைது
- கர்நாடகத்தில் லாரி - வாகனங்கள் மோதிய விபத்தில் 8 பேர் பலி
- கடந்த 10 வருடங்களில் நடந்த இன மோதல்களில் நாட்டில் 2500 பேர் பலி
- மதச்சார்பின்மையும் முன்னேற்றமும் ஒருங்கிணைந்தே செல்கிறது: சோனியா
- ஐ.மு. கூட்டணி அரசின் நிர்வாகம், மேம்பாடு குறித்து மோடி விவாதிக்கத்தயாரா?: திக்விஜய் சிங்
- கேரளாவில் கனமழை நீடிப்பு: பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம்- பக்தர்களை மீட்கும் பணி தீவிரம்
| பஞ்சாபில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை மையங்கள் விரைவில் திறப்பு: முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் Posted: 22 Sep 2013 11:15 PM PDT பஞ்சாப் மாநிலத்தின் பரித்கோட் நகரில் உள்ள குரு கோவிந்த் சிங் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் தனி வெளிப்பாடு கொண்ட கணினி வரைவு மையம் ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இதனைத் திறந்து வைத்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் இத்தகைய மையங்கள் பொதுமக்களுக்குத் தரமான சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக சமீபத்திய தொழில்நுட்பங்கள் கொண்டதாக |
| மாதா அமிர்தானந்தமயி 60–வது பிறந்தநாள் விழா: கேரளாவில் 6 நாள் கொண்டாட்டம் Posted: 22 Sep 2013 11:06 PM PDT கேரளாவைச் சேர்ந்தவர் பெண் சாமியார் மாதா அமிர்தானந்தமயி. இவரது ஆசிரமம் கொல்லத்தில் உள்ள அமிர்தபுரியில் உள்ளது. மாதா அமிர்தானந்த மயிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவரது 60–வது பிறந்தநாள் விழா வருகிற 27–ந்தேதி வருகிறது |
| ஒய்.எஸ்.ராஜசேகர்ரெட்டி சிலை தீவைத்து எரிப்பு: தெலுங்கானாவை தடுக்க சதி நடப்பதாக குற்றச்சாட்டு Posted: 22 Sep 2013 10:50 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஜெகன் மோகன்ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானா மாநிலம் அமைவதை தடுக்க ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சதி செய்கிறது என குற்றம்சாட்டி தெலுங்கானா |
| கேரளாவில் மழை குறைந்தது: இடுக்கி அணை திறப்பு தள்ளிவைப்பு Posted: 22 Sep 2013 10:25 PM PDT கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிட்டப்படி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.ஆரம்பம் முதலே மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டது. கடந்த 3 மாதங்களுக்கு மேல் பெய்து வந்த மழை தற்போது |
| ஆந்திராவில் நாளை `பந்த்': திருப்பதிக்கு வரவேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் Posted: 22 Sep 2013 09:48 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை எதிர்த்து கடலோர ஆந்திரா, ராயலசீமா உள்ளடங்கிய சீமாந்திரா பகுதியில் போராட்டங்கள் நடந்து வருகிறது. 54-வது நாளாக நீடிக்கும் இந்த போராட்டத்தால் சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆந்திர அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளது. தெலுங்கானா தனி மாநில முடிவை கைவிடும் வரை போராட்டம் ஓயாது என அரசு ஊழியர்கள் சங்க தலைவர் அசோக்பாபு கூறினார். இந்த வேலை நிறுத்தத்தில் 148 அமைப்புகள் பங்கேற்க உள்ளது. இதன் முதல் கட்டமாக நாளை (24-ந்தேதி) சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் 'பந்த்' போராட்டம் நடக்கிறது. திருமலைக்கும் பஸ்களை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். எனவே நாளை திருமலைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் எனவும் திருப்பதி போராட்டக் குழுவினர் கேட்டுக் கொண்டு |
| மத்திய பிரதேசத்தில் 25-ந்தேதி பா.ஜனதா பிரமாண்ட கூட்டம்: ஒரே மேடையில் அத்வானி, மோடி Posted: 22 Sep 2013 09:43 PM PDT பாராளுமன்ற தேர்தலுக்காக பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் மிகத்தீவிரமாக தயாராகி வருகிறார்கள். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பேசி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 பொதுக்கூட்டங்களில் பேச அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் மிகப் பெரிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நாளை மறுநாள் (புதன்கிழமை) இந்த கூட்டம் நடக்கிறது. நாடெங்கும் இருந்து இந்த கூட்டத்துக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் வருவதற்கு வசதியாக 12 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன. இதுதவிர, வட மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்தும் போபால் நகருக்கு சுமார் 10 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ், ரெயில்கள் தவிர 2 சிறப்பு விமா |
| இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் 25-ந் தேதி வேலை நிறுத்தம் Posted: 22 Sep 2013 08:43 PM PDT நாடு முழுவதும் 25-ந் தேதி பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் கூட்டு அழைப்பின் பேரில் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. வங்கித்துறை சீர்திருத்தங்களை நிறுத்த வேண்டும், வங்கிகளை இணைப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடக்கிறது. இதில் அதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள். ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகளை கையாளும் பணி நடைபெறாது. |
| பா.ஜனதாவில் சேர விரும்புகிறவர்களுக்கு மத்திய அரசு தொல்லை கொடுக்கிறது: ராஜ்நாத் சிங் Posted: 22 Sep 2013 08:18 PM PDT முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் கடந்த 15-ந் தேதி அரியானாவில் நடந்த பா.ஜனதா பேரணியில் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் கலந்து கொண்டார். அவர் பதவியில் இருந்த போது காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசை கவிழ்க்க முயற்சி செய்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரி சதீஷ் பிரசாத், பா.ஜனதாவில் இணையும் நிகழ்ச்சி நேற்று டெல்லியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜனதா |
| பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் Posted: 22 Sep 2013 05:29 PM PDT பாகிஸ்தான் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். |
| குர்லாவில் குழந்தையை கடத்த முயன்ற பெண் உள்பட 4 பேர் கைது Posted: 22 Sep 2013 05:20 PM PDT மும்பை குர்லா மேற்கு, சுண்ணாப்பட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள கசாய்வாடா, குரேசிநகர் பகுதியில் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை அந்த வழியாக வந்த இளம் பெண் ஒருவர் தூக்கி கொஞ்சி கொண்டிருந்தார். |
| சென்னை விமானநிலையம் தனியார் மயமாகிறது?: டெல்லியில் ஆலோசனை Posted: 22 Sep 2013 03:27 PM PDT இந்திய விமான நிலையங்களின் ஆணைய ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சென்னை, லக்னோ (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு உத்தேசித்து அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. |
| மும்பையில் விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது Posted: 22 Sep 2013 02:47 PM PDT மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்தவர் சங்கீதா (வயது40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார். |
| மும்பை சென்டிரலில் மின்சார ரெயில் பெட்டி தடம் புரண்டது Posted: 22 Sep 2013 02:12 PM PDT மேற்கு ரெயில்வேக்குட்பட்ட மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று மதியம் மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டு அந்த பகுதியில் உள்ள பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. பணிமனையை நெருங்கி கொண்டிருந்த போது திடீரென ரெயிலின் முதல் பெட்டி |
| காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் Posted: 22 Sep 2013 01:26 PM PDT காஷ்மீரில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. |
| மும்பை: சிறுமியை கற்பழிக்க முயன்றவர் கைது Posted: 22 Sep 2013 12:05 PM PDT மும்பை அண்டாப்ஹில், சேக்மிஸ்திரி மசூதி அருகே உள்ள அக்பர் சுலேமான் காம்பவுண்ட் அருகில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருபவர் சபினா(வயது11)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறார். |
| கர்நாடகத்தில் லாரி - வாகனங்கள் மோதிய விபத்தில் 8 பேர் பலி Posted: 22 Sep 2013 09:32 AM PDT கர்நாடகம் மாநிலம் பெலகாம் மாநிலத்திலிருந்து மும்பை நோக்கி லாரி ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. பெலகாம் அருகே ககட்டி கிராமம் அருகே சென்ற போது அந்த லாரியின் டயர் ஒன்று வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் எதிரே வந்த மற்ற வாகனங்கள் மீது மோதினார். |
| கடந்த 10 வருடங்களில் நடந்த இன மோதல்களில் நாட்டில் 2500 பேர் பலி Posted: 22 Sep 2013 08:09 AM PDT கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடந்த 8473 இன மோதல் சம்பவங்களில் இதுவரை 2502 பேர் கொல்லப்பட்டனர். 28 ஆயிரத்து 668 பேர் பாதிக்கப்பட்டனர் என்று மத்திய உள்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
| மதச்சார்பின்மையும் முன்னேற்றமும் ஒருங்கிணைந்தே செல்கிறது: சோனியா Posted: 22 Sep 2013 06:27 AM PDT உத்தரப்பிரதேச முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 50 பேர் வரை கொல்லப்பட்டனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலம் பச்பதரா என்னுமிடத்தில் ரூ. 37,230 கோடி முதலீட்டிலான சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகத்திற்காக அடிக்கல் நாட்டி இன்று பேசினார். அப்போது |
| ஐ.மு. கூட்டணி அரசின் நிர்வாகம், மேம்பாடு குறித்து மோடி விவாதிக்கத்தயாரா?: திக்விஜய் சிங் Posted: 22 Sep 2013 03:52 AM PDT பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார நிலை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் தனது வலைதள செய்தியில் மோடியை கண்டித்துள்ளார். |
| கேரளாவில் கனமழை நீடிப்பு: பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம்- பக்தர்களை மீட்கும் பணி தீவிரம் Posted: 22 Sep 2013 01:28 AM PDT கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 1–ந்தேதி தொடங்கியது. அன்று முதல் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக திருவனந்தபுரம், கண்ணனூர், ஆலப்புழை, இடுக்கி, கொச்சி போன்ற பகுதிகளில் மழை சேதங்களும் ஏற்பட்டது. இந்த மழை தொடர்ந்து நீடித்து வருவதால் திருவனந்தபுரத்தில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |