Tamil Star |
- கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்! 6 வருட சிறைத் தண்டனை (வீடியோ இணைப்பு)
- பாகிஸ்தானில் வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் நான்கு சகோதரிகள் தற்கொலை
- ஜெனீவா மாநாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்: சிரியா
- சாம்பியன்ஸ் லீக்: மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
- முடிவுக்கு வருகிறது 40 ஆண்டு பகை அமெரிக்காவுடன் நட்புக்கரம் நீட்டுகிறது ஈரான்
- தேவஸ்தானம் முடிவு திருப்பதி பக்தர்களுக்கு இலவச லட்டு
- சிறு குழுவினர் மட்டுமே மத கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.
- டெங்கு காய்ச்சல் 912 பேர் பாதிப்பு
- ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டபாபா ராம்தேவ்
- அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன் பத்திரிகை வினியோகம்
| கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்! 6 வருட சிறைத் தண்டனை (வீடியோ இணைப்பு) Posted: 20 Sep 2013 09:05 PM PDT இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் கேன்டர்பேரி (Canterbury) என்ற நகரில் இருக்கும் கடையொன்றுக்குள் கத்தியுடன் புகுந்து பெண்ணொருவர் அங்கு உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் அவரை கத்தியால் தாக்க முயற்சித்த போதிலும் இவர் அந்த பெண்ணை தாக்கவில்லை. இதனால் அந்த கடையின் உதவியாளர் பாராட்டப்பட்டுள்ளார். 59 வயதான மைக்கல் வைப்ரோ என்பவர் பணியாற்றும் எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிறிய கடையொன்றுக்குள் மது அருந்திய நிலையில் எட்டு அங்குல நீளமான கத்தியுடன் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தானில் வரதட்சணை கொடுக்க வழியில்லாததால் நான்கு சகோதரிகள் தற்கொலை Posted: 20 Sep 2013 09:04 PM PDT பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் வரதட்சணை கொடுக்க தந்தைக்கு வழியில்லாமல் போனதால், முதிர்கன்னியாக கண்ணீர் வடித்த சகோதரிகள் கால்வாயில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் மெயில்சி நகரில் வசித்து வருபவர் பஷிர் அகமது ராஜ்புத். ஏழை விவசாயியான இவருக்கு 5 பெண் பிள்ளைகள். போதிய வருமானம் இல்லாததால், சீர்வரிசை, வரதட்சணை கொடுத்து மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. காலம் கடந்து முதிர்கன்னிகளாக மாறிவிட்ட அந்த பெண்களில் மூத்தவருக்கு வயது 45. அடுத்து 43, 38, 35 […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜெனீவா மாநாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்: சிரியா Posted: 20 Sep 2013 09:01 PM PDT சிரியாவில் தற்போது நிலவும் உள்நாட்டுப் போர் நாட்டை சீர்குலைத்து வருவதால், ஜெனீவா மாநாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என்று சிரியா துணைப் பிரதமர் கத்ரி ஜமீல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலிருந்து வெளியாகும் கார்டியன் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “நீண்ட காலமாக தடைப்பட்டுள்ள ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் பட்சத்தில், அப்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்படும்’ என்று கூறினார். வெளிநாடுகளின் தலையீட்டை தவிர்த்து, ஜனநாயக முறையில் அரசியல் தீர்வு காண துணை புரியும் வகையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படும், […] |
| சாம்பியன்ஸ் லீக்: மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல் Posted: 20 Sep 2013 08:59 PM PDT ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐந்தாவது சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு ஐபிஎல் சாம்பியனான மும்பை இண்டியன்ஸும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணியில் ராகுல். இரு ஜாம்பவான்கள் எதிர்எதிர் அணிகளில் இருப்பதால் இந்த ஆட்டம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாம்பியன்ஸ் லீக் போட்டியுடன் 20 ஓவர் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். சச்சின் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| முடிவுக்கு வருகிறது 40 ஆண்டு பகை அமெரிக்காவுடன் நட்புக்கரம் நீட்டுகிறது ஈரான் Posted: 20 Sep 2013 08:32 PM PDT
கடந்த ஜூன் மாதம் ஈரானில் அதிபர் தேர்தல் நடந்தது. பல ஆண்டாக வெறுப்பு ஒன்றையே கண்டு வந்த ஈரானுக்கு, இப்படி ஒரு பாதை இருக்கிறது; சமாதானம் எதையும் சாதிக்கும் என்று அந்த தேர்தலில் தான் மக்கள் மூலம் தெரிந்தது. சமாதானம், அமைதியை விரும்பிய மக்கள் தங்களுக்கு பிற்போக்குவாத தலைவர் அதிபராக தேவையில்லை என்று முடிவு கட்டினர். விளைவு, மிதவாத தலைவர், பிஎச்டி ஆராய்ச்சி பட்டம் பெற்ற ரோஹானி புதிய அதிபரானார். சமீபத்தில் அமெரிக்காவின் என்பிசி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி, உலகையே, குறிப்பாக அமெரிக்காவை திடுக்கென திருப்பி பார்க்க வைத்தது. 'எங்களுக்கு எதற்கு போர்? அமைதியும், சமாதானமும் தானே உலகத்தை வாழ வைக்கும். எங்கள் மக்கள் புதிய பார்வையை வைத்துள்ளனர். அது தான் என் பாதையும்' என்றாரே பார்க்கலாம். இந்த சேனல் பேட்டியை தொடர்ந்து, வாஷிங் டன் போஸ்ட் உட்பட சில அமெரிக்க பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார். 'மத்திய கிழக்கில் அமைதி ஏற்பட் டால் எல்லாருக்கும் தானே பலன். ஏன், சிரியாவுடன் உள்ள பிரச்னையை தீர்க்க நான் வேண்டுமா னால் உதவ தயார்' என்றாரே பார்க்கலாம். கடந்த 1979ம் ஆண்டு ஈரான் புரட்சிக்கு பின் தான் அமெரிக்காவுடன் ஈரான் பகை ஆரம்பித்தது. சில அமெரிக்கர்களை கடத்தி பிணைக் கைதிகளாக வைத்தது முதல் அதிபர் அயதுல்லா கொமைனி முதல் சமீபத்திய அதிபர் முகமது அகமதின்ஜாட் வரை எல்லாருமே அமெரிக்க எதிர்ப்பு ஜுவாலையை உமிழ்ந்தவர்கள் தான். ஐநா கூட்டத்தில் பேச்சு என்று வந்தாலே, ஈரான் பேச ஆரம்பித்தவுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டு தூதர்கள் வெளியேறி விடுவர். அந்த பேச்சும் பகைமைக்கு இன்னும் தூபம் போடும். ஆனால், வரும் செவ்வாயன்று ஐநா பொது சபை கூட்டம் நடக்கிறது. அதில் புதிய அதிபர் ரோஹானி பேச உள்ளார். இந்த முறை கண்டிப்பாக அமெரிக்கா உட்பட எந்த பணக்கார நாட்டு பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்ய மாட்டார்கள். ஏன், புதிய அத்தியாயத்தை ஈரான் ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பத்திரிக்கைகள் உட்பட மீடியாக்கள் இப்போதே கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து விட்டன. ஈரான் அதிபர் ரோஹானியின் ஐநா பேச்சு, அமெரிக்கா , ஈரான் இடையே இருந்து வரும் நாற்பதாண்டு பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். 'நான் ஐநா சபையில் பேசப் போகிறேன். என்னை எந்த நோக்கத்துக்காக ஈரான் மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ, அந்த நோக் கத்தை என் சக நாட்டு தலைவர்களும் புரிந்து கொண்டு அந்த பலனை ஏற்படுத்த முன்வருவர் என்று எதிர்பார்க்கிறேன். திடமான, கட்டுக்கோப்பான பேச்சுக்கு ஈரான் தயாராக இருக்கிறது. நாங்கள் நட்புக்கரம் நீட்டி விட்டோம். நீங்கள் தான் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று வாஷிங்டன் போஸ்ட் பேட்டியில் அவர் கூறியிருந்தது அமெரிக்க அதிபர் ஒபாமா வரை ஒரு புதிய வடிகால் பாதையை ஏற்படுத்தி விட்டதாகவே தெரிகிறது. வெள்ளை மாளிகை அதிகாரி ஜே கார்னி நேற்று கூறுகையில், 'இது சாத்தியமானது தான்; கண்டிப்பாக நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். எப்போதுமே சாத்தியமாகத்தான் இருந்தது; இப்போது புதிய பாதை கிடைத் துள்ளது' என்று பட்டும்படாமல் கூறினார். இந்தியாவுக்கு 2வது பரிசு சமீபத்தில் நாளுக்குநாள் ரூபாய் மதிப்பு சரிவை கண்டு டாலருக்கு எதிராக 69 ரூபாய் வரை போனது. மத்திய அரசு ஆடிப்போனது; மக்கள் தவித்தனர். ஆனால், இப்போது மீண்டும் 61 ரூபாய்க்கு வந்து , ரூபாய் மதிப்பு கூடி விட்டது. பங்குச்சந்தையிலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆட துவங்கி விட்டது. அமெரிக்க மத்திய வங்கி, இந்தியாவில் முதலீடுகளுக்கு அனுமதியை தந்ததை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டது , அது தந்த முதல் பரிசு என்றால், இரண்டாம் பரிசை ஈரான் விஷயத்தில் கிடைக்கும் என்று பிரதமர் மன்மோகன் நம்புகிறார். ஆம், ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க அவர் செல்கிறார். ஈரான் பேச்சு மூலம் அமெரிக்காவின் பகை தீருமானால், அதனால் இந்தியாவுக்கு பெரும் லாபம்தான். எக்ஸ்ட்ரா தகவல் அதிபர் ரோஹானி மேற்கத்திய நாடுகளுடன் 16 ஆண்டு, ஈரான் அணு ஆயுதம் குறித்து பேச்சு நடத்தி, ' டிப்ளமேட் ஷேக் ' என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். மிதவாத தலைவர் கையில் ஆட்சி போவது இதுவே முதன் முறை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| தேவஸ்தானம் முடிவு திருப்பதி பக்தர்களுக்கு இலவச லட்டு Posted: 20 Sep 2013 08:22 PM PDT திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் பாபிராஜூ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருப்பதி கோயிலில் சர்வ தரிசனம், திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 சுதர்சன டிக்கெட் மற்றும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகள் ஒப்பிடப்பட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.லட்டுகள் இலவசமாக வழங்குவதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது. சர்வ, திவ்ய தரிசன டிக்கெட்டில் பல மணி […] |
| சிறு குழுவினர் மட்டுமே மத கலவரத்தில் ஈடுபடுகின்றனர். Posted: 20 Sep 2013 08:19 PM PDT ''நாட்டில் சிறிய குழுவினர் மட்டுமே மத கலவரங்களில் ஈடுபடுகின்றனர்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.தேசிய மத நல்லிணக்க விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த காம்லியனா, ஒடிசாவை சேர்ந்த முகமது அப்துல் பாரி ஆகியோருக்கு 2011ம் ஆண்டுக்கான மத நல்லிணக்க விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் பிரதமர் மன்மோ கன் சிங் கலந்துகொண்டு பேசியதாவது: முசாபர் நகரில் நடந்த மதக் கலவரம் மிகவும் […] |
| டெங்கு காய்ச்சல் 912 பேர் பாதிப்பு Posted: 20 Sep 2013 08:15 PM PDT டெல்லியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 912 ஆக உயர்ந்துள்ளது.டெல்லியில் பருவமழை முடிந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் முடிய 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 131 பேர் பாதிக்கப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 142 ஆக உயர்ந்தது.செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்சல் பரவல் அதிகரித்தது. கடந்த 14ம் தேதிவரை செப்டம்பரில் மட்டும் 304 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த 5 […] |
| ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டபாபா ராம்தேவ் Posted: 20 Sep 2013 08:06 PM PDT சுவாமி விவேகானந்தரின் 120 வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் பதஞ்சலி யோகபீட அமைப்பினரால் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கொண்டாடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக யோகா குரு பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பிற்கிணங்க நேற்று அவர் இந்தியாவிலிருந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை அடைந்தார். ஆயினும் சுங்க அதிகாரிகள் அவரை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காக்க வைத்தனர். வர்த்தக விசா அனுமதி பெறாமல் பார்வையாளர் அனுமதி பெற்றிருந்தது குறித்து விசாரிக்கப்பட்டது […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன் பத்திரிகை வினியோகம் Posted: 20 Sep 2013 07:09 PM PDT அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னளால் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் அனந்தி எழிலன் அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. எனினும் அநந்தி அரசாங்கத்துடன் தான் இணையவில்லை […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
