மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்று அறிவிப்பு
- திருமலையில் ‘பந்த்’ ரத்து
- உத்தரபிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா மீண்டும் வேலையில் சேர்ந்தார்: சஸ்பெண்டு உத்தரவு ரத்து
- ஆந்திராவில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 850 கிராமங்கள் இருளில் மூழ்கியது
- ஆண்கள் அழகு சாதன வர்த்தகத்தில் 3,800 கோடியைத் தொடும் இந்திய விற்பனை சந்தை
- மும்பை: உணவு தர மறுத்ததால் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற டாக்டர்
- டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு?
- ஏலத்தில் முடிவு செய்யப்படும் முதுநிலை மருத்துவப் படிப்புகள்
- 3 நாள் பயணமாக ஜனாதிபதி நாளை மேற்கு வங்காளம் செல்கிறார்
- கலவரம் நடைபெற்ற முசாபர்நகருக்கு சோனியா, ராகுல் பயணம்
- ராகிங் கொடுமையால் மாணவி சாவு எதிரொலி: கொல்கத்தா பள்ளி முதல்வர் கைது
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 குறைகிறது
- அருணாச்சல பிரதேசத்தில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு: முக்கிய குற்றவாளி சரண்
- உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
- உட்கட்சி பூசல்கள் நிறைந்த குழப்பமான கட்சி பா.ஜனதா: காங்கிரஸ் கிண்டல்
- ராகிங் கொடுமையால் மாணவி சாவு: ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர்
- பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தைக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு
- சிவசேனா எம்.பி. மீது பெண் கற்பழிப்பு புகார்: வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு
- பிரதமர் வேட்பாளர் விவகாரம்: பா.ஜ.க. தலைவர்கள் நாளை ஆலோசனை
- ஐ.நா. சபையில் பேச 2 பீகார் சிறுமிகளுக்கு வாய்ப்பு
| பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி இன்று அறிவிப்பு Posted: 12 Sep 2013 11:15 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது. நவம்பர் மாதம் 5 மாநில தேர்தல் முடிந்தபிறகு |
| Posted: 12 Sep 2013 11:05 PM PDT ஆந்திராவை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேரம் (2 நாள்) முழு அடைப்பு நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் அறிவித்தனர். இதன் காரணமாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு 14, 15–ந்தேதிகளில் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் எந்த வாகனங்களும் செல்ல விட மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்து இருந்தனர். போராட்டக்குழுவினருடன் திருமலை தேவஸ்தான அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து இன்று நள்ளிரவு தொடங்க இருந்த பந்த் போராட்டம் ரத்து செய்யப்பட்டது. போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் வேறு தேதியில் போராட்டம் நடக்கும் என்றும் அரசு பஸ் ஊழியர் சங்க தலைவர் கூறினார். |
| உத்தரபிரதேசத்தில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா மீண்டும் வேலையில் சேர்ந்தார்: சஸ்பெண்டு உத்தரவு ரத்து Posted: 12 Sep 2013 10:16 PM PDT உத்தரபிரதேச மாநில கலெக்டர் துர்க்கா சக்தி நக்பல் மணல் கடத்தலை தடுத்ததால் அரசியல் பிரமுகர்களால் மிரட்டப்பட்டார். இந்த நிலையில் அவர் ஒரு மசூதியின் சுற்றுச் சுவரை இடித்து விட்டதாக புகார்கள் எழுந்தது. உத்தரபிரதேச முதல்– மந்திரி அகிலேஷ் யாதவ் இது பற்றி விசாரித்து துர்க்காவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டச்சிக்கல்களும் எழுந்தன. இதற்கிடையே பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்க்கா தவறு செய்யவில்லை என்று அறிக்கைகள் கொடுக்கப்பட்டன. என்றாலும் உத்தரபிரதேச மாநில அரசு அதை ஏற்கவில்லை. இந்த நிலையில் கலெக்டருக்கும், அரசுக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சிகள் நடந்தன. அதில் வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து துர்க்காவின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. துர்க்கா மீண்டும் வேலையில் சேர்ந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. |
| ஆந்திராவில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்: 850 கிராமங்கள் இருளில் மூழ்கியது Posted: 12 Sep 2013 09:36 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், பஸ் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 44–வது நாளாக இவர்களது போராட்டம் நீடிக்கிறது. இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக மின்சார ஊழியர்களும் 72 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் பணிபுரியும் 1 லட்சம் மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆஸ்பத்திரி, குடிநீர் விநியோகம், ரெயில் போக்குவரத்து, விவசாய பணிகள் உள்பட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது. வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப் பட்டது. பல மின் உற்பத்தி நிலையங்களில் பணிகள் முற்றிலும் முடங்கியது. காவலாளி உள்பட உயர் அதிகாரிகள் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மின் விநியோகம், பராமரிப்பு, உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. |
| ஆண்கள் அழகு சாதன வர்த்தகத்தில் 3,800 கோடியைத் தொடும் இந்திய விற்பனை சந்தை Posted: 12 Sep 2013 08:56 PM PDT சில வருடங்களுக்கு முன்புவரை ஆண்களுக்கு என்று குறிப்பிட்டு சொல்லும்படி அழகு சாதனப் பொருட்கள் விற்பனை சந்தையில் இல்லை.இந்தியாவில் நடைபெற்று வந்த விற்பனை நிறுவனங்களும் பெண்களைக் குறிவைத்தே தங்களின் வணிகத்தை விரிவு படுத்தினார்கள். ஆனால், இன்றைய நவீன மாற்றங்களில் ஆண்கள் வியாபாரத்திலோ, உத்தியோகத்திலோ வெற்றியடைவது மட்டுமில்லாமல் தங்களுடைய தோற்றமும் திறனை வெளிக்காட்டும் விதமாக அமையவேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றார்கள். இதன் விளைவே,ஆண்களுக்கென அதிகரித்துவரும் அழகுசாதனப் பொருட்களும்,அவர்களுக்கென பிரத்யேகமாக ஏற்பட்டுவரும் அழகு நிலையங்களும் ஆகும். இந்த மாற்றமானது இந்திய சந்தையில் ஆண்களின் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையில் 3,800 கோடியைத் தொடும் அளவிற்கு வளர்ந்துள்ளது. |
| மும்பை: உணவு தர மறுத்ததால் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற டாக்டர் Posted: 12 Sep 2013 08:49 PM PDT கணவன் கொடுமையால் விவாகரத்து பெறும் பெண்கள் பற்றிய செய்திகள் தினந்தோறும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன.ஆனால் மனைவியின் தவறான செயல்பாடுகளால் அவதியுற்ற கணவனுக்கு குடும்ப நீதிமன்றம் விவாகரத்து அளித்துள்ள தகவல் இன்று வெளியாகி உள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்ட மருத்துவத் தம்பதியினர் மும்பையில் வசித்து வந்தனர்.19 வருட திருமண வாழ்க்கையில் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.கடந்த 2011ஆம் ஆண்டு, அந்தக் கணவர் குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்திற்கு |
| டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு? Posted: 12 Sep 2013 05:17 PM PDT டெல்லி மாணவி கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட 4 பேருக்கும் தண்டனையை கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது. அப்போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா என்பது தெரிய வரும். |
| ஏலத்தில் முடிவு செய்யப்படும் முதுநிலை மருத்துவப் படிப்புகள் Posted: 12 Sep 2013 04:51 PM PDT உயிர்காக்கும் புனிதத் தொழிலான மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது.தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரவேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது.முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது. |
| 3 நாள் பயணமாக ஜனாதிபதி நாளை மேற்கு வங்காளம் செல்கிறார் Posted: 12 Sep 2013 03:45 PM PDT ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக நாளை மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார். அதன்படி நாளை மாலையில் கொல்கத்தா செல்லும் அவர் அங்கு நடைபெறும் வர்த்தக சங்க 160-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். தொடர்ந்து 15-ந்தேதி மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு |
| கலவரம் நடைபெற்ற முசாபர்நகருக்கு சோனியா, ராகுல் பயணம் Posted: 12 Sep 2013 01:55 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முசாபர்நகர் மாவட்டத்திற்கு காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி அடுத்த வாரம் செல்கின்றனர் என்று உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். |
| ராகிங் கொடுமையால் மாணவி சாவு எதிரொலி: கொல்கத்தா பள்ளி முதல்வர் கைது Posted: 12 Sep 2013 09:08 AM PDT மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 குறைகிறது Posted: 12 Sep 2013 08:53 AM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை அதிகரித்து வந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. |
| அருணாச்சல பிரதேசத்தில் பெண் நிருபர் மீது துப்பாக்கி சூடு: முக்கிய குற்றவாளி சரண் Posted: 12 Sep 2013 07:52 AM PDT அருணாச்சல பிரதேசத்தில் பிரபல ஆங்கில நாளிதழில் இணை ஆசிரியராகவும் நிருபராகவும் பணியாற்றி வரும் ரோங்கம் ரினா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ம் தேதி அலுவலகத்திற்கு வந்தபோது, மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். |
| உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் Posted: 12 Sep 2013 07:35 AM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கனவு திட்டமாக கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா, கடும் அமளிக்கிடையே கடந்த 26-ந் தேதி பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. |
| உட்கட்சி பூசல்கள் நிறைந்த குழப்பமான கட்சி பா.ஜனதா: காங்கிரஸ் கிண்டல் Posted: 12 Sep 2013 06:34 AM PDT பா.ஜனதா கட்சியில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நியமிக்க மேலிடம் தீவிரமாக உள்ளது. ஆனால் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படாததால் இந்த விஷயத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. |
| ராகிங் கொடுமையால் மாணவி சாவு: ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளியை சூறையாடினர் Posted: 12 Sep 2013 04:52 AM PDT மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் ஓயிண்டிரிலா தாஸ் என்ற மாணவியை சீனியர் மாணவிகள் அடிக்கடி ராகிங் செய்துள்ளனர். கடந்த வாரம் இவ்வாறு அவரை ராகிங் செய்த மாணவிகள், 100 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால், அவரை பள்ளியில் உள்ள கழிவறையில் |
| பெற்ற மகளை விபசாரத்தில் தள்ளிய தந்தைக்கு 7 ஆண்டு ஜெயில்: கோர்ட்டு தீர்ப்பு Posted: 12 Sep 2013 03:54 AM PDT கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பறவூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர். கூலி தொழிலாளி. இவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதை பயன்படுத்தி அதே பகுதியை சேர்ந்த பெண் புரோக்கர் கதீஜா என்பவர் சுதீரிடம் அவரது வறுமை நீங்க வேண்டும் என்றால் அவரது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும்படி கூறினார். இதைத்தொடர்ந்து சுதீர் ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொண்டு தனது 13 வயது மகளை கதீஜாவிடம் விற்று விட்டார். அந்த சிறுமியை ஒரு அறையில் |
| சிவசேனா எம்.பி. மீது பெண் கற்பழிப்பு புகார்: வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு Posted: 12 Sep 2013 03:46 AM PDT மாராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்குமார் தூத். இவர் சிவசேனா கட்சி சார்பில் டெல்லி மேல்– சபை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் மீது புனே முகுந்தவாடி போலீஸ் நிலையத்தில் 40 வயது பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அதில் அவர் 2 குழந்தைகளின் தாயான தன்னை வீட்டுக்குள் புகுந்து ராஜ்குமார் தூத் கற்பழிக்க முயன்றார். அவரிடம் கடுமையாக போராடினேன். அவர் என்னை தாக்கி மானபங்கம் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். |
| பிரதமர் வேட்பாளர் விவகாரம்: பா.ஜ.க. தலைவர்கள் நாளை ஆலோசனை Posted: 12 Sep 2013 02:24 AM PDT பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கும் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள், தங்கள் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக |
| ஐ.நா. சபையில் பேச 2 பீகார் சிறுமிகளுக்கு வாய்ப்பு Posted: 12 Sep 2013 02:20 AM PDT ஐ.நா.சபையில் பேச 2 பீகார் சிறுமிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டம் வருகிற 27–ந்தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடக்கிறது. அதில் உலக நாடுகளை சேர்ந்த சிறுமிகள் கலந்து கொண்டு சமூக சீர்கேடுகள் மற்றும் பசி கொடுமையை நீக்குதல் குறித்து விவாதிக்கின்றனர். அதில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 11 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூனம்குமாரி (14), நஷியா அப்ரீன் (19) ஆகியோரும் அடங்குவர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |