Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


டெல்லி மாணவி கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

Posted: 12 Sep 2013 08:36 PM PDT

court-order1

court-order1டெல்லி மாணவி கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கும் தண்டனையை கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது. அப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும். டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி இரவு துணை மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பஸ்சில் 6 காமுகர்களை கொண்ட கும்பலால் கற்பழித்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே பதற வைத்ததுடன், வெட்கி தலைகுனியவும் வைத்தது. இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் ராம்சிங், முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் மற்றும் இளங்குற்றவாளி ஒருவர் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங், டெல்லி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து டெல்லி சிறுவர் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் தாக்குர் ஆகிய 4 பேர் மீதான வழக்கை விசாரித்த டெல்லி விரைவு நீதிமன்றம், அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாகக்கூறி, அவர்கள் குற்றவாளிகள் என கடந்த 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. 11-ந்தேதி தண்டனை குறித்த இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அவர்கள் செய்த மிகக்கொடிய குற்றத்துக்கு கருணை காட்ட வழியே இல்லை என்பது போலீஸ் தரப்பு வாதம். இருப்பினும் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வக்கீல், குற்றவாளிகள் மனம் திருந்தி வாழ ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். தேசப்பிதா மகாத்மா காந்தி, '' இறைவன் தான் உயிரைக் கொடுக்க முடியும். அந்த இறைவனுக்குத்தான் உயிரை எடுக்கும் உரிமையும் உண்டு'' என கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார். வாழ வேண்டிய வயதில் தனது உயிரை அநியாயமாகப் பறிகொடுத்த அந்த இளம் மாணவியின் குடும்பமும், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என கூறுகிறது. இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ''குற்றவாளிகளை தூக்கில் போடப்பட்டால்தான் இந்த வழக்கில் நீதி கிடைக்கும். எங்கள் ஒரே மகளுக்கு கொடுமை இழைத்தபோது இது சரியா என அவர்கள் சிந்திக்கவில்லையே. அப்படி இருக்கிறபோது அவர்களுக்கு கோர்ட்டு ஏன் கருணை காட்டவேண்டும்?'' என கேள்வி எழுப்புகின்றனர். போலீஸ், குற்றவாளிகள் தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி விரைவு நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கன்னா, இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனை 13-ந்தேதி (இன்று) தெரிவிக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று அவர் தனது தண்டனை தீர்ப்பை வெளியிடுவார். அதற்காக குற்றவாளிகள் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் நீதிபதி மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து தண்டனை தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டால் இந்தியாவில் கற்பழிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் குற்றவாளிகளாக இந்த 4 பேரும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தம்புள்ள புனித பூமி ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு திட்டம் : நிர்வாகம் கவலை

Posted: 12 Sep 2013 07:55 PM PDT

mosque

mosqueமாத்தளை மாவட்டம் தம்புள்ள புனித பூமி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்திலும் தம்புள்ள ஹைரியா பள்ளிவாசலை அகற்றுவதற்கு அடையாளமிடப்பட்டுள்ளதாக நிர்வாகம் கவலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி, பெருநிலப்பரப்புப் பகுதியொன்று புனித பூமியாக தற்போது நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் அடையாளமிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

கடந்த வருடம் பௌத்த கடும்போக்காளர்களினால் இந்த பள்ளிவாசலும் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது.

ஏற்கனவே அடையாளமிடப்பட்ட பகுதியில் மக்கள் குடியிருப்புகளும், கட்டிடங்களும், நாடு நகர அபிவிருத்தி அதிகார வாரியத்தினால் சில வாரங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டு அந்த பகுதியில் அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள வரை படத்தில், பள்ளிவாசலை ஊடறுத்து 110 அடி அகலமான நான்கு வழி நெடுஞ்சாலையொன்றை நிர்மாணிக்கும் வகையில் அடையாளமிடப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகம் கூறுகின்றது.

ஏற்கனவே யாழ்ப்பாணம்-கண்டி ஏ-9 நெடுஞ்சாலை சாலை போக்குவரத்திற்கு வசதியாக உள்ளது.

அப்படி இருந்தும் புதிதாக மற்றுமோர் நெடுஞ்சாலையை நிர்மாணிக்க உத்தேசித்திருப்பதானது அந்த பகுதியில் குடியிருக்கும் தமிழர்களையும் முஸ்லிம்களையும் வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே கருத வேண்டியிருப்பதாக பள்ளிவாசல் நிர்வாகத்தை சேர்ந்த எஸ். வை. எம். சலிம்தீன் கூறுகின்றார்.

28 தமிழ் குடும்பங்கள் நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் தலா ஒரு இலட்சம் ருபாய் கொடுப்பனவு வழங்கி வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்றும் அதன் காரணமாக நிரந்தர குடியிருப்புகளை இழந்த நிலையில் இக்குடும்பங்கள் தற்போது நிர்கதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட இந்தப் பிரச்சினை ஏற்பட்ட போது ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்ற உத்தரவாதத்தையும் உறுதிமொழியையும் ஜனாதிபதி தங்களுக்கு வழங்கியுள்ளதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்கள் எனவும் சலீம்தீன் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினைக்கு ஜனாதிபதியினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக மத விவகார அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கருத்தை பெற மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகள் பலனளிக்கவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பு ஆரம்பம்

Posted: 12 Sep 2013 07:50 PM PDT

pattayam

pattayamசென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பின் தொடக்க விழா நேற்று (12.09.2013) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மூ.இராசாராம், சுவடிக் கண்காட்சியையும் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயவகுப்பைவும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்று வந்த தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய வகுப்பு பின்னர் நிறுத்தப்பட்டது. இப்பட்டய வகுப்பு சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆட்சியில் மீண்டும்  துவங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழின் தொன்மை, அதன் பாரம்பரியம் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும். அப்பாரம்பரியப் பெருமைமிகு தமிழை உலகறியச் செய்து, அதன் சிறப்பினை பறைச்சாற்றுவதற்கு கல்கத்தாவில் உள்ள சாந்திநிகேதன் போன்ற உயர்கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஓலைச் சுவடிகள் அதிக அளவில் உள்ளன. அச்சுவடிகளை தமிழாய்வாளர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நூலாக வெளியிட வேண்டும். வட தமிழகப் பகுதிகளில் கிடைக்கின்றச் சுவடிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும், தென் தமிழகப் பகுதிகளில் கிடைக்கின்றச் சுவடிகளை மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்திற்கும் வழங்கவேண்டும் என்று தமிழறிஞர்களையும், சுவடிகளைப் பாதுகாத்துவரும் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு சுவடிகளை வழங்குபவர்களை தமிழக அரசு சிறப்பிக்கும்" என்று குறிப்பிட்டார். விழாவில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், மயிலம் தமிழறிஞர் வே.சிவசுப்பிரமணியன், முனைவர் அ.சதீஷ், முனைவர் சு.தாமரைப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

62 வயது பெண்ணுடன் பாலியல் குறும்பு : இந்திய என்ஜினீயருக்கு ஜெயில்

Posted: 12 Sep 2013 07:29 PM PDT

prison

prisonஇந்தியாவை சேர்ந்த என்ஜினீயரான ஸ்ரீனிவாசா எஸ்.எர்ராமில்லி (46) என்பவர் அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இவர் 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் சிகாகோவிற்கு விமானத்தில் சென்றார். இவரது இருக்கைக்கு அருகே 62 வயது பெண் தனது கணவருடன் பயணம் செய்தார். அப்போது பெண் பயணியை அவர் 3 தடவை செக்ஸ் குறும்பு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதி ஜான் எச்.லிப்கோவ் விசாரித்து ஸ்ரீனிவாசாவுக்கு 9 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை நிறைவேறிய பிறகு ஓராண்டு கண்காணிப்பு செய்து அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

Posted: 12 Sep 2013 07:24 PM PDT

TNA

TNAதமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வடமாகாண தேர்தல் தொடர்பாக ஆராய்வதெற்கென யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயமாக வந்திருந்த இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவர் ரொபின் மூடி யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க குழுவினருடனும் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பின் வெற்றி தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆண்மைக் குறைவை விரட்டவும் தாது விருந்திக்கும் இதோ சில அரும்மருந்துகள்!

Posted: 12 Sep 2013 10:09 AM PDT

Couple_Crisis

Couple_Crisis* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

 * தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

 * அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

 * அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

 * படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

 தாது விருந்தி:

 * முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

 * நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

 * கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

 * அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

 * வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் :விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் அறிவிப்பு

Posted: 12 Sep 2013 08:11 AM PDT

elilan

elilanவிடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான ஆரம்ப விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருக்கின்றது.

இறுதி யுத்தத்தின்போது கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி எழிலன் உட்பட பெரும் எண்ணிக்கையான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அராசங்கத்தின் பாதுகாப்பு உறுதி மொழியை ஏற்று இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தாங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை இராணுவத்தினரிடம் கையளித்ததாகவும், இராணுவத்தினர் அவர்களைப் பொறுப்பேற்று, தமது பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்றதாகவும்,அவர்கள் இன்னமும் திரும்பவில்லை என்றும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

நான்கு வருடங்களாகிவிட்ட போதிலும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இராணுவமோ அல்லது அரசாங்கமோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும். எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விசாரணை செய்வதுடன், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி, எழிலன் உட்பட ஐந்து பேர் தொடர்பில் ஆட் கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் தொடர்பாக இராணுவ தரப்பில் கால தாமதத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தங்களிடம் எவரும் சரணடையவில்லை என்றும், தாங்கள் யாரையும் எவரிடமிருந்தும் பொறுப்பேற்கவில்லை என்றும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, தங்களுடைய ஆம்கொணர்வு மனுக்களில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் மேல் நீதிமன்றத்தில் கோரியதையடுத்து, இது தொடர்பான நீதவான் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விசாரணகைளை ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பித்து கூடிய விரைவில் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் வவுனியா மேல் நீதிமன்றம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது,

இதேவேளை, மற்றுமொரு தொகுதியாகிய மேலும் 7 பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான இராணுவ தரப்பு கருத்துக்களை வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வவுனியா மேல் நீதிமன்றம் மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்த்தரப்பினராகிய இராணுவ தரப்பினருக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனியர் மாணவிகள் ராகிங் : மாணவி உயிரிழப்பு : பள்ளியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

Posted: 12 Sep 2013 07:43 AM PDT

dai

daiமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், 100 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பிறகுதான் அவரை திறந்து வெளியே விட்டுள்ளனர். நீண்ட நேரம் தனி அறையில் சிக்கியதால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் உடல் அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய டாக்டர்கள் திங்கட்கிழமை மாணவியை டிஸ்சார்ஜ் செய்தனர். ராகிங் அதிர்ச்சியில் இருந்து மீளாத மாணவி, மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஊசி போட்டுள்ளார். ஆனால் நேற்று திடீரென இறந்துவிட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் இன்று பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். கம்ப்யூட்டர்கள், பர்னிச்சர்களை உடைத்தனர். மாணவி சாவுக்கு காரணமான பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளனர். பள்ளியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தன் மகளுக்கு டாக்டர்களும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று அவரது தாய் குற்றம் சாட்டினார். மாணவி ஓயிண்டிரிலாவை கழிவறையில் வைத்து பூட்டிய மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வடக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதி – கெஹலிய ரம்புக்வெல

Posted: 12 Sep 2013 07:31 AM PDT

keheliya

keheliyaநடைபெறவுள்ள மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் இன்று (12) பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாம் உரிய பதிலை அளித்துவருகிறோம். வட பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக முக்கிய செயற்றிட்டங்களை அரசு அமுல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த விடயமே. வட பகுதி மக்கள் ஏமாளிகளல்ல. அவர்கள் புத்திசாலித்தனமாக வாக்களித்து வடக்கில் புது மாற்றம் ஏற்படுத்துவார்கள் என்றும் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

லண்டனில்முகமூடிக் கொள்ளையர்கள் ஈழத்தமிழர் மீது தாக்குதல்

Posted: 12 Sep 2013 07:22 AM PDT

london

londonலண்டன் நகரின் அமைந்துள்ள கடையொன்றில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இலங்கைத் தமிழர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

லிவர்பூல் பிரதேசத்தின் லித்தர்லேண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ள கடையொன்றுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், கடை ஊழியரான மில்டன் தர்மலிங்கம் என்ற தமிழர் மீதே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தமிழரான கனகசபை சிறிதரன் என்பவருக்கு சொந்தமான கடைக்குள் இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் பாரிய இரும்பு சங்கிலியுடன் புகுந்துள்ளனர்.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்களைத் தடுத்த மில்டனை பாரிய இரும்பு சங்கிலியால் தாக்கியுள்ளனர். இதனால் அவரது முகத்திலும் தலையிடும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்களை தடுக்க அவர்களுடன் ஆயுதங்கள் இன்றி மில்டன் தர்மலிங்கம் சண்டையிட்டுள்ளார்.

கடையில் இருந்த பாதுகாப்பு கெமராக்களில் அவர் கொள்ளையர்களுடன் சண்டையிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த தர்மலிங்கம், கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரது தலையில்10 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™