மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய தங்கத்தேர் 30–ந் தேதி வெள்ளோட்டம்
- விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்: சிவசேனா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு
- 5 மாநில தேர்தல்: அரசியல்வாதிகளை மிரட்டும் வெங்காய விலை
- ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் செக்ஸ் புகாரில் சிக்கினார்
- 5 மாநில சட்டசபை தேர்தல்: பிரசார வியூகம் பற்றி மோடி ஆலோசனை
- ஜம்முவில் மினி பஸ் பள்ளத்தாக்கில் விழுந்தது: 11 பேர் பலி
- உத்தரகாண்ட் முதல்-மந்திரியை நீக்க முடிவு: காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை
- சோலார் பேனல் வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம்: அரசு காரணம் இல்லை என உம்மன்சாண்டி பேட்டி
- கல்பாக்கம் அணு ஈனுலை ஓராண்டில் உற்பத்திக்கு தயாராகிவிடும்: ரத்தன் குமார் சின்கா தகவல்
- முதலமைச்சர் எண்ணிற்குத் தவறுதலாக தொடர்பு கொண்டதால் அவதியுறும் காவலர்
- விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயம்
- லூதியானா விமான நிலையத்தில் 170 கிலோ தங்க-வைர நகைகள் பறிமுதல்
- பெங்களூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது
- மோசடி புகார்: வி.கே.சிங் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு
- இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்கொய்தா-இந்தியன் முஜாகிதீன் கூட்டுத் திட்டம்
- தெலுங்கு கங்கை கால்வாய் அடைப்பு: ஒன்றுபட்ட ஆந்திரா ஆதரவாளர்கள் அதிரடி
- முசாபர்நகர் கலவர வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது
- மும்பை கோர்ட்டில் இருந்து தீவிரவாதி தப்பி ஓட்டம்
- கும்பகோணம் - தஞ்சை சிறப்பு பயணிகள் ரெயில் மயிலாடுதுறை வரை நீட்டிப்பு: டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்
- பா.ஜனதா எம்.எல்.ஏ.வை பார்த்து ‘வாயை மூடு’ என்று அமைச்சர் சொன்னதால் உ.பி. சட்டசபையில் மோதல்
| திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதிய தங்கத்தேர் 30–ந் தேதி வெள்ளோட்டம் Posted: 20 Sep 2013 11:09 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கி முடிவடையும் நிலையில் உள்ளது. 74 கிலோ தங்கம், 3 டன் செம்பு, 25 டன் மரம் என மொத்தம் 29 டன் எடையில் இந்த புதிய தங்கத்தேர் உருவாக்கப்பட்டு உள்ளது. ரூ.23 கோடி செலவில் தயார் செய்யப்பட்டு உள்ள இந்த புதிய தங்கத்தேரின் இறுதிகட்ட வடிவமைப்பு |
| விநாயகர் ஊர்வலத்தில் பெண் போலீஸ் மானபங்கம்: சிவசேனா எம்.எல்.ஏ. உள்பட 50 பேர் மீது வழக்கு Posted: 20 Sep 2013 10:27 PM PDT மராட்டிய மாநிலம் கோல்காபூரில் நேற்று முன் தினம் இரவு விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர். ஊர்வலத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது திடீர் என்று ஊர்வலத்தில் சென்ற சிவசேனா தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு உருவானது. |
| 5 மாநில தேர்தல்: அரசியல்வாதிகளை மிரட்டும் வெங்காய விலை Posted: 20 Sep 2013 10:19 PM PDT வெங்காய விலை மீண்டும் உச்சத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கிலோ 15 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம் சமீபத்தில் 60 ரூபாய் ஆனது. தற்போது தரமான வெங்காயம் கிலோ ரூ.75 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது |
| ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் செக்ஸ் புகாரில் சிக்கினார் Posted: 20 Sep 2013 09:57 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மந்திரியாக இருந்த பாபுலால் நாகர் மீது ஒரு பெண் கற்பழிப்பு புகார் கூறினார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இவரைத் தொடர்ந்து ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்ஏ. உதய்வால் அஞ்சானா மீதும் செக்ஸ் புகார் எழுந்துள்ளது. இவர் நிம்பேதா தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இவர் மீது புகார் கூறிய பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். அந்த பெண்ணுக்கும், எம்.எல்.ஏ.க்கும் பழக்கம் ஏற்பட்டது. |
| 5 மாநில சட்டசபை தேர்தல்: பிரசார வியூகம் பற்றி மோடி ஆலோசனை Posted: 20 Sep 2013 09:56 PM PDT டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது |
| ஜம்முவில் மினி பஸ் பள்ளத்தாக்கில் விழுந்தது: 11 பேர் பலி Posted: 20 Sep 2013 09:47 PM PDT ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஜம்முவின் வடக்கே உள்ள ரீசி நகரிலிருந்து பனசா கிராமம் நோக்கி நேற்று இரவு மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த அப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் சுவற்றை இடித்துக் கொண்டு பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. |
| உத்தரகாண்ட் முதல்-மந்திரியை நீக்க முடிவு: காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை Posted: 20 Sep 2013 09:25 PM PDT இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள உத்தர காண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள 5 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரசே வென்றது. சமீப காலமாக விஜய் பகுகுணா ஆட்சி மீது உத்தரகாண்ட் மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பில் அவர் சரிவர கவனம் செலுத்தவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு உளவுத்துறை தெரிவித்து |
| சோலார் பேனல் வழக்கில் விசாரணை நீதிபதி மாற்றம்: அரசு காரணம் இல்லை என உம்மன்சாண்டி பேட்டி Posted: 20 Sep 2013 09:14 PM PDT கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல கோடி மோசடி செய்த தாக பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் கேரள மந்திரிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், முதல்-மந்திரியின் உதவியாளர்கள் மோசடி நபர்களுக்கு துணை போனதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக முதல்- மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர் டென்னி ஜோப்பன், பாதுகாவலர் சலீம்ராஜ் ஆகியோர் கைதானார்கள். இவர்கள் மீதான வழக்கு கொச்சி முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. மாஜிஸ்திரேட்டு ராஜு வழக்கை விசாரித்து வந்தார். சமீபத்தில் இவர், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொள்வதாகவும், தனக்கு பதில் வேறு மாஜிஸ்திரேட்டை நியமிக்கும்படியும் முதன்மை நீதிபதிக்கு மனு கொடுத்தார். அதன் பேரில், சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து மாஜிஸ்திரேட்டு ராஜு மாற்றப்பட்டார். |
| கல்பாக்கம் அணு ஈனுலை ஓராண்டில் உற்பத்திக்கு தயாராகிவிடும்: ரத்தன் குமார் சின்கா தகவல் Posted: 20 Sep 2013 08:24 PM PDT கல்பாக்கத்தில் அதிவேக அணு ஈனுலை ஓராண்டில் உற்பத்திக்கு தயாராகி விடும் என அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் ரத்தன் குமார் சின்கா கூறினார். இந்திய அணுசக்தி கமிஷனின் தலைவரும், ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறுகிற 57-வது சர்வதேச அணுசக்தி முகமை மாநாட்டின் இந்திய விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை ஏற்றுள்ளவருமான டாக்டர் ரத்தன்குமார் சின்கா கூறியதாவது:- சென்னையை அடுத்த கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத்தக்க வகையில் அதிவேக ஈனுலை நிறுவப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தறுவாயில் உள்ளது. இன்னும் ஓராண்டு |
| முதலமைச்சர் எண்ணிற்குத் தவறுதலாக தொடர்பு கொண்டதால் அவதியுறும் காவலர் Posted: 20 Sep 2013 08:16 PM PDT ஹரியானா மாநிலத்தின் சிர்சா காவல் நிலையைப் பிரிவில் நரேஷ் குமார் என்ற காவலர் பணியில் இருந்துவந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடைய மொபைல் போனின் கட்டணத் தொகையில் 50 ரூபாய் அதிகமாகப் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.அதனைத் திரும்பப் பெறுவதற்காக அந்த மாதம் 13 ஆம் தேதி நரேஷ் குமார் தன்னுடைய மொபைல் சர்வீஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டார். நரேஷ் செய்த நம்பரிலிருந்து தொடர்பு கொண்டவர் தான் ஹரியானா முதலமைச்சர் ஹூடா பேசுவதாகத் தெரிவித்துள்ளார். ஹூடா என்ற துணைப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் ஹரியானாவின் முதலமைச்சர் |
| விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட வெங்காயம் Posted: 20 Sep 2013 04:53 PM PDT வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால் அதனை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது தொடர ஆரம்பித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த வியாபாரிகளும் அமிர்தசரஸ் அருகே உள்ள அடாரி-வாகா சாலை இணைப்பு வழியாக ஆப்கானிஸ்தானிலிருந்து |
| லூதியானா விமான நிலையத்தில் 170 கிலோ தங்க-வைர நகைகள் பறிமுதல் Posted: 20 Sep 2013 04:11 PM PDT தனியார் நகைக்கடை விற்பனை பிரதிநிதி ஒருவர் 170 கிலோ தங்க, வைர நகைகளுடன் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஷானிவால் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். |
| பெங்களூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி கற்பழிப்பு: வாலிபர் கைது Posted: 20 Sep 2013 12:33 PM PDT பெங்களூர் அருகே நெலமங்களா போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உன்னிகெரே கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் சுவேதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நெலமங்களாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. படித்து வருகிறார். தும்கூர் மாவட்டம் மித்ரஹள்ளியை சேர்ந்தவர் |
| மோசடி புகார்: வி.கே.சிங் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு முடிவு Posted: 20 Sep 2013 09:51 AM PDT ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் அமைத்த ரகசிய உளவுப்படை நிதியில் நடைபெற்ற ரூ.8 கோடி மோசடி புகார் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தலைமை ராணுவ தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர், வி.கே.சிங். |
| இந்தியாவில் தாக்குதல் நடத்த அல்கொய்தா-இந்தியன் முஜாகிதீன் கூட்டுத் திட்டம் Posted: 20 Sep 2013 09:02 AM PDT உலகில் அதிக இறப்புகளை ஏற்படுத்திய தீவிரவாத அமைப்பான அல்கொய்தா, இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்டு வரும் இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. |
| தெலுங்கு கங்கை கால்வாய் அடைப்பு: ஒன்றுபட்ட ஆந்திரா ஆதரவாளர்கள் அதிரடி Posted: 20 Sep 2013 06:11 AM PDT ஆந்திர மாநிலத்தை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் போராட்டக்குழுவினர், சீமந்திரா பகுதியைச் சேர்ந்த 13 மாவட்டங்களில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனி தெலுங்கானா அறிவிப்பை காங்கிரஸ் கைவிட வேண்டும் |
| முசாபர்நகர் கலவர வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது Posted: 20 Sep 2013 05:27 AM PDT உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் கலவரம் தொடர்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அவர்களை கைது செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்தாலும், சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றதால் கைது நடவடிக்கை தாமதம் ஆனது. |
| மும்பை கோர்ட்டில் இருந்து தீவிரவாதி தப்பி ஓட்டம் Posted: 20 Sep 2013 04:46 AM PDT மும்பையில் இன்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட தீவிரவாதி, போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத் மற்றும் சூரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்சல் உஸ்மானியை போலீசார் கைது செய்தனர். |
| கும்பகோணம் - தஞ்சை சிறப்பு பயணிகள் ரெயில் மயிலாடுதுறை வரை நீட்டிப்பு: டி.ஆர்.பாலு எம்.பி. தகவல் Posted: 20 Sep 2013 04:04 AM PDT தஞ்சை, கும்பேகாணம் மற்றும் மயிலாடுதுறைப் பகுதிவாழ் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் அரசு, பல்வேறு தனியார் துறை அலுவலகங்களில் பணிக்குச்சென்று திரும்பும் ஏராளமான அலுவலர்கள் தொடர்ந்து விடுத்த வேண்டுகோளை ஏற்று தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு எம்.பி. ரெயில்வே துறையின் மூத்த அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். |
| பா.ஜனதா எம்.எல்.ஏ.வை பார்த்து ‘வாயை மூடு’ என்று அமைச்சர் சொன்னதால் உ.பி. சட்டசபையில் மோதல் Posted: 20 Sep 2013 03:52 AM PDT உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 50 பேர் பலியாகினர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் உள்ளனர். இந்த கலவரம் தொடர்பாக பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 16 அரசியல் பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |