Tamil News | Online Tamil News |
- கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகரில் ராணுவம் குவிப்பு
- பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிப்பது எப்போது : பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசனை
- மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதம்: தனியார் கல்லூரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டை
- ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம்
- லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றி நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம்
- ஆண்டுக்கு ரூ.797 கோடிசெலவு குறையும்: கருணாநிதி அறிக்கை
- பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வு
- திவாலாகிறதா பஞ்சாப் அரசு?அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை
- முதியோர் பாதுகாப்பு அவசியம்:10 அம்ச திட்டங்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுரை
| கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாபர் நகரில் ராணுவம் குவிப்பு Posted: முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம், இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில், பலியானோர் எண்ணிக்கை, 21 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முசாபர் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் குவிக்கப்பட்டு, கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.முசாபர்நகரில், ஆக., 27ம் தேதி, இருபிரிவினர்இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர். சில தினங்களுக்கு முன், இந்த கொலை தொடர்பான, போலி வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வெளியாயின. அந்த காட்சிகள், ஒரு தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.ஆத்திரமடைந்த ஒருதரப்பினர், ... |
| பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிப்பது எப்போது : பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசனை Posted: புதுடில்லி:குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஆலோசனையை துவக்கியுள்ளனர். இன்று முடிவடையும் ஆலோசனை கூட்டத்தில், மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து எடுக்கப்படும் முடிவுகள், முக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.கடந்த, 2004 மற்றும் 2009ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தலில், தோல்வி அடைந்துள்ள, பா.ஜ., அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள, லோக்சபா தேர்தலில், வெற்றி பெறும் பொருட்டு, இப்போதே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிர்வாகச் ... |
| மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பது சட்ட விரோதம்: தனியார் கல்லூரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டை Posted: புதுடில்லி:"தனியார் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ கல்லூரிகள், நிதி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்காக, மாணவர்களிடமிருந்து, நன்கொடை என்ற பெயரில், பல கோடி ரூபாயை, வசூலிக்கின்றன. இது, சட்ட விரோதமான செயல். இதை தடுத்து நிறுத்துவதற்கு, மத்திய அரசு, தகுந்த சட்டம் இயற்ற வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோர்ட்டில் மனு:உ.பி.,யில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று, மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, ... |
| ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம் Posted: புதுடில்லி:ரயில்வேயில், ஏற்றுமதிக்கான சரக்கு கட்டணம் வசூலித்ததில், பல்வேறு முறைகேடுகளை நடத்தி, 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த முறைகேடு, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி., ) வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.மத்தியில் ஆளும், ஐ.மு., கூட்டணி அரசில், நாளுக்கு நாள் புது புது ஊழல் முறைகேடுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த தகவல்கள் வெளியாகி, பிரதமர் உட்பட மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.இவற்றுடன், ரயில்வேயில், ... |
| லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு அமோக வெற்றி நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் Posted: புதுடில்லி:"லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும்; வட மாநிலங்களில், நரேந்திர மோடிக்கு அமோக ஆதரவு உள்ளது' என, கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள், அதிகாரப்பூர்வமாக, தங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடிக்கு, வட மாநிலங்களில், அமோக ஆதரவு உள்ளது. அதே நேரத்தில், தென் மாநிலங்களில், மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு சம அளவில் ஆதரவு உள்ளது என, ஏசி நீல்சன் - ஏ.பி.பி., ... |
| ஆண்டுக்கு ரூ.797 கோடிசெலவு குறையும்: கருணாநிதி அறிக்கை Posted: சென்னை:"உணவுப் பாதுகாப்புச் சட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு ஆகும் செலவு, ஆண்டுக்கு, 797 கோடி ரூபாய் குறையும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தேசிய உணவு பாதுகாப்பு மசோதா பார்லிமென்டிலும், ராஜ்யசபாவிலும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்காக, வாங்க வேண்டிய அரிசிக்காக, ஆண்டு ஒன்றுக்கு, தமிழக அரசுக்கு ஆகும் செலவு, 578 கோடி ரூபாய்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக, வாங்க வேண்டிய அரிசிக்காக, ஆண்டு ஒன்றுக்கு, தமிழக அரசுக்கு ஆகும் செலவு, 856 கோடி ரூபாய்; இரண்டும் சேர்ந்து, ஒட்டு ... |
| பொருளாதார வளர்ச்சி குறைந்ததால் இந்தியாவின் வெளிநாட்டு கடன் 39 ஆயிரம் கோடி டாலராக உயர்வு Posted: புதுடில்லி: சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன், 12.9 சதவீதம் அதிகரித்து, 39 ஆயிரம் கோடி டாலராக (23.40 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறை:மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு; இதன் காரணமாக, வர்த்தகம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்திருப்பது, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அதிகரித்து உள்ளது.குறிப்பாக, சென்ற நிதியாண்டின் இறுதியில், மேற்கூறிய எதிர்மறை அம்சங்கள் காரணமாக, அயல்நாட்டுக் கடன் உயர்ந்து உள்ளது என, ... |
| திவாலாகிறதா பஞ்சாப் அரசு?அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை Posted: சண்டிகர்:பஞ்சாப் மாநில அரசு, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் இருந்து, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாக பெற்ற பிறகும், ஆசிரியர்களுக்கு, பல மாதங்களாக சம்பளம் வழங்கக் கூட முடியாத, பரிதாப நிலையில் உள்ளது. இந்நிலைக்கு, "மோசமான பொருளாதார சூழ்நிலை தான் காரணம்' என, மாநில, ஆளும் சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி அரசு தெரிவிக்கிறது.பஞ்சாபில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த, பிரகாஷ் சிங் பாதல், முதல்வராக உள்ளார். அவர் மகன், சுக்பிர் சிங், துணை முதல்வராக உள்ளார். இந்த அரசுக்கு, பா.ஜ., உள்ளிருந்து ஆதரவு அளித்து ... |
| முதியோர் பாதுகாப்பு அவசியம்:10 அம்ச திட்டங்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுரை Posted: புதுடில்லி:முதியோர் மற்றும் மூத்த குடிமக்களை, கொள்ளையர்கள் மற்றும் திருட்டு கும்பல்களிடம் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, 10 அம்ச கொள்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.தாக்குதல்:சமீப காலமாக, வீடுகளில் தனியாக இருக்கும் முதியோர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். அவர்களின் இயலாமையை பயன்படுத்திக் கொள்ளும் கயவர்கள், முதியோரை தாக்கி, பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். பல சமயங்களில், மூத்த குடிமக்கள், கொடூரமாக கொலையும் செய்யப்படுகின்றனர். "முதியோர், மிகவும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 09,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |